01 July 2010

அக்காவக் கண்டு சொக்கி நின்ன மாமன்...

வலைகடல்ல எதயோ பாத்து, எதுமேலயோ இடிச்சு, அது பதிலுக்கு எங்கிருந்தோ எங்கயோ என்னத் தூக்கிப்போட, இந்த இடத்துல வந்து நின்னேன்..யாரு இவகன்னு தெரியுதா?

மொதல்லாம், எனக்கு அசின் ன அவ்வளவாப் பிடிச்சதில்ல (ரசிகப் பெருமக்க ஆரும் சண்டைக்கு வந்துபோடாதீங்கப்பு).. ஏன்னு தெரியல (கண்டிப்பா பொறாமை காரணமில்ல :) ).. போக்கிரி, கஜினி.. இப்படி சில படங்களப் பாத்திருந்தாலும், என்னமோ, இவிக முகம், பாத்தவுடனே அழகாயிருக்குன்னு மனசுல பதிஞ்சதில்ல.. ஆனாலும், நம்மூருப் பயலுவ கொஞ்சம் பேருக்கு அசின் ன ரொம்பவே பிடிச்சிருக்கறதப் பாத்திருக்கேன்..

எது எப்பிடியோ, இந்தப் புகைப்படத்துல இவிக கொஞ்சம் (சரி.. சரி.. நெறயத்தேன்...) அழகா இருந்த மாதிரி இருந்தது.. தொடர்ந்து, இவிக காலரி பாக்க ஆரம்பிச்சேன்.. முன்னாடி இருந்ததுக்கும் இப்போப் பாக்கறதுக்கும், மேக்கப்பு ல, ஸ்டைலுல, நிறைய மாற்றங்கள்.. இந்திப் படத்துல தல காட்ட ஆரம்பிச்சப்புறம், அக்கா (அப்பிடிக் கூப்பிடலாமாங்க்கா??) சும்மா ஜொலிச்சுகிட்டு இருக்காங்கன்னு தோனுது... என்னது, அக்கா மேக்கப் இல்லாமயும் அழகாத்தேன் இருப்பாங்கன்றீயளா.. சரி.. சரி.. விஷயத்துக்கு வருவோம்..

இப்பிடி அடுத்தடுத்ததா பாத்துக்கிட்டு இருக்கறப்பத்தேன், இந்தப் போட்டோவும் கண்ணுல பட்டுது..


இதுலயும், மேக்கப் கொஞ்சம் அதிகமாயிருக்கற மாதிரித்தேன் எம்மனசுக்குப் பட்டுது (நேர்மையாத்தேன் சொல்லுதேன், சந்தேகங்கிந்தேகம் படாதீக).. இதுல வேற நம்மூரு பொண்ணுப்புள்ள வேசத்துல இருக்காகளா.. இதுல இவிய சிரிக்கறதப் பாத்தா, என்னமோ எதுத்தாப்புல மாமன் இருக்கற மாறியும், அவிய இவியள லுக்கு வுட்டுகிட்டு இருக்கற மாறியும், அக்கா அப்பிடியே கொஞ்சம் வெக்கப்பட்டு சிரிக்கற மாறியும் எனக்குப் பட்டுது.. அதேன்.. பதிலுக்கு, நம்ம மாமன் மனசுல இப்பிடி இவியளப் பாத்தோடனே என்ன தோனியிருக்கும்ன்னு, நெனச்சுப் பாத்தேன்.. மாமன்
                                
                                                 இப்பிடி யோசிச்சிருப்பாகளோ???

இல்ல,
                                                இப்பிடி பாட்டுப் படிச்சிருப்பாகளோ?

சரி சரி, நமக்கெதுக்கு ஊர் வம்பு??

இன்னொன்னும் தோணுச்சு.. நம்ம அக்கா யேன் இப்பிடி சைடு லுக்கு விடறாக? திரும்பி நின்னு நேராப் பாக்க வேண்டியதான மாமன் மொகத்த??.. ஆருக்காவது பதிலு தெரிஞ்சா சொல்லிப்போடுங்கப்பு.. புண்ணியமாப் போவும்..

