31 May 2010

”கம்பி” யூட்டர் ”இஞ்சி” “நீரு”

இதற்கு முந்தைய பதிவில் பகுதி ஒன்றைக் காண்க..


குமரன் கல்லூரி செல்ல ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஓடியிருந்தன.. இந்த இடைவேளையில், பெரிசுகளில் கொஞ்சம் பேர் தடியூன்ற ஆரம்பித்திருந்தனர்.. ஒன்றிரெண்டு பேர் வருவதில்லை..  புதியதாகச் சிலர் பெருசாகப் பதவியுயர்வு பெற்று வர ஆரம்பித்திருந்தனர்.. ஆக, கூட்டத்துக்கு குறைச்சலில்லை.. லொள்ளுக்குந் தான்..

அந்தப் பக்கத் திண்ணையில் பாட்டி தனிக் கூட்டம் கூட்ட ஆரம்பித்திருந்தார்.. தாத்தன் திண்ணையில் கூடுமளவுக்கு இல்லை தான்.. ஆனாலும் அவ்வப்போது என ஒன்றிரண்டு பாட்டியர் நின்று போக ஆரம்பித்திருந்தனர்.. வெள்ளிக்கிழமை தான் இவர்கள் ஊர் சந்தையென்பதால், இவர்கள் வீட்டுத் திண்ணையில் சற்று நேரம் கூடையை இறக்கிவைத்து, தண்ணீர் குடித்து இளைப்பாறி, கதையடித்து விட்டுச் சென்றனர்.. பாட்டியர் திண்ணையில் தாத்தனது திண்ணையைப் போல மல்டினேஷனல், நேஷனல் விஷயங்கள் அலசப்படுவதில்லை.. பெரும்பாலும், மருமகள்களைப் பற்றியும், பேரன் பேத்திகளைப் பற்றியும், அக்கம்பக்கத்தினர் பற்றியுந் தான் பேசப்பட்டது..

செமஸ்டர் லீவில் ஊர் திரும்பியிருந்தான் குமரன்.. அவனுக்கென்னமோ,  தாத்தன் திண்ணை தான் சுவாரசியமாகப் பட்டது.. எனினும், பெரிசுகளின் லொள்ளுக்கு பயந்து பாட்டியின் திண்ணைப் பக்கம் ஒதுங்க ஆரம்பித்திருந்தான்..   அன்று மாலை, தனது வீட்டிலிருந்து வெளியே வந்தவன் (பாட்டிக்கும் இவனது அம்மாவிற்கும் ஒத்து வராததால், அருகருகிலேயே தனித்தனி வீடுகளில் வசித்து வந்தனர்) திண்ணைப் பக்கமாகத் திரும்பிப் பார்க்க, அங்கு தன் பாட்டியுடன் பேசிக்கொண்டிருந்தவரைக் கண்டதும், சற்று யோசித்து விட்டு, முன் வைத்த காலை வீட்டுக்குள் பின்னெடுத்து வைத்தான்.. இவர் அந்தப் பொ............ய்ப் பாட்டியன்றோ..

சில வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவமிது.. ஒரு நாள் இவன் தன்பாட்டுக்கு தாத்தனின் திண்ணையில் அமர்ந்து கரும்பு கடித்துக் கொண்டிருக்க, இந்தப் பொ........ய்ப் பாட்டி இவர்களது வீட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தார்.. மரியாதை நிமித்தமாக, இவன் அவரைப் பார்த்துச் சிரித்து வைத்தான்.. அவரும் பதிலுக்கு புன்னகை பூத்து, நலம் விசாரிக்க வாய் திறக்க, அதற்குள் இவன் முந்திவிட்டான்..

”கரும்பு சாப்புட்டுப் போங்க பாட்டி”

அவ்வளவு தான், அவருக்கு வந்ததே கோபம்.. இவனை முறைத்துப் பார்த்து விட்டு, விடுவிடுவென நடந்து சென்றவர், நேரே இவனது வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினார்.. இவனது அம்மா வந்து திறந்துவிட, உள்ளே சென்றவர் சிறிது நேரம் கழித்து வெளியே வந்து, மறுபடியும் இவனை முறைத்தவாறே கடந்து சென்றார்.. இவனுக்கு ஒன்னும் புரியவில்லை.. அவர் சென்ற பின், இவனது அம்மா இவனை அழைத்தார்..

“ஏண்டா, உனக்கு வம்பிழுக்க வேறாளே கிடைக்கலியா?”

“என்னது??”

“அவுங்க பேரே பொக்க வாய்ப் பாட்டி.. அவங்களப் போயி கரும்பு திங்கறீங்களான்னு கேட்டியாம்ல்ல??”

அதே பொ.....ய்ப் பாட்டி தான்.. கன்ஃபர்ம் செய்திட்டு குமரன் வீட்டுக்குள் ஓடும் முன், பொ.....ய்ப் பாட்டி இவனையழைத்தார்...

”கொமாரு.... என்னைய அடையாளம் தெரியுதா?”

(இதுக்கு அந்த டொமாரே பரவாயில்லையோ??)

