29 October 2010

ஓர் எல்போர்ட் வண்டியோட்டுகிறது..

தலைப்பு எப்பூடி? சும்மா கவித மாதிரி இல்ல? ஓர் ஓடம் நதியாகிறது அப்படின்ற படத்தலைப்போட பாதிப்புல இ(சு)ட்டது.. (தமிழ்ப்படந்தான், டிவில எப்பவோ பாத்து பிடிச்சுப் போனது..) வானதி கிட்ட அடம் பண்ணி, கேட்டு வாங்குன தொடர் பதிவு..

எல்போர்டு வண்டியோட்ட பட்ட சிரமத்த விட, எல்போர்டு எல்போர்டாக பட்டச் சிரமந்தான் அதிகம்.. கதையச் சொல்றதுக்கு முன்னாடி, திரு. எக்ஸ் ஐப் பத்தி ஒத்த வரி அறிமுகம்.. தன்னப்பத்தி ப்ளாக்ல எதுவும் எழுதவேண்டாம்ன்னு வூட்டுக்காரர் சொல்லியிருக்கறதால, அவரப் பத்தி எதுவும் எழுதல, திரு. எக்ஸ் ஐப் பத்தி மட்டுந்தான் இங்க எழுதியிருக்கிறேன்னு இப்பவே சொல்லிப்போடறேன்.. :)

இங்க learner's permit (இது எல்போர்டா ஆவறதுக்கான லைசென்ஸ்) ஒரு முக்கியமான அடையாளச் சீட்டு.. ரெண்டு மூணு உறுதியான அடையாளச்சீட்டுக்கள் இருந்தாத்தான் பெர்மிட்டே கிடைக்கும்.. இந்த நாட்டுக்கு வேலைக்கான விசால வர்றவங்களுக்கு பிரச்சன எதுவும் இல்ல.. நாம யாரு.. கண்ணாலந்தான் கட்டிக்கிட்டு ஓடி வந்தவங்களாச்சே... அதனால, லொட்டு லொசுக்குன்னு பல அடையாளங்கள தேத்தோனும்.. இதுக்கோசரமே, வங்கியில கணக்கு ஆரம்பிச்சு, ரெண்டு வங்கிக்கணக்கு, இன்சூரன்ஸ், பாஸ்போர்ட், அது போவ இன்னும் ஒன்னோ ரெண்டோ..  எல்லாஞ் சேத்தி (அதுக்கே ஒரு வருஷமாயிப் போச்சு), ஒரு மஞ்சப் பையில போட்டு எடுத்துக்கிட்டு பஸ்ஸப் புடிச்சு தெகிரியமா ஒரு நா அந்த அலுவலகத்துக்குப் போயி நின்னா..  :(

எல்லாம் சரிதான், ஆனா இன்சூரன்ஸ் கார்டுல உன் நடு இனிசியல் வரல, அதனால செல்லுபடியாவாதுன்னு சொல்லிப்போட்டாங்க.. இந்த நாட்டுக்கு வந்ததுல இருந்தே பொழப்பு நாசமாத் தான் போயிக் கெடக்கு.. நமக்கு வாழ்க்கையே இனி அம்புட்டுத்தான் அப்பிடின்னு கண் கலங்க திரும்புனேன்.. அப்பப் பாத்து இன்னோரு அம்மா திரும்பவுங் கூப்புட்டு, இந்தா கண்ணு, போனாப் போவுதுன்னு உன்னைய ஏத்துக்கறோம்ன்னு பெரிய மனசு பண்ணி சொல்லிட்டாங்க.. பெர்மிட்டும் கிடைச்சுது..

