16 October 2010

இலக்கை மீறிய பயணம்...



பிரபஞ்சவெளியில்
உயிர்த்தெழும்பியிருந்த
ரோஜாவின் மேற்
பனித்துகள்கள் அகற்றி
அதன் ஒற்றையிதழ் உதிர்த்து
முகர்ந்து சுவாசித்த வேளையில்
என்னருகில் மிதந்துவந்த
நிலவின் மீதேறி,
தேடித்திரிந்து கண்டெடுத்த கல்லில்
என்னவளின் நிழலைச்
செதுக்கி முடித்தபொழுது
வந்த பெரும் பிரளயத்தில்
அடித்துச் செல்லப்பட்டு
எதுவுமற்ற பல
வெளிகளைக் கடந்து
கொடியொன்றினைப் பற்றி
கரை சேர்ந்திருந்த
 'நான்'
அங்கு தியானித்துக் கொண்டிருந்த
ஜென் துறவி யொருவரின்
மூச்சில் உள்ளிழுக்கப்பட்டு
செந்நிறத்துச் சிறு
உலகமொன்றின் உதவிகொண்டு,
பிணைந்திருந்த ஏணிகளை
எட்டிப்பிடித்து அவைகளை
இணைத்திருந்த தொரு
கம்பியின் அங்கமாகி
யுகங்கள் சில காத்திருந்து
பின் வெளிப்பட்டதொரு நாளில்
மண்ணில் விழுந்து
முளைத்து வளர்ந்து
பூத்து ரோஜாவானேன்..

26 comments:

  1. நேத்து வரைக்கும் நல்லாத்தானே இருந்த சந்து? என்னாச்சு இன்னைக்கு உனக்கு?

    அதொன்னுமில்ல. இன்னைக்கு காலைல வெளிய போறப்ப எதிர்த்த வீட்டு தோட்டத்துல ஒரு ரோஜா புதுசா பூத்து இருந்துச்சு.. நேத்து பேஞ்ச மழைல நனைஞ்சு ரொம்ப அழகா இருந்தது.. அதைய பாத்துட்டே கொஞ்சம் நேரம் நின்னேன்..

    அது சரி, ரோஜாவுக்கு ஒன்னும் ஆகிடல தானே?

    ReplyDelete
  2. அய்யய்யோ யாராச்சும் காப்பாத்துங்களேன் என்னை!

    ReplyDelete
  3. சத்தியமா புரியலை சந்து.. இதோட 5 முற வாசிச்சுட்டேன்!

    ReplyDelete
  4. எனக்கு இப்பிடியெல்லாம் கனவு வரும். ;)
    அப்பிடி சந்துவுக்கும் வந்து, அது கவிதை வடிவம் பெற்றதோ என்று நினைத்தேன். ;)

    ReplyDelete
  5. தனக்குத் தானே முதல் பின்னூட்டம் போட்டுக்கறது பூங்கதிர்த்தேசத்தார் ஃபாஷனா!!

    ReplyDelete
  6. //“என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)//

    இந்த கவிதைக்கு அர்த்தம் என்னதுன்னு சொன்னா கொஞ்சம் தேவலாம் :-)

    ReplyDelete
  7. //இன்னைக்கு காலைல வெளிய போறப்ப எதிர்த்த வீட்டு தோட்டத்துல ஒரு ரோஜா புதுசா பூத்து இருந்துச்சு.. நேத்து பேஞ்ச மழைல நனைஞ்சு ரொம்ப அழகா இருந்தது.. அதைய பாத்துட்டே கொஞ்சம் நேரம் நின்னேன்..//

    இனிமே நேராவே போய்டுங்க ..!! அதான் எங்களுக்கு நல்லது..ஹி..ஹி..

    ReplyDelete
  8. சூப்பர்! வித்தியாசமாக இருந்தது!

    ReplyDelete
  9. சந்தூ, இப்படி அடுத்தவன் வீட்டு ரோஜாவை பார்த்து கவிதை பாடாமல் சொந்தமா ஒரு செடி வைங்க. சும்மா கவிதை பிச்சிட்டு வரும்.


