07 November 2010

ஆ vs நா

மு vs கோ மாதிரி முடிவில்லாத இன்னொரு விவாதம் இந்த ஆ vs நா!

எனக்கு ஒரு விஷயம் புரியவேயில்ல.. ஆ களுக்கு சுயமரியாதை இல்லையா? அப்ப, வீட்டுல நாட்டுல பெரியவங்கள ஒருத்தன் மதிச்சா, அவனுக்கு சுயமரியாதை இல்லாம போயிடுமா? 

அப்புறம், இந்த சிந்தனை.. ஆ மக்களெல்லாம் சிந்திக்கத் தெரியாதவங்களா? மக்களா.. ஆ களுக்கும் கேள்வி கேக்கத் தெரியும்.. சிந்திக்கத் தெரியும்.. ஆனா, அந்த விஷயத்துல மட்டும் கேட்டுக்க மாட்டாங்க.. அப்படியேக் கேட்டுகிட்டாலும், அவங்களுக்கு கிடைக்கற பதில் லயும் அவங்க க வ எப்பிடியாச்சும் உணர்ந்துப்பாங்க..  

அடுத்து தன்னம்பிக்கை.. ஆ களுக்கு இதுவும் இல்லைன்னு சொல்றாங்க.. மறுபடியும் புரியல.. வாழ்க்கை முழுசா நம்ம கையில இல்லையே? நிறைய நிச்சயமற்றதன்மை உடையதா இருக்கு பொழப்பு.. நிலையில்லாத உலகில் நிலைக்கும் என்ற கனவில் ன்னு வாழும் போது, தன்னையும் மீறின அந்த தற்செயல் நிகழ்வுகளைத் தாங்கிக் கொள்ள ஒரு பிடிப்பு, தன்னம்பிக்கையைத் தாண்டின ஒரு நம்பிக்கை கொஞ்சம் பேருக்குத் தேவைப்படுதே.. 

நான் இங்க சொல்லியிருக்கறது, நல்லபடியான ஆ கள் பத்தி தான்.. இந்த அங்காடித் தெருவுல வருவாரே.. கடை ஊழியர்கள மனுஷனாக் கூட மதிக்காம, நுழையும் போது வலது காலை உள்ள வச்சு வருவாரே, அவர மாதிரி ஆட்களை இல்ல.. அப்புறம், எதுத்தாப்ல ஒருத்தன் பசியோட இருந்தா, அவனைக் கடந்து போறப்ப, க ளே, நீ தான் இவனப் பாத்துக்கனும்ன்னு தன்னோட கடமையில இருந்து எஸ்கேப் ஆகிட்டு ஓடற ஆட்களை இல்ல.. நிதர்சனங்களை ஏத்துக்காம, க பத்தின ஒரு fantasy ல மூழ்கி, இத்துனூண்டு பிரச்சனைக்கும் க வ எதிர்பாத்துட்டு இருக்கற ஆட்கள இல்ல.. 

சரி, ஆ ஆ வாவே இருந்துட்டுப் போகட்டுமே? இதில நா களுக்கு என்ன கஷ்டம்? அவங்கங்க விருப்பம்... வாழ்க்கை.. அடுத்தவன் தலையில க பேரைச் சொல்லி மிளகாய் அரைக்காத வரைக்கும், ஆ களுக்கு, ஆ சிந்தனை நல்ல விஷயந்தான்.. அவங்களப் பொருத்தவரைக்கும், க ஒரு ஆத்மார்த்தமான தோழன்/தோழி.. மனம் விட்டுப் பேச, புலம்ப, பகிர, அழுக.. இப்பிடி..

அப்புறம், நா கள் எங்க தன்னோட கருத்துகளைச் சொன்னாலும் இந்த ஆ மக்களும் அங்க போயி சண்டை போடறது ஏன்? விவாதம் பண்ணலாம்.. சில விஷயங்களை ஏத்துக்கப் பிடிக்கலைன்னா தாண்டிப் போறது?.. நா களுக்கு அவங்க பார்வை.. 