முதன்முதல்ல ஓட்டுனது, எக்ஸ் சோட அலுவலகத்துல இருக்கற கார் பார்க்கிங்ல.. நாமளே முயற்சி பண்ணிப்பாக்கலாம் அப்பிடின்னு கூட்டிட்டு போனாரு.. கேஸ் பெடல (அக்சலறேட்டர்)  ஒரு அமுக்கு அமுக்கி, சும்மா விர்ருன்னு கிளம்பி, இன்னொரு கார் பின்னாடி ரொம்ப பக்கத்துல போயி, சடாருன்னு ப்ரேக்கப் போட்டு நிறுத்துனேன்.. திரும்பிப் பாத்தா, எக்ஸ் நெஞ்சைப் பிடிச்சிகிட்டு பேச்சு மூச்சில்லாம உட்கார்ந்திருந்தார்..

அதுக்கப்புறம், பயிற்சி ஆட்களோட, அவங்க கார்கள்ல சில மணி நேரங்கள் கடுமையான பயிற்சி.. ரெண்டு பேரு வந்தாங்க; ஆதிரேயன் - இவர் பெரியவர்.. இவர் தான் பயிற்சிப் பள்ளி முதலாளி.. சொல்லிக் கொடுக்கறதும் கண்டிப்போட இருக்கும்.. பயந்து பயந்து ஓட்டுவேன்.. தான் சொன்ன மாதிரி சரியாகச் செய்யணும்ன்னு எதிர்பார்ப்பார்.. டூ வீலர் ஓட்டியிருக்கேன்னு சொல்லற, அதைய விட இது எளிதானது தான்னு சொன்னார்..  இவர் கூட ஓட்டுன வரைக்கும் நம்பிக்கையே வரல..

ரெண்டாவது - ஆதி.. இவர் நம்ம வயசுக்காரர்.. அதனால பயிற்சி ரொம்பவே இயல்பா இருக்கும்.. இப்போதைக்கு நான் சொல்ற மாதிரி ஓட்டு, நாளாக ஆக நீயே உனக்குன்னு ஒரு ஸ்டைல்ல (?!) ஓட்டுவ, அப்படிம்பார்.. எனக்கு பிரச்சனையே, வேகமாப் போக பயப்படறது தான்.. பின்னாடி வர்றவங்க எல்லாம் பொறுமையிழந்து போயி ஹாரன் அடிப்பாங்க.. ஒரு நாள் ரொம்ப நொந்து போய்ச் சொன்னார் - உன்னைய நம்பி நான் என் வாழ்க்கையவே பணயம் வச்சு இந்தக் கார்ல உட்கார்ந்திருக்கேன், நீயும் பதிலுக்கு என்னைய நம்பி தெகிரியமா ஓட்டனும்..

அதுக்கப்புறம் நிலைமை கொஞ்சம் சுமாராச்சு.. ஒருக்கா, இறக்கத்துல (downhill) போறப்ப, யாராயிருந்தாலும் தன்னிச்சையா இந்த இடத்துல ப்ரேக் போட்டிருப்பாங்களே, உனக்கு அது தோணலையா ன்னு ஆதிரேயன் கேட்டார்.. நாமல்லாம் யாரு?! கஷ்டப்பட்டு பெடல மிதிச்சு, மேடேறி, மேடு தாண்டினதும் வர்ற இறக்கத்துல, ரெண்டு கையையும் விட்டுட்டு சும்மா சல்லுன்னு சைக்கிள்ல போனவங்களாச்சே.. நமக்கெல்லாம் அது தன்னிச்சையா வராதுன்னு சொல்லிட்டேன்.. இந்த வெத்துப் பெருமைக்கெல்லாம் குறைச்சலே இல்ல!

