31 May 2010

”கம்பி” யூட்டர் ”இஞ்சி” “நீரு”

இதற்கு முந்தைய பதிவில் பகுதி ஒன்றைக் காண்க..


குமரன் கல்லூரி செல்ல ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஓடியிருந்தன.. இந்த இடைவேளையில், பெரிசுகளில் கொஞ்சம் பேர் தடியூன்ற ஆரம்பித்திருந்தனர்.. ஒன்றிரெண்டு பேர் வருவதில்லை..  புதியதாகச் சிலர் பெருசாகப் பதவியுயர்வு பெற்று வர ஆரம்பித்திருந்தனர்.. ஆக, கூட்டத்துக்கு குறைச்சலில்லை.. லொள்ளுக்குந் தான்..

அந்தப் பக்கத் திண்ணையில் பாட்டி தனிக் கூட்டம் கூட்ட ஆரம்பித்திருந்தார்.. தாத்தன் திண்ணையில் கூடுமளவுக்கு இல்லை தான்.. ஆனாலும் அவ்வப்போது என ஒன்றிரண்டு பாட்டியர் நின்று போக ஆரம்பித்திருந்தனர்.. வெள்ளிக்கிழமை தான் இவர்கள் ஊர் சந்தையென்பதால், இவர்கள் வீட்டுத் திண்ணையில் சற்று நேரம் கூடையை இறக்கிவைத்து, தண்ணீர் குடித்து இளைப்பாறி, கதையடித்து விட்டுச் சென்றனர்.. பாட்டியர் திண்ணையில் தாத்தனது திண்ணையைப் போல மல்டினேஷனல், நேஷனல் விஷயங்கள் அலசப்படுவதில்லை.. பெரும்பாலும், மருமகள்களைப் பற்றியும், பேரன் பேத்திகளைப் பற்றியும், அக்கம்பக்கத்தினர் பற்றியுந் தான் பேசப்பட்டது..

செமஸ்டர் லீவில் ஊர் திரும்பியிருந்தான் குமரன்.. அவனுக்கென்னமோ,  தாத்தன் திண்ணை தான் சுவாரசியமாகப் பட்டது.. எனினும், பெரிசுகளின் லொள்ளுக்கு பயந்து பாட்டியின் திண்ணைப் பக்கம் ஒதுங்க ஆரம்பித்திருந்தான்..   அன்று மாலை, தனது வீட்டிலிருந்து வெளியே வந்தவன் (பாட்டிக்கும் இவனது அம்மாவிற்கும் ஒத்து வராததால், அருகருகிலேயே தனித்தனி வீடுகளில் வசித்து வந்தனர்) திண்ணைப் பக்கமாகத் திரும்பிப் பார்க்க, அங்கு தன் பாட்டியுடன் பேசிக்கொண்டிருந்தவரைக் கண்டதும், சற்று யோசித்து விட்டு, முன் வைத்த காலை வீட்டுக்குள் பின்னெடுத்து வைத்தான்.. இவர் அந்தப் பொ............ய்ப் பாட்டியன்றோ..

சில வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவமிது.. ஒரு நாள் இவன் தன்பாட்டுக்கு தாத்தனின் திண்ணையில் அமர்ந்து கரும்பு கடித்துக் கொண்டிருக்க, இந்தப் பொ........ய்ப் பாட்டி இவர்களது வீட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தார்.. மரியாதை நிமித்தமாக, இவன் அவரைப் பார்த்துச் சிரித்து வைத்தான்.. அவரும் பதிலுக்கு புன்னகை பூத்து, நலம் விசாரிக்க வாய் திறக்க, அதற்குள் இவன் முந்திவிட்டான்..

”கரும்பு சாப்புட்டுப் போங்க பாட்டி”

அவ்வளவு தான், அவருக்கு வந்ததே கோபம்.. இவனை முறைத்துப் பார்த்து விட்டு, விடுவிடுவென நடந்து சென்றவர், நேரே இவனது வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினார்.. இவனது அம்மா வந்து திறந்துவிட, உள்ளே சென்றவர் சிறிது நேரம் கழித்து வெளியே வந்து, மறுபடியும் இவனை முறைத்தவாறே கடந்து சென்றார்.. இவனுக்கு ஒன்னும் புரியவில்லை.. அவர் சென்ற பின், இவனது அம்மா இவனை அழைத்தார்..

“ஏண்டா, உனக்கு வம்பிழுக்க வேறாளே கிடைக்கலியா?”

“என்னது??”

“அவுங்க பேரே பொக்க வாய்ப் பாட்டி.. அவங்களப் போயி கரும்பு திங்கறீங்களான்னு கேட்டியாம்ல்ல??”

