21 May 2010

எனக்கும் பொழுது போகவில்லை :)

முன்னாடியே சொல்லிக்கறேன்.. தலைப்புல ”எனக்கு” க்கப்புறம் ”ப்” க்கு பதிலா ”ம்” போட்டதால, இதுக்கு  யாரும் காப்பி ரைட் கேட்டு கோர்ட்டுக்கெல்லாம் போகக் கூடாது.. :))))

ரொம்ப நாளா இதை எழுதனும்ன்னு நினைச்சிட்டே இருந்தேன்.. இப்ப ஏனோ போடனும்ன்னு தோனுச்சு (இதுவும் யாருக்கும் போட்டியல்ல :))) )..

திடீர்ன்னு ஒரு நாள் எல்ஸ் மண்டைல ஞானோதயம் (அதாங்க, பல்பு) வந்துச்சு... இப்படியே வெட்டியா பொழுதப் போக்கிட்டு இருக்கமே, ஏதாவது உருப்படியான காரியம் பண்ணலாம்ன்னு தோனுச்சு.. அன்னைக்கு எனக்கு வந்த வேகத்துல (??!!) நடந்தது என்னன்னு நீங்களே பாருங்க..

கைக்கு கிடைச்ச இந்தத் தொட்டிய.. இருங்க இருங்க.. தூக்கிப்போட்டு உடைக்கவெல்லாம் இல்ல.. நாமதான் எப்பவுமே ஆக்கப்பூர்வமான (??!!) காரியங்களைப் பண்றவங்களாச்சே.. அதனால, தொட்டில இருந்த மண்ணை கையால கிளறிப்போட்டு (இந்த வார்த்தைகளை இப்பத்தான் வேறெங்கயோ படிச்ச மாதிரி இருந்தா, அதுக்கு நான் பொறுப்பில்ல :) )... தண்ணி விட்டு... வீட்டுல இருந்த சில விதைகளை போட்டுவிட்டேன்.. போடும் போதே சந்தேகம்.. இது பி.டி. விதைகளோன்னு.. அதுக்கேத்த மாதிரி, தினமும் தண்ணி விட்டும், கிட்டத்தட்ட அஞ்சு வாரம் ஒரு மாற்றமுமே இல்லாம இருந்தது இந்தத் தொட்டி.. அப்புறம், ஒரு நாள் காலைல எழுந்து பார்த்தா...

சின்னச்சின்ன முளைப்புகள்.. விதையத் தாங்கி நின்னுட்டு இருந்ததுங்க.. 
நான் வளர்கிறேனே சந்து..இப்படியே லிட்டர் லிட்டரா தண்ணியக் குடிச்சுக் குடிச்சு...


எங்களுக்கும் பூக்கத் தெரியும்ன்னு...ஹிஹி.. இதுகளை வச்சு அப்படியே உங்களுக்கெல்லாம் 
ஒரு வாழ்க்கைச் சுழற்சிப் பாடம் எடுக்கலாம்ன்னு...சரி.. பாடம் படிச்சு முடிச்சாச்சா? இனிமே கேள்விக்கு ஒயுங்கா பதில் சொல்லிட்டுப் போங்க.. சரியான விடை சொல்ற பசங்களுக்கு/புள்ளைகளுக்கு தேன் மிட்டாய் பரிசாக கொடுக்கப்போறேன்... (இது என்ன செடின்னு யாரும் டீச்சரம்மா கிட்ட சந்தேகம் கேட்டுடமாட்டீங்க தானே?)

விதைலயிருந்து பூ வந்ததா இல்ல பூவிலேர்ந்து விதை வந்ததா?

(முன்னூக்கத்திற்கு பல நன்றிகள் செபாவுக்கும் இமாவுக்கும்...) 

16 comments:

 1. சந்தனா, பார்ஸ்லி அழகா இருக்கு. எங்க மகி அக்காக்கு போட்டி போல இருக்கு.
  விடை : செர்ரி tomatoes.

  நான் இமாவுக்கு கஷ்டப்பட்டு, மண்டையை குடைந்து, முடியை பிச்சு, உதறி கண்டு பிடிச்ச தலைப்பை "ப் " மாத்துறேன், " ம்" போடுறேன் என்று சொன்னாலும் குற்றம் குற்றமே.

  என் தலைப்பை இன்னும் யார் யாரெல்லால் சுடப்போறாங்களோ தெரியவில்லை.

  தேன் மிட்டாய் எங்கே?

