27 June 2010

சரண் வந்திருக்கேன்..

எப்பிடி எங்கயிருந்து ஆரம்பிக்க எங்கதைய? சரி, முந்தானேத்திலேர்ந்து ஆரம்பிக்கலாம்..

என்னப் பத்தி தெரியாதவங்க இங்க போய் படிச்சுக்கோங்க....



எனக்கு அன்னிக்கு என்னமோ ஆகிப் போச்சு.. எப்பவும் நாந்தான் எல்லார்க்கும் முன்னாடி எழுவன்.. அம்மா எனக்குச் செல்லமா அவளோட ”குட்டி அலாரம்” ன்னு பேரு வச்சிருக்கா.. கொஞ்சம் நேரம் கால் கைய உதறிப்போட்டு, அப்பிடியே புரண்டு, அம்மாகிட்ட வந்து, அவ கைய என் குட்டிக் கையால உலுக்கி எழுப்பிவிடுவன்.. அம்மா தூக்கத்துல தட்டி விடுவா.. அப்புறம், அவ முடியப் பிடிச்சு இழுத்து, மூக்கப் பிடிச்சுக் கிள்ளி.. இப்பிடி எதையாவது பண்ணி அவள எழுப்பிவிட்டுட்டுத் தான் மறுவேல எனக்கு..

அம்மா எழுந்து, என்னத் தூக்கிப் போய், என்னோட பற்குருத்துகள அவ விரலால தேச்சிவிட்டு, பால் காச்சி, ஹார்லிக்ஸ் கலக்கித் தருவா.. அதுக்கப்புறம், அப்பாவ எழுப்பி அவர் கிளம்பிப் போற வரைக்கும் என்னக் கண்டுக்க மாட்டா.. நானும், இதான் நேரம்ன்னு ஏதாவது பொம்மையத் தேடி கிளம்பிடுவன்.. பொம்ம அலுத்துடுச்சுன்னா பேப்பர்.. எனக்கு எட்டக் கூடாதுன்னே பேப்பர் வகையறா எல்லாத்தையும் மேசை மேல வச்சிருப்பாங்க.. ஆனா நான் துறுதுறுன்னு அங்கயும் இங்கயும் தத்தி, தேடி, எது மேலயாவது ஏறி, கையில எடுத்துடுவன்.. பொம்மைய உடைக்கறது எவ்வளவு பிடிக்குமோ அந்தளவுக்கு பேப்பர் பிய்க்கறதும் பிடிக்கும்.. எவ்வளவு அழகா பிய்ப்பன் தெரியுமா? என்னாலயும் பிய்க்க முடியற அளவுக்கு மெலிசா பேப்பர் பண்றவங்களுக்கு பெரிய நன்றி..

சரி, அன்னிக்கு என்னமோ தான் ஆகிப்போச்சு.. கண் முழிக்கப் பிடிக்கல.. கை கால் அசைக்கவும் பிடிக்கல.. ரொம்பச் சலுப்பாயிருந்தது.. அம்மா எப்பிடியோ எழுந்து அப்பாவக் கெளப்பி விட்டுட்டா.. ஆனா, என்னால மட்டும் எழவே முடியல.. அப்பா போனப்புறம், எங்கிட்ட வந்து என்ன தொட்டுப் பாத்தா.. நெத்தில, கழுத்துல, வயித்துல... இப்பிடிச் சுடுதே ன்னு பதறிப்போனா.. நான் எப்படிச் சூடானேன்னு எனக்குப் புரியல.. மூச்சு வேற வேக வேகமா விட்டுகிட்டு இருந்தன்.. மூச்சு விடறப்ப சத்தம் வேற வந்துட்டு இருந்தது..  உடனே பாட்டிக்கு போன் பண்ணிக் கேட்டா.. அவங்க என்ன சொன்னாங்கன்னு தெரியல.. அப்புறம் அப்பாக்கு போன் பண்ணினா.. அப்புறம் எங்கயோ போன் பண்ணினா.. நடுநடுவுல எங்கிட்ட வந்து எழுப்பிப் பாத்தா.. நல்லாவே பதறிப் போயிருந்தா.. கொஞ்ச நேரத்துல என்ன தூக்கி வண்டில போட்டு, கூட்டிட்டுப் போயிட்டா..

