06 March 2010
உடைந்த பேனா.. கிழியாத காகிதம்...
கருவொன்றை உள்ளிழுத்து
சொற்கடலில் மூழ்கி
கற்பனையைச் சிலுப்பி
சிந்தனையைச் செதுக்கி
கவிதையென்ரொன்றை...
முடியவில்லை.. முட்டுகிறது...
மொழியதனின் புலமையறியேன்..
இலக்கணம் இலக்கியம்
அறியேன் அறியேன்..
சமைத்தவன் பசியடங்குவது
ருசித்தவன் நன்றியில்..
ரசனையெனும் ருசிகொண்டு
காகிதமாய் மை சுமந்து..
படைத்தவன் பசியாற்ற
கணினியைக் கடவுகின்றேன்..
உடைந்த பேனாவாய்..
கிழியாத காகிதமாய்..
இயலாமையில் இன்புற்று..
அறியாமையில் அகமகிழ்ந்து!!
அபாய அறிவிப்பு: தீவிர அறுவை சிகிச்சையின் பலனாக எல்போர்டு, பேனா இருவருமே காப்பாற்றப்பட்டுவிட்டதால் இது போன்ற அட்டெம்ப்டுகள் அவ்வப்போது நடக்கலாமெனத் தெரிகிறது.. பக்கத்தூர்காரர்கள் எதற்கும் எச்சரிக்கையாக இருக்கவும்
Subscribe to:
Post Comments (Atom)
சொல்லிட்டீங்கள்ல இனி பாருங்க எம்புட்டு சாக்ரத யா இருக்கோம்னு
ReplyDeleteகண்டிப்பா.. நல்லா கவனமாப் பாத்துக்கோங்க.. வைரஸ் மாதிரி சொல்லாமலும் வரலாம்.. :)
ReplyDeleteதீவிர அறுவை சிகிக்சை மேலே இருக்கும் லிஸ்ட் எழுதுவதை பார்த்து பண்ணிவிட்டார்களா இருக்கும். :)
ReplyDeleteபி.கு: லிஸ்டை பெரிது பண்ணீ படிச்சுடேன். :))))
புரிஞ்சது.. கிர்ர்ர்ர்.. உங்க கிட்ட இனிமே சாக்கிரதயாத் தான் இருக்கோனும் :)))) ஸ்வீட் றீம்ஸ்..
ReplyDeleteலிஸ்ட்!!!?? ஹைஷ் அண்ணாவுக்கு எவ்வளவு பெரிய மனசு. ;) (இதுக்குத்தான் நான் கவிதையே.. எழுதுறது இல்லை.)
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. யூ டூ இமா? :))
ReplyDeleteநான் உங்க பாட்.. கவிதை நல்லா இருக்கு என்று சொல்லத்தான் வந்தேன் சந்தனா. Got a bit distracted. hi hi. ;)
ReplyDeleteகவிதை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள். ;)
ஹி ஹி.. கேட்டு வாங்க வேண்டியதாயிருக்கு.. நன்றி இமா..
ReplyDeleteநல்லாயிருக்குங்கோவ்!
ReplyDeleteஇனிமே ஜாக்கிரதையா இருந்துகறேனுங்கோ :-)
வாங்கோ கவிசிவா ங்கோ.. நன்றிங்கோ.. :))
ReplyDeleteஅந்தப் பெப்பர பாத்தாலே தெரியுது..
ReplyDeleteஎவ்வளவு மெனக்கெட்டு இருக்கிறீர்கள் என்று...
வாழ்த்துக்கள்...
நன்றி..
ஓடுங்க ஓடுங்க அது இங்கதான் வருது..
ReplyDeleteநன்றிங்கோ ப்ரகாஷ்.. நீங்களாவது எங்கஷ்டத்த புரிஞ்சுகிட்டீங்களே.. சந்தோஷம்.. நீங்களும் படிச்சுட்டீங்களா அத? ஹி ஹி..
ReplyDeleteமுகிலன்.. எங்கிட்டு ஓடுவீங்க.. எவ்வளவு தூரம் ஓடுவீங்க..??
ReplyDeleteரொம்ப கலாய்ச்சா அப்புறம் நிஜமாலுமே அங்கிட்டு வந்துடுவேன்.. ஆமா..
