சரி பொன்னுத்தாயி.. நாங்க கிளம்பறோம்.. நேரமாச்சு.. போயித் தூங்கோனும்.. குட்டிப் பையா.. டாட்டா.. போயிட்டு வரோம்ங்க.. நீங்களும் முடியும் போது அங்க ஒரு நட வாங்க..
இரு இரு.. ஒரு நிமிஷம் நில்லு..
என்ன??
இந்தா.. பிரியாணி கொஞ்சம், குழம்பு கொஞ்சம் எடுத்துட்டுப் போ..
இல்ல.. வேண்டாம்..
அட உங்க சொந்தக்காரர் வந்திருக்கார்ன்னு சொன்னல்ல.. அவருக்கு கொடு..
இல்ல நீங்க ராத்திரிக்கு சாப்பிடுங்க..
எங்களுக்கு நிறைய இருக்கு.. ஒரே நிமிஷம்.. பேக் பண்ணித் தந்துடறேன்...
ம்ம்.. ரொம்ப நன்றி..
-------------------------------------------------------------------------------------------------------------
யப்பா.. ஒரு வழியா வீடு வந்தாச்சு.. செரியான மழ!!
இனிமே இந்த மாதிரி மழைல எல்லாம் கார்ல லாங்ட்ரைவ் போவக்கூடாது..
ம்ம்.. ஆமா.. என்ன இன்னைக்கு அபார்ட்மெண்ட் ஒரே இருட்டா இருக்கு?
ஓ.. ச்ச.. கரண்ட் போயிடுச்சு..
என்னது? அப்படி கூட நடக்குமா இங்க?
பின்ன? மழ பேயுது.. எல்லா வீடும் இருட்டாயிருக்கு? நிறைய பேர் வெளிய கிளம்பி போயிட்டு இருக்கற மாதிரி இருக்கு..
இல்ல.. அங்க கம்பத்துல லைட் எல்லாம் எரியுதே?
அது வேற கனெக்ஷன் போல..
பாரு.. கேரேஜ் ல கூட லைட் இல்ல.. நிறைய இடம் காலியாக்கிடக்கு.. எல்லாரும் வேறயெங்கயாவது போறாங்க போல..
காத்து இந்த அடி அடிக்குது.. மரங்கிரம் மேல சாஞ்சுடப் போவுது.. சீக்கிரமா வா..
-------------------------------------------------------------------------------------------------------------
கதவைத் தட்டியதும் வந்து திறந்து விடுகிறார் சுப்பரமணியண்ணன்..
அப்பாடி வந்துட்டீங்களா?
அப்ப நெசமாலுமே வீட்டுல கரண்ட் இல்ல..
நீங்க வர்ற வரைக்கும் என்ன பண்றதுன்னு தெரியல.. அதான் நானே உருள சப்ஜி பண்ணிட்டேன்.. பாதி பண்ணிட்டு இருக்கும் போது கரன்ட் போயிடுச்சு..
என்ன செய்ய? என்ன செய்ய? என்ன செய்ய? என்ன செய்ய????????????
ஆமா.. ஏதாவது டார்ச் லைட் இருக்கா?
இல்லன்னு தான் நினைக்கறேன்..
இல்ல.. இருந்துச்சு.. அதுவும் கைக்கெட்டறா மாதிரி முன்னாடியே தான் செல்ஃபுல வச்சிருந்தேன்..
உங்க செல்ல ஆன் பண்ணுங்க அண்ணே.. பாப்போம்..
அப்பாடி கிடைச்சிடுச்சு..
மெழுகுவர்த்தி ஏதாச்சும் இருக்கா?
ம்ஹூம்..
அட நாளைக்கு காலைல நான் கெளம்போனுமப்பா.. ப்ளைட் ஸ்டேட்டஸ் பாக்கனும்..
பாக்கலாம்.. ஆ.. கரண்ட் இல்லன்னா இண்டர்னெட் வேல பண்ணாதே..
ஆஃபீஸ் ஐ டச் ல பாக்க முடியுமா?
இல்ல அதுக்கும் இங்கத்த நெட்வர்க் வேணும்..
நான் என்னோட ப்ரெசெண்டேசன் இன்னைக்கு முடிச்சி அனுப்பனுமே.. ஆஆஆஆ.. என் லேப்டாப்புல சுத்தமா சார்ஜ் இல்ல.. என்ன பண்ண?