அதே பொ.....ய்ப் பாட்டி தான்.. கன்ஃபர்ம் செய்திட்டு குமரன் வீட்டுக்குள் ஓடும் முன், பொ.....ய்ப் பாட்டி இவனையழைத்தார்...

”கொமாரு.... என்னைய அடையாளம் தெரியுதா?”

(இதுக்கு அந்த டொமாரே பரவாயில்லையோ??)

“தெரியுதுங்க பாட்டி..”

“கம்ப்யூட்டருக்கு படிக்கறயாம்ல்ல?”

“ஆமாங்க”

“இந்த மூணு மாசம் ஆறு மாசம்ன்னு கம்ப்யூட்டருக்கு படிக்கறாங்களாம்ல.. அந்த மாதிரிப் படிக்கிறியா? அதயப் படிச்சா மட்டும் வேலை கிடைக்காதாம்ல்ல?”

வெகு நாட்கள் கழித்து, மறுபடியும் க........ன் குமரன்...

பெரிசுகள் தானென்று இல்லை.. இந்தச் சிறிசுகளுக்கும் இவனைக் கண்டால் தொக்காய்த்தானிருந்தது..

சரண்.. இவனது பெரியம்மா பெண்ணின் மகன்.. படிப்பது ஏழாவது.. ஆனால் அப்போதே அவனது பேச்சில், பல வருடங்கள் கழித்து பெருசாகப் போவதன் சாயல் இருந்தது...

”மாமா.. நீங்க தான் கம்ப்யூட்டர் இஞ்சினியருக்குப் படிக்கறீங்கள்ல?”

“ஆமா, அதுக்கென்ன இப்போ?”

“எங்க, கம்ப்யூட்டர் கீ போர்ட் ல எத்தன கீ இருக்குன்னு சொல்லுங்க பாப்போம்..”

இவன் விடை தெரியாமல் முழிக்க,

“இது கூடத் தெரியலீங்களே மாமா உங்களுக்கு”

சரண் விடையைச் சொன்னதும், இவனது அக்கா இவனைப் பார்த்த பார்வையில், எம்மவன் உன்னையவிட அறிவாளிடா என்ற பெருமை தெறித்தது...

மறுபடியும் க.......ன் குமரன்...

பொறுத்தார் பூமியாள்வார்.. இதோ.. இன்று குமரன் தனது கம்ப்யூட்டர் இஞ்சினியர் என்ற இமேஜுக்கு ஏற்பட்ட அத்தனை டேமேஜ்களையும் கடந்து, தனது படிப்பை முடித்து, வேலையுங் கிடைத்து, அமெரிக்காவில் பணி புரிகிறான்.. இன்று அவன் வெற்றித் திருமகன்..

ஆனாலும், விதி விடுவதாயில்லை... க்ளையண்ட் கம்பனி மக்களுக்கு எப்போதெல்லாம் இவர்களது சாஃப்ட்வேரில் பிரச்சனை வருகிறதோ, அப்போதெல்லாம் இவன் உடனடி தரிசனம் தந்து, முன்னின்று, அதனைச் சரி பார்த்துத் தர வேண்டும்..

ஒரு நாள் இந்தூர்ப் பெரிசு ஒருவர் அவனை அழைத்தார்..

“I am not able to log in.. My username and password are same as before..”

“Just reboot your computer and try again” பதிலளித்தான் குமரன்..

“I know to do that... I thought you software guys had better solutions for such problems..”

டொம்மென்று ஃபோனைச் சாத்தினார் பெரிசு...

க.........ன் குமரன்..

ஆச்சு.. நாளும் போச்சு... இரண்டு வருடங்கள் அமெரிக்காவில் கிழித்தது போக, இன்று விடுமுறையில் குமரன் ஊர் திரும்பியிருந்தான்.. எத்தனை முறை மிதிபட்டிருந்தாலும், என்றும் போல இன்றும் அவனுள் பெருமை.. இம்முறை, சாந்தியும் அவளது பெற்றோரும் அவனைக் காண அவனது வீட்டுக்கு வந்திருந்தனர்.. சாந்தி அவனுக்கு தூரத்துச் சொந்தம்.. உறவு முறையில், அத்தை மகள்.. பி எஸ் சி கணிதம் முடித்திருக்கிறாள்.. அவளைப் பார்த்ததும், சிறு வயதுப் பொழுதுகளின் ஞாபகம் வந்தது.. அவனது வீட்டுக்கு விடுமுறைக்கு வந்திருந்த அவளை கிள்ளி வைத்து அழவைத்திருக்கிறான்.. அம்மாவிடமும் அத்தையிடமும் சொல்லக் கூடாதென்று மிரட்டியிருக்கிறான்.. இன்று சாந்தி வளர்ந்திருந்தாள்.. அழகாயிருந்தாள்..