வழியில போகும் போது கொஞ்சம் தெம்பானன்.. கண் முழிச்சுப் பாத்தன். ஏதோ ஒரு இடத்துல வண்டிய நிறுத்திட்டு, அம்மா என்னய தூக்கிட்டுப் போனா.. அந்த இடம்.. முன்ன எப்பவோ வந்து போன மாதிரி இருந்தது... பெர்ர்ர்ர்ர்ர்ர்ரிய வீடு மாதிரி இருந்தது.. நிறைய சேர், சோஃபா போட்டிருந்தாங்க.. எங்களுக்கு விளையாட நிறைய பொம்மைங்க வச்சிருந்தாங்க.. டீவில எனக்குப் பிடிச்ச தாமஸ் த டேங்க் எஞ்சின் படம் ஓடிட்டு இருந்தது.. (அத்தைக்கு ஒரு நா தாமஸக் காமிச்சன்.. அவளுக்கு அது கூடத் தெரீல.. நாந்தான் சொல்லிக்கொடுத்தன்.. அத்த மாதிரி மக்குங்களுக்காக மேல படம் போட்டிருக்கன்..)

உள்ளார என்ன மாதிரி கொஞ்சம் பேர், அம்மா மாதிரி கொஞ்சம் பேர், அப்பா மாதிரி கொஞ்சம் பேர் உட்காந்திருந்தாங்க.. என்ன மாதிரி இருந்தவங்க எல்லாரும் அழுதுட்டு கத்திட்டு இருந்தாங்க.. ஒன்னுரெண்டு பேர் உள்ளயே வரமாட்டேன்னு கத்த, அவங்க அப்பா அம்மா அவங்கள பிடிச்சு இழுத்தாந்தாங்க.. எனக்கு அப்பவே சந்தேகமாயிருந்துச்சு.. கொஞ்சம் நேரம் எல்லாரையும் பாத்துக்கிட்டு இருந்ததுல, ஞாபகம் வந்தே வந்துடுச்சு.. எனக்கும் ஓ ன்னு கத்தனும் போல இருந்தது.. ஆனா முடீல்ல்ல்ல.. அங்கயிருக்கற எல்லாருமே பேட் பாய்ஸ்.. பேட் கேர்ள்ஸ்..

நானும் அங்க போயிருக்கேன்.. இதுக்கு முன்னாடியே, மூணு தடவ.. முத தடவ என்னால எதயுமே பாக்க முடியாத சமயம்.. அப்பல்லாம் எப்பவுமே இருட்டு தான் எனக்கு.. ரொம்பச் சின்ன இடம்.. சுத்தி தண்ணி.. தண்ணிக்குள்ளாற கை கால் வீசிப் போட்டு விளையாடிட்டு இருப்பன்.. அப்பா அம்மா பேசறதெல்லாம் நல்லா ஒட்டுக் கேப்பன்.. அப்பத் தான் ஒரு நா, அம்மா அப்பா ரெண்டு பேரும் அங்க போனாங்க.. என்ன போட்டோ பிடிக்கப் போறதா பேசிட்டு இருந்தாங்க.. யாரோ ஒருத்தர், என்னோட இதயத்த போட்டோ பிடிச்சுக் காமிக்க, ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷப் பட்டாங்க.. அப்புறம், என்னோட கண்ணு, மூக்கு, காது, என்னோட வயிறு, கை, காலுன்னு.. ச்ச.. என்னோட அனுமதியில்லாம என்ன முழுசா போட்டோ பிடிச்சிட்டாங்க.. எனக்கு ஒரே கோவம்.. நிறைய உத விட்டன்.. ஆனா எதுமே எடுத்தவங்க மேல விழவே இல்ல.. ஹூம்.. அப்புறம், நான் முதல்ல வெளிச்சத்தப் பாத்தது அந்த இடத்துல தான்.. அங்க வச்சுத் தான் அம்மா, அப்பா, பாட்டி எல்லாரையும் முதல்ல பாத்தன்.. எல்லாம் புதுசா வித்தியாசமாயிருக்கேன்னு நான் யோசிச்சுட்டு இருக்க,  யாரோ பலமாக் கிள்ளி, அழ வச்சுட்டாங்க.. அதுக்கடுத்த வாட்டி அங்க போயிருந்தப்பவும் என்ன அழ வச்சிருந்தாங்க..

