10 March 2010

ச்ச.. இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்.. (மகளிர் தின ஸ்பெஷல் அல்ல)

ஒருத்தரில்ல.. நூறு பேரும் இல்ல.. நண்பர்கள் கொஞ்சம் பேர் அடிக்கடிச் சொல்லி புலம்புற தலைப்பு இது.. அதாவது இவங்கள பொண்ணுங்க எல்லாம் யூஸ் பண்ணி த்ரோ பண்ணிட்டுப் போகுதுங்களாம்.. இவிங்க எங்க என்ன பேச ஆரம்பிச்சாலும் வந்து முடியற வாக்கியம் இதுவாத்தான் இருக்கும் - ”ச்ச இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்”.. வேறொன்னுமில்ல.. திரும்பத்திரும்ப பல்பு வாங்கின அயர்ச்சி.. பல்புக் கத ரொம்ப சிம்பிள்.. ஆனா அதப்பத்தி எதுவும் சொல்லப் போறதில்ல.. ப்ரைவசி.. எல்லா பல்புக்கும் பொதுவான ஃப்யூஸ மட்டும் பார்ப்போம்..

பிரச்சனை என்னன்னா -  இவங்க எல்லாருமே நல்ல கலா ரசிகர்கள்.. அதாவது, அழகான பொண்ண எங்க பார்த்தாலும் இவங்களுக்கு மூக்கு வேர்க்க ஆரம்பிச்சிடும்.. நாம தொடர்ந்து கண்ண விரிச்சு வச்சுப் பாத்துகிட்டு இருக்கற அந்தப் பொண்ணு ஒரு நொடியாவது நம்மள பார்ப்பாளான்னு ஆரம்பிக்கற இவங்களோட எதிர்பார்ப்பு  கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகி பேச மாட்டாளா வெளிய வர மாட்டாளான்னு வளர்ந்துகிட்டே போகும்.. இதுல அப்பப்ப இவங்களுக்கு சின்னச்சின்னதா வெற்றியுங் கிடைச்சிடும்.. இதுவரைக்கும் ஓகே.. ஆனா இதுக்கப்புறம், அவ நம்மள ”டொண்டடொய்ன்” அதாங்க லவ்வு பண்ணுவாளான்னோ இல்ல பண்ணிட்டு இருக்காளான்னோ நினைக்க ஆரம்பிச்சிடுறாங்க..

அட, இவங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்ச பொண்ணு.. இல்ல கூட வேல பாக்கற பொண்ணுன்னா கூட பரவாயில்லங்க.. நம்ம தமிழ் சினிமா கதாநாயகர்கள் ரேஞ்சுல பஸ்ஸுல எதிர்படற பொண்ணு, ஐஸ்கிரீம் கடையில வேல பாக்கற பொண்ணு.. இப்படிப் பல பேர்.. ஒரே ஒரு க்ரைட்டீரியா தான் - பொண்ணு அழகா இருக்கோனும்.. அவ்வளவு தான்.. இவங்களே ஐஸ்கிரீமா உருக ஆரம்பிச்சிடுவாங்க.. ஆனா இந்த மாதிரிப் பொண்ணுங்க எல்லாம் இவங்கள ஏறெடுத்தும் கூட பார்க்க மாட்டாங்கன்றதால அவ்வளவாப் பிரச்சனை இல்ல..

அப்ப என்ன தாஆஆஆஆஆஆன் பிரச்சனைன்றீங்களா? அடிக்கடி இவங்க சந்திக்கக்கூடிய நிலைமைல இருக்கற பொண்ணுங்க.. உதாரணத்துக்கு - கூட வேல பாக்கற பொண்ணு அழகா மட்டும் இருந்துடுச்சுன்னு வச்சுக்கோங்களேன்.. இந்தப் பொண்ணுங்கள இம்ப்ரஸ் பண்ணறதுக்காக காப்பி வாங்கிக் கொடுக்கறதுலயிருந்து அவங்கள வீடு வரைக்கும் கூடவே வந்து ட்ராப் பண்ணிட்டுப் போற பாடிகார்ட் வேல, அது மட்டுமா.. அந்தப் புள்ளைங்க வளர்க்கற நாய்க்குட்டி பூனக்குட்டியக் கொஞ்சற வேல வரைக்கும் விழுந்து விழுந்து கவனிப்பாங்க.. அந்தப் பொண்ணு தனக்கேத்த பொண்ணா.. திருமண பந்தத்துக்கு ஒத்து வருமா அப்படின்னெல்லாம் தோனவே தோனாது.. அட்லீஸ்ட் அந்தப் பொண்ணு நம்மள திருப்பியும் லவ் பண்ணுவாளான்னு யோசிக்கக் கூட தோனாது.. தங்களோட முயற்சிகள் மேல அவ்வளவு நம்பிக்கை..