“மாமோவ்.. இங்க வாங்களேன்”..

எங்கே இன்று அவள் பதிலுக்கு தனது நீள் நகங்களைக் கொண்டு ஆழமாகக் கிள்ளி காயப்படுத்தி வைப்பாளோ என்ற எண்ணம் அவனுக்குள் படபடப்பை ஏற்படுத்த.... மறுக்காவும் தப்பு பண்றீங்க எல்ஸ்.. எனது படபடப்புக்குக் காரணம் அதுவல்ல.. :)))

சாந்தி, தனது லேப்டாப்பையும் எடுத்து வந்திருந்தாள் அவனுக்குக் காட்ட...

“என்னடி?”

“மரியாதையாக் கூப்பிடுங்க மாமோவ்.. நம்ம ரெண்டு பேரு ஜாதகமும் பொருந்திப் போச்சாம்.. எப்ப வேணும்னாலும் எதுவும் நடக்கலாம்.. அதனால இப்பயிருந்தே மரியாத பழவிக்கோங்க”

ஊர்ல ரெண்டு வருஷம் இல்லீன்னா, பழக்க வழக்கம் எல்லாமே மாறிப் போன மாதிரி இருக்கே.. ஹும்.. படபடப்பைக் காட்டிக் கொள்ளாமல் பெருமூச்சு விட்டான் குமரன்...

”மாமா.. போன வாரம் படம் பாத்துக்கிட்டிருந்தப்போ, திடீர்ன்னு லேப்டாப்ல என்னமோ கோளாறாயிப் போயிருச்சு.. வைரஸ் வந்துடுச்சுன்னு நினைக்கறேன்.. கேஸ்பர்ஸ்கை போட்டிருந்தும் ஒன்னும் முடியல...”

என்னால மட்டும் முடியப் போவுதாக்குமென்று, மனதுக்குள் முணகியவாறே அவன் லேப்டாப்பை ஆன் செய்ய முயற்சித்தான்.. எவ்வளவு முயன்றும், பூட் ஆக மறுத்தது...

“பெரிய கம்ப்யூட்டர் எஞ்சினியரு, அமெரிக்காவுல வேல பாக்குறீங்கன்னு தான் பேரு.. ஒரு வைரஸக் கூட சரி பண்ண முடியலயே உங்களால...”

இம்முறை, குமரன் கடுப்பாகவில்லை.... புன்னகைத்தவாறே, அவளது காதைக் கிள்ள கையை ஓங்கினான்.. :)))

 (இமாவின் ”க......ன் இமா” வைப் பார்த்து பயந்துபோய் ஒரே இரவில் எழுதி முடிச்சிட்டேன் :) )

உங்களில் யாருக்கும் “இஞ்சி” “நீர்” அனுபவங்கள் இருந்தால் தொடருங்கள் மக்கள்ஸ்...

25 comments:

 1. ஆகா கதை முடிஞ்சிடுச்சா? இன்னும் எழுதுங்க,சந்தனா.very interesting.

  ReplyDelete
 2. இம்முறை, இமா கடுப்பாகவில்லை.... புன்னகைத்தவாறே, சந்தூ'ஸ் காதைக் கிள்ள கையை ஓங்கினாள்.. :)))

  நன்றி எல்ஸ். ;) சிரித்ததில் பக்கத்திலிருந்து பார்வைக்கணைகள், ஆஸ் யூஷுவல் "வி...ரா நீ" ;)))

  நல்லா எழுதி இருக்கிறீங்க.

  ReplyDelete
 3. ஆ.... சந்து எங்கோ தொடங்கி எங்கோ வந்து முடிச்சிட்டீங்க. மொத்தத்தில கலக்கிட்டீங்க.

  ஆனாலும் “சாந்தி” வந்ததிலிருந்துதான் கதையில ஒரு விறுவிறுப்பே இருந்துது, நானும் என்னாவோ நடக்கப்போகுதாக்கும் என கதிரை நுனிக்கே வந்திட்டேன்:)...... வைரஸ்தானா? ச்சே.....

  எனக்கும் கதைகள் தொடரவிருப்பம்தான், ஆனால் அது தானா வரோணும், அத்தோடு தனிமை ஓரளவு இருந்தால்தான் சிந்திக்க முடியும்... இப்போ ஸ்கூலும் விடுமுறை.... பார்க்கலாம். நல்ல நகைச்சுவையாக எழுதிட்டீங்க வாழ்த்துக்கள்.. நீங்களும் தொடரலாம் சந்து இதை..