இதயெல்லாம் நினைச்சுகிட்டே, அங்கயிருந்த குழந்தைகள வேடிக்க பாத்துகிட்டு இருந்தன்.. கொஞ்ச நேரங் கழிச்சு, அம்மா ஒரு ரூமுக்குள்ள என்ன தூக்கிட்டுப் போனா.. அதே ரூம்... அதே வாசன.. அதே கண்ணாடி போட்ட மாமா, அதே அக்கா.. எனக்கு இவங்க என்ன பண்ணுவாங்கன்னு நல்லாவே தெரியும்.. அம்மா என்னப் பத்தி கொஞ்சம் சொன்னா.. அந்த மாமா ட்யூப் மாதிரி பொம்மைய வச்சு என்னத் தொட்டுப் பாத்தாங்க.. அந்த அக்காவோட வேல, அந்த நேரத்துல எனக்கு எதாவது பொம்மையக் காமிச்சு போக்கு காட்டறது, என்ன அழ விடாம பாத்துக்கறது.. யார்கிட்ட??.. எனக்கு எப்ப அழனும்ன்னு நல்லாவே தெரியும்.. அதனால பேசாம அவங்க பண்ணுன குரங்கு சேஷ்டயெல்லாம் பாத்து கஷ்டகாலமேன்னு சிரிச்சிட்டு இருந்தன்.. அப்புறம் மாமா வாய்க்குள்ள வெளிச்சம் அடிச்சுப் பாத்தாங்க..  என்ன ஒரு மெத்த மேல படுக்க வச்சு,  வயித்த அமுக்கிப் பாத்தாங்க.. எனக்குத் தான் தெரியுமே.. அப்பவும் நல்ல பையனாவே இருந்தன்..

அப்புறமா எல்லாரும் ரொம்ப ரகசியமா என்னமோ பேசுனாங்க..  அம்மா என்ன மடியில உக்கார வச்சு அமுக்கி பிடிச்சுகிட்டா.. மாமா எங்கையப் பிடிச்சாங்க.. அக்கா இன்னொரு பொம்மைய எடுத்து வந்து இன்னொரு கைல கொடுத்தா.. எம்முகத்த அவ பக்கம் திருப்புனா. நான் நல்லா உஷாராயிட்டன்..  அதான் நேரம்..

அக்கா கொடுத்த பொம்மைய தூக்கி வீசுனன்.. ஹூம்.. அது உடையவே இல்ல.. பொம்மையத் தான் உடைக்க முடியல.. மாமா மூக்கையாச்சும் உடச்சிடலாம்ன்னு, ஓஓஓஒஓங்கி ஒரு உத விட்டன்.. ஹூம்.. மறுபடியும் ஒன்னுமே ஆகல.. உன்ன மாதிரி எத்தன பேர பாத்திருப்பன்ற மாதிரி நக்கலா சிரிச்சாங்க.. எனக்கு சோகத்துல அழுகையே வந்துடுச்சு..  எங்கைய இறுக்கிப் பிடிச்சாங்க.. வீச்சுன்னு கத்துனன்.. கையக் கால உதறுனன்.. ஹூம்.. எதுவுமே பலிக்கல...

அப்புறமா அம்மா மறுபடியும் என்ன எடுத்துகிட்டா.. இருக்கட்டும்.. இன்னொரு வாட்டி அங்க போகாமலா போயிடுவன்? நல்லா பலசாலியாகி, மாமா மூக்கு, பொம்ம ரெண்டையுமே ஒரே நேரத்துல உடைக்கனும்... இப்போதைக்கு இதான் என் ஆச..

சரி, பசிக்குது.. அம்மா சாப்பாடு ஊட்டி விட வந்துட்டிருக்கா.. மீதிக் கத அப்புறமா பேசலாம்..

27 comments:

  1. //மாமா மூக்கு, பொம்ம ரெண்டையுமே ஒரே நேரத்துல உடைக்கனும்... இப்போதைக்கு இதான் என் ஆச..//

    எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்

    ReplyDelete
  2. உங்களுக்கே உங்களுக்குத் தான்.. எவ்வளவு வேனுமோ எடுத்துச் சாப்பிடுங்க.. நன்றி..