“தெரியுதுங்க பாட்டி..”

“கம்ப்யூட்டருக்கு படிக்கறயாம்ல்ல?”

“ஆமாங்க”

“இந்த மூணு மாசம் ஆறு மாசம்ன்னு கம்ப்யூட்டருக்கு படிக்கறாங்களாம்ல.. அந்த மாதிரிப் படிக்கிறியா? அதயப் படிச்சா மட்டும் வேலை கிடைக்காதாம்ல்ல?”

வெகு நாட்கள் கழித்து, மறுபடியும் க........ன் குமரன்...

பெரிசுகள் தானென்று இல்லை.. இந்தச் சிறிசுகளுக்கும் இவனைக் கண்டால் தொக்காய்த்தானிருந்தது..

சரண்.. இவனது பெரியம்மா பெண்ணின் மகன்.. படிப்பது ஏழாவது.. ஆனால் அப்போதே அவனது பேச்சில், பல வருடங்கள் கழித்து பெருசாகப் போவதன் சாயல் இருந்தது...

”மாமா.. நீங்க தான் கம்ப்யூட்டர் இஞ்சினியருக்குப் படிக்கறீங்கள்ல?”

“ஆமா, அதுக்கென்ன இப்போ?”

“எங்க, கம்ப்யூட்டர் கீ போர்ட் ல எத்தன கீ இருக்குன்னு சொல்லுங்க பாப்போம்..”

இவன் விடை தெரியாமல் முழிக்க,

“இது கூடத் தெரியலீங்களே மாமா உங்களுக்கு”

சரண் விடையைச் சொன்னதும், இவனது அக்கா இவனைப் பார்த்த பார்வையில், எம்மவன் உன்னையவிட அறிவாளிடா என்ற பெருமை தெறித்தது...

மறுபடியும் க.......ன் குமரன்...

பொறுத்தார் பூமியாள்வார்.. இதோ.. இன்று குமரன் தனது கம்ப்யூட்டர் இஞ்சினியர் என்ற இமேஜுக்கு ஏற்பட்ட அத்தனை டேமேஜ்களையும் கடந்து, தனது படிப்பை முடித்து, வேலையுங் கிடைத்து, அமெரிக்காவில் பணி புரிகிறான்.. இன்று அவன் வெற்றித் திருமகன்..

ஆனாலும், விதி விடுவதாயில்லை... க்ளையண்ட் கம்பனி மக்களுக்கு எப்போதெல்லாம் இவர்களது சாஃப்ட்வேரில் பிரச்சனை வருகிறதோ, அப்போதெல்லாம் இவன் உடனடி தரிசனம் தந்து, முன்னின்று, அதனைச் சரி பார்த்துத் தர வேண்டும்..

ஒரு நாள் இந்தூர்ப் பெரிசு ஒருவர் அவனை அழைத்தார்..

“I am not able to log in.. My username and password are same as before..”

“Just reboot your computer and try again” பதிலளித்தான் குமரன்..

“I know to do that... I thought you software guys had better solutions for such problems..”

டொம்மென்று ஃபோனைச் சாத்தினார் பெரிசு...

க.........ன் குமரன்..

ஆச்சு.. நாளும் போச்சு... இரண்டு வருடங்கள் அமெரிக்காவில் கிழித்தது போக, இன்று விடுமுறையில் குமரன் ஊர் திரும்பியிருந்தான்.. எத்தனை முறை மிதிபட்டிருந்தாலும், என்றும் போல இன்றும் அவனுள் பெருமை.. இம்முறை, சாந்தியும் அவளது பெற்றோரும் அவனைக் காண அவனது வீட்டுக்கு வந்திருந்தனர்.. சாந்தி அவனுக்கு தூரத்துச் சொந்தம்.. உறவு முறையில், அத்தை மகள்.. பி எஸ் சி கணிதம் முடித்திருக்கிறாள்.. அவளைப் பார்த்ததும், சிறு வயதுப் பொழுதுகளின் ஞாபகம் வந்தது.. அவனது வீட்டுக்கு விடுமுறைக்கு வந்திருந்த அவளை கிள்ளி வைத்து அழவைத்திருக்கிறான்.. அம்மாவிடமும் அத்தையிடமும் சொல்லக் கூடாதென்று மிரட்டியிருக்கிறான்.. இன்று சாந்தி வளர்ந்திருந்தாள்.. அழகாயிருந்தாள்..

“மாமோவ்.. இங்க வாங்களேன்”..

எங்கே இன்று அவள் பதிலுக்கு தனது நீள் நகங்களைக் கொண்டு ஆழமாகக் கிள்ளி காயப்படுத்தி வைப்பாளோ என்ற எண்ணம் அவனுக்குள் படபடப்பை ஏற்படுத்த.... மறுக்காவும் தப்பு பண்றீங்க எல்ஸ்.. எனது படபடப்புக்குக் காரணம் அதுவல்ல.. :)))

சாந்தி, தனது லேப்டாப்பையும் எடுத்து வந்திருந்தாள் அவனுக்குக் காட்ட...

