26 June 2010

குறும்பு பண்றதுன்னா கரும்பு தின்ற மாதிரி...

நாந்தான் சரண்.. அத்த என்னப் பத்தி முன்னாடி சொல்லியிருக்கறதாச் சொன்னா.. அவ சரியாத் தான் சொல்லியிருக்காளான்னு சந்தேகமா இருக்கறதால நானே என்னப் பத்திச் கொஞ்சமா சொல்லிக்கறன்..

பால் - இப்போதைக்கு பையன் பால், இன்னும் பல வருஷங்கழிச்சு ஆண் பால்…

வயசு – தத்தித் தத்தி நடக்கறதத் தாண்டி, கொஞ்சமா ஓடவும் பழகியிருக்கும் வயசு.. நாலஞ்சு வார்த்த தெரியும், ஆனா முழுசா பேச வராது.. மொத ரெண்டு எழுத்த மட்டுந்தான் சொல்லுவன்.. அதையும் எனக்குப் பிடிச்ச மாதிரி மாத்தித்தான் சொல்லுவன்.. நீங்களா யோசிச்சுப் புரிஞ்சுக்கனும்.. எங்க, என் வயசு எவ்வளவுயிருக்கும்ன்னு சொல்லுங்க பாக்கலாம்?

வேலை – உங்களாலெல்லாம் என்னோட வேலையப் பாக்க முடியாது.. துக்கமேயில்லாம தூங்கறது, துள்ளி விளையாடறது, காக்கா குருவிய கை காட்டி வேடிக்க பாத்து அதுங்களோட பேசறது, நினைச்சவுடனே இருக்கற இடத்துலயே உச்சா போறது.. இப்பச் சொல்லுங்க.. உங்களால முடியுமா?
 
பொழுதுபோக்கு – பொம்மைகள உடைக்கறது.. இதுவரை கெடச்ச வெற்றிகள் - ரெண்டு மடிக்கணினி, ஒரு ப்ளாக் பெர்ரி, கொஞ்சம் (நம்புங்க, கொஞ்சமே கொஞ்சந்தான்) பீங்கான் தட்டு-டம்ளர் வகையறா, ஒன்னு ரெண்டு அலமாரிக் கதவு.. யாரது, இதெல்லாம் பொம்மைகள் வரிசைல வராதுன்னு முணுமுணுக்கறது? எங்கண்ணுக்கு, எம்மனசுக்கு, எல்லாமே பொம்மைங்க தான்.. உடைக்கனும்ன்னு தோனுச்சுன்னா உடைச்சிடுவேன்.. உண்மை என்னன்னா, என் அம்மா இவன் எதையும் உடைச்சிடக் கூடாதுன்னே பாத்துப் பாத்து நல்ல கனமான பொம்மைகளா வாங்கித் தந்திருக்கறா.. ஆனா, இதையெல்லாம் உடைச்சாத்தான புது பொம்மை கிடைக்கும்?.. ஹூம்.. அம்மாக்கு இதெல்லாம் தெரியாதா என்ன? எவ்வளவு தான் தூக்கிப் போட்டாலும், தரையில போட்டுத் தட்டினாலும், என்னால உடைக்க முடியலை.. அந்தக் கடுப்பில தான், இப்பிடி மத்த ஏனை எளியோர்கிட்ட என் வீரத்தைக் காட்டிக்கிட்டு இருக்கறன்... 

சாதனை – விளையாட்டுப் பள்ளிக்கூடத்துல ஒரு மணி நேரம் விளையாடினது (அதுக்கப்புறம் வச்சு சமாளிக்க முடியலைன்னு வீட்டுக்கு அனுப்பி வச்சுட்டாங்க.. அந்தக் கதைய முடிஞ்சா அப்புறமாச் சொல்றன்).


