30 May 2010

”கம்பி” யூட்டர் ”இஞ்சி” “நீரு”

வர வர ஒன்னுமே எழுதாம நாலு படத்தப் போட்டே ஓட்டிடறன்னு ஹூசைனம்மா சொல்லியிருக்காக.. அதனால, அவிங்க போட்ட பதிவொன்னையே தொடரலாம்ன்னு.. கம்ப்யூட்டர் இஞ்சினியருங்க ஆராச்சும் இதயப் படிச்சீங்கன்னா மன்னிச்சுப் போடுங்கப்பு...


குமரன்.. இருபத்தைந்து வயது துடிப்பான இளைஞன்.. தன்னைப் பற்றி எப்பவுமே அவனுக்கு மனதில் கொஞ்சம் நினைப்புண்டு.. தான் அழகனென்றும், அறிவுடையவனென்றும், தன்னுடைய வீரத்தால் ஒரு தாதாக் கூட்டத்தையே வென்றிடமுடியுமென்றும், தன்னைப் பற்றிய உயரிய நினைவுகளில் மூழ்கித் திளைக்கும் கனவு நாயகன்... ஆனால், அவனது ஊரில் யாரும் அவனுடைய இம்புட்டுத் திறமைகளுக்கு மதிப்புக் கொடுத்ததாகத் தெரியவில்லை.. மதிக்காவிட்டாலும் பரவாயில்லை, இவனைக் கீழிறக்காமல் இருந்தாலே போதும்..

இவனது ஊர்ப் பெரிசுகள் பொதுவாகவே கொஞ்சம் லொள்ளு ஆட்கள்.. அதிலும், தன்னைக் கண்டால் இவர்களுக்கு எப்பவுமே கொஞ்சம் தொக்கு அதிகந்தான் என்பது இவனது நினைப்பு.. இவன் எத்தனையோ சொல்லடி கல்லடிபட்டு பரீட்சையில் பாஸாகி.. நிறுத்துங்க எல்ஸ்... குறைத்துச் சொல்லுறீங்க நீங்க.. நான் பன்னிரெண்டாம் வகுப்பில் கணக்கில் நூறாக்கும்.. பள்ளியில் முதல் மாணவனாக்கும்.. சரி, சரி.. இனி சரியாகச் சொல்லுகிறேன்.. பார்த்தீங்களில்லையா? குமரனுக்கு எப்பவுமே தன்னைப் பற்றின உயர்வான எண்ணங்களுண்டு.. இவ்வாறாக அன்றொரு நாள் அவன் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்வு பெற்றிருக்க, அவர்கள் வீட்டுத் திண்ணையில் எப்பவும் குழுமும் பெரிசுக்கள் கூட்டம் அன்றும் கூடியது...

தினமும் மாலை நேரமானால், பாட்டி போட்டுத் தரும் தண்ணி டீயை வீட்டுக்குள்ளேயே குடித்து விட்டு, வாயைத் துடைத்தபடி வீட்டுத் திண்ணையில் வந்தமர்வது இவனது தாத்தாவின் பழக்கம்.. அந்த வழியாகப் போகும் பெரிசுகள் அங்கு நின்று நேரங்காலம் போவது தெரியாமல் கதையடித்து விட்டுப் போவார்கள்.. ஒன்றைக் கண்டு இன்னொன்று, இவர்களைக் கண்டு இன்னும் சிலர் எனக் கூடுவார்கள்.. காலையில் பேப்பரில் வந்த அர்ஜெண்டினா நாட்டு அதிபர் தேர்தல் செய்தியிலிருந்து உள்ளூரில் கிட்டான் காட்டில் மச்சான் எருமை மேய்ந்த செய்தி வரை அங்கு அலசப்படும்.. சில பெரிசுகளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது... ஆனால் செவி வழியாகக் கிடைத்த செய்திகளைக் கொட்டிக் கும்மி வெளுப்பார்கள்..

அன்றும் அப்படித் தான்.. இவன் அந்நேரம் பார்த்து வெளியே வர...