அடுப்ப அணைங்க.. தீஞ்சுடப் போவுது..
அடுப்ப ஆஃப் பண்ணிடாத.. மறுபடியும் ஆன் ஆவாது..
ஏன்... இது கேஸ் அடுப்பு தான்.. கரண்ட் அடுப்பு இல்ல..
ஆமா.. ஆனா அது ஆன் ஆவறதுக்கும் கரண்ட் வேணும் போல???
அப்படியா? எங்க நான் பாக்கறேன்.. அட ஆமா.. ஆனாவ மாட்டீங்குது.. கொடுமடா சாமீ.. இருங்க எப்பவோ ஒருக்கா வாங்குன அடுப்பு லைட்டர் ஒன்னிருக்குது.. அத ஒருக்கா டெஸ்ட் பண்ணிப் பாத்துடலாம்..
ம்ம்.. இத பத்து வாட்டி க்ளிக் பண்ணினா ஒரு வாட்டி பத்துது..
சரி சரி.. அப்ப அது போதும்..
நீங்க சமைச்சத விடுங்கண்ணே.. காத்தாலைக்கு பாத்துக்கலாம்.. எம் ஃப்ரெண்டு சாப்பாடு கொடுத்தனுப்பியிருக்கா உங்களுக்கு.. இருங்க ஒரு நிமிஷம் சூடு பண்ணியாறேன்.. அடக்கொடுமையே.. மைக்ரோவேவுக்கும் கரண்ட் வேணுமில்ல...
பரவாயில்ல அப்படியே சாப்பிடலாம்..
எனக்கு ரொம்ப குளிருது.. அப்ப இன்னிக்கு ரூம் ஹீட்டரும் கிடையாதா??
இப்போதைக்கு ஸ்வெட்டரப் போட்டுக்க.. பாக்கலா
ஏம்ப்பா.. ப்ளைட்க்கு என்னப்பா பண்ண?
இருங்க.. கருப்பனுக்கு போனப் போடறேன்.. அப்படியே அவன மெழுகுவர்த்தி வாங்கிட்டு வரச் சொல்றேன்.. நீ அந்த டார்ச் லைட்ட ஆஃப் பண்ணு.. அதுவும் மங்கலாயிட்டே வருது..
கருப்பனின் நிலைமையோ அதை விட மோசமாயிருந்தது..
(தொடரும்..)
அடிக்க வராதீங்க ஆரும்.. பெருசா இருக்கு.. மிச்சத்த நாளைக்கு ரிலீஸ் பண்ணிடறேன்..
டெக்னாலாஜி, டெக்னாலஜி!! இப்படித்தான் நம்ம கையக் கட்டி வச்சிருக்கு!!
ReplyDeleteGood one !! I know how it feels... No electricity no life... one time no water too :))
ReplyDeleteநன்றி ஹூசைனம்மா.. நன்றி இலா..
ReplyDeleteஆமா.. அதயே ரொம்ப நம்பியிருக்கறதால அது இல்லனா பொழப்பே காலியாயிடுது :(
முகிலன் has left a new comment on your post "என்ன செய்ய?? அட என்ன செய்ய??":
ReplyDelete//வெறும் டயலாக் மட்டுமே வச்சி எழுதிரீங்களா???
இது கூட நல்லாத்தான் இருக்கு.. ஆனாலும் கொழப்புது.. :)) //
சாரி முகிலன்.. உங்க கமெண்ட் தெரிய மாட்டேங்குது.. இது கரெண்ட் கட்டானப்ப எங்க வீட்டுல நடந்த கூத்து.. தோழியர் கிட்ட சொன்னப்ப அவங்க என்ன பண்ணீங்கன்னு கேட்டிருந்தாங்க.. அதான் அதயே எழுதிடலாம்ன்னு..
ஹி ஹி.. இருட்டுல நடந்த உரையாடல்ன்றதால யாரு என்ன பேசுனாங்கன்னு எனக்கும் தெரியல :))))))))
சந்தனா, அமெரிக்காவில் கருப்பன், பொன்னுத்தாயி எல்லாம் நல்லா இருக்கு. இதில் உங்கள் பெயர் என்ன??