    //இனிமே நேராவே போய்டுங்க ..!! அதான் எங்களுக்கு நல்லது//
    ஹாஹா

    ReplyDelete
  10. எதோ ஒரு எலெக்ட்ரிக் நிமிடத்தில எழுதியதா சந்தூஸ்! நல்ல கற்பனை வளம்~~~
    பின்னூட்டங்கள் வெறி வெறி நைஸ் :))

    ReplyDelete
  11. ஒண்ணுமே புரியலையே பூங்கதிர் தேசத்துல!! :-((

    //சந்தூ, இப்படி அடுத்தவன் வீட்டு ரோஜாவை பார்த்து கவிதை பாடாமல் சொந்தமா ஒரு செடி வைங்க.//

    அடுத்த வீட்டு ரோஜாவுக்கே இந்தக் கதியானேன் நான்!! சொந்தமா வச்சா, இந்தப் பக்கமே தலைவைக்கமுடியாதபடி ஆகிடப்போவுது வானதி!! ;-)))

    ReplyDelete
  12. மலர்வதும்

    காட்சியை
    நுகர்வதும்

    நுகர்ந்த்பின்
    நினைவுகளாய்
    ஆக்குவதும்

    ஆக்கிய நினைவுகள்
    பூப்பதும்

    மலர்ந்ததின்
    பலனே!!

    ReplyDelete
  13. வாவ் கிரேட்! சூப்பர் கவிதை! எதிர்வீட்டு ரோஜாவுக்கே இப்படி கற்பனையா?! (கவி புரியலைனு ஓப்பனா ஒத்துக்காதே அப்புறம் நீ ஞான சூனியம்னு உண்மையை கண்டு புடிச்சிடுவாங்கோ எஸ்கேப் ஆயிடு!)

    ReplyDelete
  14. நன்றி மக்கள்ஸ்.. இதை எப்படி எழுதினேன்னு மட்டும் சொல்லிட்டுப் போயிடறேன். மீதி பின்னூட்டங்கள் பிறகு.. கல்லடி சொல்லடி தாங்க முடியல :))

    இது ஒரு பிக்ஷன் கவிதை.. முதல் பாதி பிசிக்ஸ்.. ரெண்டாவது பாதி பயாலஜி.. கொஞ்சம் கற்பனை இடையிடையே..

    ஒரு அணு அல்லது உயிர் அல்லது ஆற்றலோட பயணம் மாதிரின்னு வச்சுக்கோங்களேன்..

    முதல்ல வர்ற ரோஜாப்பூ ஒரு நெபுலா.. தகவலுக்கு இங்க பாருங்க.. (நானும் இன்னும் எல்லாத்தையும் படிக்கல)

    http://www.spacetelescope.org/news/heic0210/
    http://en.wikipedia.org/wiki/Nebula

    அங்க ஏற்படற ஒரு பிரளயத்தால (பெரும் வெடிப்பு) பிரபஞ்சத்தோட பல வெளிகளைக் கடந்து பூமிக்கு வந்து சேருது.. மூச்சுக் காற்றோட கலந்து நுரையீரல் உள்ளே போகுது..

    //செந்நிறத்துச் சிறு உலகமொன்றின்//

    இது நம்ம ரத்தத்துல இருக்கற சிவப்பணு.. நுரையீரல்ல இருந்து மத்த செல் களுக்கு ஆக்சிஜன் கொண்டு போறது..

    //பிணைந்திருந்த ஏணிகளை
    எட்டிப்பிடித்து அவைகளை
    இணைத்திருந்த தொரு
    கம்பியின் அங்கமாகி//

    இது நம்ம டி என் ஏ வோட அமைப்பு.. படத்துக்கும் தகவலுக்கும் இங்க பாருங்க..

    http://en.wikipedia.org/wiki/DNA

    அதாவது, டி என் ஏ வோட ஓர் அங்கமாகி,
    //யுகங்கள் சில காத்திருந்து// சுழற்சிகள் பல கண்டு, இறுதியாக ஒரு ரோஜாப்பூவோட (இது நம்ம ரோஜாப்பூ) ஒரு கூறா அல்லது உயிரா ஆகுது..

    ReplyDelete
  15. எனக்கு கொஞ்சமா தெரிஞ்சிருக்கற ரெண்டு மூணு விஷயங்களை இணைச்சிருக்கேன்.. அவ்வளவு தான்..

    நிலவுல நிழல் செதுக்கறது, ஜென் துறவி இதெல்லாம் கற்பனைக்காக சேர்த்தது..