சோகம் - எனக்குன்னு கொஞ்சம் பதிவுலக நண்பர்கள் இருக்கறாங்க.. பரண், அரண், தீபுக்குட்டி... ஆனா யாரும் பக்கத்துல இல்ல.. :( இந்த வயசுலயே பதிவுலகமா இவனுக்குன்னு யாராச்சும் நினைச்சீங்கன்னா, உங்களுக்கும் எனக்கும் பெரிய தலைமுறை இடைவெளி விழுந்திடுச்சின்னு அர்த்தம்.. அதாவது, நீங்க எனக்கு கொள்ளுப்பாட்டன்/பாட்டியா முறை வேனும்.. ஓக்கை? பரணோட அத்த அடிக்கடி அவங்க நண்பர்களையெல்லாம் ஒன்னாச் சேத்தி வச்சு பேச விளையாட விடுவாங்க.. எங்களுக்கும் அப்பிடியொரு ”ஒன்று சேர்தல்” வைக்கச் சொல்லி பரண் கிட்டச் சொல்லி விடனும்.. 


சரி சரி.. என் சுய புராணத்தை, இன்னிக்கு இத்தோட முடிச்சுக்கறேன்.. தூக்கம் வர்றா மாதிரி இருக்குது.. ஹாஆஆஆஆஆவ்… ஆருக்காச்சும் சந்தேகமிருந்தா அத்தகிட்ட சொல்லிவையுங்க.. அப்புறமா கேட்டுக்கறேன்..

28 comments:

  1. எனக்குத்தான் வடை. தரலேன்னா எல்லாத்தையும் உடைச்சிடுவேன் ஆமா

    ReplyDelete
  2. ஹாய் பரண் குட்டி! நல்லா தூங்குங்க.
    காலைல எழுந்து வந்து உற்சாகமாக ஒரு பொம்மையை உடைச்சு வச்சுட்டுக் கதை சொல்ல ஆரம்பியுங்க. ஆன்டி காத்துட்டு இருக்கிறேன்.
    அதுவரை நல்லிரவு.

    ReplyDelete
  3. ஆகா வட எனக்குதான் :)

    ReplyDelete
  4. தூங்கி முழுச்சி மீதியையும் சொல்லுங்க..!!கேக்காம நா போவ மாட்டேன்

    ReplyDelete
  5. சந்து சந்து.... நானே எழும்பிட்டேன், நீங்க இன்னும் நித்திரையால எழும்பேல்லையோ?:).

    அழகா அனுபவிச்சு எழுதியிருக்கிறீங்க... நல்லா இருக்கு. சொல்லிட்டீங்க இல்ல, வாணி விரைவில ஒரு கெட்டுகெதர் வச்சிடுவா.... முதல்ல வாணியைக் கண்டுபிடிப்போம் வாங்கோ, இமாவைக் கண்டுபிடிச்சதைப்போல:)..

    ReplyDelete
  6. //ஆருக்காச்சும் சந்தேகமிருந்தா அத்தகிட்ட சொல்லிவையுங்க.. அப்புறமா கேட்டுக்கறேன்../// ஆருடைய அத்தையிடம் சொல்லவேணும் எனச் சொல்லாமல் நித்திரையாகிட்டீங்க... கெதியா எயும்பிச் சொல்லுங்கோ....

    ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ ”வட” போச்சே.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    ReplyDelete
  7. நன்றி கவி.. உங்களுக்கே உங்களுக்குத் தான் வடை.. கூடவே இலவசமா, ஒரு சூடான இஞ்சி டீயும் (எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா? :)) ) சரி, தட்டையும் டம்ளரையும் உடைக்காம தந்திடுங்க என்ன?

    ReplyDelete
  8. நன்றி இமா பாட்டி.. அதெப்படி, அத்தைக்கும் ஆன்ரி, எனக்கும் ஆன்ரியாக முடியும்? கிக்கீகீ.. நல்லா தூங்கி இப்போத் தான் எழுந்தேன்.. மறுபடியும் தூக்கம் வரக்கே தான் மீதிக் கதை சொல்லுவன்.. சரியா?

