20 January 2010

நேரத்தைத் தின்று செரித்த பின்பு...




அதிகாலை.. அலுப்பு.. அசதி.. அலாரமணைத்து..

முடிவுறா முழுமைபெறாக்

கனவுடன் கண் கசக்கி..

போர்வை விலக்கி.. குளித்துடுத்தி..

அவசரமாய் விரையும் பொழுதில்..

எங்கிருந்தோ வரும் ஊதுபத்தி மணம்..

எங்கும் பரவும் சூர்யோதயம்..

ஓடோடி வந்து வண்டியை விட்டதில்

சிந்தவிடப்பட்ட புன்னகை..

இவைகளைக் கடந்து சென்ற வண்டியில் நானும்..






பத்தோடு பதினொன்றாய்..

பாதை கடந்து.. பணி சென்று..

உணர்வுகளை உள்ளடக்கி..

கற்று கற்பித்து.. களைப்புற்று.. கண்ணயர்ந்து..

அந்தியில் கூடு திரும்பி...

இணையம்.. கணினி.. வலைதளம்.. வலம்..

சமையல்.. சாப்பாடு..

உண்டுறங்கி.. வாரநாட்களோட்டி..



விடுமுறையில் வீட்டினருடன்..

அலைபேசி.. அளவளாவி..

திரைப்படங்கண்டு.. சலித்து முடித்து..

வீடு துலக்கி.. பொழுதுபோக்கி..



வாரமொன்று கழிந்தோடி..

ஞாயிறிரவு உறங்கச் செல்கையில்..

தூக்கம் வர மறுத்து..

ஏதோவொன்று மனதை யுறுத்த..

என்னவென்று தேடித் துழாவியிருக்கையில்...

நினைவுக்கு வருகின்றன...

முயற்சிக்கப்படாத என் முயற்சிகளும்

தின்று செரிக்கப்பட்ட என் நேரமும்.....................



இப்பவே சொல்லிட்டன்.. எல் போர்டு..  இதென்னன்னெல்லாம் கேள்வி கேட்டு ஆரும் இன்சல்ட் பண்ணப்படாது :))

11 comments:

  1. எக்கோவ், நீங்க எல் போர்டா? நம்பணுமா?

    அழகா கவிதை கூட எழுதுறீங்க, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. சந்தனா 48 வாரத்துக்கும் சேர்த்து ஒரே வாரத்துல சொல்லிட்டீங்க...

    நல்லா இருக்கு...

    ReplyDelete
  3. நன்றி மஹி.

    ஹூசைனம்மா.. நானெப்ப உங்களுக்கு எக்கோவ் ஆனேன்?? :)) நீங்க தான் எனக்கு எக்கோவ் :)

    நன்றி வசந்த்.. கவிஞர் கிட்ட இருந்து பாராட்டா :) தலை கால் புரியல போங்க :)அப்ப மிச்ச நாப்பத்தெட்டையும் இப்படியே தான் கழிக்கப் போறோமா? :)பயமாயிருக்கே :)

    நன்றி வானதி..

    ReplyDelete
  4. உண்மைதான் போனவருடம் 52 வாரம்தான் இப்படி எழுத வைத்தது என்றால், வரும் 48 வாரத்துக்கும் மற்றொரு கவியை எடுத்து விடுங்கோ...

    சூப்பர் (இப்பதான் ஒளிஞ்சு வெளையாடுறவங்க எல்லாம் வெளியே வராங்க போல் இருக்கு) வாழ்த்துகள்.

    வாழ்க வளமுடன்.

    பி.கு: அது கொ அல்ல தகொ தான்...:)

    ReplyDelete
  5. என்னத்தைச் சொல்றது.. கடைசிப் பகுதி நானே எழுதின மாதிரி இருக்கு.

    பி.கு
    இனிமேல் கட்டுமானப் பணியில இருக்கிற எதைப் படிச்சு முடிச்சாலும் நல்ல நிலைமைல இருப்போம் என்று எனக்கு நம்பிக்கை வந்தாச்சு. அந்த வரியை எடுத்திரலாம் சந்து. :)

    ReplyDelete
  6. ஆஹா.. ஹைஷ்.. இப்படிச் சொல்லிச் சொல்லியே பீதி கிளப்பறீங்களே? :)) அடுத்த நாப்பத்தெட்ட எப்புடி கழிக்கறதுன்னு ஒரு பெரிய ப்ளாஆஆஆஆஆன் போட்டுகிட்டே இருக்கேன் தெனமும்.. அதப் பத்தி வேணா எடுத்து விடறேன்..

    ReplyDelete
  7. நன்றி இமா.. கிட்டத்தட்ட எல்லாருக்கும் வாரயிறுதியும் வருடயிறுதியும் அந்த மாதிரி தான் இருக்கும் இல்லையா?

    அந்த வரிய இப்ப எங்கன்னு போயி தேட இமா? :))

    ReplyDelete
  8. யப்பா இவங்ககிட்ட கொஞ்சம் சாக்கிரதையா இருக்கோனும் போல இருக்கே

    ReplyDelete
  9. இப்படி நீங்க அவ்வளவு பயப்படற அளவுக்கா எழுதியிருக்கேன்? :))

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)