பிரமிப்பு - இருக்குங்க
பிரமாண்டம் - இருக்குங்க
கற்பனை, உழைப்பு, கிராபிக்ஸ் - குறைச்சலே இல்லாம இருக்குங்க
கலர் - கிளிமஞ்சாரோ ன்னு ஒரு பாட்டு வருதுங்க. அதுல ஐஸ் கலர் கலரா வராங்க.
உணர்வு - தலீவரு பேரு வர்றப்வே, படம் பாக்கற மக்களுக்கெல்லாம் பொங்கி வந்துடுச்சுங்க. விசிலு, பேப்பரு, கைதட்டலுன்னு தூள் கெளம்புது. எழுந்து நின்னு சாமியாடாதா கொற ஒன்னு தான்..
இசை - காதடைக்கற அளவுக்கு இருக்குங்க
அட, உலோகம் கூட டன் கணக்குல இருக்குதுங்க..
கதை - இது கூட ஒரு வரில சொல்ற அளவுக்காவது இருக்குங்க
லாஜிக் - புல் மீல்சுல ஓரமா இத்துனூண்டு ஊறுகா தொட்டுக்க வைப்பாங்களே, அந்தளவுக்காவது இருக்குங்க
உயிர் - அதையத் தானுங்க காணோம்.
நான் கூட எந்திரன் படத்துல ரஜினி நடிச்சிருக்காருன்னு நெனச்சு போனேங்க.. பொறவு தான் தெரிஞ்சது, ரஜினி படத்துல ரோபோட்டும் நடிச்சிருக்குன்னு.. அதுக்காகவே அந்த "ரோபோட்"ட பிடிச்சிருக்குங்க.
யெஸ்! இப்ப தான் சுட சுட பாத்தேன்... அதே பீலிங்சு!!!! பக்கத்தில ஒரு பீலிங்சும் இல்லாம "ஓகே" ந்னு சொல்லிட்டார் இவர்.
ReplyDeleteநானும் பாத்துட்டேனே!! :-)))
ReplyDeleteம். இன்னும் பார்க்கல.
ReplyDelete//உயிர் - அதையத் தானுங்க காணோம்.//
ReplyDeleteசார்ஜ் போடுங்க மின்சாரம் இல்லைன்னா கார் பேட்டரிய யூஸ் பண்ணுங்க சீக்கிரம் # டாட்
ஹலோ... கடைசி 20 நிமிச ரஜினிய விட்டுட்டீங்களே..
ReplyDeleteரோபோவ்வ்வ், ப்ஹாஹா ப்ஹாஹா.. இதெல்லாம் ரஜினி தவிர யார் நடிச்சாலும் கஷ்டம்..
ஆமா உயிர் இல்லைன்னு எப்பிடி சொல்றீங்க? வசீகரனுக்கும், சிட்டிக்கும், சிட்டி 2.0வுக்கும் உடல் மொழியில வசன உச்சரிப்புல, நடையில வித்தியாசம் காட்டியிருக்கும் ரஜினியை பாராட்ட மாட்டீங்களா? ரஜினி படத்துல ரோபோ நடிச்சிருக்குனு சொல்றது சரியா?
இலா.. சேம் பின்ச்சா.. சரி சரி..
ReplyDeleteசெல்லாது செல்லாது.. எப்பிடியிருந்ததுன்னும் சொல்லிட்டுப் போகணும் ஹூசைனம்மா.. ஹாஹ்ஹா..
ReplyDeleteநீங்க படமெல்லாம் பார்ப்பீங்களா இமா? நெஜமாலுமே தான் கேக்கறேன்? பாத்துட்டு வந்து சொல்லணும் ஓக்கை??
ReplyDelete//சார்ஜ் போடுங்க மின்சாரம் இல்லைன்னா கார் பேட்டரிய யூஸ் பண்ணுங்க சீக்கிரம் # டாட்//
ReplyDeleteநன்றி வசந்த்.. இதால இயக்கம் வரும், இயக்கம் மட்டுமே உயிராகிடாது இல்லையா?
நம்ம உடம்பும் மின்சார சர்க்யூட்களால தான் இயங்குது.. ஆனா உயிர்ன்றது அதைத் தாண்டிய ஏதோவொன்னுன்னு இன்னிக்கு வரைக்கும் தோணறது..
நன்றி முகிலன்..
ReplyDelete//ஆமா உயிர் இல்லைன்னு எப்பிடி சொல்றீங்க?//
இருக்குன்னு எப்பிடி சொல்றீங்க? (மொறைக்கக் கூடாது :) ) ஆரம்பத்துல இருந்தே படம் மனசுல ஒட்டவே இல்லைங்க.. எல்லாமே செயற்கையா இருந்த மாதிரி இருந்தது.. பிக்ஷன் றதையும் தாண்டி.. சிவாஜி ஒட்டுச்சே..