    ReplyDelete
  3. நல்ல உணர்வுபூர்வமான கதை,அழகா இருக்கு. ஊசி போட்டதை விட்டுட்டீங்களே ஏன்..?
    பாராட்ட நிறைய இருக்கு . வயிற்றுகுள்ள இருந்ததை சொன்ன விதம் கிரேட் ஏ பிளஸ்.......இன்னும் நிறைய எழுதுங்க வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  4. அதெல்லாம் அந்த மாமாக்குத் தான்.. உங்களுக்கில்ல.. பயப்படவேண்டாம் :) நான் இப்பத் தான் உங்கட ப்ளாக் வந்தேன்.. நீங்க இங்க வந்திருக்கீங்க..

    ReplyDelete
  5. ஆ.. அப்பிடியா? கொஞ்சம் யோசிச்சு எழுதினேன்.. உங்க பின்னூட்டத் படிக்க ரொம்ப சந்தோஷமாயிருக்கு.. ரொம்ப நன்றி.. இன்னிக்கு கனவுலயும் சரண் வராமயிருந்தா சரி தான்..

    ஊசி போட்டது - //எதுவுமே பலிக்கல...// அப்படின்றதுல இருந்து புரிஞ்சுக்கனும்.. :)

    ReplyDelete
  6. //அத்த மாதிரி மக்குங்களுக்காக மேல படம் போட்டிருக்கன்.//

    அவ்வ்வ்வ்.. அத்தையோட மருமவன் மட்டும் ஜீஈஈஈனியஸா ஆகிட முடியுமா? ‘மரபு’ விடாதே!!

    ;-)))

    ReplyDelete
  7. சரண் சுட்டியை எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. நல்லாருக்கு சந்து

    ReplyDelete
  8. சுப்பர், கலக்கல். ;) ரசிச்சுப் படிச்சேன்.
    எப்ப மீதிக் கதை சொல்ல வரீங்க சரண்?

    ReplyDelete
  9. அவ்வ்வ்வ்.. அவ எனக்கு ”சொந்த” அத்த இல்ல.. அப்பாவோட நண்பருக்கு “தெரிஞ்சவங்க” :) நன்றி ஹூசைன் பாட்டத்த.. நாங்க சந்திச்ச கத தனியா இருக்கு..

    எப்பிடியோ, நீங்களும் அத்த மாதிரியே ஒரு மக்குதான் றத சொல்லாம சொல்லிட்டுப் போயிருக்கீங்க :))

    ReplyDelete
  10. நன்றி கவிசிவா.. முடிஞ்சா நீங்களும் தொடருங்க..

    ReplyDelete
  11. அத்த இன்னமும் தூக்கக் கலக்கத்துல இருக்கா.. அவ கிட்டக் கேட்டுத் தான் சொல்ல முடியும் :) நன்றி இமா பாட்டி :)

    ReplyDelete
  12. தீபுக்குட்டி கொஞ்சம் லேட்டாத்தான் வந்திருக்கிறா என சரணிடம் சொல்லுங்கோ சந்து.

    சரண் கதை நன்றாக இருக்கு. ஆ..... சந்துவுக்கும் கதை எழுத வருதூஊஊஊஊஊஊஊஊஊஉ... யாரங்கே..... ஜெய்..லானியின் கதாசிரியர் விருத்தைத் தூக்கிவந்து சந்துவுக்கு கொடுங்கோ.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்

    பி.கு:
    என் கதாசிரியர் விருதை, ஆமைப்பூட்டெல்லாம் போட்டுப் பூஊஊஊஊஊஊட்டி வச்சிருக்கிறேன்.... ஆரும் களவாட முடியாது, வாசலில் கோடாரிப் பூஸார் காவலிருக்கிறார்.

    ReplyDelete
  13. சரண்.... கெதி கெதியாச் சாப்பிட்டுப்போட்டு வந்து மீதிக்கதையைச் சொல்லுங்கோ... தீபுக்குட்டி வெயிட்டிங்......

    ReplyDelete
  14. எப்ப வருவார் சரண்...

    ReplyDelete
  15. சரணும் கதை சொல்ல ஆரம்பிச்சுட்டானா? சூப்பர்..ஒரே குழந்தைகள் ராஜ்யமா இருக்கு எங்க பார்த்தாலும்! :)

    அத்தைய தூங்க விடாதீங்க,அப்புறம் வாரக்கணக்குல தூங்கிருவாங்க..தட்டி எழுப்பி சீக்கிரம் வந்துடுங்க சரண்!

    ReplyDelete
  16. மிக்க நன்றி மஹி.. எந் தூக்கத்தக் கெடுக்க இப்படி சதி பண்ணுறீங்களே?