    ReplyDelete
  9. கண்டிப்பாச் சொல்லுறன் மாமா.. அதுவரைக்கும் போய் ஒரு சந்தேகம் கேட்டுட்டு வாங்க.. :)

    ReplyDelete
  10. ஹைஷ் தாத்தா.. எப்படியிருக்கீங்க? உங்களுக்கு வடை மிஸ்ஸானதால, அத்த சுடப் போற தோசைலயிருந்து வேண்ணா எடுத்துத் தரவா?

    ReplyDelete
  11. நன்றி அதீஸ்.. நானும் எழும்பிட்டேன்.. :) ரீ குடிச்சிகிட்டே இதை ரைப் பண்ணுறன்.. சந்தோசமாயிருக்கு உங்கட பின்னூட்டம் படிக்க :) வாணி கொஞ்சம் பிஸியாயிருக்கா போல.. கண்டுபிடிச்சிடலாம்..

    ReplyDelete
  12. சந்துவை உடனடியாகப் பிரித்தானிய நீதிமன்றத்தில் ஆஜராகும்படி, மாண்புமிகு பூஸார் ஆணையிடுகிறார்..
    என் 2வது கொமெண்ட் ங்ங்கேஏஏஏஏஏஏஎ????

    ReplyDelete
  13. ஆ... இமா பாட்டியோ??? ஹைஷ் தாத்தாவோ? ஜெய்..லானி மாமாவோ??........... அப்பாடா நான் அதீஸ்... தான் வடிவாப்படிச்சுப் பார்த்திட்டேன் கிக்...கிக்...கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  14. என்னோட அத்த கிட்டத் தான் அதீஸ் பாட்டத்த (பாட்டியாக வயசு குறைவாயிருக்கு, அத்தன்னு சொல்ல வயசு ரொம்பவே அதிகமாயிருக்கு.. என்ன பண்ணட்டும்? )

    ReplyDelete
  15. ரெண்டாவது கொமெண்ட் வந்தாச்சு அதீஸ்.. கூடவே விளக்கமும்.. :)

    ReplyDelete
  16. அது சந்து அத்தைக்கு போட்ட கொமெண்ட்.. அதான், அவ பதில் போட்டிருக்கா அதீஸ் பாட்டத்த.. இது, நானு.. அவ மடியில இருந்து ரைப் பண்றேன்..

    ReplyDelete
  17. அன்பு சரண் வயசு - 18 மாதம்
    வேலை - நீங்க பாக்குற வேலை ரொம்ப கஷ்டம் எங்களால பாக்க முடியாது
    பொழுதுபோக்கு - உங்க பொழுதுபோக்கு ரொம்ப காஸ்ட்லி
    நான் பதில் சொன்னது சரியா அப்படின்னு உங்க அத்தையிடம் கேட்டு சொல்லுங்க
    இப்படிக்கு ,
    உங்கள் அத்தையின் தோழி :)
    (அப்பன்னா என்னையும் அத்தைதானே சொல்வீங்க:))
    சந்தனா உங்க மருமகனை பத்தி இன்னும் சொல்லுங்க

    ReplyDelete
  18. //வாணி விரைவில ஒரு கெட்டுகெதர் வச்சிடுவா.... முதல்ல வாணியைக் கண்டுபிடிப்போம் வாங்கோ, இமாவைக் கண்டுபிடிச்சதைப்போல:)..//

    ஆ.. இப்பவே எனக்கு வயத்த கலக்குதே..!! கோட்டு , முட்டை.....>>>இன்னும் என்னன்ன வரப்போகுதோ..

    ReplyDelete
  19. //கண்டிப்பாச் சொல்லுறன் மாமா.. அதுவரைக்கும் போய் ஒரு சந்தேகம் கேட்டுட்டு வாங்க.. :)//

    ஆஆ...மாமாவாஆஆஆஆஆஆஆஆஆ.அடுத்த பதிவு கட்டாயமா சந்தேகப்பதிவுதான்.