இதெல்லாம் கொஞ்சம் மணி நேரங்கள் தான், பத்தாதுன்னு, எக்ஸ் சொன்னாரு.. எல்போர்டா இருக்கற வரைக்கும் தனியா ஓட்டக் கூடாது; அதனால அவரு கூட எங்கயாச்சும் போயி நல்லா பழகனும்.. எங்க போக? அப்பத்தான் இந்த எல்போர்ட் மண்டையில ஒரு "பயங்கரமான" யோசனை உதிச்சது.. நம்ம வீட்டுப் பக்கத்துல ஒரு cemetry இருக்கே (அர்த்தம் தெரியாதவங்க தேடிப் பிடிச்சு படிச்சுக்கோங்க :) ), அங்க போனா "யாருக்கும்" எந்தப் பிரச்சனையும் இருக்காதேன்னு! சும்மா சொல்லக் கூடாது.. நெறைய ரோடுங்க, குறுக்கும் நெடுக்குமா போட்டு வச்சிருந்தாங்க.. அந்தப்பக்கம் இந்தப்பக்கம்ன்னு திருப்பிப் பழகறதுக்கு ரொம்பவே உபயோகமா இருந்தது.. எப்பவாச்சும் ஒருக்காத் தான் ஏதாவது வண்டி கண்ணுல படும்.. மீதி நேரமெல்லாம் எங்க ராஜ்ஜியம் "மட்டுந்" தான்.. அங்க பல மணிநேரங்கள் ஓட்டின பிறகு, வாழ்க்கையில கொஞ்சம் நம்பிக்க வந்தது (?!)..

எங்க வீட்டுல இருந்து கொஞ்சம் தொலைவுல, நல்ல இயற்கை வளத்தோட, ரெண்டு பக்கமும் அடர்ந்த மரங்களோட, லேசான வலைவுகளோட, பாதைகள் உண்டு.. இங்க கொஞ்சம் நேரம் ஓட்டிப் பழகினேன்.. மழை லேசாத் தூறும் போது, இந்த மாதிரி இடத்துல, வேற யாராவது வண்டி ஓட்ட, உட்கார்ந்து பாட்டு கேட்டுக்கிட்டு வர்றது, சுகமான அனுபவம் - அப்படின்னு எக்ஸ் சார்பா நானே சொல்லிக்கறேன்.. என்ன, அப்பப்ப எதிர்தாப்புல வர்ற சிக்னல், ஸ்டாப் சைன் - இதெல்லாம் கவனமாப் பாத்து சொல்லிக்கிட்டே வரணும் :))


பிகு: கார்ல பயிற்சி ஆரம்பிக்கறதுக்கு முன்னால, பயிற்சிப் பள்ளில,  சாலை விதிகள் பத்தின வகுப்பு நடந்தது.. ஆதிரேயன் தான் சொல்லிக் கொடுத்தார்.. எல்லா நாடுகள்லயும், ஸ்டாப் சைன், ஓரளவுக்கு ஒரே மாதிரி தான் இருக்கும் அப்பிடின்னு சொல்லிட்டு, வெளிநாட்டு ஆளுங்க ரெண்டு மூணு பேர எழுப்பிவிட்டு, சொன்னது சரிதானன்னு கேட்டார்.. என் போதாத நேரம், என்னையும் எழுப்பி விட்டுட்டார்..  எங்க நாட்டுல நான் ஸ்டாப் சைனையே பாத்ததில்ல அப்பிடின்னு ஒரே போடாப் போட்டேன்.. கொஞ்சம் நேரம் விவாதம் பண்ணுனார் - அதில்லாம எப்படின்னு.. அப்பிடித் தான், வேணும்னா நீங்களே வந்து பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டு உட்கார்ந்துட்டேன்.. நீங்க யாரும் பாத்திருக்கீங்களா?

ஆவ்.. சொல்ல மறந்துட்டேன்.. இன்னொரு பாகம் இருக்கு! என்ன  செய்ய? பேச ஆரம்பிச்சா நிறுத்த முடியறதே இல்ல! 

21 comments:

 1. :)
  எல்போர்டு வண்டியோட்டுதா? பாவம் பக்கத்துல உட்க்கார்ந்துட்டு வரவரும்..ரோட்டுல பயணிக்கும் மற்ற பயணிகளும்!