  ReplyDelete
 2. பூவுல இருந்துதான் விதை வந்தது..

  ஏன்னா விதையில இருந்து செடிதான் வரும்..

  இப்படிக்கு,
  எப்பிடி பந்து போட்டாலும் சிக்ஸ் அடிப்போர் சங்கம்.

  ReplyDelete
 3. வானதி.. கிட்டத்தட்ட நெருங்கிட்டீங்க.. இது சிலாண்ட்ரோ.. பார்ஸ்லிக்கு சொந்தக்காரர்..

  விடை??? நான் கேட்ட கேள்வியென்ன? உங்க பதிலென்ன? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இந்தப் பதிலுக்கு தேன் மிட்டாய்ல குச்சி மட்டுந்தான் கொடுப்பேன் :))

  //நான் இமாவுக்கு கஷ்டப்பட்டு, மண்டையை குடைந்து, முடியை பிச்சு, உதறி கண்டு பிடிச்ச தலைப்பை//

  இம்புட்டு கஷ்டப்பட்டு கலந்துகிட்டீங்களா போட்டியில? போட்டி முடிவை ரீச்சர் அறிவிச்சிட்டாங்களா? இனிமே தான் எல்லாப்பக்கமும் எட்டிப் பார்க்கனும்..

  ReplyDelete
 4. அடா அடா.. அண்ணாத்தைக்கு என்னா அறிவுடா சாமீ!! உண்மையச் சொல்லிடுங்க - விடை தெரியாம முழிச்சிகிட்டு இருந்தப்ப, உங்க லிட்டில் வந்து எட்டிப் பாத்துச் சொல்லிட்டு ஓடுன விடை தான இது?? :)))))))

  பந்தே இல்லாம சிக்ஸர் எப்படி அடிக்கறதுன்ற மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா?? :))))))))

  ReplyDelete
 5. கோழில இருந்து முட்டை வந்த மாதிரி,முட்டைல இருந்து கோழி வந்தமாதிரி தான் இதுவும் சந்தனா!;)
  எனக்கு தேன் மிட்டாய் பிடிக்கும்..கம்பர்கட்-தான் பிடிக்காது..ஒரு பெரிய பேக்கா குடுத்தா வைச்சு சாப்பிட வசதியா இருக்கும்.

  //மஹி.. கடைசி படத்துல இருக்கற மாதிரி விட்டிருக்கீங்களா?// என்னையப் பாத்தா எப்புடி இருக்கு உனக்கு? grrrrrrr !!! மண்ணு போட்டு மூடி தான் வைச்சிருக்கேன்..க்ரோனோலாஜிக்கலா:) அப்பப்ப அப்டேட் பண்ணறேன்.

  சரி,கொத்துமல்லி இலையைப் பறிக்கலையா? பூ பூத்து காயும் காய்ச்சுடுச்சு..பழம் பழுக்க வைக்கிற ஐடியா எதுவும் இருக்கா? :) 4 வது,5 வது படங்கள் அழகு. :)))

  // தேன் மிட்டாய்ல குச்சி மட்டுந்தான் கொடுப்பேன் :))//???? எங்க ஊர் தேன்மிட்டாய், மோஸ்ட்லி சிவப்பா, சில சமயம் மஞ்சளா,சின்ன உருண்டைகளாத்தான் இருக்கும்..நீ சொல்லறது புதுசா இருக்கு!!

  ReplyDelete
 6. முதல் படத்தை பாத்தே கொத்து மல்லி விதையை கண்டுபிடிச்சிட்டேன். ஆனா , ஸ்டெப் பை ஸ்டெப்பா படம் போட்டது கொஞ்சம் ஓவர். இப்பிடியா அவங்களை ( ரெண்டு பேரையும் ) வெறுப்பேத்துவது.
  இன்னும் எத்தனை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சவுண்ட் வரப்போகுதோ!!!

  ReplyDelete
 7. நான் எங்கே முன்னூக்கினேன்? ;)
  இனி காயை என்ன செய்யப் போகிறீர்கள்?

  ReplyDelete
 8. நல்ல பொறுமை உங்களுக்கு. எனக்கும் இதைப்பார்த்தவுடன் ஆசை வருது,நானும் மண்ணை கிளர வேண்டியது தான் பாக்கி.