“என்னடி?”

“மரியாதையாக் கூப்பிடுங்க மாமோவ்.. நம்ம ரெண்டு பேரு ஜாதகமும் பொருந்திப் போச்சாம்.. எப்ப வேணும்னாலும் எதுவும் நடக்கலாம்.. அதனால இப்பயிருந்தே மரியாத பழவிக்கோங்க”

ஊர்ல ரெண்டு வருஷம் இல்லீன்னா, பழக்க வழக்கம் எல்லாமே மாறிப் போன மாதிரி இருக்கே.. ஹும்.. படபடப்பைக் காட்டிக் கொள்ளாமல் பெருமூச்சு விட்டான் குமரன்...

”மாமா.. போன வாரம் படம் பாத்துக்கிட்டிருந்தப்போ, திடீர்ன்னு லேப்டாப்ல என்னமோ கோளாறாயிப் போயிருச்சு.. வைரஸ் வந்துடுச்சுன்னு நினைக்கறேன்.. கேஸ்பர்ஸ்கை போட்டிருந்தும் ஒன்னும் முடியல...”

என்னால மட்டும் முடியப் போவுதாக்குமென்று, மனதுக்குள் முணகியவாறே அவன் லேப்டாப்பை ஆன் செய்ய முயற்சித்தான்.. எவ்வளவு முயன்றும், பூட் ஆக மறுத்தது...

“பெரிய கம்ப்யூட்டர் எஞ்சினியரு, அமெரிக்காவுல வேல பாக்குறீங்கன்னு தான் பேரு.. ஒரு வைரஸக் கூட சரி பண்ண முடியலயே உங்களால...”

இம்முறை, குமரன் கடுப்பாகவில்லை.... புன்னகைத்தவாறே, அவளது காதைக் கிள்ள கையை ஓங்கினான்.. :)))

 (இமாவின் ”க......ன் இமா” வைப் பார்த்து பயந்துபோய் ஒரே இரவில் எழுதி முடிச்சிட்டேன் :) )

உங்களில் யாருக்கும் “இஞ்சி” “நீர்” அனுபவங்கள் இருந்தால் தொடருங்கள் மக்கள்ஸ்...

30 May 2010

”கம்பி” யூட்டர் ”இஞ்சி” “நீரு”

வர வர ஒன்னுமே எழுதாம நாலு படத்தப் போட்டே ஓட்டிடறன்னு ஹூசைனம்மா சொல்லியிருக்காக.. அதனால, அவிங்க போட்ட பதிவொன்னையே தொடரலாம்ன்னு.. கம்ப்யூட்டர் இஞ்சினியருங்க ஆராச்சும் இதயப் படிச்சீங்கன்னா மன்னிச்சுப் போடுங்கப்பு...


குமரன்.. இருபத்தைந்து வயது துடிப்பான இளைஞன்.. தன்னைப் பற்றி எப்பவுமே அவனுக்கு மனதில் கொஞ்சம் நினைப்புண்டு.. தான் அழகனென்றும், அறிவுடையவனென்றும், தன்னுடைய வீரத்தால் ஒரு தாதாக் கூட்டத்தையே வென்றிடமுடியுமென்றும், தன்னைப் பற்றிய உயரிய நினைவுகளில் மூழ்கித் திளைக்கும் கனவு நாயகன்... ஆனால், அவனது ஊரில் யாரும் அவனுடைய இம்புட்டுத் திறமைகளுக்கு மதிப்புக் கொடுத்ததாகத் தெரியவில்லை.. மதிக்காவிட்டாலும் பரவாயில்லை, இவனைக் கீழிறக்காமல் இருந்தாலே போதும்..

இவனது ஊர்ப் பெரிசுகள் பொதுவாகவே கொஞ்சம் லொள்ளு ஆட்கள்.. அதிலும், தன்னைக் கண்டால் இவர்களுக்கு எப்பவுமே கொஞ்சம் தொக்கு அதிகந்தான் என்பது இவனது நினைப்பு.. இவன் எத்தனையோ சொல்லடி கல்லடிபட்டு பரீட்சையில் பாஸாகி.. நிறுத்துங்க எல்ஸ்... குறைத்துச் சொல்லுறீங்க நீங்க.. நான் பன்னிரெண்டாம் வகுப்பில் கணக்கில் நூறாக்கும்.. பள்ளியில் முதல் மாணவனாக்கும்.. சரி, சரி.. இனி சரியாகச் சொல்லுகிறேன்.. பார்த்தீங்களில்லையா? குமரனுக்கு எப்பவுமே தன்னைப் பற்றின உயர்வான எண்ணங்களுண்டு.. இவ்வாறாக அன்றொரு நாள் அவன் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்வு பெற்றிருக்க, அவர்கள் வீட்டுத் திண்ணையில் எப்பவும் குழுமும் பெரிசுக்கள் கூட்டம் அன்றும் கூடியது...