  ReplyDelete
 4. //(இதுக்கு அந்த டொமாரே பரவாயில்லையோ??

  க்கி..க்கி..கீஈஈஈஈஈ.

  வீட்டில எலி ...வெளில புலி....

  ReplyDelete
 5. ஆக, கொமாரும், சாந்திப்புள்ளயும் இப்ப அமேஏரிக்காவில ’கம்பி’ட்டரைத் தட்டிட்டுருக்காங்களா இப்ப?

  இந்தப் பதிவுல, பாட்டி கொமரன்கிட்ட, ‘சரி, ரேடியாதான் ரிப்பேர் பாக்கத் தெரீல; நீ ’கம்பி’ட்டர் இஞ்சிநீர்தானே, இந்தக் கம்பிவலையையாவது கொஞ்சம் சரிபண்ணித்தான்னு கேப்பாங்கன்னு நெனச்சேன்!!

  ReplyDelete
 6. முடிஞ்சிருச்சு ஆசியா.. ரொம்ப நன்றி.. நகைச்சுவையா வேறெதுவும் இப்போத் தோணலை.. தோணினா எழுதறேன்..

  ReplyDelete
 7. //ஓங்கினாள்// இதை ஓங்கினார் என்று படிச்சுக்கறேனே இமா :))

  நன்றி இமா.. அது சரி, அதென்ன ”வி...ரா நீ”

  ReplyDelete
 8. அதீஸ்.. குமரனின் ”கம்ப் இஞ்ச்” இமேஜை பலரும் டேமேஜ் செய்த நிகழ்வுகளின் தொகுப்பு தான் கதை.. அதனால் தான் எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிந்திருக்கிறது போல் இருக்கிறது.. இதை விட கோர்வையாக எழுத முடியவில்லை...

  நகைச்சுவைக் கதையென்பதால், சாந்தியுடனான அந்த முதற்ச் சந்திப்புடன் முடித்து விட்டேன்.. மீதியெல்லாம் சொன்னால் காதல் கதையாகிடுமல்லோ :)

  இட்ஸ் ஓக்கை அதீஸ்.. நேரமிருக்கும் போது செய்யுங்கோ.. நன்றி..

  இதைத் தொடர முடியும் என்று தோணவில்லை.. ஆனால், சரணை வைத்து பரண், அரண் ஆகியோரைத் தொடரலாம் என்றொரு எண்ணம் இருக்கிறது :) அதை முன் வைத்துத் தான் இந்தப் பெயரைத் தெரிவு செய்தேன்.. முடியும் போது பார்க்கலாம்.. :))

  ReplyDelete
 9. இமா, ஆசியா.. நேற்று இங்கு பகுதி இரண்டை எழுதத் தொடங்கும் போது மணி இரவு பதினொன்றுக்குப் பக்கமாகிவிட்டது.. அப்போ சலுப்பாயிருந்த வேளையில் முதற் பகுதிக்கு வந்திருந்த உங்களிருவரின் பின்னூட்டங்களுந் தான் எனக்கு தெம்பூட்டின.. ரொம்ப நன்றி இருவருக்கும் :))

  ReplyDelete
 10. //வீட்டில எலி ...வெளில புலி..//

  உங்களப் பத்திச் சொல்லியிருக்கீங்களோ ஜெய்லானி???

  க்கி..க்கி..கீஈஈஈஈஈ.. :))

  குமரன் புலி தான்.. ஆனால் அவனுக்கும் அப்பப்போ அடி சறுக்கிவிட்டுட்டாங்கள்.. அதான் கதை..

  ReplyDelete
 11. நன்றி பட்டாபட்டி.. ஹிஹ்ஹீஹீ :))

  ReplyDelete
 12. நன்றி ஹூசைனம்மா.. இல்லை.. கதைப்படி, ”இப்ப” இருவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை.. :) ஊரில் தான் இருக்கிறார்கள் :))

  குமரனின் பாட்டி அந்தளவுக்கு விவரம் தெரியாதவரில்லை.. எனினும், அந்தக் காலத்து ஆளாய் ஊரிலேயே இருக்கும் அவருக்கு வந்த சந்தேகம் அப்படியாகிவிட்டது :))

  ReplyDelete
 13. //எனக்கும் கதைகள் தொடரவிருப்பம்தான், ஆனால் அது தானா வரோணும்.//என்று இமாவும் சொல்கிறா'ர்'. ;)

  உடனே க்ளிக் ஆச்சு... சரண், பரண் & அரண் ஃப்ரென்ட் என்று. ;) அறிமுகப் படுத்தி வைங்கோ. எதிர்பார்க்கிறேன்.

