17 February 2010

காலண்டர் வாசகங்கள்....

தோழியொருவருடைய வீட்டில் இருந்த 2009 காலண்டரில் நான் கண்ட வாசகங்கள்.. ஆங்கிலத்தில் இருந்தன.. ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு வாசகம்.. சிந்தனையாளர்களால் சொல்லப்பட்டவை.. அதற்கேற்றவாறே எடுத்திணைக்கப்பட்ட அழகான இயற்கைப் புகைப்படங்களுடன், ரசனையைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது...


பிடித்ததால் பகிர்ந்து கொள்கிறேன்..  
 
ஜனவரி:

Family is one of nature's masterpieces

(குடும்பமெனும் கட்டமைப்பில் நம்பிக்கையுண்டு.. வழிமொழிகிறேன்.. )

- George Bernard Shaw
ஃபிப்ரவரி:

கிழித்து உபயோகித்து விட்டார்கள்... :))


மார்ச்:

A man is not old until regrets take the place of dreams.

(வருத்தங்கள் கனவுகளின் இடத்தைப் பெறும் வரை மனிதனுக்கு வயதாவதில்லை. நான் எடுத்துக்கொண்டபடி - கனவிருக்கும் வரை மனிதனுக்கு வயதாவதில்லை. நல்லாயிருக்கே.. எனவே, ஸ்டார்ட் ட்ரீமிங்...)
- John Barrymore
ஏப்ரல்:

The price of greatness is responsibility 

(சரி தான்.. அதுக்கு பயந்துதானே க்ரேட் ஆக வேண்டாம்ன்னு முடிவுபண்ணியிருக்கோம்.. :))) )

- Winston Churchill


மே:

Adopt the pace of nature, her secret is patience

(பொறுத்தார் பூமியாள்வார்.. அதத் தானுங் சொல்றீங்... பிடிச்சிருக்கு)
 - Ralph Waldo Emerson


ஜூன்:

The purpose of life is not to be happy. It is to be useful, to be honorable, to be compassionate, to have it make some difference that you have lived and lived well

(என்னால் இதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை..)

  - Ralph Waldo Emersonஜூலை:

Everything has beauty, but not everyonse sees it..

(ரொம்ப பிடிச்சிருக்கு.. அப்ப எங்களையும் அழகுன்றீங்க.. ஏக மனதா ஒத்துக்கறோம்.. )

- Confusciusஆகஸ்ட்:

The first step toward success is taken when you refuse to be a captive of the environment in which you first find yourself

(யோசித்துப் பார்த்தால் சரியென்றே தோன்றுகிறது..)

- Mark Caineசெப்டெம்பர்:

True prosperity is the result of well-placed confidence in ourselves and our fellow man.

(சரிதான்..)

- Robert Burton
அக்டோபர்:

The only true wisdom is in knowing you know nothing

(ஹா ஹா.. சாக்ஸ் உண்மைய இப்படி போட்டு உடைச்சிட்டாரே..)

- Socrates

நவம்பர்:

Faith is to believe what you  do not see; the reward of faith is to see what you believe.

(பிடிச்சிருக்கு.. ஆனா எல்லாவாட்டியும் நடக்கறதில்லயே..)

- Saint Augustine
டிசம்பர்:
Courage is the ability to go from failure to failure without losing enthusiasm

(ஹா.. ஹா.. அதுக்கு இப்படியொரு அர்த்தம் இருக்குங்ளா? சரியாத் தான்ஞ் சொல்லியிருக்கீங்ணா)

- Winston Churchill


பி. கு: வாசகந்தேன் அவியளுது.. படமெல்லாம் எல்போர்ட் எடுத்ததுங்கோ..

15 comments:

 1. நன்றாயுள்ளது... அனைத்திலும் ஒரு அர்த்தமிருக்கு... மனம் ஏற்காவிட்டாலும்கூட.

  ReplyDelete
 2. அருமை.. ஒவ்வொன்றிலும் அர்த்தமிருக்கு, மனம் ஏற்காவிட்டாலும்கூட.

  ReplyDelete
 3. //Everything has beauty, but not everyonse sees it..

  - Confuscius// இவர் கன்ஃப்யூஸ் ஆகி எழுதிவிட்டார் அதை எல்லாம் சீரியஸா எடுத்துக்க கூடாது.

  நவம்பர் மாத படம் பார்த்த உடனே தெரிந்து விட்டது படம் எல்லாம் உங்களின் கடின உழைப்பினால் கண்டு பிடித்து போட்டது என :)

  படிச்சதில் பிடித்தது நவம்பர்+டிசம்பர்

  நன்றி

  வாழக் வளமுடன்

  ReplyDelete
 4. நன்றி அதிரா.. உங்களுக்கும் பிடிச்சிருக்கா? ஒன்றிரண்டைத் தவிர மத்ததெல்லாம் ஒத்ததாகவே இருந்தன..

