இது நம்ம மாதிரி கத்துக்குட்டி ப்ளாகர்ஸ் க்கு மட்டும்.. பெரியவர்கள் ஒதுங்கி நிற்க :)
மஹீ ட்ராஃபிக் ஃபீட் பத்தி கேட்டிருந்தாங்க.. எனக்கு படம் பிடித்து விளக்க நேரமில்லை.. அதனால் படங்களில்லாத ஸ்டெப் பை ஸ்டெப் ட்ராஃபிக் லட்டு இதோ :))
ஏதாவது ஒரு பதிவில் இருக்கும் க்ளிக் டு கெட் ஃபீட்ஜிட் ஐ க்ளிக் செய்து செல்லவும்..
அங்கிருக்கும் தலைப்புகளீல் விட்ஜெட் ஐ க்ளிக் செய்யவும்..
காட்டப்படும் விட்ஜெட்களில் உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதை உங்களுக்கு பிடித்த வடிவத்தில் கஸ்டமைஸ் செய்து, ஏட் டு ப்ளாக் க்ளிக் செய்யவும்..
உங்களிடம் அனுமதி கேட்கப்படும்.. ஆம் க்ளிக் செய்யவும்..
உங்கள் ப்ளாகில் அந்த பாக்ஸ் தெரிய வரும் போது, கீழே புரியாத மொழியில் :) என்ன இருக்கிறதோ அதனை காப்பி செய்து கொள்ளவும்..
பிறகு டாஷ்போர்ட் சென்று - லேஅவுட் - அதில் எடிட் ஹெச்டிமெல் க்ளிக்கி,
அதில் expand widgets க்ளிக் செய்து..
வேறு எதையும் மாற்றாமல், எல்லாவற்றுக்கும் கீழே, இதனை பேஸ்ட் செய்திடவும்.. சேவ் செய்திட்டு வெளியே வரவும்...
சுவையான ட்ராஃபிக் லட்டு ரெடி :) செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்..
இது நம்ம மாதிரி கத்துக்குட்டி ப்ளாகர்ஸ் க்கு மட்டும்.. பெரியவர்கள் ஒதுங்கி நிற்க :)/// ஒதுங்கி நின்றுதான் இதை ரைப் பண்ணுகிறேன்:).
ReplyDeleteஅவசரமான பதிவானாலும் அழகாகச் சொல்லியிருக்கிறீங்க. எனக்கென்னவோ இதுவெல்லாம் போடவேணுமென்ற ஆர்வம் இன்னும் எழவில்லை. ரபிக் பீட் பார்த்து என்ன பண்ணப்போகிறோம் என்ற பீலிங்ஸ்தான்.. விருப்பம் வரும்போது பார்ப்போம்.
இன்னும் உள்ளே இருப்பதையெல்லாம் எடுத்துவிடுங்கோ.. நான் ஒதுங்கி நின்று பார்க்கிறேன்..பெரியவர் வரிசையில்.
கங்ராட்ஸ்.. படிச்சு முடிச்சும் நல்ல நிலமையில தான் இருக்கீங்க../// நல்லவேளை கட்டிலில் இருந்ததால் அப்படியே சரிந்துவிட்டேன்... இருப்பினும் நல்ல நிலைமையில்தான் இருக்கிறேனாம்.... பரிசோதித்த டாக்டர் சொன்னார்...
மியாவ் மியாவ் பூன.. வருக பூஸ் :)
ReplyDeleteசும்மா பெரிய பதிவர்கள் போட்டதெல்லாம் நாமும் போட்டுகறது தான் அதிரா :)அத வச்சு என்ன செய்யனும்னு எனக்கும் தெரியாது :)
இப்போ தான் சாப்டேன்.. எடுத்து விடட்டுமா? :)
அப்படியா? டாக்டர் தான் என்கிட்ட இந்த ஐடியா கொடுத்தார் - அதிராவ விழ வைக்க :)
விரிவான விளக்கத்துக்கு நன்றி சந்தனா!
ReplyDeleteஇங்கே பழகிய முகங்கள் தென்படுறாங்க..அவங்களுக்கும் ஒரு ஹாய் சொல்லிடறேன்!!
மியாவ் அதிரா! மிவ் மியா யூ ? மியாவி மியு ம்யூ யூ !
அதிராக்கு இந்த பாஷை புரிந்திருக்கும்னு நினைக்கிறேன்..மத்தவங்கெல்லாம் கண்டுகாதீங்க..ஹி,ஹி!!
//ட்ராஃபிக் லட்டு//
ReplyDeleteநல்ல சுவை!!