இத்தனைக்கும் இவங்க சும்மா சுத்திட்டு விட்டுட்டுப் போற பசங்களும் கிடையாது..  சின்சியராத்தான் ட்ரை பண்ணுவாங்க.. ஆனா செலக்‌ஷன் மட்டும் சட்டுசட்டுன்னு பண்ணிடுவாங்க.. அந்தப் பொண்ணுங்களுக்கென்ன.. எவனாவது இ வா இந்த மாதிரி தானே வந்து விழுந்து எல்லா வேலயும் பண்ணித் தந்தா வேண்டாம்ன்னா சொல்லுவாங்க - used.. அப்புறம் நம்ம பசங்க தன் மனச வெளிப்படுத்தினவுடனே - thrown... ஒன்னு ரெண்டு தப்பான்னா அந்தப் பொண்ணுங்கள தப்பு சொல்லலாம்.... தொடர்ந்து தப்பாயிக்கிட்டே இருந்து... அதுல தன்னோட தப்ப உணராம எவளாவது உக்காந்து கத கேக்கக் கெடச்சா சொல்லிப் புலம்புவாங்க பாருங்க.. ச்ச இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்னு... அப்பத்தான் கடியாவுது..

ச்ச.. இந்தப் பசங்களே இப்படித்தான்.. (ஆரும் கோச்சுகிட்டு திட்டிப் போடாதீங்கப்பு.. ஜஸ்ட் ஒரு கடைசிவரிப் பன்ச்.. அம்புட்டுத்தேன்)..

18 comments:

 1. //இவங்க எல்லாருமே நல்ல கலா ரசிகர்கள்..// நாங்களும்தான். அதனால்தான் சந்தூஸ் போடற இடுகை எல்லாம் விடாம படிச்சு முடிக்கறோம்.;)

  ReplyDelete
 2. என்னதான் சொல்ல வர்றீங்க கடசியிலே? பசங்க, பொண்ணு எல்லாம் ஒரே மாதிரின்னா? ;-))

  ReplyDelete
 3. இருந்தாலும் உங்க கலா ரசனை இவ்வளவு மேன்மையானதா இருக்குன்னு நீங்களே சொல்லிக்கிட்டு சுத்தக் கூடாது.. :)

  பூ பத்தி.. தனியாவே எழுதலாம்.. எழுதறேன்..

  ReplyDelete
 4. ஹி ஹி.. நாம தான் மகளிர் அணியாச்சே.. அதனால “இந்தப் பசங்களே இப்படித் தான்”.. :)

  ReplyDelete
 5. // எல் போர்ட்.. பீ சீரியஸ்..

  ஹி ஹி.. நாம தான் மகளிர் அணியாச்சே.. அதனால “இந்தப் பசங்களே இப்படித் தான்”.. :)//

  சந்துவை வழிமொழிகிறேன் :-)

  ReplyDelete
 6. ஆக பொண்ணூங்களே எப்படித்தான் எல்போட்..

  /ப்ரொஃபைல் போட்டோ பாத்து தெரிஞ்சுக்கோங்க.. நான் எவ்வளவு சீரியசான சிந்தனைவாதின்னு... :)) இது போதுமா இல்ல இன்னும் கொஞ்சம் வேனுமா?//

  தெரிஞ்சிகின்னாச்சி ஹி ஹி ஹி..

  வாங்க வாங்க....

  ReplyDelete
 7. Under Construction பூங்கதிர் தேசம் ஆனதுக்கு வாழ்த்துகள்...

  ஹலோ.. என்ன பேசுறீங்க?.. பசங்க.. பொண்ணுங்க.. ஒண்ணும் காதுல விழ மாட்டேங்குதே.. ஹலோ... ஹலோ...

  ச்சே இந்த பொண்ணுங்களே இப்பிடித்தாம்பா..

  ReplyDelete
 8. /பொண்ணு அழகா இருக்கோனும்.. அவ்வளவு தான்.. இவங்களே ஐஸ்கிரீமா உருக ஆரம்பிச்சிடுவாங்க../ நல்ல கவனிப்பு & எழுத்து நடை!:)

  /ச்ச.. இந்தப் பசங்களே இப்படித்தான்../ ரிப்பீட்டு! :):D

  ReplyDelete
 9. ஹி ஹி.. ஆதரவுக்கு நன்றி கவிசிவா..

  வாங்க மலிக்கா.. ஹி ஹி யப் பாத்து மட்டும் முடிவு பண்ணிடாதீங்க.. எல் போர்ட் அப்பப்போ யோசிச்சும் வண்டியோட்டும்..

  வாழ்த்துக்கு நன்றி முகிலன்.. ஊரே கேக்கற மாதிரி உரக்கக் கத்துனாலும் காதுல விழாத மாதிரி.. ச்ச இந்தப் பசங்களே இப்படித் தான்..

