Showing posts with label எடுத்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label எடுத்ததில் பிடித்தது. Show all posts

30 May 2010

இது கண்டிப்பா போட்டி தான்..

ம்ம்.. தொடருகிறேன்னு சொல்லிட்டு சத்தமில்லாம ஓடி வந்துட்டேன்.. அங்கயிருந்து சந்தூஊஊஊஊஊஊ ந்னு மியாஸ் கிட்டயிருந்து ஒரே அலறல் சத்தம்.. தொடர்ந்து கேட்டுக்கிட்டே இருக்கு.. சரியாத் தூங்கக்கூட முடியல.. அதான்.. அதுவுமில்லாம, பூஸுக்கு எதிரா களமிறங்கி களைத்திருக்கிற ஆன்ரிக்கும் அண்ணனுக்கும் தோள் கொடுப்பதற்காக.. நானும் இதோ..

இங்க வந்ததுல ஆரம்பத்துல ரொம்பவே கஷ்டமாயிருந்தது.. எங்கயும் வெளிய போக முடியாம கடுப்பாயிருந்த நாட்கள்.. அப்போ ஒரு நாள் திடீர்ன்னு ஒரு நண்பர் கிட்டயிருந்து அழைப்பு.. மாலை நேரம்.. பக்கத்துல இருக்கற ஒரு ஏரிக்குப் போகலாம்ன்னார்.. அவரும் அவரோட மனைவியும் வந்தாங்க.. அங்க போயி கொஞ்சம் நேரம் கதை பேசிட்டு.. ஏரிக்கரையிலயிருந்து அந்த அந்தி மாலையை ரசித்துவிட்டு.. அப்போ எடுத்த படங்கள்.. இதைப் பார்க்கும் போது அந்த நேரம் நினைவுக்கு வருது.. முழுமையாகயில்லைன்னாலும், அப்போ சந்தோஷமாயிருந்தது நினைவுக்கு வருது..




அடுத்ததா வர்றதெல்லாம் கலிஃபோர்னியா மாநிலத்துக்குப் போனவங்க கூட நானும் தொத்திகிட்டுப் போனப்ப எடுத்தது.. அதே ஊர்ல கடற்கரைல எடுத்ததத் தான் ஏற்கனவே போட்டாச்சு.. மீதியப் பாருங்க...

இவரு சில்வர் ஷார்க்.. இமா வீட்டுல பார்த்திருப்பீங்களே இவரோட அண்ணனை..



தூரத்துல பாருங்க.. போலார் பியர் தெரியறாரா? தெரியலன்னா அது சந்துவோட தப்பில்ல.. உங்களுக்கு தூரப் பார்வை சரியில்லைன்னு அர்த்தம்.. :))


ஜெய்லானி கண்ணுக்கு போலார் பியர் தெரியறாரோ இல்லையோ, கண்ணாடில பட்டுத் தெரிக்கிற ஃப்ளாஷ் வெளிச்சம் கண்ண உறுத்தப் போவது உறுதி..


அடுத்து.. மடகாஸ்கர் எஸ்கேப் டூ ஆஃப்ரிக்கால இவிங்க விமானம் ஓட்டிப் போவாங்க பாருங்க.. என்னா மூளை.. என்னா தெறம.. விமானம் க்ராஷ் ஆனதும், அதய சரியாக்க என்ன பண்ணலாம் யோசன பண்ணிட்டு இருக்குங்க.. அப்பப் பாத்து ஊர் சுத்திப் பார்க்கறதுக்காக மனுஷங்க ஒரு வண்டில வர, அந்த வழியில ஒரு முட்டைய ஒடச்சுப் போட்டு, அதுல இருந்து அப்பத்தான் ஒரு குட்டி பெங்குவீன் வெளிய வர்ற மாதிரி உணர்வுப்பூர்வமானதொரு காட்சிய வடிவமைச்சிட்டு, மனுஷங்க எல்லாரும் வண்டிய நிறுத்தி கீழயிறங்கி அந்தக் கண் கொள்ளாக் காட்சிய வாய் பிளந்து பார்த்துகிட்டு இருக்கும் போது, அப்படியே வண்டிக்குள்ள டபால்ன்னு குதிச்சு.. வண்டியக் கடத்திகிட்டு.. ஹாஹ்ஹா..



அடுத்ததா வர்ற ரெண்டு பேரையும் வச்சு நிறைய நீர் விளையாட்டுக் காட்சிகள் நடந்துச்சு..

இவர் சீ லயன்.. உணவுக்காக வாய் பிளந்து காத்துக் கொண்டிருக்கிறார்.. உணவு - மனிதர்களால் வீசப்படும் மீன்கள்..