தினமும் மாலை நேரமானால், பாட்டி போட்டுத் தரும் தண்ணி டீயை வீட்டுக்குள்ளேயே குடித்து விட்டு, வாயைத் துடைத்தபடி வீட்டுத் திண்ணையில் வந்தமர்வது இவனது தாத்தாவின் பழக்கம்.. அந்த வழியாகப் போகும் பெரிசுகள் அங்கு நின்று நேரங்காலம் போவது தெரியாமல் கதையடித்து விட்டுப் போவார்கள்.. ஒன்றைக் கண்டு இன்னொன்று, இவர்களைக் கண்டு இன்னும் சிலர் எனக் கூடுவார்கள்.. காலையில் பேப்பரில் வந்த அர்ஜெண்டினா நாட்டு அதிபர் தேர்தல் செய்தியிலிருந்து உள்ளூரில் கிட்டான் காட்டில் மச்சான் எருமை மேய்ந்த செய்தி வரை அங்கு அலசப்படும்.. சில பெரிசுகளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது... ஆனால் செவி வழியாகக் கிடைத்த செய்திகளைக் கொட்டிக் கும்மி வெளுப்பார்கள்..

அன்றும் அப்படித் தான்.. இவன் அந்நேரம் பார்த்து வெளியே வர...

”இதோ தம்பி வந்துட்டாப்ல.. ஏந்தம்பி.. பன்னெண்டாவது பரிச்ச ரிசல்ட் இன்னிக்கு வந்திருச்சாமில்ல?.. பாஸாயிட்டீங்களா?” கேட்டார் ஒரு பெரிசு.. பெரிசின் பெயர் தெரியாது இவனுக்கு.. எல்லாருக்கும் ஒரு நிக் நேம் வைத்திருந்தார்கள் பெரிசுக்கள் கூட்டத்தினர்.. இவர் கருவாப் பெரிசு..

கடுப்பானான் குமரன்.. பாஸா பெயிலா என்று என்னைப் பார்த்து என்ன கேள்வியிது?

”ம்ம்.. ஆயிட்டேன்.. ”

”மேல என்ன படிக்கலாமுன்னு இருக்கீங்க?”

”கம்ப்யூட்டருக்கு படிக்கலாமுன்னு இருக்கேன்.. ”

”பார்த்துப் படிங்க தம்பி..”

மறுபடியும் க.... ஆனான் குமரன்.. ஏன் இவ்வளவு நாள் பார்க்காமலா படித்தேன்?

ஆச்சு.. நுழைவுத்தேர்வு, கட் ஆஃப் மதிப்பெண் எல்லாம் வந்து, ஒரு வழியாக சென்னையில் பெரும்பாலானோர் சேர விரும்புமொரு முதன்மைக் கல்லூரியில் அவன் கம்ப்யூட்டர் பாடப் பிரிவைக் கைப்பற்றி வெற்றிக்களிப்புடன் ஊர் திரும்பிய பொழுதன்று...

”ஏந்தம்பி.. எங்க படிக்கப் போறீங்க?”

”மெட்ராஸுக்கு தாத்தா..” பெருமை பொங்க கூறினான் குமரன்..

”ஏன், இங்க நம்பூருப் பக்கமா சீட்டு கிடைக்கலியா உங்களுக்கு?”

க.........ன் குமரன்..

”ஆமா, அங்க புள்ளைங்க பசங்களெல்லாம் சேர்ந்து படிக்கனுமாமுல்ல?”

”ஆமா...”

சில பெரிசுகள் நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்கள்...

”பார்த்து இருந்துக்கோங்க தம்பி..”

மறுபடியும்... க..........ன் குமரன்..

கல்லூரியில் சேர்ந்த பின்பு இவனது நிலைமை இன்னமும் மோசமாகியது... ஒரு வார விடுமுறையில் இவன் ஊர் திரும்பியிருக்க.. இவனது பாட்டி இவனையழைத்தார்..

”டேய்க் கொமரா... இங்க சட்டுன்னு வாடா.. வேலையிருக்கு..”

சே.. எத்தனை முறை சொல்லியாயிற்று இந்தப் பாட்டிக்கு.. இவனது நண்பர்கள் எல்லாம் ரமேஷ் உமேஷ் என்று மாடர்ன் பெயர்களைக் கொண்டிருக்க, இவனது அப்பா இப்படி குமரன் என்று இவனுக்கு பெயர் வைத்து இவனது ஸ்டேட்டஸைக் கொஞ்சம் இறக்கியிருந்தார்.. பேசாமல் இதை குமேஷ் என்று மாற்றிக் கொள்ளலாமா என்று கூட அவன் நினைத்ததுண்டு.. இந்தப் பாட்டி அந்தப் பெயரையும் போட்டுப் படுத்தியெடுத்து..

”இந்த ரேடியோப் பொட்டி பாட மாட்டீங்குது.. என்னன்னு கேளுடா...”

”நான் என்னன்னு அதயக் கேக்க?”

பாட்டி ஆச்சர்யத்துடனும் அதிர்ச்சியுடனும் சந்தேகத்துடனும் இவனைப் பார்த்தார்..