  ஹைஷ்.. அழகு லிஸ்ட் ல உங்களையுந்தான் சேர்த்திருக்கிறோம்.. :)

  கண்டுபிடித்துப் போட்டதா? இதெல்லாம் சொந்தச் செலவில் ஊர் சுற்றின போது நானெடுத்த போட்டோஸ் ஆக்கும்...

  ந அண்ட் டி எனக்கும் பிடித்தது!!

  ReplyDelete
 5. வாசகங்களை விட, படங்கள்தான் அதிகமாப் பிடிச்சுருக்கு.

  ReplyDelete
 6. //இதெல்லாம் சொந்தச் செலவில் ஊர் சுற்றின போது நானெடுத்த போட்டோஸ் ஆக்கும்... //

  ஆஹா, அந்த வானவில் படம் ரொம்ப சூப்பர்!! எப்படிங்க கரெக்டா எடுத்தீங்க?

  சில ஃபோட்டோஸ் ஃபோட்டோவையே ஃபோட்டோ பிடிச்சது, சரியா? ;-))

  ReplyDelete
 7. நல்லாயிருக்கு வாசகங்கள்

  மனதிற்கு சிலவைகள் ஏற்கவில்லை.

  ReplyDelete
 8. ரொம்ப நன்றி ஹூசைனம்மா.. நீங்களாவது ஒத்துக்கிட்டீங்களேன்னு பாத்தா?? :((

  //சில ஃபோட்டோஸ் ஃபோட்டோவையே ஃபோட்டோ பிடிச்சது//

  டூ பேட்.. இல்லீங்கோ.. எல்லாமே நான் பாத்த இடங்கள் தான்.. நானே எடுத்தது தான்..

  வானவில் நயகரால எடுத்தது.. நீர் வீழ்ச்சி கீழ விழுந்து எழும்பற சாரல்ல உருவானது.. இன்னொரு இடத்துலயும் அருவி பக்கத்துல இதே மாதிரி லைட்டா தெரிஞ்சது.. ஆனா இந்த வானவில் தான் ரொம்ப பெருசா அழகா இருந்தது..

  இதென்ன ப்ரமாதம்.. வானவில் உள்ளார இன்னொரு வானவில் (நாந்தேன் :))) ) நிக்கற போட்டோஸ் கூட இருக்கு.. எப்பாவாச்சும் நாம பாத்துகிட்டா அந்த உலக அதிசயத்த :)) உங்களுக்கு காட்டறேன்..

  ReplyDelete
 9. ரொம்ப நன்றி மலிக்கா.. என்னாலயும் சிலவற்ற ஏற்க முடியல.. பெரும்பாலும் பிடிச்சிருந்தது..

  ReplyDelete
 10. Nice pics... No comments on Quotes... I have seen the Nov pic/place in real :)

  ReplyDelete
 11. Good Photos..No comments on Quotes...Rainbow on Rainbow bridge is a nice click! :)

  ReplyDelete
 12. அட என்னடா இது இன்னும் வேலையே முடியாத இடத்துக்குள்ள நம்ம புள்ளைகளா சுத்துது... யாரந்த எல் போர்டுன்னு தேடுனா அட நம்ம சந்தனா!

  ப்ரொஃபைலில் இப்படீல்லாம் படத்தைப் போட்டா சின்னக் குழந்தை நான் பயந்துடுவேன்ல :-(

  மற்ற படங்களெல்லாம் நல்லாருக்குங்கோ! நான் நம்பிட்டேன்பா அது எல்லாமே நம்ம வானவில் எடுத்த படம்தான். எல்லாரும் நம்புங்கப்பா

  ReplyDelete
 13. சந்தனா, டிசம்பர் வாசகம் அருமை. சொல்லும் போது ஈஸியாக இருக்கு ஆனால் கடைப்பிடிப்பது எவ்வளவு கடினம்.

  ReplyDelete
 14. ரொம்ப நன்றி மகி.. அதுக்கு பேரு ரெய்ன்போ ப்ரிஜ் ஆ :)) அமைஞ்சிடுச்சு அப்படி..

  ஐ.. கவிசிவா.. எப்படி இருக்கீங்க? :)) ரொம்ப சந்தோசமா இருக்கு.. நானேதான்.. இந்த மூஞ்சிக்கே பயந்தா எப்படி.. இன்னும் டெர்ரரா காட்டப் போறம்ல (ஒரிஜினல் முகத்த சொல்லலீங்கோ??)

  எ கொ ச இ? யாருமே நம்ப மாட்டேன்றாங்க..

  நன்றி வானதி.. ஆமா.. அதுக்கு தில் வேணும்.. நமக்கு அது ரொம்பவே குறைச்சல்.. எதுன்னாலும் ஒரே வாட்டில நடந்துடனும்ன்ற நினைப்பு :)

  ReplyDelete
 15. நன்றி இலா.. நீங்க பாத்த இடத்துல இருந்து இன்னும் மூணு போட்டோஸ் போட்டிருக்கேன்.. கண்டுபிடிங்கோ :)))

  ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)