உங்க குருவையே கலாய்க்கிறவைங்க நாங்க ஆஃப்ட்ரால் சிஷ்யை நீங்க இது கூட தாங்க மாட்டோமா?
ReplyDeleteகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... நீங்களுமா வசந்த்???
ReplyDeleteஆமா.. அதாரு என்னோட க்ரூஊஊஊ... எனக்கேத் தெரியாம?
சந்து ஒருமாதிரி தலைப்புப் போடத் தைரியம் வந்த உங்களுக்கு, லேபல் போட தைரியம் வரேல்லையோ?
ReplyDeleteநல்லாவே எழுதுறீங்க... நான் உடைந்த பேனாவின் கீழுள்ள எழுத்தைச் சொன்னேன்... நானும் பெரிதாக்கிப் பார்த்திட்டேனே..... கிக்...கிக்....கிக்...
அதீஸ்.. லேபிள் பண்ண தைரியம் இனியும் வருமான்னு தெரியல.. :))
ReplyDeleteகுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... அல்லாரும் போட்டோ பாத்து டிஸ்ட்ராக்ட் ஆகிடறாங்கோ.. எ கொ ச இ??
அவங்க எல்லாம் என்னோட நண்பர்கள் வசந்த்.. அது சும்மா நக்கலுக்காக அப்படி சிரிப்பது..
ReplyDelete//என்னன்னு லேபிள் பண்ண?//
ReplyDeleteகிறுக்கல்கள்..
நக்கலு.. என்னத்ததான் கிறுக்கினாலும் பிதற்றல்கள் அளவுக்கு வர முடியாதுல்ல. :))
ReplyDeleteப்ளாக் பேர எப்ப மாத்தினீங்க, நல்லாருக்கு புதுப்பேர்!!
ReplyDeleteஏங்க, அப்ப நீங்க இன்னும் பேப்பர், பேனாவெல்லாம் யூஸ் பண்றீங்களா என்ன? அதிர்ச்சி!!
ஆனாலும், இதுக்குன்னு மெனக்கெட்டு படம்புடிச்சி போட்டீங்க பாருங்க, அழகாருக்கு கிறுக்கினதும்!!
ஆஹா.. நீங்க ஒருத்தராவது கவனிச்சுக் கேட்டீங்களே.. மிக்க நன்றி..
ReplyDeleteஇல்ல.. இந்த வாட்டி தான்.. அப்புறம் தான் போட்டோ புடிக்கற ஐடியாவும் வந்தது..
சந்தூ !!! எப்படி இப்படி!!! அதுவும் பேனாவை உடச்சி... சார் ஹோல்சேல் கடையில தான் உனக்கு பேனா வாங்கணும்ன்னு சொல்லலையா... ஒரு வழியா கட்டுமான பணி முடிவடைந்தது ... நல்ல பெயர்....
ReplyDeleteநன்றி இலா.. அது எழுத வரலையேன்னு வருத்தத்துல நடந்தது.. இப்போ எல்லாத்தையும் மறுபடியும் சேர்த்தாச்சு..
ReplyDeleteநல்லாயிருக்கா.. தேங்க்ஸ்.. :))
பூங்கதிர் தேசத்தில கவிதைப் பூ பூத்திருக்கோ? நல்லாருக்கு சந்தனா.
ReplyDeleteகவிதை வரலைன்னா பேனாவ உடைக்கக் கூடாது..மூளையைக் கசக்கிப் பிழிந்து கவிதை வடிக்கோணும்! [வந்ததுக்கு எதாச்சும் சொல்லனுமல்ல,அதுக்காக அடவைஸ்...மத்தபடி நம்ம கிட்ட இல்லாத ஒண்ணை எப்புடி கசக்கிப் புழியறது? குர்ர்..எல்லாம் சொல்லி டென்ஷன் ஆக வேணாம்..டேக் இட் ஈசி! :)]
பேனாவை யாரு,எப்போ உடைப்பாங்கன்னு தெரியுமல்ல??//இப்போ எல்லாத்தையும் மறுபடியும் சேர்த்தாச்சு..//அப்ப சரி!:)