சரி, ஆரம்பிச்ச இடத்துக்கே மறுபடியும் வருவோம்.. அக்கா பண்ணுன காரியத்துக்கு அவிய மேல கோவந்தேன்..

29 comments:

 1. மின்னஞ்சலை விட அதிவிரைவாக தகவல் கொடுத்த வேகத் தபால் நிபுணருக்கு மிக்க நன்றி.. :))))

  ReplyDelete
 2. அஸின் விஷயமெல்லாம் தெரில.அழகா இருக்காங்க..கவிதை சூப்பர்!வாழ்துக்கள்!

  பாட்டு எனக்கும் பிடிச்ச பாட்டு! :)

  ReplyDelete
 3. மிக்க நன்றி மஹி.. உங்களுக்கும் அசின் ன பிடிச்சுப் போச்சா? :)

  அது, செய்திகளப் புரட்டிகிட்டு இருந்தப்போ கண்ணுல பட்ட விஷயம்..

  அதே வேகத்துல வந்து வடையயும் தட்டிகிட்டுப் போயிட்டீங்க :) ஹைஷ் வந்து ஏமாந்து போகப் போறாரு :0

  ReplyDelete
 4. ஆ.... வடையில்லையா நேக்கு??? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 5. ஏன்னு தெரியல (கண்டிப்பா பொறாமை காரணமில்ல :) ).//// அப்போ காரணத்தைச் சொல்லாட்டில் விடமாட்டோமில்ல:), எனக்கு அசினைப் பிடிக்கும், ஏன் எண்டால்... என்னைமாதிரியே இருப்பதால:)))).

  சரி இதன் மூலம் என்ன சொல்ல வாறீங்க? சொல்ல வந்ததை மறந்திட்டீங்களோ???:)... அதுதான் சொல்ல மறந்த கதை.....

  ReplyDelete
 6. ஆ... சந்து!! அது உங்கள் கவிதையோ? நன்றாக இருக்கு. தொடர்ந்து எழுதுங்கோ. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. //ஏன் எண்டால்... என்னைமாதிரியே இருப்பதால//

  அசின் அக்கா.. ப்ளீஸ்.. தப்பா நினைச்சுக்காதீங்க.. எங்கட அதீஸ் இப்பிடித் தான் அப்பப்போ சம்பந்தமில்லாம பேசிட்டுச் சுத்துவாங்க :))))

  இதெல்லாம் எப்பிடி ஆரம்பிச்சு எங்க போய் முடிஞ்சது ன்றது தான் கதை :))).. இப்போக் கதை புரிஞ்சதோ? :))

  மிக்க நன்றி அதீஸ்.. அதொரு விபத்து.. நடந்துடுச்சு.. அவ்ளோதான்.. தொடர பயம்மா இருக்கு.. :))

  ReplyDelete
 8. கவிதை சூப்பர். வாழ்த்துகள்.

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 9. வடயத் தவற விட்டுட்டீங்கோ ஹைஷ்.. எப்பிடியோ சமாளிச்சு பசி மயக்கத்தோடே படிச்சிப்போட்டீங்கோ :)
  இந்தாங்கோ.. லெமன் ஜூஸ்.. குடிச்சிட்டுத் தெம்பாகுங்கோ..

  ReplyDelete
 10. சந்து, என்ன சொல்ல வரீங்க! எனக்கு தான் விளங்கவில்லையா?

  என்ன அசின் புராணமா இருக்கு. அசினை பார்த்தா அசப்பிலை என்னை மாதிரி இல்லை??

  எனக்கு இந்த காமடி நடிகர், நடிகைகள் மனதைக் கவர்ந்து இழுப்பது போல ஹீரோயின்கள் மீது பெரிதாக நாட்டம் வருவதில்லை.

  எதிர்த்தாப்போல மச்சான் யாரும் இல்லை. பணத்தைக் குடுத்தால் நல்லாவே சிரிப்பார்கள்.