இத்தன பேசறியே? நீ ஆ or நா வான்னு கேட்டா.. Its however I want.. :)

22 comments:

 1. சந்தூ ஒரு விஷயம் தெரியுமா 'க'வைப் பற்றி 'ஆ'க்கள் பேசுவதையும் யோசிப்பதையும் காட்டிலும் 'நா'க்கள் 'க'வைப் பற்றி சிந்திப்பதும் பேசுவதும் அதிகம். வால்மீகி "மராமரா" கதை தெரியும்ல அது போலத்தான் :)

  ReplyDelete
 2. //நா கள் எங்க தன்னோட கருத்துகளைச் சொன்னாலும் இந்த ஆ மக்களும் அங்க போயி சண்டை போடறது ஏன்? //

  அதேதான்.. சிலரைக் கண்டுக்காமப் போயிடணும்.. அதுதான் நல்லது.. நமக்கு!! இதுல வைஸ்-வெர்ஸாவும் உண்டு: ஆ-க்கள் கருத்துகளைக் கண்டாலே நாக்கள் குதிக்கிறதும் அப்படித்தான். அவங்கவங்க விருப்பம்.. அடுத்தவங்களைக் காயப்படுத்தாத அளவுல இருந்துக்கணும் அவ்வளவுதான்..

  என்னவோ போங்க, இந்த சாக்குல ஆ, நா -ன்னு மனுஷங்களை மாக்கள் லெவல்ல ஆக்கிட்டீங்க..

  அதுசரி, அது யாரு மு vs கோ ?? நிஜமாத் தெரியலைங்க!!

  ReplyDelete
 3. ;) ஒண்ணும் சொல்லல. ;)

  ReplyDelete
 4. முட்டை vs கோழி :) நன்றி ஹூசைனம்மா.. அதான் என்னுடைய ஆதங்கமும்.. தான் நம்பினாலும் நம்பாவிட்டாலும், பிறருடைய நம்பிக்கைகளை கடந்து போகத் தெரியனும்..

  ReplyDelete
 5. சந்தூஸ்! எது எப்படியோ .... மதங்கள். மத நம்பிக்கை/ நம்பிக்கையில்லாமை இதெயெல்லாம் தாண்டிய மனித நேயம் செழித்தால் இந்த உலகமே சேமமாக இருக்கும். whether I beleive in God or not I dont have time for this kind of argument :) anyway ...

  ReplyDelete
 6. கொஞ்சம் யோசிச்சுப் பாத்தா, அப்பிடித் தான் இருக்கும் போல :) நன்றி கவி..

  ReplyDelete
 7. //எனக்கு ஒரு விஷயம் புரியவேயில்ல.. ஆ களுக்கு சுயமரியாதை இல்லையா? அப்ப, வீட்டுல நாட்டுல பெரியவங்கள ஒருத்தன் மதிச்சா, அவனுக்கு சுயமரியாதை இல்லாம போயிடுமா? //

  இதை வெங்காயத்துக்கு பேர் போனவர்கிட்ட கேட்க வேண்டிய கேள்வி :))

  ReplyDelete
 8. காரசாரமான சுவையான கருத்துகளுக்கு நன்றி இமா :))

  ReplyDelete
 9. //சில விஷயங்களை ஏத்துக்கப் பிடிக்கலைன்னா தாண்டிப் போறது?//

  அப்படிப்போறதா இருந்தா எப்பவோ அவங்களும் நா வா மாறியிருப்பாங்களே!இது எல்லார்கிட்டயும் இருக்கிறதுதான் தனக்கு சொந்தமானவற்றை யாராவது கேலி பேசினால் எப்படி ஏத்துகிடமுடியும்?

  ReplyDelete
 10. இலா.. சரி தான், மனிதநேயம் தான் முக்கியம்.. அது செழிக்கறதுல கொஞ்சம் சிரமங்கள் இருக்கு, அதான் இப்பிடியெல்லாம் உரம் போட்டு வளர்க்கறாங்க போல :)

  நான் சின்ன வயசுல வாதம் பண்றவங்க பக்கத்துல இருந்து கேட்டதுண்டு.. இப்பவும் கடந்து தான் போறேன்.. விருப்பமிருந்தா இது சம்பந்தமா தேடித் படிக்கறேன்..

  ReplyDelete
 11. அவ்வ்வ்.. அவரு இருந்தப்போ நானில்ல.. நானிருக்கும் போது அவர் இல்ல.. அவருக்கு ஒரு நல்ல நோக்கம் இருந்தது.. அப்ப இருந்த சாதி ஏற்றதாழ்வு, தீண்டாமை - இது எல்லாத்துக்கும் எதிராகத் தான் போராடினார்..

  கேலி செஞ்சா கோபம் வர்றது இயல்பு தான்.. ஆனா சிலசமயம், வாதங்களைக் கூட ஏத்துக்க முடியாம சென்சிடிவ் ஆ இருக்கோம்ன்னு தோணுது..

  ReplyDelete
 12. நான் தவிர்க்க விரும்பும் டாபிக் இதே தான். ஆ பேசும் வலைப்பதிவர்களின் பக்கம் போய் அவர்கள் மனம் நோகாமல் கமென்ட் போடுவேன். அதேபோல் நா பேசும் வலைப்பதிவர்கள் பதிவும் படிப்பேன். முன்பு கொஞ்சம் நம்பிக்கை இருந்திச்சு. இப்ப சுத்தமா இல்லை. காரணம் இங்கு சொல்ல முடியவில்லை.

