17 July 2010

ரங்கோலிகவனிக்க: படத்தின் கதையேதும் சொல்லவில்லை :)

டாய் ஸ்டோரி 3, 3 டி யில் பார்த்தோம்.. இதற்கான நல்ல விமர்சனங்களை படித்திருந்ததால், மற்ற படங்களை விட்டுவிட்டு இதற்கே செல்வதென முடிவெடுக்கப்பட்டது.. எனக்கு இப்படம் காண விருப்பமிருந்தாலும், கொஞ்சம் நடுக்கமாகத்தானிருந்தது.. ஏற்கனவே ஒரு முறை கார்ட்டூன் கதாப்பாத்திரங்களைத் தெரியாமல் முழித்திருக்க, இப்போது இதில் வரக்கூடிய பொம்மைகளையும் யார் ஏதென்று தெரியாமல் முழிக்கப் போகிறோம் என்றெண்ணினேன்.. மேலும், இப்படத்தின் முதலிரண்டு பாகங்களை பார்த்திராததால், இது புரியாமல் போய் விடலாம் என்றும் தோன்றியது.. வேறெதுவும் உருப்படியாக இல்லாததால் இதற்கே செல்ல வேண்டிய நிலைமை.. இதையெல்லாம் தாண்டி, படம் பார்த்த பொழுது நன்றாகவே புரிந்தது.. படம் பிடித்தது.. ஆனால், ரொம்போப் பிடிச்சிருக்கு என்று உரக்கக் கத்திச் சொல்ல முடியவில்லை.. ஒரு வேளை, முந்தைய பாகங்களையும் பார்த்திருந்தால், கதையின் பாத்திரங்களோடு நன்றாகவே ஒன்றியிருந்திருக்கலாம்.. படத்தில், பாராட்ட வேண்டிய விஷயங்கள் நிறைய.. கதையின் போக்கு சீராக இருந்தது.. அனிமேஷன் மிக அருமை.. பொம்மைகளின் உணர்வுகளை அழகாக வடிவமைத்திருந்தார்கள்.. மனம் ஏங்குகிறது - இப்படியொரு கற்பனையுலக உருவாக்கப்பணியில் இருந்தால் நல்லாயிருக்குமென்று.. முடிவில், சுபமோ சுபமென்று செயற்கையாக முடிக்காமல், சுபமாக அதே சமயம், நடைமுறைக்கு ஏற்றவாறு படம் முடிக்கப்பட்டது நன்றாகயிருந்தது.. கிட்ஸ் மூவி என்ற உணர்வு இறுதியில் வந்தாலும், உண்மையில் அது குழந்தைகளுக்கான படந்தானே.. ம்ம்..

இந்தப் படத்தைப் பற்றி இவ்வளவு குறைவாக எழுதியிருப்பவள் நான் மட்டுந்தானென்று நினைக்கிறேன்.. :)) 

படம் பார்த்து விட்டு வீடு திரும்புகையில், வழியில் காண நேர்ந்த துணிக்கடையில் தென்பட்ட பொம்மைகளும், இப்படித் தான், மனிதர்களற்ற பொழுதுகளில் பேசிக்கொள்ளுகின்றனவோ என்ற எண்ணம் வந்து புன்னகைக்கச் செய்தது..

நீங்களும் பார்த்துட்டுச் சொல்லுங்க.....

********************

இப்போது தான்.. கொஞ்சம் நேரம் முன்பு, ஒரு தோழி லேப்டாப்பை தூக்கிக் கொண்டு பயங்கர உற்சாகமாய் வந்தார்.. அவர் லேப்டாப்பில் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தாராம்.. ஆனால், யாரோடாவது சேர்ந்து பார்த்தால் இன்னமும் நல்லாயிருக்குமென்று தோன்றியதால், அதை அப்படியே பாஸ் செய்து விட்டு, இங்கு வந்திருந்தார்..


வேறொன்றுமில்லை.. தோழி இன்னமும் கல்லூரி வயதை விட்டு நீங்காமல், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் பார்த்து குதூகலிப்பவர்.. எமக்கெல்லாம் பொழப்பே திண்டாட்டமாக இருக்கையில், இது போன்றவைகளைப் பார்த்து வெகு நாட்களாகிப் போயாச்சு.. இருந்தாலும், இந்த நிகழ்ச்சி பிடித்தது.. புதிதாக கற்பனையுடனும் திறமையுடனும் இருந்ததால்.. நீங்களும் பார்த்துட்டுச் சொல்லுங்க..

********************

மெயிலில் வந்தவை.. அரதப் பழசாயிருந்தா, கமுக்கமா கிழிச்சுப் போட்டுட்டுப் போயிட்டே இருங்க :)) புதுசா, முடிஞ்சா சிரிங்க.. கஷ்டமாயிருந்தா விட்டுடுங்க :))
ஓக்கை.. நல்லிரவு

**************************************************************************


20 comments:

 1. கதை சூஉப்பாராஆ இருக்கு:) சுட்ட படம் எதும் வரவில்லையே ???