  ReplyDelete
 11. முழுதாகப் பாத்தீங்களா வான்ஸ்..அசின் மேக்கப் பாத்து நான் எழுதினதை யூத்ஃபுல் விகடனுக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதைத்தான் எப்படி ஆரம்பிச்சதுன்றதில் இருந்து சொல்லியிருக்கிறேன்..

  //என்ன அசின் புராணமா இருக்கு. அசினை பார்த்தா அசப்பிலை என்னை மாதிரி இல்லை??//

  உங்களப் பாத்திருக்கறதால தெகிரியமாச் சொல்லிக்கறன்.. இல்லை :))

  ReplyDelete
 12. //உங்களப் பாத்திருக்கறதால தெகிரியமாச் சொல்லிக்கறன்.. இல்லை :))//

  Grrrrrrrrrrrrrrrrr....

  ReplyDelete
 13. அலங்காரத்தாரகை அருமை :)

  ReplyDelete
 14. சந்தனா கவிதையிலும் கலக்குறீங்க...

  அந்த உழவன் பாட்டு செம்ம மேட்ச் கவிதைக்கு...

  உங்க கவிதை அறிமுகத்துல கிராமத்து பேச்சு நடை பட்டைய கிளப்புறீக...

  //எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
  மின்னஞ்சலை விட அதிவிரைவாக தகவல் கொடுத்த வேகத் தபால் நிபுணருக்கு மிக்க நன்றி.. :))))//

  அதாரு?

  ReplyDelete
 15. தலைப்பு டக்கர் மச்சி...

  ReplyDelete
 16. // நம்ம அக்கா யேன் இப்பிடி சைடு லுக்கு விடறாக? திரும்பி நின்னு நேராப் பாக்க வேண்டியதான மாமன் மொகத்த??.. ஆருக்காவது பதிலு தெரிஞ்சா சொல்லிப்போடுங்கப்பு.. புண்ணியமாப் போவும்..//

  ஒன்னுமில்ல அது வந்து மாலைகண் வந்ததிலிருந்து நெரா பாத்தா எதுவும் சரியா தெரியறதில்ல அதேன் இப்பிடி பாக்குறாக..ஹி..ஹி..
  //

  ReplyDelete
 17. விகடன் கவிதைக்கு வாழ்த்துக்கள்..!!

  அந்த பாட்டு என் ஃபேவரைட் பாட்டு...சூப்பர்

  ReplyDelete
 18. ஆமாங்க அசின்னுன்னு சொன்னீங்களே..யாரு அது..உங்க சொந்தமா..???


  படத்துல இருக்கிரது நீங்களா..??..உங்க சின்ன வயசு படமா...?ஹி..ஹி..

  ReplyDelete
 19. ஹிஹி..வந்துட்டம்ல?

  வாழ்த்துக்கள் கவிஞர்.சந்தனா அவர்களே!வளரும் கலைஞர்.சந்து வால்க..ச்சீ,ச்சீ,வாள்க..இதுமில்ல..வாஆஆஆழ்க!! :)

  உந்த சொங் புஜ்ஜிக்கு புரிலைன்னாலும் அப்பப்ப பாடிக்காட்டி "சரியான அரை லூஸை கட்டிகிட்டேனே"ன்னு புஜ்ஜி விடற லுக்கு பாக்குறதுல ஒரு அலாதி சந்தோஷம்..ஹிஹிஹிஹி!

  பிசினக்கா கதையெல்லாம் படிக்க டைம் லேது! ஜீனோ பிஸி வெயிட்டிங் பார் தி FIFA க்வார்ட்டர் பைனல்ஸ்யா!!!

  ராவணன் விக்ரம் ஸ்டைல்ல பேஸரீங்கோ சந்து???படம் பாத்த எபெக்ட்டோஓ?

  எல,ஆருல அங்க? கல்லப் பத்தி ஜீனோவ அடிக்க வாறது?? ஓடுல,ஓடுல...ஜீனோ,ஓடீடுல!!