    ReplyDelete
  16. //கொஞ்சமா தெரிஞ்சிருக்கற// ம். நம்பறோம், நம்பறோம். கிக் கிக்
    பெரீய சயன்டிஸ்ட் மாதிரி தெரியுதே!

    ReplyDelete
  17. வார்த்தைகள் நல்லாவே வளைந்து குடுக்குது சந்தனாவின் பேனாவுக்கு. நல்லா இருக்கு சந்தனா! :)

    ReplyDelete
  18. இப்ப யாருங்க மஹி பேனால கவிதை எழுதுறாங்க? எல்லாம் கீபோர்ட்தான். ஒவ்வொருத்தர் கீ போர்ட்லயே வெந்தய தோசை சுட்டுப் பரிமாறிருறாங்க. ;))

    ReplyDelete
  19. //முதல் பாதி பிசிக்ஸ்.. ரெண்டாவது பாதி பயாலஜி.. //

    ஓ நீங்கல்லாம் ஃபர்ஸ்ட் குரூப்புன்னு ப்ரூஃப் பண்ணுறீகளோ?

    ReplyDelete
  20. இது ஒரு பிக்ஷன் கவிதை.. //

    ரைட்டு

    இலக்கியவாதி சந்தனா!

    ReplyDelete
  21. ////செந்நிறத்துச் சிறு உலகமொன்றின்//

    இது நம்ம ரத்தத்துல இருக்கற சிவப்பணு.. நுரையீரல்ல இருந்து மத்த செல் களுக்கு ஆக்சிஜன் கொண்டு போறது..//

    என்னோட ப்ளஸ்டூ ஜூவாலஜி வாத்தியார் என் கையில கிடச்சாரு அம்புட்டுத்தேன் !

    எவ்ளோ அழகா சொல்லியிருக்கீங்க நீங்க ஆவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  22. ////பிணைந்திருந்த ஏணிகளை
    எட்டிப்பிடித்து அவைகளை
    இணைத்திருந்த தொரு
    கம்பியின் அங்கமாகி////

    சந்தூ பெரிய கவிஞராகிட்டீங்க! வாழ்த்துகள்!

    ReplyDelete
  23. //முதல் பாதி பிசிக்ஸ்.. ரெண்டாவது பாதி பயாலஜி.. கொஞ்சம் கற்பனை இடையிடையே.. //

    எனக்கு அந்த குருப் படிச்சதே மறந்துப்போச்சே..!!
    அவ்வ்வ்

    //இது நம்ம ரத்தத்துல இருக்கற சிவப்பணு.. நுரையீரல்ல இருந்து மத்த செல் களுக்கு ஆக்சிஜன் கொண்டு போறது //

    யக்காவ் சிவப்பணு வரது கல்லீரலுங்கோவ்..!!

    ReplyDelete
  24. //முதல்ல வர்ற ரோஜாப்பூ ஒரு நெபுலா.. தகவலுக்கு இங்க பாருங்க.. (நானும் இன்னும் எல்லாத்தையும் படிக்கல)//

    நானும் எதுவும் படிக்கல ஹி..ஹி...

    ReplyDelete
  25. //நன்றி மக்கள்ஸ்.. இதை எப்படி எழுதினேன்னு மட்டும் சொல்லிட்டுப் போயிடறேன். மீதி பின்னூட்டங்கள் பிறகு.. //

    விளக்கத்தை விட கவிதையே பரவாயில்லைங்க ..!! கொஞ்சமா புரியுது ஹா..ஹா.. :-))

    //கல்லடி சொல்லடி தாங்க முடியல :)) //

    நல்ல வேளை பூசார் இல்லை , இருந்திருந்தால் கூட்டணி கலாய்தல் ஓவரா இருந்திருக்கும் :-((

    ReplyDelete
  26. //இது நம்ம ரத்தத்துல இருக்கற சிவப்பணு.. நுரையீரல்ல இருந்து மத்த செல் களுக்கு ஆக்சிஜன் கொண்டு போறது//

    JAI - WHAT I WROTE IS CORRECT.. RBCs CARRY OXYGEN FROM LUNGS TO CELLS..

    //யக்காவ் சிவப்பணு வரது கல்லீரலுங்கோவ்..!! //

    THIS IS WHERE THEY ARE FORMED IN BABY LIFE..

    MEETHI PINNOOTTAM - INNIKKU SAAYANDHIRAM VAREN..

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)