27 February 2010

எரிகிறது தீ.. வேகுதென் உடல்...

தலைப்பைப் பார்த்து பதறியிருந்தால் மன்னித்திடவும்.. இந்த மாதிரி செய்திகளைப் படிக்கும் போது எனக்கு இப்படியொரு உணர்வு தான் ஏற்படுகிறது..





பள்ளியில் தீ
திருமண மண்டபத்தில் தீ
ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் தீ (சமீபத்தில் பெங்களூரில்)

இங்கெல்லாம் வடை சுட வடச்சட்டியில் காயவைத்த எண்ணை கொஞ்சம் அதிகமாகச் சூடேறிப்போனாலே கீ கீ என்று அலாரமலறி ஊரையே கூப்பிட்டு விடுகிறது..

அலுவலகத்தில், நூலகத்தில் இது போன்ற சத்தமான கீ கீ அலர்ட்களைக் கேட்டு எல்லோரும் விரைவாய் வெளியேறிட, இதைச் சமாளிப்பதில்  அனுபவமிக்கவர்கள் உள் நுழைந்து என்ன விஷயம் எனத் தேடி, எதுவுமில்லையென உறுதி செய்துகொண்ட பின்பு, மீண்டும் உள்ளே அனுமதிக்கப்படுவோம்.

நம் ஊரில் பள்ளி போன்ற இடங்களில் தீ யணைக்கும் கருவி ஒன்றை அங்கொன்றும் இங்கொன்றும் வைத்திருப்பார்கள்.. மிக எளிய பயன்பாடு.. அதன் மூக்கை தரையில் இடித்தால் உள்ளே ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு செயலாற்ற ஆரம்பித்துவிடும் (எல்லா பொதுக் கட்டிடங்களுள்ளும் வைக்கபட்டிருக்கிறதா என்று தெரியவில்லை). ஆனால் தீயைக் கட்டுப்படுத்த இது போதுமா? எனக்குத் தெரிந்து நம்மூரில் ஃபயர் அலார்மை எங்கும் கண்டதில்லை.. கண்ணிமைக்கும் நேரத்தில் மிக வேகமாக சுற்றியெங்கும் பரவிடும் தீயை வருமுன் கட்டுப்படுத்துதல் தானே சரிப்பட்டு வரும்?

இலவச தொலைக்காட்சி வழங்குதல் போன்ற “அறிவார்த்தமான” நல்லவைகளை செய்து வரும் அரசாங்கம், இத்தனை சம்பவங்கள், இத்தனை உயிரிழப்புகள், இத்தனை வேதனைகளை எதிர்கொண்ட பின்பாவது, குறைந்தபட்சம் இது போன்ற பலர் கூடும்/ வசிக்கும் கட்டிடங்களிலாவது ஃபயர் அலார்ம் சிஸ்டத்தைக் கட்டாயமாக்குமா? அரசாங்கப் பள்ளிகளுக்கு, அலுவலகங்களுக்கு இந்தச் சேவையைச் செய்து தருமா?

THERE IS A DEVICE WHICH SENDS RAYS FROM ONE TERMINAL TO OTHER TERMINAL(LIKE CAPACITOR). LIKE

-------/ /-------

BETWEEN THESE, A RAY WIL TRAVEL. IF FIRE OCCURS, SMOKE WILL FORM, THAT ACTS AS A BARRIER FOR THE LIGHT, SO LIGHT WILL NOT ENTER THE OTHER TERMINAL. THE SENSOR SENSES THAT AND BLOWS ALARM.

தகவலுக்கு நன்றி - allinterview.com

வைத்து விட்டு அப்படியே மறந்து விடக் கூடாது.. அவ்வப்போது மாதமொருமுறை போன்று தரக்கட்டுப்பாட்டுச் சோதனையும் மேற்க்கொண்டு, இதன் செயல்பாட்டைத் தொடர்ந்து உறுதிப்படுத்தி வர வேண்டும். நடக்குமா???

20 comments:

  1. சரி ... செஞ்சு? என்ன ஆவபோது?

    ReplyDelete
  2. சரியாச் சொன்னீங்க. அலாரம் இருந்தா மட்டும் போதாது. இந்த மாதிரி தீ சமயங்கள்ல எப்பிடி பதட்டமாகாம செய்ல்படனும்னு அடிக்கடி ட்ரில் நடத்தனும். இல்லைன்ன பதட்டத்துலயே பாதி பேரு செத்துப் போவாங்க - மூணு பேர் மேல இருந்து குதிச்சி செத்த மாதிரி.

    இதையெல்லாம் விட கொடுமையான விசயம், ஃபயர் எஞ்சின் வந்த வழி விடாம போயிட்டு இருப்பானுங்க படுபாவிப் பசங்க.