  ReplyDelete
 9. சந்து பொழுது போகாத நேரத்தில பிரயோசனமான வேலைதான் செய்திருக்கிறீங்க, மல்லிபோல இன்னொரு சாடியில் கடுகு போடுங்கோ அதுவும் நல்லா வரும், இன்னொரு பொழுதுபோகாத நாள் படமெடுத்தும் போட்டிடலாம் ஓக்கை????

  ReplyDelete
 10. அதீஸ்.. எப்பிடியெப்பிடியெல்லாம் ஐடியா கொடுக்கறீங்கள்? மஹியோட வெந்தயம் முளைக்குதான்னு (!!) பாத்துட்டு, அடுத்து வெந்தயம்.. அப்புறம் கண்டிப்பா கடுகு தான்..

  நானாவது பொழுது போகாமல் வீட்டில் படமெடுத்துக்கொண்டிருக்கிறேன்.. நீங்க வீதி வீதியால்ல அலைஞ்சிட்டிருக்கீங்கள்??? :))))

  ReplyDelete
 11. நன்றி ஆசியா.. கண்டிப்பா நீங்களும் போடுங்க.. தினமும் காலையில் இதுகள் முகத்தில் விழித்தால் நன்றாக இருக்கும்..

  ReplyDelete
 12. போட்டோ போட்டுப் போட்டு என்னை தூண்டிவிட்டதே நீங்கள் தான் இமா.. பிறகு தான் செபாவின் தோட்டத்தில் இதை பார்க்க நேர்ந்தது.. சின்ன வயதில் (என்னுடைய :) ) இதை அம்மாவும் வளர்த்திருக்கிறார்.. அந்த அனுபவத்தில் (!!) செய்திட்டேன்..

  விதைகளை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.. அடுத்த முறை போடுவதற்காக...

  ReplyDelete
 13. ஜெய்லானி... உங்க கண் ரொம்பவே கூர்மையானது.. விதையை தாங்கி நிற்கும் முளைப்பை க்ளோசப்ல எடுக்க முயற்சித்தேன்.. சரியாக வரவில்லை.. இதிலேயே கண்டுகொண்டீர்கள்.. நன்றி..

  இந்த ஓவர் முடிஞ்சதும், அடுத்த ஓவர் ஆரம்பமாகும்.. பார்க்கலாம், யாரு சிக்கறாங்கன்னு :))

  ReplyDelete
 14. மஹி.. ஹீஹீ.. ஒரு விடையற்ற கேள்விக்கு இன்னொரு விடையற்ற கேள்வி விடையாகாது :)

  ஓக்கை.. ஓக்கை.. தேன் மிட்டாய் பேரைத் தவிர எதுவும் எனக்கு நினைவுக்கு வரவில்லை.. சும்மா அடிச்சு விட்டது தான் அது :)) கம்பர்கட்?? சாப்பிட்டது இல்லை..

  ஓக்கை.. என்னைப் போல பெரிய விவசாயி (??!!) இல்லைன்னாலும், உங்களுக்கும் ஏதோ தெரியும்ன்னு ஒத்துக்கிறேன் :))

  இலை பறிக்க மனசு வரலை மஹி.. அதான்.. அடுத்த முறை முயற்சிக்கறேன்..

  இதுல பழமெல்லாம் ஏதும் வராது மஹி... ஓக்கை.. மறுபடியும் கர்ர்ர்ர் ஆகிடாதீங்கோ :)).. நிறைய விதைகளை குருவிகள் கொத்தியெடுத்துப் போய்விட்டதுகள்.. அது போக, மிஞ்சியிருந்த விதைகளை சேகரித்து வைத்திருக்கிறேன்.. அடுத்த முறை போடுவதற்காக..

  ReplyDelete
 15. /விதைலயிருந்து பூ வந்ததா இல்ல பூவிலேர்ந்து விதை வந்ததா?/ ங்கொய்..ங்கொய்..ய்ய்..ய்ய்! @@##@@##$$$@@!!! @@##@@##$$$@@!!! @@##@@##$$$@@!!! @@##@@##$$$@@!!! @@##@@##$$$@@!!! @@##@@##$$$

  (ஜீனோஸ் ப்ரோக்ராம் டெர்மினேட்டட் அபரப்ட்லி!!)

  ReplyDelete
 16. அப்பாடி.. எப்படியோ ஒரு வழியா, கஷ்டப்பட்டு, ஜீன்ஸ் அண்ணாத்தையோட மூச்சையும் பேச்சையும் நிறுத்தியாச்சு.. நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கோங்கோ மக்கள்ஸ்.. :))

  ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)