10 November 2010

தோழியிருவர்..
தோற்றம் கண்டேன்
தென் மாநிலத்தவள்..

தமிழரென்றாள்..
உடனே ஒட்டினேன்..

உன் நாட்டில் பிறந்து
வெளி மாநிலமொன்றில் 
வளர்ந்தேன் என்றாள்
கொஞ்சம் விலகினேன்..

தமிழில் பேச விருப்பமென்றாள்
தட்டுத் தடுமாறிப் பேசினாள்
பிழை கண்டு சுளித்தேன்..
ஆங்கிலத்தில் பதிலுரைத்தேன்..
இன்னும் விலகினேன்..

புரிதல் தொடங்கிய நாளொன்றில்
அதுவரை நான் இட்டிருந்த 
மனவேலிகளைத் தாண்டி
பூத்தது எங்கள் நட்பு.. 


2

தோற்றம் கண்டேன்
தென் மாநிலத்தவள்..

தமிழரென்றாள்
உடனே ஒட்டினேன்..

"நீங்க எந்த ஊரு?
அட, ..... ஆ?
நானும் பக்கத்துல தான்" என்றாள்
இன்னும் ஒட்டினேன்..

வட்டார வழக்கில் பேசினாள்
நட்பை இறுக்கினேன்..

அடையாளங்கள் மெல்ல 
சுவாரசியமிழந்து,
உணர்வுத்திரை விலகி,
அவள் முகம் 
தெரியத் துவங்கிய
நாளொன்றில்..
துடித்து விலகினேன்..


இன்று

முதலாமானவளிடம்
அவளது தமிழில் பேசுகிறேன்..

இரண்டாம் ஆளிடம்..
பேசுவதேயில்லை.....

26 comments:

 1. பறவைகள் பலவிதம்.

  ReplyDelete
 2. ஆஹா நான் என் கதையை உங்ககிட்ட சொல்லவே இல்லையே! என் அனுபவத்தை அப்படியே வார்த்தைகளில் கொட்டியிருக்கீங்களே! எப்பூடீ?!

  மனிதர்கள் பலவிதம். அதனால் அனுபவங்களும் பலவிதம்.

  ReplyDelete
 3. ம்.. புரியுது.. அது சில சமயம் அப்படித்தான் ஆகிப்போவுது..

  ReplyDelete
 4. //இரண்டாம் ஆளிடம்..
  பேசுவதேயில்லை....//

  ஏன் கடன் எதுவும் கேக்குறாங்களா..?..!! :-))

  ReplyDelete
 5. கிட்ட வந்தால் முட்ட பகை :)

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 6. இதுபோன்ற பல அனுபவங்கள் எனக்கும் உண்டு :) ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானது!

  ReplyDelete
 7. We make frienships in the mot unexpected places and unexpected ways... The only thing is being open to good friendship.

  ReplyDelete
 8. ஆமாம் இமா.. நமக்கேத்த பறவையைப் பிடிப்பது தான் கடினம்.. birds of the same feather..

  ReplyDelete
 9. கவி.. உங்களுக்குமா.. கலக்குங்க.. விருப்பமிருந்தா பகிருங்க..

  ReplyDelete
 10. ஆமாம் ஹூசைனம்மா.. சில சமயம் அப்படித்தான்..

  ReplyDelete
 11. இல்ல, கொடுத்தத திருப்பி கேக்குறாங்க.. அவ்வ்வ்வ்வ்.. நன்றி ஜெய்லானி..

  ReplyDelete
 12. ஹைஷ்.. நீங்க சொல்லுவது சரி தான்.. பழகப் பழக பாலும் புளிக்கும் ம்பாங்க..

  ஆனா இந்த விஷயத்துல அதைச் சொல்ல வரலை.. நாம சில ஒத்த அடையாளங்கள முன்னிறுத்தி, மனிதர்கள் பால் ஈர்க்கப்படுறோம் அல்லது தள்ளிப் போறோம்.. எல்லா சமயத்திலும் அது சரியா வருவதில்ல..

  பகையும் இல்ல.. இன்னிக்கும் அந்த ரெண்டாவது தோழி அவங்களா தொலைபேசினா நானும் ரொம்ப நேரம் பேசுவேன்.. ஆனா நானா பேச விரும்பறதில்ல.. ஏன்னா பழைய ஒட்டுதல் இல்ல..