    ReplyDelete
  3. நன்றி முகிலன்... உங்க ஊக்கத்துக்கும் ரொம்பவே நன்றி..

    ஆமா.. அதையும் சொல்லித் தரனும்.. அந்த தகிக்கிற சூட்டுல என்ன பண்ணனும்னே தெரியாம.. ரொம்பக் கஷ்டமாயிருந்தது அதைப் படிக்கறப்போ. :((

    ReplyDelete
  4. அண்ணாமலையான்.. இப்பூடி கேட்டுப்புட்டீங்களே!! நாந்தான் புரியற மாதிரி எழுதலையோ?

    ஒன்னும் ஆவக்கூடாதுன்னு தான வைக்கறாங்க.. :))அதனால யாருக்கும் ஒன்னும் ஆவாது.. :)) சிறிய அளவுல புகைச்சல் ஏற்படும்போதே, அலாரம் அடிக்கத் துவங்கிடும். அதைக்கேட்டு எல்லாரும் கட்டிடத்தை விட்டு வெளியேறிடலாம்.. அட்லீஸ்ட் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாம இருக்கும்.. கூடவே, சீக்கிரமா தீத் தடுப்பு நடவடிக்கைகளை ஆரம்பிச்சிடலாம்.

    ReplyDelete
  5. நியாயமான கோபம்தான்...

    இன்னும் கொஞ்ச வருடத்தில் கண்டிப்பா வரும்ங்க கவலைப்படாதீங்க...

    ReplyDelete
  6. நன்றி வசந்த்.. ம்ம்.. சீக்கிரமா வரனும்.. இங்கிருந்து கோக் பெப்சி எல்லாம் வந்தெறெங்கியிருக்கு, இதின்னும் வரலயே.. யாரும் வாங்கத் தயாரில்லயோன்னு தோனுது. நம்மாக்களுக்குத் தான் தொலை நோக்குப் பார்வை கொஞ்சம் கம்மியாச்சே :(

    ReplyDelete
  7. கோடிக்கணக்குல செலவு செஞ்சு கட்டுற தனியார் கட்டிடங்களிலும் (இந்தியாவில்) இது இல்லை என்பது வருத்தமான விஷயம்.

    பிளானை முனிசிபல் அப்ரூவல் தருவதற்கு இதையும் கட்டாயமாக்க வேண்டும். எங்கே..?

    //நம் ஊரில் பள்ளி போன்ற இடங்களில் தீ யணைக்கும் கருவி ஒன்றை ... மிக எளிய பயன்பாடு.. அதன் மூக்கை தரையில் இடித்தால் .. செயலாற்ற ஆரம்பித்துவிடும்//

    பழைய கருவிகள்தான் அப்படி செயலாற்றும்; தற்போதைய கருவிகள் அப்படி இல்லை; (சமீபத்தில் இப்படி தட்டி செயலபடுத்த முனைந்ததில், அது வெடித்து ஒருவர் உயிரிழந்தார் என்று ஜூ.வி.யில் படித்தேன்)

    ReplyDelete
  8. Nice Post ! At the least they should do fire drills in Schools and public utility spaces. We will be there ..dont know when ??!!!

    ReplyDelete
  9. நன்றி ஹூசைனம்மா. ரொம்பவே வருத்தமா இருக்கு.. ஆ.. இப்படியுங்க் கூட நடக்குதா? அதுவே வெடிக்குதா?:(( ஒன்னா ரெண்டா இந்தக் கொடுமையெல்லாம்?

    ReplyDelete
  10. நன்றி இலா.. ஆமா.. அதுக்கு செலவு செய்ய முடியாத பட்சத்துல குறைஞ்சது ட்ரில் ஆவது சொல்லித் தரனும்... ஆமா.. மெதுவா நாமளும் வந்துடுவோம் இலா.. என்னிக்குன்னு தான் தெரியல..

    ReplyDelete
  11. நல்ல தகவல்தான் சொல்லியிருக்கிறீங்க.கூல் டவுண் சந்து, இப்ப உலகமே தலைகீழாகிக்கொண்டு போகிறதே...

    இருப்பினும் சங்கிலிவந்தாலும்:) வரலாம் கவனமாக இருங்கோ.... நன்றி எனச் சொல்லி தளத்தின் பெயரைப் போடுவதும் தப்பாமே... நேக்குத் தெரியாது... ”அங்கு” அதன் தலைவர்:) சொன்னது ஞாபகம் இருக்கோ... நன்றி எனச் சொல்லி என் தளத்தின் பெயரைப் போட்டால்... கோட்டுக்குப்:) போவேன் என... கடவுளே எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்!!!