”இதோ தம்பி வந்துட்டாப்ல.. ஏந்தம்பி.. பன்னெண்டாவது பரிச்ச ரிசல்ட் இன்னிக்கு வந்திருச்சாமில்ல?.. பாஸாயிட்டீங்களா?” கேட்டார் ஒரு பெரிசு.. பெரிசின் பெயர் தெரியாது இவனுக்கு.. எல்லாருக்கும் ஒரு நிக் நேம் வைத்திருந்தார்கள் பெரிசுக்கள் கூட்டத்தினர்.. இவர் கருவாப் பெரிசு..

கடுப்பானான் குமரன்.. பாஸா பெயிலா என்று என்னைப் பார்த்து என்ன கேள்வியிது?

”ம்ம்.. ஆயிட்டேன்.. ”

”மேல என்ன படிக்கலாமுன்னு இருக்கீங்க?”

”கம்ப்யூட்டருக்கு படிக்கலாமுன்னு இருக்கேன்.. ”

”பார்த்துப் படிங்க தம்பி..”

மறுபடியும் க.... ஆனான் குமரன்.. ஏன் இவ்வளவு நாள் பார்க்காமலா படித்தேன்?

ஆச்சு.. நுழைவுத்தேர்வு, கட் ஆஃப் மதிப்பெண் எல்லாம் வந்து, ஒரு வழியாக சென்னையில் பெரும்பாலானோர் சேர விரும்புமொரு முதன்மைக் கல்லூரியில் அவன் கம்ப்யூட்டர் பாடப் பிரிவைக் கைப்பற்றி வெற்றிக்களிப்புடன் ஊர் திரும்பிய பொழுதன்று...

”ஏந்தம்பி.. எங்க படிக்கப் போறீங்க?”

”மெட்ராஸுக்கு தாத்தா..” பெருமை பொங்க கூறினான் குமரன்..

”ஏன், இங்க நம்பூருப் பக்கமா சீட்டு கிடைக்கலியா உங்களுக்கு?”

க.........ன் குமரன்..

”ஆமா, அங்க புள்ளைங்க பசங்களெல்லாம் சேர்ந்து படிக்கனுமாமுல்ல?”

”ஆமா...”

சில பெரிசுகள் நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்கள்...

”பார்த்து இருந்துக்கோங்க தம்பி..”

மறுபடியும்... க..........ன் குமரன்..

கல்லூரியில் சேர்ந்த பின்பு இவனது நிலைமை இன்னமும் மோசமாகியது... ஒரு வார விடுமுறையில் இவன் ஊர் திரும்பியிருக்க.. இவனது பாட்டி இவனையழைத்தார்..

”டேய்க் கொமரா... இங்க சட்டுன்னு வாடா.. வேலையிருக்கு..”

சே.. எத்தனை முறை சொல்லியாயிற்று இந்தப் பாட்டிக்கு.. இவனது நண்பர்கள் எல்லாம் ரமேஷ் உமேஷ் என்று மாடர்ன் பெயர்களைக் கொண்டிருக்க, இவனது அப்பா இப்படி குமரன் என்று இவனுக்கு பெயர் வைத்து இவனது ஸ்டேட்டஸைக் கொஞ்சம் இறக்கியிருந்தார்.. பேசாமல் இதை குமேஷ் என்று மாற்றிக் கொள்ளலாமா என்று கூட அவன் நினைத்ததுண்டு.. இந்தப் பாட்டி அந்தப் பெயரையும் போட்டுப் படுத்தியெடுத்து..

”இந்த ரேடியோப் பொட்டி பாட மாட்டீங்குது.. என்னன்னு கேளுடா...”

”நான் என்னன்னு அதயக் கேக்க?”

பாட்டி ஆச்சர்யத்துடனும் அதிர்ச்சியுடனும் சந்தேகத்துடனும் இவனைப் பார்த்தார்..

”ஏண்டா, நீ என்னமோ இஞ்சினீருக்கு படிக்கறதா உங்கப்பஞ் சொன்னான்? ரேடியோப் பொட்டி ரிப்பேரு கூட பாக்கத் தெரியாதா? முருகேசன் மவன், பத்தாவது கூட படிக்காதவன்.. அவனுக்கு கூடத் தெரியுது... அவன் ஊருக்கு போயிருக்கான்.. இல்லாட்டி உன்னையேன் கேக்கப் போறன்?”

க........ன் குமரன்...

(தொடரும்..)