”ஏண்டா, நீ என்னமோ இஞ்சினீருக்கு படிக்கறதா உங்கப்பஞ் சொன்னான்? ரேடியோப் பொட்டி ரிப்பேரு கூட பாக்கத் தெரியாதா? முருகேசன் மவன், பத்தாவது கூட படிக்காதவன்.. அவனுக்கு கூடத் தெரியுது... அவன் ஊருக்கு போயிருக்கான்.. இல்லாட்டி உன்னையேன் கேக்கப் போறன்?”

க........ன் குமரன்...

(தொடரும்..)

இது கண்டிப்பா போட்டி தான்..

ம்ம்.. தொடருகிறேன்னு சொல்லிட்டு சத்தமில்லாம ஓடி வந்துட்டேன்.. அங்கயிருந்து சந்தூஊஊஊஊஊஊ ந்னு மியாஸ் கிட்டயிருந்து ஒரே அலறல் சத்தம்.. தொடர்ந்து கேட்டுக்கிட்டே இருக்கு.. சரியாத் தூங்கக்கூட முடியல.. அதான்.. அதுவுமில்லாம, பூஸுக்கு எதிரா களமிறங்கி களைத்திருக்கிற ஆன்ரிக்கும் அண்ணனுக்கும் தோள் கொடுப்பதற்காக.. நானும் இதோ..

இங்க வந்ததுல ஆரம்பத்துல ரொம்பவே கஷ்டமாயிருந்தது.. எங்கயும் வெளிய போக முடியாம கடுப்பாயிருந்த நாட்கள்.. அப்போ ஒரு நாள் திடீர்ன்னு ஒரு நண்பர் கிட்டயிருந்து அழைப்பு.. மாலை நேரம்.. பக்கத்துல இருக்கற ஒரு ஏரிக்குப் போகலாம்ன்னார்.. அவரும் அவரோட மனைவியும் வந்தாங்க.. அங்க போயி கொஞ்சம் நேரம் கதை பேசிட்டு.. ஏரிக்கரையிலயிருந்து அந்த அந்தி மாலையை ரசித்துவிட்டு.. அப்போ எடுத்த படங்கள்.. இதைப் பார்க்கும் போது அந்த நேரம் நினைவுக்கு வருது.. முழுமையாகயில்லைன்னாலும், அப்போ சந்தோஷமாயிருந்தது நினைவுக்கு வருது..




அடுத்ததா வர்றதெல்லாம் கலிஃபோர்னியா மாநிலத்துக்குப் போனவங்க கூட நானும் தொத்திகிட்டுப் போனப்ப எடுத்தது.. அதே ஊர்ல கடற்கரைல எடுத்ததத் தான் ஏற்கனவே போட்டாச்சு.. மீதியப் பாருங்க...

இவரு சில்வர் ஷார்க்.. இமா வீட்டுல பார்த்திருப்பீங்களே இவரோட அண்ணனை..



தூரத்துல பாருங்க.. போலார் பியர் தெரியறாரா? தெரியலன்னா அது சந்துவோட தப்பில்ல.. உங்களுக்கு தூரப் பார்வை சரியில்லைன்னு அர்த்தம்.. :))


ஜெய்லானி கண்ணுக்கு போலார் பியர் தெரியறாரோ இல்லையோ, கண்ணாடில பட்டுத் தெரிக்கிற ஃப்ளாஷ் வெளிச்சம் கண்ண உறுத்தப் போவது உறுதி..


அடுத்து.. மடகாஸ்கர் எஸ்கேப் டூ ஆஃப்ரிக்கால இவிங்க விமானம் ஓட்டிப் போவாங்க பாருங்க.. என்னா மூளை.. என்னா தெறம.. விமானம் க்ராஷ் ஆனதும், அதய சரியாக்க என்ன பண்ணலாம் யோசன பண்ணிட்டு இருக்குங்க.. அப்பப் பாத்து ஊர் சுத்திப் பார்க்கறதுக்காக மனுஷங்க ஒரு வண்டில வர, அந்த வழியில ஒரு முட்டைய ஒடச்சுப் போட்டு, அதுல இருந்து அப்பத்தான் ஒரு குட்டி பெங்குவீன் வெளிய வர்ற மாதிரி உணர்வுப்பூர்வமானதொரு காட்சிய வடிவமைச்சிட்டு, மனுஷங்க எல்லாரும் வண்டிய நிறுத்தி கீழயிறங்கி அந்தக் கண் கொள்ளாக் காட்சிய வாய் பிளந்து பார்த்துகிட்டு இருக்கும் போது, அப்படியே வண்டிக்குள்ள டபால்ன்னு குதிச்சு.. வண்டியக் கடத்திகிட்டு.. ஹாஹ்ஹா..



அடுத்ததா வர்ற ரெண்டு பேரையும் வச்சு நிறைய நீர் விளையாட்டுக் காட்சிகள் நடந்துச்சு..

இவர் சீ லயன்.. உணவுக்காக வாய் பிளந்து காத்துக் கொண்டிருக்கிறார்.. உணவு - மனிதர்களால் வீசப்படும் மீன்கள்..



