ஒன்றிரண்டு வாரத்துக்கு முன்பு.. நண்பரொருவரை வெகு நாட்கள் கழித்து தொலைபேச அழைத்திருந்தேன்.. பேசி முடித்து விடை பெறப் போகும் நேரத்தில் அவர் இந்த விஷயத்தைச் சொல்லி என்னை பெரும் வியப்பிற்குள்ளாக்கினார்.. ஒரு வாரம் ஹைதி சென்று வந்திருக்கிறார்.. தன்னால் முடிந்த உதவிகளை அவர்களுக்காற்றி விட்டு திரும்பியிருக்கிறார்.. இதை பகிர்ந்து கொள்ள வேண்டுமெனத் தோன்றியதால் அவரிடம் அந்த அனுபவங்களை சிறிய தொகுப்பாக எழுதித் தருமாறு கேட்டிருந்தேன்.. அதனுடன் சில புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார்.. நான் அவரிடம் ஏற்க்கனவே சொல்லியிருந்தேன் - அங்கு கண்டதை அப்படியே விவரிக்க வேண்டாம்.. படிப்பவர்களை மிகவும் பாதிக்கலாம். பதிலாக அங்கு சென்று செயலாற்ற யாரேனும் விரும்பினால் அவர்களுக்கு உதவுமாறு இருக்கட்டும். என்னுடைய வேண்டுகோளுற்கிணங்க, ஆங்கிலத்தில் அவர் எழுதியிருந்ததை, இங்கு மொழி பெயர்த்து தந்திருக்கிறேன்.. நண்பர் தமிழர்..
ஹைதியைப் பற்றி செய்திகளில் அறிந்து கொண்டவுடன் அங்கு நேரடியாக செல்வதென்று முடிவு செய்தேன். பல நிர்வாகங்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் ஆட்களை அப்போது தேர்வு செய்து கொண்டிருக்கவில்லை.. இறுதியாக, ஹைதி லீக் ஆர்கனைசேஷன் ஐ தொடர்பு கொண்டேன்.. ஹைதியின் ஏர்போர்ட் சேதமடைந்திருந்ததால் யூ எஸ் ஆர்மி அதனை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தது.. மிலிட்டரி ஃப்ளைட்காக ஒரு வாரம் காத்திருந்து அதில் இடங்கிடைக்காமல், லீக்கின் மற்றவர்களுடன் சேர்ந்து டோமினிகன் ரிபப்ளிக் சென்று அங்கிருந்து ஒரு சிறு வேனில் பயணித்து பத்து மணி நேரத்துக்குப் பிறகு ஹைதியைச் சேர்ந்தடைந்தோம். இதில் எங்களுடன் வந்தவொருவர் 9/11 ரெஸ்க்யூ டீமில் இருந்தவர்..
ஹைதி.. மேற்க்கத்திய நாடுகளில் மிகவும் வறுமைக்குள்ளான நாடு.. இதில் எண்பது சதவிகிதத்தினர் வ. கோட்டுக்குக்கு கீழுள்ளவர்கள்.. அங்குள்ள பெருமான்மையான படித்த மக்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று விட்டனர்..
யாரேனும் செல்ல விரும்பினால்:
தனியாகச் செல்ல வேண்டாம்.. மரணம் நிச்சயம்..
அங்கு சென்ற பிறகும் தனியாக நடமாட வேண்டாம் (பாதுகாப்பு காரணங்களுக்காக). எப்பவும் மக்களூடே இருக்கவும்..
திடீரென மக்கள் அலறுவதைக் கேட்டால், உங்களுக்கு பதினைந்து நொடிகள் இருக்கின்றன.. தப்பிவிடுங்கள்.. காரணம் ஆஃப்டர் ஷாக்ஸ்.. எங்களுக்கு முப்பது முறை ஏற்பட்டன.. கட்டிடத்துக்குள் நுழையும் முன்னர் தப்பிக்க வழி பார்த்து விட்டு பின் உள் செல்லவும்.. கட்டிடத்துக்குள்ளோ இல்லை மரங்களின் அருகிலோ தங்க வேண்டாம்..
நிலனடுக்கத்தின் போது ஹைதியின் ஜெயிலும் சேதமடைந்ததால், அங்கிருந்து குற்றவாளிகள் பலர் தப்பி விட்டனர்.. அதனால் யாரும் ஆறு மணிக்கு பிறகு ஓரிடத்தில் தங்கி உதவி செய்ய அஞ்சினோம்.. ஆர்மி மக்களுக்கும் இந்தத் தயக்கம் இருந்தது.. பணம் உணவு இவை யாவும் குறைவாக இந்ததால் வழிப்பறி கொள்ளை அதிகரித்திருந்தன.. இருப்பினும் நாங்கள் அங்கே தங்குவதென முடிவு செய்தோம்..
ஒரு நாளைக்கு பதினெட்டு முதல் இருபது மணி நேரம் வரை போராடினோம்.. மூன்று மணித் தியாலங்களே ஒரு நாளைக்கு உறங்குவதற்கு.. சாயந்திரம் ஆறு மணிக்கு ஆரம்பித்து அடுத்த நாள் பத்து மணி வரை வேலை.. பிறகு ஹைதியன் லீக் ஆஃபிசில் உணவு.. அங்கிருந்து ஒரு அம்பாசடர் வீட்டிற்கு சென்று தூக்கம்.. அங்கிருந்து ஆஃபிஸ்.. மறுபடியும் வேலை.. மின்சாரமில்லை.. இரவு பதினொன்று வரை மட்டுந்தான் ஜெனரேட்டர்.. அதற்கப்புறம் ஃப்ளாஷ் லைட்கள் மட்டுமே..
