09 April 2010

எங்கவூரில் ஒரு மழைக்காலம்...



விடுமுறைப் பொழுது.....
மாலை நேரத்து மழை.....
தெளித்தெழுப்பும் மண் வாசனை.....
பால்கனியில் தெறிக்கும் சாரல்....
வருடிக் கொண்டிருக்கும் தென்றல்....
இளஞ்சூடான தேனீர்....
மூடிக்கிடக்கும் கண்கள்.....
விழித்திருக்கும் உணர்வுகள்.....
என்னருகே நீ.....
கொஞ்சம் நேரமேயாயினும்
உலகம் மறந்திருக்கக்
கிடைத்த இவ்வேளை..............

இது, சென்ற புதன் கிழமையன்று கிடைத்த  மாலை மழைப் பொழுதில் எழுதப்பட்டது.. அப்படியே புகைப்படம் எடுக்கலாம் என்று நினைத்த போது, ஏற்கனவே இந்த மாதிரி எடுத்ததொன்று நினைவுக்கு வந்தது.. இந்தப் புகைப்படம் இந்தியாவில் கல்லூரி விடுதியின் பால்கனியில் இருந்து எடுத்தது.. உண்மையில், இதே இடத்திலிருந்து இதைப் போன்றதொரு பொழுதில் முதலில் எடுக்கப்பட்ட படம், சேமிக்கத் தவறி கேமராவில் இருந்து அழிக்கப்பட்டு விட்டது.. வருத்தமோ வருத்தம்.. அடுத்த சில நாட்களில், மீண்டும் அதே நேரத்தில் மழை.. அதே உணர்வுகள்.. அம்முறை, எடுத்தவுடனே சேமித்து வைத்தாயிற்று.. என்னருகே நீ இதில் மிஸ்ஸிங் :))

(போதும் நிறுத்து எல்போர்ட்.. எத்தனையோ முறை மழைய கண்டபடிக்கு திட்டிப்போட்டு ஒரே ஓட்டமா ஓடிப் போயிருக்க.. இந்த ஹீரோயின் பீலிங்ஸ் எல்லாம் விடக் கூடாது...)

அதற்காக, மழையில், வானம் பார்த்து, கைகளை விரித்து, வாய் திறந்து, சுற்றியவாறே, பாடிக் கொண்டிருப்பேன் என்று மட்டும் யாரும் கற்பனை பண்ணிப் போடாதீர்கள் :)) மழையைக் காணும் போதெல்லாம் அப்படி ஆடி மகிழ்வததென்பது, மிக்க உணர்வுப்பூர்வமான நம் தமிழ்ச் சினிமா நாயகிகளால் மட்டுமே முடியும் :)))

16 comments:

  1. எந்த ஊருல எடுத்தது? நாலாம் மழய இந்த மாதிரி போட்டாலதான் பாக்கறேன்... எங்க ஊரு புண்ணிய பூமி...!!!

    ReplyDelete
  2. பையா படம் பாத்தீங்களா????

    ReplyDelete
  3. அண்ணாமலையான்.. மழையக் காட்டறதுக்காக போடல.. ஒரு நா மழய ரசிச்சப்ப எடுத்தது.. அதுக்காகப் போட்டேன்.. சரியாச் சொன்னீங்க.. நம்மூர விடப் புண்ணிய பூமி எதுவாயிருக்க முடியும்?? :)))))))

    ஊரு - அது ரகசியம் :)) தமிழ்நாடு இல்ல..

    ReplyDelete
  4. என்னாச்சு முகிலன்? இன்னும் இல்ல.. பையா படத்துல அப்படியொரு சீன் இருக்கா??? அப்ப, கண்டிப்பா பார்த்துடனும் :)

    ReplyDelete
  5. ஹலோ பையா படத்துல ஒரு மழைப் பாட்டு இருக்குங்க.. அதுக்காக கேட்டேன்..