    ReplyDelete
  17. இலா.. இப்ப வந்துட்டுப் போனதும் சரண் தான் :))

    மறுபடியும் வர நாலஞ்சு நாளாவது ஆகும் இலா..

    ReplyDelete
  18. நன்றிங்க அமைச்சரே.. இம்சை அரசனுக்கு நல்ல போட்டியா இருக்குது உங்க பேரு :)

    ReplyDelete
  19. நான் மெது மெதுவாத் தான் சாப்பிடுவன் அதீஸ் பாட்டத்த :))

    தீபுக்குட்டிய வீட்டுக்கு அனுப்பி வையுங்க.. எனக்கு இங்க அவ்வளவா நண்பர்கள் இல்ல :( கூடச் சேர்ந்து விளையாட ஆள் வேனும்..

    உங்க பின்னூட்டமே விருது மாதிரி தான் அதீஸ்.. அதுக்கு மேல எதுக்கூஊஊஊஊ :))

    ReplyDelete
  20. சந்தூஸ், நல்லா இருக்கு. இந்த டாக்டர் கூத்து படிக்க நல்லா இருக்கு. ஏதோ நீங்களே போய் ஊசி போட்டு வந்தாப்போல அனுபவிச்சு எழுதி இருக்கிறீர்கள். இல்லை உங்கள் கணவரை கூட்டிச் சென்ற அனுபவமாஆஆஆஆஆ?.

    மீதியை எழுதுங்கோ? அதீஸ் தான் அத்தையா? இமா பாட்டி????
    நான் எப்பவும் அக்கா தான் ஹிஹி....

    ReplyDelete
  21. வான்ஸ்.. எல்லாம் ஒரு அனுபவந்தான்.. ஆனா எப்பூடின்னு சொல்ல மாட்டன்.. அதூஊஊஊ பரம ரகசியம் :)))))))

    அதீஸ் பாட்டத்த :) ரெண்டுக்கும் இடையில இருக்கறதால.. இமா பாட்டியே தான்.. கன்ஃபர்ம்ட்.. நீங்க தங்கச்சி.. அக்கா கூட இல்ல :) ஆக்சுசல்லி, முன்னாடி பகுதியில உங்கள அத்தையாக்கியிருக்கன் பரணுக்கு..

    ReplyDelete
  22. //வான்ஸ்.. எல்லாம் ஒரு அனுபவந்தான்.. ஆனா எப்பூடின்னு சொல்ல மாட்டன்.. அதூஊஊஊ பரம ரகசியம் :)))))))//எனக்குத் தெரியுமே! எனக்குத் தெரியுமே! நான் சரண் சொன்ன விதத்திலயேஏஎ... கண்டுபிடிச்சிட்டன் அக்கா. ;)

    //இமா பாட்டியே தான்.. கன்ஃபர்ம்ட்..// அதெல்லாம் ஓகே. நோ ப்ரொப்ளம்.
    //நீங்க தங்கச்சி.. அக்கா கூட இல்ல :) ஆக்சுவலி, முன்னாடி பகுதியில உங்கள அத்தையாக்கியிருக்கன் பரணுக்கு.. // கிக் கிக்

    ReplyDelete
  23. நன்றி ஜெய்லானி.. இப்போப் போலவே எப்பவும் தொடர்ந்து கலாய்ச்சிட்டு இருங்க.. அதுவே விருது தான்..

    ReplyDelete
  24. //எனக்குத் தெரியுமே! எனக்குத் தெரியுமே! நான் சரண் சொன்ன விதத்திலயேஏஎ... //

    கர்ர்ர்ர்ர்ர்ர்.. இப்பூடி ரகசியத்தப் போட்டு உடைக்கக்கூடாது.. சந்துவுக்கு ஊசிஊஊஊஊசியக் கண்டெல்லாம் பயம் ஏஏஏஏஏதுமில்ல இமா.. நம்புங்கோ :))

    ReplyDelete
  25. ரசிச்சு படிச்சேன் ஒவ்வொரு வரியும் கிளாஸ் ரைட்டிங் நோ glass its class...

    ReplyDelete
  26. மிக்க நன்றி வசந்த்..

    //class writing..//

    அப்ப வகுப்பறைல உக்காந்து எழுதினதுன்னு சொல்ல வர்றீங்க.. அதானே? :)))))))))))))

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)