ட்ராபிக் லட்டுவா?? ம்ம்...சுவையாக உள்ளது எல்போர்டு அவர்களே..தங்கள் தெளிவான விளக்கத்தைப் பார்க்கையிலே புல்லரிக்கிறது! ஜீனோவும் கூட ட்ராபிக் லட்டு செய்யலாமா என்று சீரியசாய் திங்க் செய்கிறது!!
ReplyDeleteகவனிக்க, திங்க் மட்டுமே!! :)
//ரபிக் பீட் பார்த்து என்ன பண்ணப்போகிறோம் என்ற பீலிங்ஸ்தான்..// அதானே?? ஜீனோ இஸ் ஆன் அதிராக்கா'ஸ் side!! ஹி,ஹி!! :D :D :D
நன்றி ஹூசைனம்மா.. ஏதோ நமக்கு தெரிஞ்ச லட்டு மாடல் :)
ReplyDeleteஎன்ன ஜீனோ.. திடீர்னு மரியாதையெல்லாம் கொடி கட்டி பறக்குது!! ஸ்க்ரப் ஏதாச்சும் வச்சு சொறிஞ்சுக்கோங்கோ :) திங்க் கூட பண்ண வேண்டாம்.. எனர்ஜி இன்னமும் மிச்சமாவும் :)ஆமா உங்க ப்ரொக்ராம் ல திங்கிங் கெல்லாம் இடமிருக்கா? :))))
ReplyDeleteவர, வர, ஜீனோவைப் பாத்து யாருக்கும் பயம் இல்லாம்மப் போச்சு..எல்போர்டு, this is not fair!!
ReplyDeleteதத்துவப் புத்தகம் படிக்கும், வாரமலர் படிக்கும், என் இனிய இயந்திரா ஹீரோயின் நிலாவை வில்லன்களிடமிருந்து காப்பாற்றும் ...இன்ன பல சாகசமெல்லாம் புரிந்த... தல, இளைய தளபதி, என்றென்றும் சூப்பர் ஸ்டார், காதல் இளவரசன்:), காவிய நாயகர்:) ஜீனாயாரைப்:) :) பார்த்து
//உங்க ப்ரொக்ராம் ல திங்கிங் கெல்லாம் இடமிருக்கா? :))))// என்று கேட்டு விட்டீரே? வவ்...வவ்..கர்ர்ர்...வவ்!!கோரச்சம்பவம் நினைவிருக்கில்ல?
உங்கள் கிட்னி பழுதுபட்டுவிட்டது என்பது வெள்ளிடை மலையாய்ப் புலப்படுகிறது. விரைவில் அதிராக்காவின் டொக்டர் எங்கிருக்கிறார் என்று அக்காவிடம் கேட்டு அட்ரஸ் தெரிந்து, டொக்டரிடம் சிகிச்சை பெற்று சொஸ்தமாகி வரக் கடவீர்!!
மரியாதை வரக்காரணம்,ரெண்டு நாள் முந்தி ஜீனோ தனியே,தன்னந் தனியே, பாத்த "வீர பாண்டிய கட்ட பொம்மன்" சிவாஜி தான்! ஹி,ஹி!!
ஆமா ஜீனோ.. இது கருப்பாத் தான் இருக்கு.. ஃபேர் இல்ல :)
ReplyDeleteகோரச் சம்பவமெல்லாம் மறந்து போச்சே.. அதிரா.. ஒரு அப்பாயிண்ட்மண்ட் ப்ளீஸ்.. கிட்னி செக் பண்ணனும் :)))
பப்பி & மொப்பி கவனத்திற்கு,
ReplyDelete//அதிராக்காவின் டொக்டர் எங்கிருக்கிறார் என்று அக்காவிடம் கேட்டு அட்ரஸ் தெரிந்து// அதெல்லாம் கேட்காமல் தெரிய வேணும் எண்டுறதுக்காகத்தானே சந்தனா 'லட்டு' பிடிச்சு வச்சிருக்கிறாங்க. :))
இமா.. அந்த லட்டை நான் டேஸ்ட் பண்ணினதோட சரி.. பிடிச்சு வச்சதெல்லாம் பரண் மேலேயே கெடக்கு :)
ReplyDeleteஒதுங்கி நின்னுட்டேன்,,,
ReplyDeleteஎன்னை 'ஓடிப் போனவங்க' லிஸ்ட்ல சேர்த்திருக்கிறது ஒரு மாதிரி இருக்குப்பா. :)
ReplyDelete//எட்டிப் பாத்துட்டு ஓடிப் போனவங்க..// தலைப்பைச் சொல்றேன் சந்தூ.