30 May 2010

இது கண்டிப்பா போட்டி தான்..

ம்ம்.. தொடருகிறேன்னு சொல்லிட்டு சத்தமில்லாம ஓடி வந்துட்டேன்.. அங்கயிருந்து சந்தூஊஊஊஊஊஊ ந்னு மியாஸ் கிட்டயிருந்து ஒரே அலறல் சத்தம்.. தொடர்ந்து கேட்டுக்கிட்டே இருக்கு.. சரியாத் தூங்கக்கூட முடியல.. அதான்.. அதுவுமில்லாம, பூஸுக்கு எதிரா களமிறங்கி களைத்திருக்கிற ஆன்ரிக்கும் அண்ணனுக்கும் தோள் கொடுப்பதற்காக.. நானும் இதோ..

இங்க வந்ததுல ஆரம்பத்துல ரொம்பவே கஷ்டமாயிருந்தது.. எங்கயும் வெளிய போக முடியாம கடுப்பாயிருந்த நாட்கள்.. அப்போ ஒரு நாள் திடீர்ன்னு ஒரு நண்பர் கிட்டயிருந்து அழைப்பு.. மாலை நேரம்.. பக்கத்துல இருக்கற ஒரு ஏரிக்குப் போகலாம்ன்னார்.. அவரும் அவரோட மனைவியும் வந்தாங்க.. அங்க போயி கொஞ்சம் நேரம் கதை பேசிட்டு.. ஏரிக்கரையிலயிருந்து அந்த அந்தி மாலையை ரசித்துவிட்டு.. அப்போ எடுத்த படங்கள்.. இதைப் பார்க்கும் போது அந்த நேரம் நினைவுக்கு வருது.. முழுமையாகயில்லைன்னாலும், அப்போ சந்தோஷமாயிருந்தது நினைவுக்கு வருது..
அடுத்ததா வர்றதெல்லாம் கலிஃபோர்னியா மாநிலத்துக்குப் போனவங்க கூட நானும் தொத்திகிட்டுப் போனப்ப எடுத்தது.. அதே ஊர்ல கடற்கரைல எடுத்ததத் தான் ஏற்கனவே போட்டாச்சு.. மீதியப் பாருங்க...

இவரு சில்வர் ஷார்க்.. இமா வீட்டுல பார்த்திருப்பீங்களே இவரோட அண்ணனை..தூரத்துல பாருங்க.. போலார் பியர் தெரியறாரா? தெரியலன்னா அது சந்துவோட தப்பில்ல.. உங்களுக்கு தூரப் பார்வை சரியில்லைன்னு அர்த்தம்.. :))


ஜெய்லானி கண்ணுக்கு போலார் பியர் தெரியறாரோ இல்லையோ, கண்ணாடில பட்டுத் தெரிக்கிற ஃப்ளாஷ் வெளிச்சம் கண்ண உறுத்தப் போவது உறுதி..


அடுத்து.. மடகாஸ்கர் எஸ்கேப் டூ ஆஃப்ரிக்கால இவிங்க விமானம் ஓட்டிப் போவாங்க பாருங்க.. என்னா மூளை.. என்னா தெறம.. விமானம் க்ராஷ் ஆனதும், அதய சரியாக்க என்ன பண்ணலாம் யோசன பண்ணிட்டு இருக்குங்க.. அப்பப் பாத்து ஊர் சுத்திப் பார்க்கறதுக்காக மனுஷங்க ஒரு வண்டில வர, அந்த வழியில ஒரு முட்டைய ஒடச்சுப் போட்டு, அதுல இருந்து அப்பத்தான் ஒரு குட்டி பெங்குவீன் வெளிய வர்ற மாதிரி உணர்வுப்பூர்வமானதொரு காட்சிய வடிவமைச்சிட்டு, மனுஷங்க எல்லாரும் வண்டிய நிறுத்தி கீழயிறங்கி அந்தக் கண் கொள்ளாக் காட்சிய வாய் பிளந்து பார்த்துகிட்டு இருக்கும் போது, அப்படியே வண்டிக்குள்ள டபால்ன்னு குதிச்சு.. வண்டியக் கடத்திகிட்டு.. ஹாஹ்ஹா..அடுத்ததா வர்ற ரெண்டு பேரையும் வச்சு நிறைய நீர் விளையாட்டுக் காட்சிகள் நடந்துச்சு..