10 comments:

 1. நல்ல காமெடி,தூள்.

  ReplyDelete
 2. பாட்டியோட ரேடியோப் பொட்டி பாடாட்டிப் பரவாயில்ல. நீங்க கெதியா பா(ர்)ட்டூ போட்டுருங்க. இல்லாட்டி க.......ன் இமா. ;)

  ReplyDelete
 3. ஹை.. நீங்களும் இஞ்சித்’தண்ணி’ கதை எழுதுறீங்களா?

  எழுதுங்க, முழுசாக் குடிச்சிட்டு ஏப்பம்.. சீ.. படிச்சிட்டு சொல்றேன்!!

  அப்றம், குமரன்.. இருவத்தஞ்சு வயசுலதான் பன்னெண்டாப்பு பாஸானாரா? இல்ல... அப்படித்தான கதை ஆரம்பிக்குது, அதான் சும்மா கேட்டேன்...

  //பன்னிரெண்டாம் வகுப்பில் கணக்கில் நூறாக்கும்//

  இருநூறுக்கு நூறா? சரி சரி..
  ;-)))))

  ReplyDelete
 4. கதை நல்லா போகுது.

  ReplyDelete
 5. நன்றி ஆசியா, இமா.. உங்களிருவருக்கும் அடுத்த பகுதியில் பதில் போட்டிருக்கிறேன்.

  ReplyDelete
 6. ஆமாம் ஹூசைனம்மா.. சும்மா ஒரு முயற்சி தான்.. பார்க்கலாம் எப்படி வந்திருக்குன்னு.. :)

  கர்ர்ர்ர்ர்.. குமரனுக்கு இப்போ இருவத்தஞ்சு வயசு.. அது அன்றொரு நாள் நடந்த சம்பவம்..

  ”இவ்வாறாக அன்றொரு நாள் அவன் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்வு பெற்றிருக்க” ..

  டவுட் க்ளியர்ட்.. ஓக்கை?? :)

  ஹி ஹி.. அது நூத்துக்கு நூறு, விச் இஸ் ஈக்வலெண்ட் டூ இருநூறுக்கு இருநூறு :))

  ReplyDelete
 7. சந்தூஸ், நல்லா இருக்கு. தொடருங்கோ. குமேஷ் ஆகா நல்லா இருக்கு. ஏன் அந்த கம்யூட்டர் இஞ்சி நீரின் மேசையில் ஒரு மஞ்சள் ஒளி வட்டம் தெரியுது. அவரின் தலையில் வர வேண்டிய ஒளி வட்டமா????

  ( நான் முன்பு ஒரு பதிவுக்கு போட்ட பின்னூட்டத்தை கூகிளாண்டவர் எங்கோ தொலைத்து விட்டார். எங்கையாவது இருக்கா என்று பாருங்கள் )

  ReplyDelete
 8. //வர வர ஒன்னுமே எழுதாம நாலு படத்தப் போட்டே ஓட்டிடறன்னு ஹூசைனம்மா சொல்லியிருக்காக //
  எங்களை காப்பாற்றிய ஹூசைனம்மாவுக்கும் எங்கள் நன்றிகள்.

  ReplyDelete
 9. ஆ...ஊ...அவுச்! அவ்வ்வ்..வ்வ்வ்..வ்வ்! ஆல் ப்ளாகர்ஸ் புல் ஸ்பீட்ல எயுதி தள்ளிருக்காங்கோ..காலம் கலி காலம் ஆகிப்போச்சுடா..கம்ப்யூட்டர் கடவுளாக மாறிப்போச்சுடா!(இப்பம் எதுக்கு இந்தப் பாட்டு எண்டு ஆரும் கேக்கப் படாத்)

  ஜீனோ ரெட் ஆல் போஸ்ட்ஸ் அண்ட் ஸா பூந்தோட்டோ காவல்காரர் பிக்சர் ரூ..பட்,காட் ஹர்ட் இன் லெப்ட் ஹேன்ட் லிட்டில் பிங்கர்..நாட் ஏபில் டு டைப்..ஹென்ஸ், ஜீனோ கம்ஸ் தேர் அன்ட் வில் கிவ் இட்ஸ் எலாபரெட் கமெண்ட்ஸ் லேட்டர்.

  ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)