02 October 2010

எந்திரன் - காதுல வயர்

அழகு - இருக்குங்க (ஐஸ்க்கு வயசே ஆகாதா?)

பிரமிப்பு - இருக்குங்க

பிரமாண்டம் - இருக்குங்க

கற்பனை, உழைப்பு, கிராபிக்ஸ் - குறைச்சலே இல்லாம இருக்குங்க

கலர் - கிளிமஞ்சாரோ ன்னு ஒரு பாட்டு வருதுங்க. அதுல ஐஸ் கலர் கலரா வராங்க.

உணர்வு - தலீவரு பேரு வர்றப்வே, படம் பாக்கற மக்களுக்கெல்லாம் பொங்கி வந்துடுச்சுங்க. விசிலு, பேப்பரு, கைதட்டலுன்னு தூள் கெளம்புது. எழுந்து நின்னு சாமியாடாதா கொற ஒன்னு தான்..

இசை - காதடைக்கற அளவுக்கு இருக்குங்க


அட, உலோகம் கூட டன் கணக்குல இருக்குதுங்க..

கதை - இது கூட ஒரு வரில சொல்ற அளவுக்காவது இருக்குங்க 



லாஜிக் - புல் மீல்சுல ஓரமா இத்துனூண்டு ஊறுகா தொட்டுக்க வைப்பாங்களே, அந்தளவுக்காவது இருக்குங்க


உயிர் - அதையத் தானுங்க காணோம்.


நான் கூட எந்திரன் படத்துல ரஜினி நடிச்சிருக்காருன்னு நெனச்சு போனேங்க.. பொறவு தான் தெரிஞ்சது, ரஜினி படத்துல ரோபோட்டும் நடிச்சிருக்குன்னு.. அதுக்காகவே அந்த "ரோபோட்"ட பிடிச்சிருக்குங்க.