  ReplyDelete
 13. //காரசாரமான சுவையான கருத்துகளுக்கு நன்றி இமா :))// டொய்ங்.. எனக்கு வேணும். ;)

  என்னதான் வலுக்கட்டாயமாகப் பிடிச்சு இழுத்தாலும் இப்புடித்தான் காரசாரமில்லாம இருப்பேன். ;) 'தெகிரியமா' ஏதாச்சும் உளறிரக் கூடாதுல்ல. ;)

  ReplyDelete
 14. வாதங்கள் ஆரோகியமானதாக இருக்கும் போது தெளிவு கிடைக்கும். ஆனால் சிலர் வாதம் செய்கிறோம் என்ற பெயரில் ஆபாசமாக பேசுவதயும் தங்கள் கருத்துக்களை ஏற்காதவர்களை(ஆ வானாலும் சரி நா வானாலும் சரி) கேவலமாக விமரிசிப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என் வழி எனக்கு உன் வழி உனக்குன்னு யாருக்கும் தொல்லை தராமல் போனால் எல்லாருக்கும் நல்லது

  ReplyDelete
 15. எங்கேயாவது ஏதாவது நடந்துதா என்ன? :)
  எனிவேஸ்,நோ கமெண்ட்ஸ்! பிடிக்காத விஷயங்களை அமைதியா கடந்து போயிடணும்..இன்னொருவரின் நம்பிக்கையில் தலையிட நமக்கு உரிமையில்லை என்பதே எனது கருத்தும்.

  ReplyDelete
 16. என்னைப் பொருத்த வரை . ஒருத்தரோட நம்பிக்கையை கேலி செய்வது சரியில்லை. அதை விட அசிங்கமான முறையில் வாதம் செய்வது மனித இனத்திலேயே சேர்த்தி இல்லை..!! :-))

  ReplyDelete
 17. சரி தான் ஜெய்.. ஒருவரது நம்பிக்கையில் இன்னொருவருக்கு நம்பிக்கை இல்லையென்றால், இல்லை என்று சொல்லி அதற்கான காரணங்களைச் சொல்வதற்கும், கேலி செய்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.. என்ன செய்ய?

  ReplyDelete
 18. தனிப்பட்ட முறையில எதுவும் நடக்கல.. ஆனா எல்லா இடத்துலயும் நடக்குது.. :)

  அதே தான் மஹி. இன்னும் ஒன்னு - நம்பிக்கை இல்லாதவரிடத்திலும், நம்பிக்கை இல்லை என்பதற்காகவே அவரைத் தவறாகச் சொல்வதும் தவறு.. அதே மாதிரி, பிறருக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய நம்பிக்கைகளை களைவதற்காக மறுப்பு பிரச்சாரம் செய்வதும் தவறல்லன்னு தோணுது.. நன்றி..

  ReplyDelete
 19. சரியாகச் சொன்னீங்க கவி.. ஆனா, நிறைய பேருக்கு அடுத்தவங்க விஷயத்துல மூக்க நுழைச்சாத் தான் மூச்சே விட முடியும் போல :)

  ReplyDelete
 20. இமா.. அப்படி இருப்பதும் நன்றே.. ஏன்னா இது பொதுவெளி.. நாம் நல்ல எண்ணத்தில் சொன்னாலும், யார் எப்போது தவறாக நினைப்பார்கள் என்றே தெரியாது..

  ReplyDelete
 21. //வாதங்கள் ஆரோகியமானதாக இருக்கும் போது தெளிவு கிடைக்கும்// நான் சுஜாதாவோட புத்தகம் ஒன்று படித்து வர்றேன் கவி.. ரெண்டு பக்கமும் நின்று தேடியிருக்கிறார்.. இந்த மாதிரி ஒரு அலசல் இருந்தா, முடிவு எந்த பக்கம் இருந்தாலும் பிடிக்குது..

  ReplyDelete
 22. வான்ஸ்.. பிறர் மனம் நோகாமல் கருத்து சொல்லணும்ன்னு நினைக்கறதே ரொம்ப நல்ல விஷயம்.. நம்பிக்கை இல்லாட்டி என்ன? ஒன்னும் குறைஞ்சிடப் போவதில்லை.. நல்லதும் கெட்டதும் புரிஞ்சிருந்தாப் போதும் வாழ்வதற்கு.. தொடருங்க..

  ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)