அடுத்தவர் - கில்லர் வேல்.. இவர் மிகவும் ஆபத்தானவர்.. சிங்கத்தை பழக்குவது போன்று அபாயகரமானது இவர்களைப் பழக்குவது.. சில மாதங்களுக்கு முன்பு இதே இனத்தைச் சேர்ந்த ஒருவரால் (வேறொரு மாநிலத்து விளையாட்டு அரங்கில்) ஒரு பெண் பயிற்சியாளர் உயிரிழந்தார்.. நான் பார்த்த விளையாட்டு மிகவும் நன்றாகயிருந்தது.. மூன்று வேல்கள் - பயிற்சியாளர்களோடு நல்லதொரு கோ-ஆர்டினேஷன்.. அந்தப் பயிற்சியாளர்கள் உண்மையிலேயே பொறுமைசாலிகள் மற்றும் தைரியமானவர்கள்!! இந்தப் பெண்ணைப் பாருங்கள்.. சரியாக மூக்கின் மீது நின்று கொண்டிருக்கிறார்!!



அப்புறம்.. நம்ம ஊரு மாரியம்மன் பண்டிகை மாதிரி, இங்கயும் ஒரு திருவிழா நடந்தது.. அதுல தூரி, ராட்டினம்ன்னு பல வகையான விளையாட்டுக்கள் வச்சிருந்தாங்க.. அதுல எடுத்தது.. யார நினைச்சு எடுத்தேன்னு சொல்லவே வேண்டியதில்ல...


என்னா மிரட்டல்.. என்னா வில்லத்தனம் :) பொம்மை பப்பிக்கே இந்த லொள்ளுன்னா.. நிஜப் பப்பிக்கு கொம்ப்யூட்டர் பப்பிக்கெல்லாம் என்னா லொள்ளு இருக்கும்? என்னை மிருக லிஸ்ட்ல போட்டுட்டீங்களான்னு தங்கிலிபீச்சுல (இந்த பீச் எங்கயிருக்குன்னெல்லாம் யாரும் என்னைய கேட்கப் படாது) சண்டை போடுவார்.. பார்த்துகிட்டே இருங்க..

இப்போதைக்கு இம்புட்டு தான் பூஸ்.. ஓக்கை?

தொடர்ந்து மொக்கைப் பதிவுகள் போட்டுட்டதால அடுத்து வர்றது ஒரு ஜீரியஸ் பதிவா இருக்கலாம்.. ஜீரணிச்சுக்கோங்க மக்கள்ஸ்...

21 May 2010

எனக்கும் பொழுது போகவில்லை :)

முன்னாடியே சொல்லிக்கறேன்.. தலைப்புல ”எனக்கு” க்கப்புறம் ”ப்” க்கு பதிலா ”ம்” போட்டதால, இதுக்கு  யாரும் காப்பி ரைட் கேட்டு கோர்ட்டுக்கெல்லாம் போகக் கூடாது.. :))))

ரொம்ப நாளா இதை எழுதனும்ன்னு நினைச்சிட்டே இருந்தேன்.. இப்ப ஏனோ போடனும்ன்னு தோனுச்சு (இதுவும் யாருக்கும் போட்டியல்ல :))) )..

திடீர்ன்னு ஒரு நாள் எல்ஸ் மண்டைல ஞானோதயம் (அதாங்க, பல்பு) வந்துச்சு... இப்படியே வெட்டியா பொழுதப் போக்கிட்டு இருக்கமே, ஏதாவது உருப்படியான காரியம் பண்ணலாம்ன்னு தோனுச்சு.. அன்னைக்கு எனக்கு வந்த வேகத்துல (??!!) நடந்தது என்னன்னு நீங்களே பாருங்க..

கைக்கு கிடைச்ச இந்தத் தொட்டிய.. இருங்க இருங்க.. தூக்கிப்போட்டு உடைக்கவெல்லாம் இல்ல.. நாமதான் எப்பவுமே ஆக்கப்பூர்வமான (??!!) காரியங்களைப் பண்றவங்களாச்சே.. அதனால, தொட்டில இருந்த மண்ணை கையால கிளறிப்போட்டு (இந்த வார்த்தைகளை இப்பத்தான் வேறெங்கயோ படிச்ச மாதிரி இருந்தா, அதுக்கு நான் பொறுப்பில்ல :) )... தண்ணி விட்டு... வீட்டுல இருந்த சில விதைகளை போட்டுவிட்டேன்.. போடும் போதே சந்தேகம்.. இது பி.டி. விதைகளோன்னு.. அதுக்கேத்த மாதிரி, தினமும் தண்ணி விட்டும், கிட்டத்தட்ட அஞ்சு வாரம் ஒரு மாற்றமுமே இல்லாம இருந்தது இந்தத் தொட்டி.. அப்புறம், ஒரு நாள் காலைல எழுந்து பார்த்தா...

சின்னச்சின்ன முளைப்புகள்.. விதையத் தாங்கி நின்னுட்டு இருந்ததுங்க.. 




நான் வளர்கிறேனே சந்து..