இவர் சீ லயன்.. உணவுக்காக வாய் பிளந்து காத்துக் கொண்டிருக்கிறார்.. உணவு - மனிதர்களால் வீசப்படும் மீன்கள்..அடுத்தவர் - கில்லர் வேல்.. இவர் மிகவும் ஆபத்தானவர்.. சிங்கத்தை பழக்குவது போன்று அபாயகரமானது இவர்களைப் பழக்குவது.. சில மாதங்களுக்கு முன்பு இதே இனத்தைச் சேர்ந்த ஒருவரால் (வேறொரு மாநிலத்து விளையாட்டு அரங்கில்) ஒரு பெண் பயிற்சியாளர் உயிரிழந்தார்.. நான் பார்த்த விளையாட்டு மிகவும் நன்றாகயிருந்தது.. மூன்று வேல்கள் - பயிற்சியாளர்களோடு நல்லதொரு கோ-ஆர்டினேஷன்.. அந்தப் பயிற்சியாளர்கள் உண்மையிலேயே பொறுமைசாலிகள் மற்றும் தைரியமானவர்கள்!! இந்தப் பெண்ணைப் பாருங்கள்.. சரியாக மூக்கின் மீது நின்று கொண்டிருக்கிறார்!!அப்புறம்.. நம்ம ஊரு மாரியம்மன் பண்டிகை மாதிரி, இங்கயும் ஒரு திருவிழா நடந்தது.. அதுல தூரி, ராட்டினம்ன்னு பல வகையான விளையாட்டுக்கள் வச்சிருந்தாங்க.. அதுல எடுத்தது.. யார நினைச்சு எடுத்தேன்னு சொல்லவே வேண்டியதில்ல...


என்னா மிரட்டல்.. என்னா வில்லத்தனம் :) பொம்மை பப்பிக்கே இந்த லொள்ளுன்னா.. நிஜப் பப்பிக்கு கொம்ப்யூட்டர் பப்பிக்கெல்லாம் என்னா லொள்ளு இருக்கும்? என்னை மிருக லிஸ்ட்ல போட்டுட்டீங்களான்னு தங்கிலிபீச்சுல (இந்த பீச் எங்கயிருக்குன்னெல்லாம் யாரும் என்னைய கேட்கப் படாது) சண்டை போடுவார்.. பார்த்துகிட்டே இருங்க..

இப்போதைக்கு இம்புட்டு தான் பூஸ்.. ஓக்கை?

தொடர்ந்து மொக்கைப் பதிவுகள் போட்டுட்டதால அடுத்து வர்றது ஒரு ஜீரியஸ் பதிவா இருக்கலாம்.. ஜீரணிச்சுக்கோங்க மக்கள்ஸ்...

18 comments:

 1. //ஜெய்லானி கண்ணுக்கு போலார் பியர் தெரியறாரோ இல்லையோ, கண்ணாடில பட்டுத் தெரிக்கிற ஃப்ளாஷ் வெளிச்சம் கண்ண உறுத்தப் போவது உறுதி..//
  ஹி.. ஹி... கமராவ கொஞ்சம் இறக்கிப் பிடிச்சுத் தட்டியிருந்தா கைகள் மட்டும் இல்லாம சந்தூஸ் முகதரிசனமும் கண்ண உறுத்தி இருக்கும் என்பதும் உறுதி. ;)

  என் கண்ணுக்கு.... முதல்ல படத்தில இடப்பக்கம் துருவக்கரடித்தோல் காய வச்சு இருக்கிறது மாதிரி தெரிஞ்சுதா... கண்ணுல விளக்கெண்ணை விட்டுப் பார்த்தேனா... பக்கத்துல கரடியார் கோலம் போட்ட கல்லுல தூங்கிட்டு இருந்தார். ;) எனக்கு இந்தக் கலர் & டிசைன் பிடிச்சு இருக்கு. கோலம் போடலாம். மெஹந்திக்குக் கூட குட். ;)) Tkz Els. ;)

  ReplyDelete
 2. முதல் படம் கொள்ளை அழகு.