//வசீகரனுக்கும், சிட்டிக்கும், சிட்டி 2.0வுக்கும் உடல் மொழியில வசன உச்சரிப்புல, நடையில வித்தியாசம் காட்டியிருக்கும் ரஜினியை பாராட்ட மாட்டீங்களா?//
சிட்டி அண்ட் சிட்டி 2 - நல்லா கவனிச்சிருக்கீங்க.. எனக்குத் தெரியல இது.. மிஸ் பண்ணிட்டேன் :(
இவ்வளவு செலவு பண்ணி கூட, தமிழ் சினிமா பார்முலாவ கொஞ்சம் கூட தாண்டாம, ரொம்ப மசாலா தடவி எடுத்துட்டாங்கன்னு கடுப்பா இருக்கு.. ஆயிரத்தில் ஒருவன் கூட பிக்ஷன் தான்.. ஆனா இப்பிடி மசாலாவா இருக்காது..
//ரஜினியை பாராட்ட மாட்டீங்களா?// //ரஜினி படத்துல ரோபோ நடிச்சிருக்குனு சொல்றது சரியா?//
அதுக்காகவே அந்த "ரோபோட்"ட பிடிச்சிருக்குங்க - இந்த வரில, ரஜினி தாங்க அந்த ரோபோட்.. "சிட்டியா" நல்லா perform பண்ணியிருக்காரு.. ஆனா, அது தவிர்த்து, மிச்சதெல்லாம் ரஜினி படம் தாங்க..
முழுசும் ரஜினி படமாவே இருந்திருந்தாக்கூட பிடிச்சிருக்கலாம்.. இவங்க கொடுத்த பில்டப் பாத்து நான் ஹாலிவுட் படம் மாதிரி ன்னுல்ல நினச்சிட்டுப் போனேன்???
சந்தூ, ஒரு சிலர் ஆகா ஓகோன்னு விமர்சனம் எழுதுறாங்க. சிலர் படம் மனதில் ஒட்டவில்லை என்கிறாங்க. நான் இப்பதைக்கு பார்க்க சந்தர்ப்பம் வராது. ரஜினி படம் என்றாலே ஓவர் பில்டப் தானே!!!
ReplyDeleteநெகட்டிவ் விமர்சனம் வந்த இராவணன் படம் எனக்கு மிக மிக பிடித்துக் கொண்டது.
வான்ஸ்.. எனக்கும் ஒட்டலை தான்..
ReplyDeleteரஜினி படங்கள்ல ரஜினிக்காக அப்படி மாத்திடறாங்க வான்ஸ்.. அப்பிடி இருந்தாத் தான் மக்கள் ரசிக்கறாங்க.. அவரு சீரியஸா நடிச்சா நிறைய பேருக்கு பிடிக்க மாட்டேங்குது :)
ராவணன் ரொம்ப பிடிச்சிருந்ததா? எனக்கு அது கொஞ்சம் பிடித்தும் பிடிக்காமலும் இருந்தது..
சந்தூ, உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். திட்ட வேண்டாம். நேரம் கிடைக்கும் போது எழுதுங்கோ.
ReplyDeletehttp://vanathys.blogspot.com/2010/09/blog-post_30.html
ஆக்சுவலி இது ரஜினி படமே இல்லைங்க..
ReplyDeleteநோ பன்ச் டயலாக்
நோ அறிமுகப் பாடல்
நோ சவால் டயலாக்
நோ ஃபீமேல் வில்லி
ம்ம்.. சரி தான் முகிலன்.. அதுவும் female villi ஹ்ஹஹ்ஹா..
ReplyDeleteஇங்க ரஜினி படம்ன்னு சொன்னது வழக்கமான சினிமா ன்ற அர்த்தத்துல.. காமெடிக்குன்னே ரெண்டு அசிஸ்டன்ட்ஸ்.. கலர் கலர் டை அடிச்ச வில்லன்கள்.. பிரமாண்டமான பாட்டுகள்..
அந்த கடைசி இருவது நிமிஷத்துலயும், பாட்டுலயும் கொட்டுன காச படம் முழுக்கக் கொட்டியிருக்கலாம்.. விறுவிறுப்பு கம்மி.. சிட்டி 2 இன்னும் பல ரோபோக்கள உருவாக்கற காட்சி பாத்ததும் திக்ன்னு இருந்தது.. அந்த மாதிரி இன்னும் கொஞ்சம் திருப்பங்கள் இருந்திருக்கலாம்..