  நன்றி மஹி.. ஹி ஹி.. இதுல கவனிக்கறதுக்கு ஒன்னுமே இல்ல.. ஐஸ்கிரீம் கடப் பொண்ணு நல்லாயிருக்குன்ற ஒரே காரணத்துக்காக தெனமும் இவனுங்க கூடப் நானும் கெளம்பிப் போயி.. அந்த வழிசல எல்லாம் கண்ணால பாத்து.. காதால கேட்டு.. அந்த அனுபவந்தான்.. உங்க ஆதரவுக்கும் நன்றி..

  ReplyDelete
 10. சந்தனா, இந்த பதிவை படித்து முடித்ததும் அந்த காலத்திற்கே( எனக்கு ஒன்றும் அப்படி வயசாகவில்லை)போய்விட்டேன். ம்ம்...... மலரும் நினைவுகள்!!!!

  ReplyDelete
 11. சந்து... சினிமாவுக்கு கதை எழுதப்போறீங்களோ? உங்களுக்கு நல்லாவே எழுத வருது... கீப் இட் மேல... ஆனா பார்த்து... எப்பவுமே எங்கட:) சைட்தான் கொஞ்சம் மேல இருக்கிறமாதிரி பார்த்துக்கொள்ளவேணும் ஓக்கை?:).

  ReplyDelete
 12. ஹா.. ஹா.. சீக்கிரம் மீண்டு வாங்கோ வானதி.. அங்கேயே வச்சு டைம் மெஷின யாராவது ஆஃப் பண்ணிடப் போறாங்கோ..

  அதீஸ்.. இதென்னது.. பெரிய பெரிய வார்த்தையெல்லாஞ் சொல்லிட்டு.. :)) கண்டிப்பா கொஞ்சம் மேல வச்சுடலாம்.. ஹி ஹி..

  ReplyDelete
 13. //இவங்க எல்லாருமே நல்ல கலா ரசிகர்கள்..
  //இவங்க சும்மா சுத்திட்டு விட்டுட்டுப் போற பசங்களும் கிடையாது.. சின்சியராத்தான் ட்ரை பண்ணுவாங்க.. ஆனா செலக்‌ஷன் மட்டும் சட்டுசட்டுன்னு பண்ணிடுவாங்க..
  *******************************************************************************************************
  ஜீனோ கண்ணுக்குள்ள வெளக்கென்ன விட்டு தேடியதில ஆப்பட்ட பாயிண்ட்டு ரெண்டே ரெண்டு!! போனா போவட்டும், எங்களப் பத்தி கரீக்ட்டா புரிஞ்சு வைச்சிருக்கிங்கன்னு உட்டுடரம்!

  வர வர உங்க ரவுசு தாங்க முடீல எல்ஸூ! கர்ர்ர்...ர்ர்ர்..ர்ர்ர்..கிர்ர்ர்...குர்ர்..ர்ர்ர்..ர்ர்!

  கீப் இட் மேல... ஆனா பார்த்து... எப்பவுமே எங்கட:) ~~~~கண்டிப்பா கொஞ்சம் மேல வச்சுடலாம்.. ஹி ஹி..
  கர்ர்ர்...ர்ர்ர்..ர்ர்ர்..கிர்ர்ர்...குர்ர்..ர்ர்ர்..ர்ர்!கர்ர்ர்...ர்ர்ர்..ர்ர்ர்..கிர்ர்ர்...குர்ர்..ர்ர்ர்..ர்ர்!கர்ர்ர்...ர்ர்ர்..ர்ர்ர்..கிர்ர்ர்...குர்ர்..ர்ர்ர்..ர்ர்!

  அங்கன வந்து பாருங்கோ..டிட் பார் தட்டூ...ஹா..ஹா!!
  *********************************************************************************************************

  ReplyDelete
 14. அட.. நம்ம ஜீன்ஸ் அண்ணன்.. வேல பண்ணிப் பண்ணி களச்சு இளச்சு அப்படியே காத்துல காணாம போயிட்டீங்கன்னுல்ல நினைச்சிருந்தோம்.. இன்னமும் இருக்கீங்களா? குறட்டச் சத்தம் இம்புட்டு பயங்கரமாயிருக்கே? டோரா எப்படித் தூங்கும்?

  ஹி ஹி.. டோராக்கு ரொம்ப நல்ல மனசு ஜீன்ஸ் அண்ணே.. குப்பையில தூக்கிப் போடாம இன்னமும் உங்கள கூடவே வச்சிருக்கு :))

  ReplyDelete
 15. எதுக்குக் கொபிக்கணும்.. சரியாத்தான சொல்லி இருக்கீங்க..?

  நன்றி..

  ReplyDelete
 16. idhu romba overa theriyala.......
  1 2 3 4 5 6 muchnga.......
  enna mathiri nalla pasanga itha padicha avanga manasu enna paadu padum.....?????

  ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)