அடுத்தவர் - கில்லர் வேல்.. இவர் மிகவும் ஆபத்தானவர்.. சிங்கத்தை பழக்குவது போன்று அபாயகரமானது இவர்களைப் பழக்குவது.. சில மாதங்களுக்கு முன்பு இதே இனத்தைச் சேர்ந்த ஒருவரால் (வேறொரு மாநிலத்து விளையாட்டு அரங்கில்) ஒரு பெண் பயிற்சியாளர் உயிரிழந்தார்.. நான் பார்த்த விளையாட்டு மிகவும் நன்றாகயிருந்தது.. மூன்று வேல்கள் - பயிற்சியாளர்களோடு நல்லதொரு கோ-ஆர்டினேஷன்.. அந்தப் பயிற்சியாளர்கள் உண்மையிலேயே பொறுமைசாலிகள் மற்றும் தைரியமானவர்கள்!! இந்தப் பெண்ணைப் பாருங்கள்.. சரியாக மூக்கின் மீது நின்று கொண்டிருக்கிறார்!!



அப்புறம்.. நம்ம ஊரு மாரியம்மன் பண்டிகை மாதிரி, இங்கயும் ஒரு திருவிழா நடந்தது.. அதுல தூரி, ராட்டினம்ன்னு பல வகையான விளையாட்டுக்கள் வச்சிருந்தாங்க.. அதுல எடுத்தது.. யார நினைச்சு எடுத்தேன்னு சொல்லவே வேண்டியதில்ல...


என்னா மிரட்டல்.. என்னா வில்லத்தனம் :) பொம்மை பப்பிக்கே இந்த லொள்ளுன்னா.. நிஜப் பப்பிக்கு கொம்ப்யூட்டர் பப்பிக்கெல்லாம் என்னா லொள்ளு இருக்கும்? என்னை மிருக லிஸ்ட்ல போட்டுட்டீங்களான்னு தங்கிலிபீச்சுல (இந்த பீச் எங்கயிருக்குன்னெல்லாம் யாரும் என்னைய கேட்கப் படாது) சண்டை போடுவார்.. பார்த்துகிட்டே இருங்க..

இப்போதைக்கு இம்புட்டு தான் பூஸ்.. ஓக்கை?

தொடர்ந்து மொக்கைப் பதிவுகள் போட்டுட்டதால அடுத்து வர்றது ஒரு ஜீரியஸ் பதிவா இருக்கலாம்.. ஜீரணிச்சுக்கோங்க மக்கள்ஸ்...

09 May 2010

இது யாருக்கும் போட்டியல்ல :)))

இதை நிலவெனச் சொன்னால் யாரும் நம்ப மாட்டினம்.. ஓக்கை.. ஓக்கை.. இவர் ஆதவர்.. செட்டாகிக் கொண்டிருக்கிறார் மேற்கு வானில்... இது கலிஃபோர்னியா மாநிலத்தில் ஒரு கடற்கரையில் எடுக்கப்பட்டது...


அப்பாலிக்கா இந்தாண்ட கெழக்குப் பக்கம் திரும்பினா.. அட.. நம்ம நிலவார்...


உண்மையில் இந்தப் புகைப்படம் படத்தில் தெரியும் இந்த ஹோட்டலை படமெடுப்பதற்காக எடுக்கப்பட்டது.. ஒரு நிமிஷம் நில்லுங்கோள் எல்லோரும்,  ஒரு படமெடுத்துட்டு வாறனென்று நான் பாட்டுக்கு கத்திக் கொண்டேயிருக்க, யாரும் கண்டுகொள்ளாமல் முன்னே நடக்க ஆரம்பித்துவிட்டனர்.. (எத்தனை படங்களுக்குத் தான் அவர்களால் நிற்க முடியும்??)... அவர்கள் பின்னாடி ஓடியபடியே எடுத்ததால், கொஞ்சம் ஆடிப் போய் வந்திருக்கிறது.. வருத்தந்தான்.. இல்லையென்றால், நல்லதொரு போட்டியாக வந்திருக்கும் :)))))))))) (ஆருக்கென்றெல்லாம் ஆரும் கேட்கப்படாது)

பின், அதே இடத்தில் இன்னும் ஒரு பகுதிக்குச் சென்றார்கள்.. பின்னே நானும்..

அங்கும், அந்தக் காட்சியில் கண்ட நீரையும், கரைக்கப்பால் ஒளிரும் மின்னொளியையும் படம் பிடிக்கவே இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது.. இதில் எல்லாவற்றுக்கும் மேலே தெரிவது நிலவென்று தான் நினைக்கிறேன்.. :))இம்முறை அதிகம் ஆடாமல் வந்துவிட்டது...