தசாவதாரம் ல கமல் பத்து வேஷத்துல நடிச்சார்.. ஒன்னோன்னுலயும் வித்தியாசம்.. ஆனா படத்தப் பாத்தா What a crap! அப்படின்னு தான் சொல்லத் தோனுச்சு.. என்ன செய்ய?
விசா வோட இடுகை படிச்சுப் பாருங்க.. நன்றி..
/(ஐஸ்க்கு வயசே ஆகாதா?)/கர்ர்ர்ர்ர்ர்ர்! ஒத்துக்கமாட்டேன்! சிலபல க்ளோஸ்-அப் காட்சிகள்ல வயசானது நல்லாவே தெரியுதே? :)
ReplyDeleteஉன்ன மாதிரி அலசி ஆராய்ஞ்சு காயப்போடவெல்லாம் எனக்குத் தெரியாதம்மிணி. ட்ரெய்ன் சண்டை,ஐஷ்வர்யாக்காக சிட்டி எக்ஸாம்க்கு படிக்கறது,க்ளைமாக்ஸ் நீளம்,இப்படி குறைகள் தெரிந்தாலும் மொத்தத்துல படம் பிடிச்சிருந்தது. :)
சந்தனா,உங்களுடன் ஒரு விருதைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.விருதினைப் பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
ReplyDeletehttp://mahikitchen.blogspot.com/2010/10/blog-post_07.html
சரி,சரி,நன்றீன்னு சொல்லிட்டு கமுக்கமா இருந்துடக்கூடாது.எல்லாருக்கும் குடுக்கோணும்,சரியா? ;)
இன்னும் படம் பார்க்கல:-((
ReplyDeleteநன்றி மஹி.. நிறைய பேருக்கு படம் பிடிச்சுத் தான் இருக்குது.. ஹாலிவுட் படம் மாதிரி அப்படின்னு ஒரு எதிர்பார்ப்போட :) போனதால எங்களுக்கு ஏமாற்றம் ஆகிப் போச்சுன்னு நினைக்கறேன்...
ReplyDelete//ஒத்துக்கமாட்டேன்!// நானும் :) 35 வயசாம்.. நம்ப முடியுதா?
நன்றி மஹி :)) எல்லாருக்கும் கொடுத்தாச்சு :))
சிநேகிதி.. நீங்க யார்ன்னு தெரியலப்பா... நன்றி.. அதுக்கென்ன முடியும் போது பாருங்க.. இதயப் படிச்சு குழம்பிடாதீங்க.. :) படம் பிடிக்கறதுக்கான வாய்ப்புகள் தான் அதிகம்..
ReplyDeleteரஜினிப்படத்தை பாத்துட்டு இத்தனை கேள்வி கேட்டா உங்களை என்ன சொல்லி ..... எதுவுமே இல்லாத்துதான் இப்ப வர ரஜினி படங்கள்.. எல்லாமே சும்மா டுபாக்கூர்..!!
ReplyDeleteபழைய படத்தில மட்டுதான் சரியான ரஜினியை பாக்க முடியும் ..உதா முல்லும் மலரும் , புவனா ஒரு கேள்வி குறி .......>
//சந்தூ, உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். திட்ட வேண்டாம். நேரம் கிடைக்கும் போது எழுதுங்கோ.
ReplyDeletehttp://vanathys.blogspot.com/2010/09/blog-post_30.html //
லிங்க் சரியில்லையே ..!! பாத்தீங்களா..ரஜினி படம் போட்டாலே இப்படிதான் ஹய்யோ..ஹய்யோ..!! :-))
வாங்க ஜெய்.. ரொம்ப நாளா காணோமேன்னு நினைச்சிட்டு இருந்தேன்.. தலையக் காமிச்சதுக்கு நன்றி :)) ரஜினி படம் பிடிச்சிருந்திருக்கு.. சந்தரமுகி, சிவாஜி.. சரி, விடுங்க...
ReplyDeleteஅய்ய.. லிங்க் எல்லாம் சரியாத் தான் இருக்கு.. அங்க பின்னூட்டத்துல பாருங்க.. :))
ReplyDeleteவான்ஸ்.. இம்புட்டு நல்லவரா இருக்கீங்களே! கேட்டு வாங்கினதே நாங்க தான்.. நன்றி :)) எனக்கு நேரம் இருக்கறப்போ எழுதிடறேன்..
ReplyDeleteநான் இன்னும் பாக்கலை... பாத்துட்டு சொல்றனுங்க... உங்க விமர்சனம் வித்தியாசமாத்தான் இருக்கு போங்க... சூப்பர்
ReplyDeleteDifferent Review..Good..
ReplyDeleteஇன்னும் பார்க்கலை. பார்க்கற ஐடியாவும் இல்லை :-)
ReplyDelete