26 February 2010

தமிழ்ப்படம் :))))))))))))))))



நிறையத் தமிழ்ப் படம் பார்ப்பவரா நீங்கள்? நொந்து நூடுல்ஸாகியிருக்கீங்களா?? அப்படின்னா கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படம்..

ஹா ஹா.. வெகு நாட்கள் கழித்து மறுபடியும் என்னை வாய் விட்டு சிரிக்க வைத்தது... ஆங்கிலத்தில் ஸ்கேரி மூவிஸ் என்று புகழ்ப்பெற்ற படங்களைக் கிண்டலடித்து எடுப்பார்கள்.. அந்த விதத்தில் தமிழில் முதற் முயற்சி...  இயக்குனரின் தில் லை பாராட்டியாக வேண்டும்..

கதையென்று பெரிதாக ஒன்றுமில்லை.. வழக்கமான மசாலாப் படத்திலிருக்கும் கதையை விட குறைச்சலானதுமில்லை!!  நாட்டாமை சொல்லும் தண்டனைக்கு (சிம்பு படத்தை நூறு முறை டி வி யில் பார்ப்பது!!) பயந்து அவரது அப்பா அவரைக் கொல்ல முயல, பாட்டியால் (பரவை முனியம்மா) காப்பாற்றப்பட்டு, சென்னைக்கு வந்து (கிராமத்திலிருந்து செல்லும் எல்லா ரயிலும் சென்னைக்குத் தான் போகுதாம் :) )... சைக்கிள் பெடலைச் சுற்றியவாறே பெரியவராகிறார்.. காதல் மோதல்.. அடிதடி, அதிரடித் திருப்பங்கள் என்று கதை கண்டபடிக்கு பயணிக்கிறது..

கருத்தம்மாவில் தொடங்கி.. பல படங்களை கிண்டலடித்து.. எல்லா பெரிய நடிகர்களையும் இமிடேட் செய்து.. ஹா ஹா.. ஹீரோ எவ்வளவு பெரிய படையை எதிர்கொண்டாலும் அலட்சியமாக ஒரு புன்னகையை வீசுகிறார்.. கண்டபடி பஞ்ச் டயலாக் பேசுகிறார்.. பறந்து பறந்து அடிக்கிறார்.. ரொமாண்டிக் முகங்கொண்டு காதல் செய்கிறார்.. வெளிநாட்டில் ஹீரோயினுடன் தமிழ் வார்த்தைகளே இல்லாத ஒரு டூயட்டைப் பாடுகிறார்..

ரேடியோ மிர்ச்சி சிவா தான் ஹீரோ..  இவருடன் உடன் பயிலும் கல்லூரி நண்பர்கள் - வெண்ணிற ஆடை மூர்த்தி, பாஸ்கர், மற்றும் மனோ பாலா.. படத்தில் இவர்கள் பெயர் - நகுல், சித்தார்த்த், பரத் :)))) சிவா அருமையாக செய்திருக்கிறார். வில்லனை எட்டி உதைத்த ஷூ காலுடன் ஃப்ரீஸ் ஆகி நிற்கும் அவரது இண்ட்ரோ சீன் அருமை :))  தொடர்ந்து சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார்..

ஒரு சாம்பிள் - கோடீஸ்வரராகி உங்கள் மகளைக் கைபிடிப்பேன் என்று ஹீரோயினின் தந்தையிடம் சவால் விட்டுச் சென்று, அந்தத் தந்தை ஒரு காப்பி குடித்து முடிப்பதற்குள், சிவா ஏர்போர்ட், சிவா ரயில்வே ஸ்டேஷன், சிவா எலக்ட்ரிக் போர்ட், என பலவற்றையும் சம்பாதித்து கட்டி விடுகிறார் :)) சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம்.. அவ்வளவு நக்கல்..

நீளத்தைக் குறைத்து எடுத்திருக்கலாம்.. கதையை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக செலுத்தியிருக்கலாம்..

பிடித்திருந்தது..

12 comments:

  1. toooooooooooooooooooooooooooooo late...

    ReplyDelete
  2. :) என்ன பண்ண? இங்கத்த நிலம அப்படி.. நீங்க பாத்தாச்சா? :))

    ReplyDelete
  3. பாத்துட்டேன்.. ஆனா பிரிண்ட் அவ்வளவா நல்லா இல்ல. தியேட்டர்ல போடச்சொல்லி எங்கூரு க்ரோசரி கடைக்காரன்கிட்ட சொல்லியிருக்கேன் (அவருதான் வழக்கமா படம் போடுறவரு)

    ReplyDelete
  4. என்னது இந்திரா காந்தி செத்துட்டாரா ???

    ReplyDelete
  5. முகிலன்.. அதுக்குத்தான நாம வெவரமா வெயிட் பண்ணிப் பாத்தது! ஹி ஹி.. சமாளிச்சுட்டோம்ல!

    அங்க தமிழ்ப் படமெல்லாம் போடுவாங்களோ?

    வாங்க பேனாக்காரத் தம்பி.. முதல்ல ஒன்னுமே புரியல.. ட்யூப்லைட் ல! ஹா ஹா.. ரொம்போத் தான் நக்கல்.. அவ்வளவு பழைய ந்யூஸப் போட்டிருக்கமாக்கும்? என்ன பண்ண? பொழப்பு இங்க அப்பிடியாயிப் போச்சு!

    நானென்ன பட விமர்சனமா எழுதறேன் சுடச் சுட எழுத? எனக்குப் பிடிச்சத எனக்குப் பிடிச்சவங்க கூட பகிர்ந்துக்கறேன் - அவங்களும் என்சாய் பண்ணட்டும்ன்னு.. அம்புட்டுத்தேன்.

    ReplyDelete
  6. இதுக்காக எல்லாம் விமர்சனம் போடறதை நிருத்திராதைங்க. நாங்க பாக்குறதே உங்க விமர்சனத்தைப் படிச்ச பிறகுதான். ;)

    ReplyDelete
  7. நன்றி இமா.. ஆமா.. நல்லாயிருக்குன்னு சொன்னா இதுவரை பார்க்காதவங்களும் பார்க்கலாம் இல்லயா? நிறுத்த மாட்டேன் :)))

    ReplyDelete
  8. நல்லா இருக்கு சந்தனா... இனிப் படம் பார்க்காவிட்டாலும் பறவாயில்லை, நல்லாச் சொல்லிட்டீங்க.

    ReplyDelete
  9. நல்லா இருக்கு சந்தனா... தொடரட்டும் உங்கள் சேவை. படம் பார்த்ததுபோல இருக்கு.

    ReplyDelete
  10. அதீஸ்.. கண்டிப்பாப் பார்க்கனும்.. நல்லா சிரிக்கலாம்.. ஒன்றிரெண்டு ஓவரான சீன்ஸ் தவிர்த்து, மத்தபடிக்கு நல்ல படந்தான்..

    ReplyDelete
  11. ம்ம்ம்ம்..நல்லது..நல்லது! நடக்கட்டும்..நடக்கட்டும்.
    சீரியல் விமர்சனம் வராத வரைக்யும் ஜீனோ ஸேஃப்!! :D ;)

    ReplyDelete
  12. என்ன நக்கலா?? :)) சீரியலெல்லாம் ஜீனோவால் மட்டுந்தான் முடியும்.. ஐ மீன் சாப்பிட.. :) நமக்கெல்லாம் இந்த மாதிரி ஃபுல் மீல் தான் ஒத்து வரும்..

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)