  அழகு திரு. & திருமதி அதிரா எங்க ஓடுறாங்க? ;)

  இவர் பெரீய சில்வர்ஷார்க் ஆக இருக்கிறாரே!! நான் தொட்டியைப் பெரிதாக்க வேண்டி வருமோ!!

  மீதிப் படங்களும் அழகு.

  அட பப்பி தோட்டம் போட்டு இருக்கா? ஸ்ட்ராபெரி. ம். பொங்கல்பானை, ஒரிகானோ, குதிரை லாடம்!!! ??

  ReplyDelete
 3. சந்தூஊஊஊஊ கலக்கிட்டீங்க... இருப்பினும் தெகிரியம் பத்தாது??? ஒரே ஒரு தாராப்படம்தான் இருக்கு:). நானும் நேற்றும் படங்கள் எடுத்தேனே....

  //பூஸுக்கு எதிரா களமிறங்கி களைத்திருக்கிற ஆன்ரிக்கும் அண்ணனுக்கும் தோள் கொடுப்பதற்காக.. நானும் இதோ..// எனக்குத் தம்பி, உங்களுக்கு அண்ணனா? இது ரொம்ப ஓவர்.... தம்பி பார்த்தால் பார்க் பண்ணுவார்.....

  இருந்தாலும் உப்பூடி பப்பியை சோடித்து அந்தப்புரத்துக்காவலன் மாதிரி விட்டிருப்பது ஒருமாதிரித்தான் தெரியுது.....

  சீலயன் கூத்துக்கள் இங்கும் கண்டு களித்திருக்கிறோம் சூப்பர்.

  //தெரியலன்னா அது சந்துவோட தப்பில்ல.. உங்களுக்கு தூரப் பார்வை சரியில்லைன்னு அர்த்தம்.. :))/// என்னை யாரும் ஏமாத்த முடியாது, எனக்கு வெள்ளைத் துணி காயப்போட்டிருப்பதுபோலதான் என்னவோ தெரியுது. நாங்களெல்லாம் மூட்டை மூட்டையாகக் கரட் சாப்பிடுற ஆட்கள்>>

  தொடர்ந்து மொக்கைப் பதிவுகள் போட்டுட்டதால அடுத்து வர்றது ஒரு ஜீரியஸ் பதிவா இருக்கலாம்.. //// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... இது மொக்கையில்லை, அடுத்து நீங்க போடப்போவதுதான் மொக்கை என நினைக்கிறேன்..... ஆமா, உண்மையிலயே தெரியாமல்தான் கேட்கிறேன் மொக்கை என்றால் என்ன???? அதி பூஸா மீயா எஸ்யாஆஆஆஆஆஆஆஆ

  ReplyDelete
 4. சபாஷ் சரியான போட்டி.

  ReplyDelete
 5. பியர் சொகுசா தூங்குகிறார்.தூங்குகிற வரை ஏன் டிஸ்டப் பண்ணனும்.
  படங்கள் சூப்பரா இருக்கு .அதை விட தலைப்பு இன்னும் டெர்ரரா இருக்கு. என்னா வில்லத்தனம்...!!!நீங்க தைரியமா எல் போர்ட கழட்டிடலாம்

  ReplyDelete
 6. ரெண்டாவது படம் அ( தாரா) வை துரத்திகிட்டு போற மாதிரி போட்டது......
  :-))))

  ReplyDelete
 7. அவ்வ்வ்வ்.... என்னாதிது.. எல்லாரும் மாலைமலர் ஃபோட்டோகிராஃபர் மாதிரி கையில கேமராவோடவே இன்னும் இருக்கீங்கோ??!!

  படம்லாம் ரொம்ம்ம்ம்ப நல்லாகீதுப்பா..!! எனக்கு சாதாரணக் கண்ணுதாம்ப்பா, கலை(யோட) கண்ணு இல்ல!! அதனால மருவாதியா அடுத்தது ஒரே ஒரு படத்தோட நிறைய தியரி எழுதுங்க!!