இப்படியே லிட்டர் லிட்டரா தண்ணியக் குடிச்சுக் குடிச்சு...


எங்களுக்கும் பூக்கத் தெரியும்ன்னு...



ஹிஹி.. இதுகளை வச்சு அப்படியே உங்களுக்கெல்லாம் 
ஒரு வாழ்க்கைச் சுழற்சிப் பாடம் எடுக்கலாம்ன்னு...



சரி.. பாடம் படிச்சு முடிச்சாச்சா? இனிமே கேள்விக்கு ஒயுங்கா பதில் சொல்லிட்டுப் போங்க.. சரியான விடை சொல்ற பசங்களுக்கு/புள்ளைகளுக்கு தேன் மிட்டாய் பரிசாக கொடுக்கப்போறேன்... (இது என்ன செடின்னு யாரும் டீச்சரம்மா கிட்ட சந்தேகம் கேட்டுடமாட்டீங்க தானே?)

விதைலயிருந்து பூ வந்ததா இல்ல பூவிலேர்ந்து விதை வந்ததா?

(முன்னூக்கத்திற்கு பல நன்றிகள் செபாவுக்கும் இமாவுக்கும்...) 

09 May 2010

இது யாருக்கும் போட்டியல்ல :)))

இதை நிலவெனச் சொன்னால் யாரும் நம்ப மாட்டினம்.. ஓக்கை.. ஓக்கை.. இவர் ஆதவர்.. செட்டாகிக் கொண்டிருக்கிறார் மேற்கு வானில்... இது கலிஃபோர்னியா மாநிலத்தில் ஒரு கடற்கரையில் எடுக்கப்பட்டது...


அப்பாலிக்கா இந்தாண்ட கெழக்குப் பக்கம் திரும்பினா.. அட.. நம்ம நிலவார்...


உண்மையில் இந்தப் புகைப்படம் படத்தில் தெரியும் இந்த ஹோட்டலை படமெடுப்பதற்காக எடுக்கப்பட்டது.. ஒரு நிமிஷம் நில்லுங்கோள் எல்லோரும்,  ஒரு படமெடுத்துட்டு வாறனென்று நான் பாட்டுக்கு கத்திக் கொண்டேயிருக்க, யாரும் கண்டுகொள்ளாமல் முன்னே நடக்க ஆரம்பித்துவிட்டனர்.. (எத்தனை படங்களுக்குத் தான் அவர்களால் நிற்க முடியும்??)... அவர்கள் பின்னாடி ஓடியபடியே எடுத்ததால், கொஞ்சம் ஆடிப் போய் வந்திருக்கிறது.. வருத்தந்தான்.. இல்லையென்றால், நல்லதொரு போட்டியாக வந்திருக்கும் :)))))))))) (ஆருக்கென்றெல்லாம் ஆரும் கேட்கப்படாது)

பின், அதே இடத்தில் இன்னும் ஒரு பகுதிக்குச் சென்றார்கள்.. பின்னே நானும்..

அங்கும், அந்தக் காட்சியில் கண்ட நீரையும், கரைக்கப்பால் ஒளிரும் மின்னொளியையும் படம் பிடிக்கவே இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது.. இதில் எல்லாவற்றுக்கும் மேலே தெரிவது நிலவென்று தான் நினைக்கிறேன்.. :))இம்முறை அதிகம் ஆடாமல் வந்துவிட்டது...

02 May 2010

எங்கு காணினும் பெண் வண்டுகள்...

இன்னும் கொஞ்ச நாள் எட்டிப் பாக்காம விட்டா என்னோட  ப்ளாக்ன்னு ஒன்னு இருக்கறதே மறந்து போயிரும் போல.. (எனக்குத் தான், ஹிஹி.. )

முன்னாடி ஒரு ஹி ஹி கதையில நாதிராவைப் பத்திச் சொல்லியிருந்தேன்.. என் சக பயிற்சியாளர்.. அப்போது கர்ப்பமாக இருந்தார் (இன்னும் இரண்டே நாட்கள் மட்டும் கர்ப்பமாக இருப்பார்.. ஹி ஹி.. ஏன்னா திங்கட்கிழமை ட்யூ டேட் :)) )

அவருக்கு பேபி ஷவர் நடத்துவதென்று முடிவு செய்திருந்தார் ஒருவர்.. (இவருக்கு என்ன பேரு வைக்க? ம்ம்.. அஞ்சலை.. ஓக்கை?) இது நம்மூரு வளைகாப்பு மாதிரி.. எங்க எல்லாருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.. நானும் போயிருந்தேன்.. (வேறெதுக்கு? கொட்டிக்கத் தான்.. ஹி ஹி). நான் இது போன்ற நிகழ்ச்சிக்குப் போவது இதுவே முதல் முறை.. நாதிராவுக்கு என்ன வாங்க வேண்டுமெனத் தெரியாததால், அவர் தன் பெயரைப் பதிவு செய்திருந்த பாப்பாக் கடைக்கு ஒரு ஈ பரிசு அனுப்பி விட்டேன்..