  ReplyDelete
 2. உங்கள் வலைப்பூவிற்கு இன்றுதான் முதல்முறையாக வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... இனி பின்தொடர்கிறேன்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. ;))))))))))))))))))))))))

  ரசிச்சேன். ;))

  அப்ப பேரை மாத்தப் போறீங்களோ!

  ReplyDelete
 4. ஹய்யோ கலக்கிட்டிங்க எல்ஸ்! சைக்கிள் உவமானம் ரொம்ப சூப்பர் :) Cant wait for part 2 .. me to will put in 2 parts :) or more may be

  ReplyDelete
 5. எப்புடி!! 'ஒரு மயில் வாகனம் ஓட்டுகிறது' என்றா? ;)) எழுதுங்கோ இலா. மீ வெய்ட்டிங் டு ரீட். ;)

  ReplyDelete
 6. அது ஒரு சுகமான அனுபவம் அப்பிடின்னு, மேல சொல்லியிருக்கறேன் :) பாருங்க மஹி..

  ReplyDelete
 7. நன்றிங்க சகோதரர்.. நானும் முடியறப்ப வந்து எட்டிப் பாக்கறேன்..

  ReplyDelete
 8. இமா.. போதும் சிரிப்பு.. பேரெல்லாம் மாத்தப் போறதில்ல.. இருந்துட்டுப் போகட்டும்..

  மயில் வண்டியோட்டிய கதையை முட்டையாகப் போடப் போவதைப் பார்க்க நானும் ஆவலோட இருக்கேன் இமா :)))

  ReplyDelete
 9. அவ்வ்வ்.. பல பேரு வயித்தக் கலக்கியிருக்கேன் அப்படின்றது மட்டும் உண்மை இலா :)) இரண்டாம் பாகம் நேரம் கிடைக்கும் போது எழுதிடறேன்..

  சீக்கிரம் எழுதுங்க.. காத்திருக்கிறோம்..

  ReplyDelete
 10. மஞ்சப்பைய தூக்குற வேலைய அமெரிக்காபோயும் நிறுத்தலையா நீங்க?

  ReplyDelete
 11. ஆனாலும் பாவம்ங்க எக்ஸ்!

  ஆமா யாரிந்த எக்ஸ்?

  ரைட்டு ஒய் நீங்களா?

  எப்பிடில்லாம் யோசிக்கிறாங்கப்பா!

  ஆமா கண்ணாலம் கட்டிகிட்டு ஏன் ஓடிப்போனீங்க லவ் மேரேஜா?

  ReplyDelete
 12. ஸ்டாப் சைன் எல்லா சைக்கிள் பின்னாடியும் இருக்குமே பார்த்ததில்ல ? :))

  ReplyDelete
 13. சொல்ல மறந்துட்டேன் காடு மேடு ரோடு அட்டகாச வார்த்தை லேபிளுக்கு...

  சே நமக்கு இப்படில்லாம் தோண மாட்டேங்குதுப்பா!

  ReplyDelete
 14. எல்லாருக்குமே இந்த மாதிரி ஒரு இனிய ‘எல் போர்ட்’ காலம் இருக்கும்போல!! :-)))))

  சிமெட்ரியில் பயணம் போய், வாழ்க்கையின் மேல் நம்பிக்கை பெற்றது, பிரமாதம்!!

  ReplyDelete
 15. நன்றி வசந்த்.. அது சும்மா விளையாட்டுக்கு! ஒரு பாலித்தீன் பயில போட்டுக் கொண்டு போனேன்னு நினைக்கறேன்!