  ReplyDelete
 8. //ஜெய்லானி கண்ணுக்கு போலார் பியர் தெரியறாரோ இல்லையோ, கண்ணாடில பட்டுத் தெரிக்கிற ஃப்ளாஷ் வெளிச்சம் கண்ண உறுத்தப் போவது உறுதி//

  இவ்வளவு படம் போட்ட நீங்க , போட்டிருக்கிற டிரஸ் மாடலையும் தனியா போட்டா நல்லா இருந்திருக்கும் சூப்பர் டிஸைன். எம்ராய்டிங் ரெடிமேடா , இல்ல உங்க டிஸைனா.? !!!

  ReplyDelete
 9. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... இமா.. எங் கண்ணுல அது படவேயில்ல.. நீங்க உண்மையிலேயே விளக்கெண்ணெய் விட்டுட்டுத் தான் பார்த்திருக்கீங்க.. என்ன சொல்லியிருக்கீங்கன்னு மறுபடியும் பார்த்தப்பத் தான் புரிஞ்சது :)) நல்லவேளை, கமராவை சரியாகப் பிடிச்சிருக்கேன்...

  அதுக்கென்ன இமா.. அதையும் ஒரு படமெடுத்துப் போட்டுட்டாப் போச்சு.. (ஹூசைனம்மா முறைத்துக் கொண்டிருக்கிறார்..) இத்துடன் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

  ReplyDelete
 10. திரு அதிரா பிள்ளைகள பள்ளிக்கூடத்துல இருந்து கூட்டியாறப் போறாங்க.. திருமதி அதிரா.. அவரைத் துரத்திகிட்டுப் போறாங்க :))

  நன்றி இமா.. பப்பி அங்கிட்டு காவல் காத்துகிட்டு இருக்கார்.. பூக்களின் பாதுகாவலராக...

  ReplyDelete
 11. இன்னொரு தாராப் படம் இருட்டிலே எடுத்தது அதீஸ்.. அவ்வளவு தெளிவாக இல்லை..

  உங்க தம்பின்னா அப்ப எனக்குச் சித்தப்பா முறைல வேணும்.. அப்படித்தானே ஜீன்ஸ்??

  ஹாஹ்ஹாஹா.. பப்பியின் வேலைக்கு நல்ல உவமை அதீஸ்.. அவரிப்போ பூந்தோட்டக் காவல்காரர்.. (மரியாதை மரியாதை..)

  ReplyDelete
 12. நன்றி ஆசியா.. நேத்து உங்க உருளை கமெண்டைப் படித்துப் போட்டு ஒரே சிரிப்பு போங்க :)

  ReplyDelete
 13. நன்றிங்கோ ஜெய்லானி.. அதைத் தொந்திரவு செய்யாமல் தான் எடுத்தோம்.. ப்ளாஷ் வெளிச்சம் போட்டது அதுக்குத் தெரியாதல்லோ..

  அதே அதே.. திருவை திருமதி துரத்துகிறார்.. எப்பூடி?

  ReplyDelete
 14. ஹூசைனம்மா.. முறைக்காதீங்கோ.. எஞ் சோம்பேறித்தனந்தான் ஊரறிஞ்சதாச்சே :)) ஹிஹி..

  அடுத்த பதிவுல கண்டிப்பா ஒரே ஒரு படம் தான் போடுவன்.. ஓக்கை?

  மாலைமலர் புகைப்படக்காரர்?? டூ பேட்.. :))

  ReplyDelete
 15. மறுபடியும் கர்ர்ர்ர்ர்... பொல்லுக்கொடுத்து அடி வாங்குவதென்பது பற்றி அதிரா சொல்லிக் கொண்டிருப்பார்.. இன்று நான் வாங்கிக் கொண்டிருக்கிறேன்.. :))

  கண்டிப்பா அடுத்த பதிவுல அதையும் அச்சேத்திடலாம்.. ஏன் நீங்களும் மெஹந்தி போடனுமா ஜெய்லானி?? :))))

  ReplyDelete
 16. முதல் இரண்டு படங்களும் மிகவும் அருமை

  ReplyDelete
 17. ஹா..ஹா!! சூப்பர் மொக்கை!!
  முதல் இரண்டு படங்களும் ரொம்ப அழகா இருக்கு சந்தனா!

  ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)