  ReplyDelete
 13. மீள்வருகைக்கு நன்றி ஹைஷ்..

  சொல்ல மறந்துட்டேன்.. ஜெய்லானி உங்கள பத்தி ஏதோ புகைஞ்சு வச்சிருக்காப்ல, அவரோட புதிய சந்தேகத்துல.. பத்த வச்சுட்டு எஸ் ஆயிடறேன்..

  ReplyDelete
 14. அஸ்மா.. வாங்க வாங்க.. நல்வரவு.. எப்பிடி இருக்கீங்க?

  உங்களுக்குமா? ம்ம்ம்.. நிறைய பேர் இப்பிடிப் படறோம் போல..

  ReplyDelete
 15. இலா.. அங்க தான பிரச்சனையே.. இப்ப ஒரு வெள்ளைக்காரர் ன்னா, கொஞ்சம் தள்ளியே தான் ஆரம்பிக்குது நட்பு.. அதே ஒரு இந்தியரா இருந்தா, உடனே பத்திக்குது.. இது மாறனும்.. நன்றி..

  ReplyDelete
 16. ஹைஷ் அண்ணா சொன்ன பழமொழி கரெக்ட்.:)

  ReplyDelete
 17. பீல் பண்ணி எழுதியிருக்கீங்க போல...

  ReplyDelete
 18. என்னத்தை சொல்ல? ஒரே அலைவரிசை நட்பு அமைவது கஷ்டம்.

  ReplyDelete
 19. ||உணர்வுத்திரை விலகி||


  உணர்வால் நெய்யப்படும் திரைத் துணி பல சமயம் சாயம் வெளுத்து, ஒரு கட்டத்தில் கிழிந்தும் தொங்கும்

  ReplyDelete
 20. மஹி.. அவ்வவ்.. அப்ப அவருக்குப் போட்ட பின்னூட்டமே உங்களுக்கும் :)

  ReplyDelete
 21. பீலிங்க்ஸ் இருந்ததுங்க.. அதாச்சு நாலஞ்சு மாசம்.. அதெல்லாம் கடந்து வந்தாச்சு.. இதை எழுதறப்ப neutral ஆன மனநிலையில தான் எழுதினேன்.. நான் சொல்ல வந்தது, உறவுகள் அடையாளங்களை முன்னிறுத்தி தொடங்கப்படுவதைத் தான்.. நன்றி பிரபா..

  ReplyDelete
 22. ஆமாம் வானதி.. அலைவரிசை ஒத்துப் போனா பழகறது எளிதாக இருக்கு..

  ReplyDelete
 23. நன்றிங்க கதிர்.. சரி தான்.. சில சமயம் கிழிந்தததை ஒட்டுப் போட முடியுது.. சில சமயம் முடியறதில்ல.. ம்ம்..

  ReplyDelete
 24. //சொல்ல மறந்துட்டேன்.. ஜெய்லானி உங்கள பத்தி ஏதோ புகைஞ்சு வச்சிருக்காப்ல, அவரோட புதிய சந்தேகத்துல.. பத்த வச்சுட்டு எஸ் ஆயிடறேன்..//

  இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் உடம்பு ஏற்கனவே ரணகளமா இருக்கு இதுல வெர இன்னென்னாஆஆஆ ( நா என்னையதான் சொன்னேன் ))

  ReplyDelete
 25. நட்பில் ஈகோ பார்பதால்தான் இது மாதிரி வருது. என்னதான் சொன்னாலும் ஒரு கட்டத்தில் உடைந்த கண்ணாடி மாதிரி என்னதான் ஒட்டினாலும் இரெண்டு வியூ வருவதை மறுப்பதுகில்லை..!! :-))

  ReplyDelete
 26. ஆமாம் ஜெய்.. ஈகோவும் சிலரின் நட்புகள் உடைய ஒரு காரணம்.. ஆனால் இந்தக் கதையில் காரணம் அதுவல்ல..

  என் தோழியும் (இன்னொரு) நீங்க சொன்னதைப் போன்று தான் சொன்னார் - friendship is like a china dish என்று.. உடைந்தால், ஒட்டுப் போடலாம்.. ஆனால் முன்பிருந்ததைப் போன்று வராது என்று..

  அதூஊஊ.. ரணகளத்த போர்க்களமா மாத்தலாம்ன்னு தான் :))

  ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)