பெண்கள் மட்டுமே என்றிருந்ததால், அன்று அஞ்சலையின் அப்பாவிக் கணவர், அவர்கள் வீட்டு தோட்டத்தில், அவர்களது மற்றும் இன்னும்மொருவரின் என, இரண்டு வால்களை ஒரே நேரத்தில் நேர்ப்படுத்தும் வேலையைச் செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தார்.. நாங்கள் அனைவரும் உள்ளேயிருந்தோம்..

அஞ்சலை இந்த நிகழ்வுக்கெனத் தேர்ந்தெடுத்திருந்த தீம்.. பெண் வண்டு.... சும்மாச் சொல்லக் கூடாது, மிகவும் அருமையாக நிகழ்ச்சிக்கான வேலைகளை செய்திருந்தார்..

அங்கு தான்.. எங்கு காணினும் பெண் வண்டுகளடா.... நீங்களே பாருங்க.. 

இது அலங்காரச் பூச்செடி..



இது அவர் வீட்டுச் சுவற்றில்...


இது வந்தவர்களுக்கான பரிசுப் பையில்...


இது கேக்கில்...


இது குக்கியில்...


இது ஜூஸ் கோப்பையில்...


இது ஒரு கிண்ணத்தில்...



(பெண் வண்டினைக் கண்டவுடன் எனக்கு யார் ஞாபகம் வந்திருக்குமெனச் சரியாக சொல்பவர்களுக்கு ஒரு பெண் வண்டுக் குக்கி பரிசாக வழங்கப்படும்.. :) )

சில விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.. அதுவரைக்கும் எல்லாம் சரியாகத் தான் போய்க்கொண்டிருந்தது.. அதற்கப்புறந்தான்.. ஹி ஹி..

அதில் ஒரு விளையாட்டு - சில கார்ட்டூன்/குழந்தை நட்சத்திரக் கதாப்பாத்திரங்களின் படங்களைக் காட்டி அவர்களது பெயரை எழுத வேண்டும்.. பதறிப் போனேன்.. இந்தப் விஷப் பரீட்சைக்கு நான் வரல்லேஏஏஏஏஏஏ என்று பெருங்குரலெடுத்துக் கதறிப் பார்த்தும்.. ஹூம்...

மொத்தம் இருபது கேள்விகள்.. அதில் எல்ஸின் ஸ்கோர் - மூணு.. ஹி ஹி.. இவ்வளவு மோசமா எந்தப் பரீட்சையையும் எழுதினதில்லை... அந்த மூணு மதிப்பெண்ணும் எப்படிக் கிடைத்ததென்று நீங்களே பாருங்க..

மதிப்பெண் ஒன்றுக்கு காரணமானவர்..

(இவரை மட்டும் அடையாளம் கண்டுபிடிக்காமல் விட்டிருந்தால், நாதிராவின் வயிற்றிலிருந்த குழந்தை கூட என்னைப் பார்த்து நக்கலாகச் சிரித்திருக்கும்.. டக் அவுட் ஆகாமல் என்னைக் காப்பாற்றிய டொனால்ட் டக்கார் வாழ்க.. )

மதிப்பெண் ரெண்டுக்கு காரணமானவர்... அகிலவுலகப் புகழ்ப் பெற்ற நமது அண்ணனின்.. ஹி ஹி.. நீங்களே பாருங்க...


(அண்ணனல்லாது, அண்ணியாருடன் இருக்கும் அந்தப் பையன் யாராயிருக்கும் என்ற கேள்வி மனதுக்குள் தொக்கி நின்ற போதும், அண்ணியாரை எமக்கு அறிமுகப்படுத்தின அண்ணனாருக்கு நன்றிகள் பலப்பல... :) )


மூன்றாவது மதிப்பெண்.. இந்த நிகழ்ச்சியை அவ்வப்போது தொலைக்காட்சியில் கண்டிருந்ததால், தப்பித்தேன்...




அதற்கு மேல், மீதி எல்லாவற்றுக்கும், நீல நிற டினோசர், குட்டி மீன் (நீமோ.. இவர் பெயர் கூட நினைவுக்கு வராமல் சொதப்பி விட்டது..), மொட்டைப் பையன் என்ற ரேஞ்சில் பதில் எழுதி வைத்திருந்தேன்.. என் பேப்பரை நானே தான் திருத்துவேன் என்று அடம் பிடித்து அனுமதி வாங்கிவிட்டேன்... அப்படியிருந்தும், என் பக்கத்தில் இருந்த இன்னொருவர், என் பேப்பரில் எட்டிப் பார்த்து, மற்றவர்களுக்கு என்னுடைய முதல் பதிலை படித்துக் காமித்துவிட்டார்..  எல்லாரும் சிரித்துச் சிரித்து மகிழ்ந்தனர்.. என் மானமோ கப்பலேறிப் போயாச்சு...


இவர் - big bird
நான் எழுதியிருந்த பதில் - சிக்கன் லிட்டில் :)))))))))))

உங்க பொறுமைக்கு நன்றி மக்கள்ஸ்.....