    ReplyDelete
  6. //ஊரு - அது ரகசியம் :)) தமிழ்நாடு இல்ல.//

    எனக்குத் தெரியும் எந்த ஊருன்னு.. :))))

    ReplyDelete
  7. என்னண்ணு லேபல் பண்ண?///// சந்து!! காதல் வந்திட்டுது என்று பண்ணுங்கோ... மழையோடுதான்.

    படத்திலிருக்கும் இடம் நல்ல அழகு, பச்சைப் பசேலென இருக்கு..

    ReplyDelete
  8. Nice photo!
    //உணர்வுப்பூர்வமான நம் தமிழ்ச் சினிமா நாயகிகளால் மட்டுமே முடியும் :)))// Exactly right! LOL :D

    ReplyDelete
  9. சந்து, கவிதையை விட ( ஞானசூனியமே என்று திட்டுவது கேட்குது) புகைப்படம் கொள்ளை அழகு.

    ReplyDelete
  10. அட உங்களுக்கு தெரிஞ்சு போச்சா?? நம்பவே முடியலயே... :))

    ReplyDelete
  11. ஹி ஹி.. நாம எத்தன படம் பாத்திருக்கோம் மஹி.. யீரோயின் மழையில ஆடிப் பாடறது, வரப்புல ஓடியாறது, பூவ முகர்ந்து பாக்கறதுன்னு.. :))

    ReplyDelete
  12. நன்றி வானதி.. சத்தமா திட்டிப்போட்டேனோ இந்த வாட்டி :))))))))))

    அந்த இடம் மழையில அழகாகத் தெரியுதில்லயா! படத்துல இருக்கற குடியிருப்புல தான் எங்க ஆசிரியர்கள் குடியிருக்காங்க.. அவங்களே ஆச்சரியப்பட்டு கேட்டாங்க - இந்த இடமா இப்படித் தெரியுதுன்னு..

    ReplyDelete
  13. உண்மையைச் சொல்லுறன் சந்தூஸ்... நான் சொல்ல நினைச்சதை வாணி சொல்லிட்டா என்று நான் சொல்ல மாட்டேன். ;))

    நானும் ஒரு நாள் இப்பிடி மேல இருந்து பார்த்து 'எப்பவும் புழுதி படிஞ்சு கிடக்கிற தேமா இலையெல்லாம் நல்ல வடிவாக் கழுவி விட்டுக் கிடக்கு,' எண்டு ரசிச்சுச் சொல்ல..... அப்ப, பக்கத்தில என்ர 'தண்ணி' இல்லாத 'தண்ணி' நிண்டவ. எனக்கு நீங்கள் யார் எண்டு இப்ப சந்தேகமாக் கிடக்கு!!! உங்களுக்கு எல்லாம் எப்பிடித் தெரியுது!!!

    ReplyDelete
  14. மேல இருக்கிற சிவப்புப் பூவைப் பற்றி ஏதோ கதை சொல்லுறதெண்டு சொன்னீங்கள். எங்க இன்னும் காணேல்ல!!

    ReplyDelete
  15. //மழையைக் காணும் போதெல்லாம் அப்படி ஆடி மகிழ்வததென்பது, மிக்க உணர்வுப்பூர்வமான நம் தமிழ்ச் சினிமா நாயகிகளால் மட்டுமே முடியும் //

    நானும் யோசிப்பேன், மழை வந்தா நாம மட்டும் ஏன் ஓடிப்போய் ஒளிஞ்சிக்கிறோம்னு; நான் மட்டும் இல்லைன்னு தெரிஞ்சதுல நிம்மதி!! (பின்ன அடுத்த நாள் அம்மாட்ட பாட்டுகேட்டுகிட்டே, டாக்டர் போடற ஊசிவலியையும் தாங்கிகிக்கணுமே...)

    ReplyDelete
  16. சித்திரை திருநாள் வாழ்த்துகள்.

    வாழ்க வளமுடன்

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)