ReplyDeleteஹா ஹா சந்தனா பவர் கட்டானா இங்கயும் நிலைமை இதுதான். இங்க கரெண்ட் கட்டாச்சுன்னா கூடவே தண்ணியும் கட்டாயிடும். அடுப்பு கூட பத்த வைக்கமுடியாது.
ReplyDeleteநாங்க ரெண்டுபேரும் ஏதாவது ஹோட்டல்ல ரூமைப் போட்டு தங்கிடுவோம். இப்படி புலம்பல்லாம் மாட்டோம் :)
சொல்ல வந்த விஷயம் சூப்பர்ப்...
ReplyDeleteபொறக்குறதுல இருந்து சாகுறவரைக்கும் எல்லாத்துக்கும் பவர் இருந்தாத்தான் முடியும்ன்ற நிலை
மாறனும்னா எல்லாரும் ஆதிமனிதன் காலத்துக்கு திரும்ப வேண்டியிருக்குமே பரவாயில்லியா ?
நன்றி வானதி.. ம்ம்.. யோசிச்சிட்டிருக்கேன்.. சந்துவுக்கு மட்டும் மாடர்ன் பேரா வச்சிடலாம்ன்னு இருக்கேன்.. :))
ReplyDeleteகவி.. நன்றி.. அங்கயும் அப்படித்தானா? :) இது முதல் அனுபவம்ன்றதால கொஞ்சம் திணறலாத்தான் இருந்தது.. எழுதினா நம்ம மாதிரி அனுபவப்படாத மத்தவங்களுக்கும் உபயோகமா இருக்கும்ன்னு தான்.. நீங்க சொன்ன ஐடியா தான் எங்களுக்கு அடுத்ததா தோணுனது.. நாளைக்கு எழுதிடறேன் மிச்சத்தையும்..
நன்றி வசந்த்.. ஆமா.. அது இல்லாம இப்ப ஒன்னுமே ஓட மாட்டேங்குது.. ஆஆஆஆஆஆஆஆதிகாலத்துக்கா? சரி, அப்ப எலெக்ட்ரிகல் எஞ்சினியரெல்லாம் என்ன பண்ணுவீங்க? :)))))
சந்து நல்லாவே இருக்கு, ரசிச்சுப் படிக்கிறேன். மிகுதியை விரைவில் தொடருங்கோ.
ReplyDeleteஅதுசரி, ஏன் சுப்ரமணியண்ணனைத்தனியே விட்டிட்டுப் போனனீங்கள்? கரண்ட் இல்லாத நேரம், அவர் எதிலாவது மோதி அடிகிடி பட்டிருந்தால்?:) அதுக்கும் என்ன செய்ய.. என்ன செய்ய... என்றுதான் புலம்புவீங்களோ?
நன்றி அதீஸ்.. என்னதிது பெரிய பெரிய வார்த்தயெல்லாம் சொல்லிட்டு.. :) டிஷ்யூ ப்ளீஸ்.. :))
ReplyDeleteஅண்ணனுக்கு வேலையிருந்தது - அவர் வந்த வேலைக்கான முன்னேற்பாடுகள லேப்டாப்ல கவனிச்சிட்டு இருந்தார்..
சந்து உங்களுக்கு ஆசையா என் ப்ளாகில் ஒரு விருது வச்சிருக்கேன். வந்து வாங்கிக்கோங்க :)
ReplyDeletehttp://kavippakam.blogspot.com/2010/03/blog-post_24.html
சந்தனா,உங்கள் ப்ளாக் பக்கம் வர இத்தனை நாளாகிவிட்டது,நிறைய வாசிக்க இருக்கு.
ReplyDeleteஆகா! இங்கும் யாரோ முதலில்:-(
ReplyDeleteசந்து, என் பிளாக் வந்து பார்.
அடே மொக்கச்சாமி.. சேர எடுத்துப் போடுடா.. வீட்டுக்கு ஒறம்பரைங்க வந்திருக்காங்க.. :)))
ReplyDeleteவாங்க வாங்க... ஆசியா, செல்வி.. இந்தாங்க ஜூஸ் குடியுங்க.. மிக்க நன்றி.. ரொம்ப சந்தோஷமாயிருக்கு.. இதோ.. நானும் வந்துட்டே இருக்கேன்..