காயமடைந்திருந்த ஒரு பெண்ணுக்கு உதவியாற்றிய பின்னர் குழந்தையை எடுத்துக் கொடுத்து பால் கொடுக்கச் சொன்னபோது கிருமி உள்ளதென்றும், கொடுக்க முடியாதென்றும் சொன்னார்.. என்ன கிருமி என்று கேட்ட போது.. என்னமோ எய்ட்ஸ் என்று சொன்னார்கள் என்றார்!! நல்லவேளை, க்ளவ்ஸ் அணிந்திருந்தோம்..
இன்னும் பல திக் திக் அனுபவங்கள்.. எல்லாவற்றையும் சொல்ல மனமில்லை.. இத்தோடு போதும்..
இந்த நிகழ்வை எல்லோரும் அறிந்திருப்போம்.. வருத்தப்பட்டிருப்போம். சிலர் பண உதவி செய்திருக்கலாம்.. அங்கு சென்று நேரடியாக உதவுவது என்பது இன்னும் பல படிகள் மேலே செல்வது போன்று.. அனைவராலும் முடியாது.. பலருக்கு நேரமின்மையால்.. சிலருக்கு தயக்கத்தால்.. பயவுணர்வால்.. இன்னும் பல காரணங்களால்.. இந்தத் தடைகளையெல்லாம் கடந்து அங்கு சென்று வந்த அவரை பாராட்டுவதற்கு இன்னும் ஒரு காரணமும் உள்ளது.. அங்குள்ள ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார்.. தத்தெடுத்தல் என்றால் வீட்டுக்கு நேரடியாக அழைத்து வருவதை போலில்லாமல் பொருளாதார ரீதியாக உதவுவது.. ”இக்குழந்தைக்கு சுமார் பதிமூன்று வயதிருக்கலாம். மூட்டுக்கு கீழே கால் அகற்றப்பட்டுள்ளது... இவரின் பெற்றோர்கள் இறந்து விட்டனர்.. தங்களுடைய குழந்தைகளை தேடிக் கொண்டிருந்த வேறொரு பெற்றோர்களால் இவர் கண்டெடுக்கப்பட்டார்.. அங்கிருந்த ஒரு மருத்துவரை தொடர்பு கொண்டு அவரிடத்தில் இவரை ஒப்படைத்தேன்.. எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருப்பார்.. ”
இதனைப் படித்த எங்கள் கண்களில் தான் நீர் தளும்புகிறது... முடிந்தால் இன்னொரு முறை செல்லலாம் என்றிருக்கிறார்.. hats off to you நண்பரே..
இதை படித்த ஷாக் இன்னும் போகலே.
ReplyDeleteரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு..
ReplyDeleteமிக அருமையான செயல், இந்த மனம் அனைவருக்கும் வர வேண்டும்.. பாராட்டுக்கள்.. உங்களுக்கும்..
ReplyDeleteநல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு பெய்யுமாம் மழை.
ReplyDeleteஎன்னுடைய “Bhuj" மற்றும் சுனாமி மீட்பு பணிகளை நினைவு படுத்துகிறது. நம் நாட்டிற்குளே இவ்வளவு கஷ்டம் என்றால் உங்கள் நண்பர் பிறநாட்டுக்கு சென்று உதவுவது கிரேட்...
ReplyDeleteஅவர்கள் அனைவரும் வாழ்க வளமுடன்
வருகைக்கு நன்றி ஜெய்லானி.. ஷாக் யாருக்கும் அடிக்கக் கூடாதுன்னு தான் பாதி மட்டும் எழுதினேன்.. அதுக்கேவா?
ReplyDeleteவிடுங்க முகிலன்.. இயற்கைச் சீரழிவுகளுக்கு நாமென்ன செய்ய..
நன்றி அண்ணாமலையான்.. ஆனா என்னய எதுக்கு பாராட்டறீங்கன்னு தான் புரியல..
உண்மை தான் ஹுசைனம்மா..
நன்றி ஹைஷ்.. நீங்களும் மீட்புப் பணி செய்திருக்கீங்களா? அருமை..
வருத்தமாகத்தான் இருக்கிறது. இயற்கை அன்னையின் கோபத்தை நாம் அதிகரித்துக்கொண்டே போகிறோம்..விளைவுகளின் கொடுமையைக் கண்டபின்னரும்!!
ReplyDelete:(
We can all talk the talk. Your friend walked it. Please convey my heartfelt words of gratitude from all of us. Thanks for bringing the story to light. If you font mind can I link this post to my social media network ??
ReplyDeleteThere is no words to appreciate the effort of your friend.
ஆமாம் மஹி.. நாம இயற்கைக்கு பண்ணும் அநியாயங்கள் கொஞ்சமா நஞ்சமா?
ReplyDeleteகண்டிப்பா இலா.. அவர் எதுவும் நினைச்சுக்க மாட்டார்.. ஒரு விழிப்புணர்வுக்காக செய்றதுக்கு அவரோட அனுமதி தேவைப்படாது.. அவர் பேர், முகம் எல்லாம் மறைச்சாச்சு..
ReplyDeleteநன்றி..
ஹும்..எகெய்ன் சீரியஸ் மேட்டர்...வெரி சேட்!
ReplyDeleteயுவர் பிரெண்ட் இஸ் கிரேட் எல்போர்டு! இலாக்கா சொன்னமாதிரி எங்களனைவர் சார்பிலும் அவருக்கு ஒரு @}>-- (ரோஜா!!)