    ReplyDelete
  20. //அப்பாடா நான் அதீஸ்... தான் வடிவாப்படிச்சுப் பார்த்திட்டேன் கிக்...கிக்...கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ//

    அதீஸ் பாட்டியை அத்தைன்னு சொன்னதை வண்மையாக கண்டிக்கிரேன்...அப்ப சாக்லெட் கிடையாது. ஒன்லி ஐஸ்கிரீம் மட்டுதான்

    ReplyDelete
  21. எப்படி இருக்கீங்க எல் எஸ்? உங்க வீட்டுல ஏதாச்சும் பாப்பா இருந்தா முதல்ல எனக்கு தோழி/ழன் ஆகச் சொல்லுங்க.. அப்புறமா உங்களக் கூப்பிடுறன் :)

    வயசு - கிட்டத்தட்ட சரி தான்.. அத்த கிட்ட என்ன கேக்கறது, நானே சொல்லிட்டன்..

    ReplyDelete
  22. என்னன்னு கூப்பிட்டா சந்தேகம் கேக்க மாட்டீங்க ஜெய் **** தாத்தான்னு வேனும்னா கூப்பிட்டுப் பாக்கவா?

    அவங்க பாட்டத்த - ரெண்டுக்கும் நடுவில இருக்கறதால..

    கவலப்படாதீங்க.. எங்க ஒன்று சேர்தல்ல நீங்களெல்லாம் வெறும் பார்வையாளர் தான்.. நாங்க தான் முக்கியமான ஆக்கள்.. :))

    ReplyDelete
  23. இண்டரெஸ்டிங்!! நமக்கு பால்ய வயதிற்குத் திரும்பிபோக ஆசை வந்தால் இப்படி ஒரு ‘கதை’ எழுதி திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்!!

    ReplyDelete
  24. நன்றி ஹூசைனம்மா.. திரும்பிப் போக ஆசைதான்.. ஆனா அதுக்காக எழுதல.. வானதி எழுத ஆரம்பிச்சது பிடிச்சுப் போக, நாங்க தொடர்ந்துட்டு இருக்கோம்... இது ”கதை” இல்ல.. வெறும் அறிமுகப் படலம் மட்டுமே.. :)) சும்மா.. ஜாலிக்காக..

    ReplyDelete
  25. டெம்ப்ளேட் மாறிடுச்சு..கலர்புல்லா இருக்கு சந்தனா!
    /இது ”கதை” இல்ல../ 'கதையல்ல,நிஜம்!' மாதிரியா அப்போ?

    சரண் குறும்புகள் ரசிக்க வைக்குது.

    ReplyDelete
  26. நன்றி மஹி.. நான் சொன்ன மாதிரி ரொம்ப எளிதான வேல.. சுலபமாயிருந்தது இந்த வாட்டி மாத்துனது.. ரசிச்சுப் பண்ணுனன்..

    ReplyDelete
  27. //பால் - இப்போதைக்கு பையன் பால், இன்னும் பல வருஷங்கழிச்சு ஆண் பால்…//

    இங்க ஒரு ரைட்டர் உருவாகுறாருங்கோ..

    குழந்தைப்பையன் பேசற மாதிரி எழுதியிருக்கீங்க
    நீங்க இவ்ளோ கிரியேட்டிவ்வா சொல்லவே இல்ல தெரிஞ்சுருந்தா உங்களுக்கும் ஒரு தலைப்பு கொடுத்திருப்பேனே...

    ReplyDelete
  28. மிக்க நன்றி வசந்த்.. இந்த வகைல ”பரண் சாம்பு” வ வச்சு முதல்ல எழுத ஆரம்பிச்சது வானதி.. இது அவங்க மூளையில தோனின கரு.. அதைத் தான் நாங்க விதம் விதமா தொடர்ந்தோம்.. அதனால க்ரியேட்டிவிட்டிக்கான பரிச அவங்களுக்கு கொடுத்துடலாம்.. உங்க தலைப்ப வேண்ணா நான் வாங்கிக்கறேன் :)))

    http://vanathys.blogspot.com/2010/04/blog-post_30.html

    இதப் படிச்சுப் பாருங்க.. அதோட தொடர்ச்சியா மீண்டும் சாம்பு என்ற தலைப்புல இன்னும் ரெண்டு கதைகள் இருக்கும்.. மீண்டும் நன்றி..

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)