  ReplyDelete
 20. மிக்க நன்றி வசந்த்.. ஒன்னு ரெண்டு வாட்டி தான் நல்லா வருது.. மத்ததெல்லாம் அப்பிடியே திக்கி நின்னுடுது..

  பாட்டும் அந்த நேரத்துக்கு சரியா நினைவுக்கு வந்தது.. பொருந்திடுச்சு..

  பேச்சு நடை :) கொஞ்சம் இயல்பாவே வர்றது, கொஞ்சம் சினிமா பாக்கறதால வர்றது :)

  அது.. எனக்கப்புறம் பின்னூட்டமிட்டு இருக்கறவங்க :)

  ReplyDelete
 21. ஹிஹ்ஹீஹீ.. சத்தம் கேட்டுதுல்ல :))

  பின்னாடி வால் வச்சிருந்தா இப்பிடித் தான் வால்க சொல்ல முடியும் ஜீனோ :))

  பாவம் டோரா அண்ணி.. லுக்கு விட்டு மட்டும் இனிமே என்னாவப் போவுது??:)))))

  பக்கத்துல புஜ்ஜி குந்தியிருக்காங்களா ஜீனோ? இவ்வளவு அழகான பிசினக்காவ கண்டும் காணாத மாதிரி போறீங்க? :)

  எப்பிடி தலதெறிக்க ஓடுனாலும், முன்னால வந்து நிப்போம்ல :)) இதுவும் ராவணன் படம் பாத்த எஃபெக்ட்டு தாங்கோ ஜீனோ..

  ReplyDelete
 22. மாலைக்கண்ணுக்கு இப்பிடியொரு வைத்தியமா? யப்பா...

  மிக்க நன்றி ஜெய்லானி.. ஆஹா, நிறைய பேருக்கு அந்தப் பாட்டு பிடிச்சிருக்கே..

  சொந்தமே தான்.. அசினு, எனக்கு அக்கா மொற வேணும் ஜெய்லானி..

  ஹி ஹி.. அது என்னோட பெரிய வயசுப் படம்.. அதாவது, நான் வளர்ந்து பெரிய பொண்ணானா இப்பிடித் தான் இருப்பேனாம் :))))))))))))

  ReplyDelete
 23. கவிதை.. சுப்பரா சிந்திக்கிறீங்க. பாராட்டுக்கள். இன்னும் நிறைய எழுத வேண்டும் சந்தனா. எதிர்பார்க்கிறேன்.

  பாட்டும் அழகு. வேலைக்கு நடுவே ஒரு ரிலாக்சேஷன். நன்றி.

  ReplyDelete
 24. மிக்க நன்றி இமா.. நல்லதா ஏதும் தோணினா கண்டிப்பா எழுதறேன்...

  ReplyDelete
 25. ஏனுங்க...அக்கா மேல என்ன கோவமுங்க? பொண்ணு நல்லா லட்சனமாதானுங்க இருக்கு... சரி சரி உங்களுக்கு என்ன பிரச்சனையோ.. உடுங்க...ஹி ஹி ஹி

  ReplyDelete
 26. அதுவொன்னுமில்லீங்.. எனக்குமு அவியளுக்குமு வாய்க்கா வரப்புத் தகராறு.. அந்தக் கோவந்தானுங்..

  ReplyDelete
 27. சந்து அன்னிக்கே யூத்ஃபுல் விகடனில் அந்த கவிதையை படித்தேன். அட நம்ம சந்தனாவோன்னு நினைச்சேன். இன்னிக்குத்தான் தெரிஞ்சுது அது நம்ப சந்துவே தான்னு. நல்லாருக்கு.

  பிசின் சே.. சே... அசின் பாவம் விட்டுடுங்க

  ReplyDelete
 28. நன்றி கவி.. நானே தான்.. :)

  அக்காவ விட்டுடலாமா.. சரி.. போனாப் போவுது..

  ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)