  எக்ஸ், என் கணவர்.. பதிவுலக பாஷையில சொன்னா, ரங்ஸ் :)

  கணவர் இங்க வேலை செய்ய, அவரோட மனைவிய அழைச்சிட்டு வரதுக்காக, மனைவிக்குன்னு ஒரு விசா இருக்கு.. அதுல வந்தா, சலுகைகள் குறைவு.. அந்த விசால வந்ததத்தான் அப்பிடிச் சொன்னேன்.. ஓடியெல்லாம் வரல.. வீட்டுல ஏர்போர்ட் வரை வந்து அனுப்பித் தான் வச்சாங்க :)

  ReplyDelete
 16. அப்படியா? சைக்கிள் பின்னால பாத்தா மாதிரி நினைவில்லையே? அப்ப, சரியான இடத்துல தான் வச்சிருக்காங்க!! :)

  ஹஹ்ஹா.. அது ப்ளாக் ஆரம்பிக்கும் போது, ப்ரோபைல் பேருக்கு (எல்போர்ட்) மேட்சா இருக்கட்டும்ன்னு வச்சது :) மீதித் தலைப்புகளும் அப்பிடித் தான் வச்சேன்..

  //சே நமக்கு இப்படில்லாம் தோண மாட்டேங்குதுப்பா!// இதுக்குப் பேரு தான் தன்னடக்கமோ? அப்பிடிப் பாத்தா, உங்களோட ஒவ்வொரு இடுகைக்கும் நாங்களெல்லாம் இப்பிடி பீல் பண்ண வேண்டியது தான்! :)

  ReplyDelete
 17. ஹூசைனம்மா.. அப்ப, உங்களுக்கும் இருக்குதுன்றீங்க??!! கவலைப்படாதீங்க, தொடர வச்சிடலாம்.. :)

  ம்ம்.. அதொரு நேரம்.. சும்மா சொல்லக் கூடாது, பயிற்சி எடுக்க நல்ல இடம்.. வேற யாராவதா இருந்தா அங்க போக ரொம்ப யோசிச்சிருப்பாங்கன்னு தோணுது!

  ReplyDelete
 18. சந்தூ, நீங்கள் என்னிடம் அடம் பண்ணியா கேட்டீங்க??? எனக்கு ஆனந்தக் கண்ணீரே வந்திருச்சு! நான் கூட சும்மா பேச்சுக்கு சொல்றீங்கன்னு நினைச்சேன். ஒரு பேச்சுக்கு சொன்ன உடனே தூக்கிட்டு ஓடிவந்துடறதான்னு திட்டப் போறீங்கன்னு நினைச்சேன் ஹிஹி.

  நானும் ரொம்பவே கஷ்டப்பட்டு தான் எடுத்தேன். ஆனா இப்ப நினைச்சா எல்லாமே நன்மைக்குத் தான் என்று நினைச்சுப்பேன். இல்லாவிட்டால் ஆ.காரருடன் எல்லாத்துக்கும் தொங்கி, திட்டு வாங்கி...

  ஸ்டாப் ஸைன் எங்க நாட்டில் இருந்தாலும் யாரு நின்று, நிதானமா போறாங்க? இங்கே ஸ்டாப் ஸைனில் நிற்காமல் போனதற்கு என் உறவினருக்கு டிக்கெட் குடுத்தார்கள்.

  நல்லா ரசிச்சேன். மீதி எப்போ?
  தொடர் எழுதியமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 19. ரசிக்கும்படி இருக்கு

  ReplyDelete
 20. எல் போர்ட் நல்லாவே வண்டி ஓட்டியிருக்கு :) அதுவும் சிமெட்ரியில் :(. நானா இருந்தா அங்கயே விழுந்து போய் சேர்ந்திருப்பேன். தைரியசாலிதான் நீங்க!

  ReplyDelete
 21. X -னா என்னமோ மாதிரி இருக்கு L. ;)) வேற எழுத்து ஏதாச்சும் வைங்க.

  அண்ணி கிச்சன்ல என்னமோ புலம்பினா மாதிரி இருந்துது. ;) பரவால்ல... இருக்கவே இருக்கு 2011 தீபாவளி.

  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  அன்புடன் இமா

  ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)