  'டொமார' லேசில ஒருவருக்கும் மறக்க ஏலாமல் கிடக்கு போல இருக்கு. ;))

  ReplyDelete
 14. இமா.. டேக் யுவர் டைம் இமா..

  கண்டிப்பா :) கொஞ்சம் நேரம் வேனும் அதுக்கு..

  ஹாஹ்ஹா.. ஆமாம் :)

  ReplyDelete
 15. அடடா! கடைசியில் டொமார்..இல்லை குமாருக்கு லவ்ஸ் என்று முடிச்சுப் போட்டீங்கள். நல்லா இருக்கு. நல்லா நகைச்சுவையாக இருக்கு.

  //'டொமார' லேசில ஒருவருக்கும் மறக்க ஏலாமல் கிடக்கு போல இருக்கு. ;))//
  எந்தை டொமாரா...ஹாஹா..

  ReplyDelete
 16. / நேற்று இங்கு பகுதி இரண்டை எழுதத் தொடங்கும் போது மணி இரவு பதினொன்றுக்குப் பக்கமாகிவிட்டது.. அப்போ சலுப்பாயிருந்த வேளையில் முதற் பகுதிக்கு வந்திருந்த உங்களிருவரின் பின்னூட்டங்களுந் தான் எனக்கு தெம்பூட்டின.. ரொம்ப நன்றி இருவருக்கும் :))/ பதினோரு மணிக்கு மேல கதையா?? கலக்குறீங்க சந்தனா!! நான் தான் கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் போல இருக்கு!!

  ம்ம்..ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருந்த எழுத்தாளர்கள் மெல்லமெல்ல எட்டிப் பாக்கராங்கப்பா, வாங்க,வாங்க!! வேகமா வாங்க! :)

  ReplyDelete
 17. சீரியஸ் கதை எப்போ எழுதுவீங்க சந்தனா?

  ReplyDelete
 18. @@@எல் போர்ட்.. பீ சீரியஸ்.//வீட்டில எலி ...வெளில புலி..//

  உங்களப் பத்திச் சொல்லியிருக்கீங்களோ ஜெய்லானி???

  க்கி..க்கி..கீஈஈஈஈஈ.. :))//

  இல்லாட்டி வீட்டில எலிக்கு தீனி கிடைக்காதே !! ஹி..ஹி..

  ReplyDelete
 19. கதை ரொம்பவே நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

  //நேற்று இங்கு பகுதி இரண்டை எழுதத் தொடங்கும் போது மணி இரவு பதினொன்றுக்குப் பக்கமாகிவிட்டது..//

  அடுத்த கதை திகில் கதையோ ???

  ReplyDelete
 20. இஞ்சி நீர்

  தண்ணிலே ரெண்டு இஞ்சியைத் தட்டிப்போட்டா கிடக்குமே அதானா இது

  ReplyDelete
 21. இஞ்சின்..நீர்...
  அது நல்ல கார் பானட்டைத் திறந்தா சூடா இருக்குமே அதானே...அதப் படிச்சா அமெரிக்கா போலாமா

  ReplyDelete
 22. நன்றி மஹி. ஹி ஹி.. தூங்குமூஞ்சி தான் அதிகமா எட்டிப் பாக்கறாரு..

  நன்றி வானதி.. ஆமா, டொமாரு பயங்கர ஃபேமஸாயிட்டார் :)

  நன்றி வசந்த்.. சீரியசா எழுதினா யாரு படிப்பான்னு பயந்தான் :)

  நன்றி ஹைஷ்.. திகில் கதையா? உங்களையும் அந்த கோடாரி பூஸையும் வச்சு வேணா எழுதவா? :))

  நன்றிங்க கோமா.. அதே தான்.. ஆனா இது தண்ணியத் தட்டி இஞ்சில போடற இஞ்சினீரு :)) கார் பானட்டைத் திறக்கத் தெரிஞ்சா போலாமான்னு தெரியல.. ஆனா கண்டிப்பா கம்ப்யூட்டர் பொட்டியத் திறக்கத் தெரிஞ்சா போலாம் :))

  ReplyDelete
 23. //நன்றி ஹைஷ்.. திகில் கதையா? உங்களையும் அந்த கோடாரி பூஸையும் வச்சு வேணா எழுதவா? :))// இருங்கோ கொஞ்சம் கருப்பு கோட்டு போட்டுவரேன்...........ம்... இப்போ எழுதுங்கோ :)))

  ReplyDelete
 24. m,nice

  interesting to read it,

  different way of thinking..

  write more....

  ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)