    ReplyDelete
  12. நன்றி அதீஸ்.. நம்மூர்கள் உப்புப் பெறா விஷயத்திலெல்லாம் தலைகீழாத் தான் போயிட்டு இருக்கு. நல்ல விஷயத்துல அப்பிடியே தானிருக்கு :)

    அகிலவுலக புகழ்ப்பெற்ற என்னோட தளத்துல அந்த மாதிரி ஒரு குட்டி தளத்துக்கு பேர் போட்டு விளம்பரம் கொடுத்திருக்கேன் அதிரா.. அத நினைச்சு பெருமை பட்டுக்கோனுமாக்கும் :))

    ReplyDelete
  13. சந்தனா, தலைப்பை பார்த்ததும் பயந்து விட்டேன்.

    நான் இருக்கும் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் ஒரு அபார்ட்மென்ட் 2 வருடங்களின் முன்பு எரிந்தது. ஒரு உயிர் சேதம் கூட நடக்கவில்லை. யாரோ ஒருவர் வளர்த்த கிளி மட்டுமே இறந்து போய் விட்டது என்று சொன்னார். அந்த தீ விபத்து நடந்த உடன் தீயணைப்பு வண்டிகள் எத்தனை, ஹெலிஹாப்டர்( இதிலிருந்தும் தண்ணீர் ஊற்றினார்கள்) என்று எவ்வளவு விரைவாக, பாடுபட்டு தீயை அணைத்தார்கள்.
    இதுவே நம் நாடு என்றால்?? குறைந்தது 2 பேராவது பலியாகி இருப்பார்கள்.

    ReplyDelete
  14. //அகிலவுலக புகழ்ப்பெற்ற என்னோட தளத்துல// ???!!!! :))))

    அட ஆண்டவா..சீரியஸ் மூட்ல கமென்ட் போட வந்த என்னை இப்படி சிரிக்க வைச்சுட்டியே கண்ணு!!:D

    பொறுப்புள்ள பதிவு..என்ன செய்ய, இப்படி எல்லாம் எழுதி நம் ஆதங்கத்த தீர்த்துக்க வேண்டியதுதான்..

    ReplyDelete
  15. இலவச தொலைக்காட்சி வழங்குதல் போன்ற “அறிவார்த்தமான” நல்லவைகளை செய்து வரும் அரசாங்கம், இத்தனை சம்பவங்கள், இத்தனை உயிரிழப்புகள், இத்தனை வேதனைகளை எதிர்கொண்ட பின்பாவது, குறைந்தபட்சம் இது போன்ற பலர் கூடும்/ வசிக்கும் கட்டிடங்களிலாவது ஃபயர் அலார்ம் சிஸ்டத்தைக் கட்டாயமாக்குமா? அரசாங்கப் பள்ளிகளுக்கு, அலுவலகங்களுக்கு இந்தச் சேவையைச் செய்து தருமா?


    இதை நான் வரவேற்கிறேன்.... இது போன்ற அமைப்பு வெளிநாடுகளில் கட்டாயம்....

    அண்ணாமலையான் ஒன் Fஎப்ருஅர்ய் 27, 2010 1:44 PM

    சரி ... செஞ்சு? என்ன ஆவபோது?//



    இது மக்களின் உயிரை காக்க பயன்படுகிறது. நிச்சயம் காக்கும்.

    ReplyDelete
  16. நன்றி வானதி.. ஆமாம்.. இங்கு நடவடிக்கைகள் மிகவும் விரைவாக எடுக்கப்படுகின்றன. அதற்கேற்றாற்போல் போக்குவரத்து வசதியும் நன்றாகவுள்ளது.. ஹெலிகாப்டரில் நோயாளிகளைக் கூட ஏற்றிச் செல்கிறார்கள்..

    ReplyDelete
  17. மஹி.. வாங்க.. அது ச்சும்மா ஒரு பீலா.. கண்டுக்காதீங்க.. ஆதங்கப்பட்டுத் தான் ஆவனும்.. வேறென்ன செய்ய? நாமென்ன ஆட்சியாளர்களா?

    ReplyDelete
  18. நன்றி கருணாகரசு.. ஆமாம்.. பெரும்பாலான குடியிருப்புகளிலும் உள்ளது... நம்மூரில் குறைந்தபட்சம் பொது கட்டிடங்களிலாவது கொண்டு வரனும்.

    ReplyDelete
  19. :-| :-| :-|
    dOn't kNow wAat tO say!! sO SAd.

    ReplyDelete
  20. Its ok geno.. Sometimes, it is difficult to express our feelings...

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)