16 January 2011

தீக்குள் விரலை வைத்தால்.. நந்தலாலா..

நான் பொதுவா படம் பார்க்கறதுக்கு முன்னாடி கதை தெரிஞ்சுக்க மாட்டேன்.. இத்துனூண்டு கூடத் தெரிஞ்சுக்கக் கூடாதுன்னு ஒரு அல்ப ஆசை.. படம் நல்லாயிருக்கா இல்லையா - இது தெரிஞ்சிருந்தா போதும். இதையும் அப்படித் தான் பார்க்க ஆரம்பிச்சேன்.. ஒரு படத்த நிறைய பேரு நல்லாயிருக்குன்னு சொல்லியிருந்தாலே ஏகப்பட்ட எதிர்பார்ப்போட பார்க்க ஆரம்பிச்சு அந்தப் படம் எனக்கு அவ்வளவா பிடிக்காம போயிடும்.. இதுவும் அப்படி ஆயிடுமோன்னு கொஞ்சம் பயம் இருந்தது.. ஆனா படத்தோட முதல் சில காட்சிகளிலேயே அது காணாம போயிடுச்சு..

எனக்கு எதைச் சொல்லுறது எதை விடறதுன்னு தெரியல! ரொம்ப நல்லாயிருந்தது.. "தீதும்" "நன்றும்" சிறு சிறு கவிதைகளாக படம் முழுக்கத் தூவி விட்டிருக்காங்க.. நாமும் வாழ்க்கையில இப்படி பல நல்ல நேரங்களை நல்ல மனிதர்களைக் கடந்து வந்திருப்போம்.. ரயில் பயணத்திலோ இல்லை கல்லூரியிலோ.. சில சின்னச் சின்ன உதவிகள் கூட "காலத்தால் செய்யும் உதவி சிறிதெனினும்.." ன்ற மாதிரி நமக்கு அப்போதைக்கு பெருசா உதவியிருக்கும்.. அவங்களுக்கு இப்போ நம்ம நினைவு இல்லாட்டியும் நம்ம மனசுல அவங்க எப்பவுமே இருப்பாங்க. காட்சியமைப்புகள் சூப்பர்ப்!! நல்லா அழுதேன்.. :)) ஆனா இந்தளவுக்கு திக் திக் அனுபவங்கள் நமக்கு வாழ்க்கையில நேரடியா ஏற்பட்டிருக்காது (குறைந்தபட்சம் எனக்கு ஏற்பட்டதில்ல).

மிஷ்கினுக்கு பதிலா வேறொருத்தர் நடிச்சிருந்தா எப்படி இருந்திருக்கும்ன்னு தெரியல. ஒரு சில வசனங்கள் மட்டும் செயற்கையா இருந்தது. சில காட்சிகள் மிகைப்படுத்தப்பட்ட மாதிரி.. கொஞ்சம் ஓவர் டோசேஜ் மாதிரியும் தோனுச்சு.. இன்னும் கொஞ்சம் சுருக்கியிருக்கலாம். இயக்குனருக்கு சொந்தமாவே இப்படி ஒரு கதை தோனியிருந்தா இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன்.  இன்னும் யாராவது பார்க்காம இருந்திருந்தா பாத்திடுங்க.. நானும் முடிஞ்சா இன்னொருக்கா பார்க்கனும்..

அதென்னமோ படம் பாத்துகிட்டு இருக்கும் போதே இந்தப் பாட்டு கேக்கனும்ன்னு ஆசையா இருந்தது..



எல்லாரும் பொங்க வச்சு முடிச்சுட்டீங்களா? மிச்சம் மீதி ஏதாவது இருந்தா ஒரு ஐஸ் பொட்டியில வச்சு எங்க வீட்டுக்கு அனுப்பி விடுங்க. புண்ணியமாப் போவும்.. பக்கத்துல இருக்கறவங்களா இருந்தா நானே வந்து டோர் பிக்கப் பண்ணிப்பேன் :)..

07 January 2011

விடுப்பு

இன்னும் கொஞ்சம் நாட்களுக்கு பணிச்சுமை காரணமாக பதிவு எழுதுவதும் பின்னூட்டமிடுவதும் குறைவாகவே இருக்கும். ஆனாலும் அப்பப்போ உங்க பதிவுகளை எல்லாம் படிச்சுப்பேன்.. அதனால எல்லோரும் பொறுப்பா எழுதோணும்.. :)) சரியா??

இதுக்கு ஆரும் பின்னூட்டம் போடப்படாது.. ஓக்கை??