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 2. //கஷ்டமாயிருந்தா விட்டுடுங்க // என்று சொன்னா விட்டுட முடியுமா சந்தூஸ்??
  எனக்கு அங்கே ஒன்றும் தெரியவில்லை. ;( பார்க்காம வடை, ஆயா என்று புலம்ப விரும்பவில்லை. மீண்டும் சில மணித்துளிகள் கழித்து வாருகிறேன். ;)

  ReplyDelete
 3. கொயப்புறீங்களே சந்து.... எதைச் சொல்ல வாறீங்க?.

  கடைசியில எந்தப்படமும் தெரியவேயில்லையே, எனக்கு மட்டும்தானோ, எல்லோருக்கும் இப்படியோ??

  ReplyDelete
 4. ஹைஷ்.. இமா.. அதிரா.. எனக்கு டாய் ஸ்டோரி படம் மட்டுந்தான் தெரியவில்லை.. அதை மாத்திட்டேன்.. வீடியோவும், நகைச்சுவை படங்களும் நல்லாத் தான் தெரியுது.. மறுபடியும் (நேரமிருந்தா) எட்டிப் பாருங்கோவன்.. அப்பிடி ஒன்னுமே தெரியலே என்றால் இந்த இடுகைய நீக்கிடறேன்..

  ReplyDelete
 5. சந்தனா வீடியோ பார்த்து கண்ணீர் வர சிரிச்சேன் நிச்சயம் இது மாதிரியான நிகழ்ச்சிகள் மிஸ் ஆகுறது வருத்தமா இருக்கு...

  டாய் ஸ்டோரி !!! :(

  அந்த படத்தையெல்லாம் மெயில்ல இருந்து அப்படியே காபி பேஸ்ட் பண்ணிருப்பீங்களோ எனக்கு ஒரு படமும் தெரில...

  ReplyDelete
 6. மிக்க நன்றி வசந்த்!! எனக்கும் வீடியோ பிடிச்சிருந்தது.. அதுவும் கேப்டன்.. ஹாஹ்ஹா..

  சரியா சொல்லியிருக்கீங்க.. உங்களுக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டிருக்கா? மெயில்ல இருந்து அந்த யூ ஆர் எல் ஐ அப்பிடியே காப்பி பண்ணி போட்டேன்.. ஹூம்ம்.. எனக்குத் தெரியறது உங்க யாருக்கும் தெரியல போல..

  சரி இன்னொருக்கா முயற்சி பண்றேன்.. படங்களை ஒன்னொன்னா கணினில இறக்கி, அப்புறமா இங்க ஏற்றிப் பாக்கறேன்.. நன்றி உங்க உதவிக்கு!

  ReplyDelete
 7. மன்னிக்கனும்.. இப்போ மறுபடியும் கணினிக்கு இறக்குமதி செஞ்சு அங்கயிருந்து ஏற்றியிருக்கேன்.. தெரியுதான்னு மறுபடியும் பாருங்க.. மெயில் படங்கள இங்க போடறது இதான் முதல் தடவை. இப்பவும் தெரியாட்டி.. நான் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. (தெரிஞ்சவங்க யாராவது வந்து உதவற வரைக்கும் :)) )

  ReplyDelete
 8. /மெயில் படங்கள இங்க போடறது இதான் முதல் தடவை. இப்பவும் தெரியாட்டி.. நான் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்../ இப்ப படங்கள் தெரியுது சந்தனா..நேற்று நான் பார்த்தப்ப படங்களில்ல,காலியா குட்டிக்குட்டிப்பெட்டிகள்தானிருந்தது.

  கடைசி படஜோக் மட்டுமே நான் ஏற்கனவே பார்த்தது. வீடியோ இன்னும் பார்க்கலை! :)

  ReplyDelete
 9. இப்போ எல்லாமே தெரியுது சந்து.....

  ReplyDelete
 10. நன்றி மஹி.. பிஸ்ஸா தான் அனுப்ப முடியாதுன்றான்.. நீங்க உங்கட பன்ன அனுப்ப முயன்று பாருங்க :)

  நேரமிருக்கும் போது வீடியோவும் பாருங்க..

  நன்றி அதீஸ்.. புரிந்ததா?

  ReplyDelete
 11. ;)

  I liked that fish screen saver & the photo scannnningoooooo ;)

  ReplyDelete
 12. நன்றி இமா.. எனக்கும் :)

  உங்கட ஃபிஷ் டாங்க் (ப்ளாக்) ல இருக்கற மீன்களும் இப்பிடித் தான் கதைத்துக்கொண்டிருக்கின்றனவாம் :)

  ReplyDelete
 13. எனக்கும் சட்டென்று அதேதான் மனதில் தோன்றியது. ;)

  அட் லீஸ்ட் அவைக்கு நோயும் வலியுமாவது இல்லை. இங்கு குட்டி சார்க் ஒருவர் இரவு இறந்து போனார். மற்ற ஆளும் இன்னும் ஒரு வாரம் தாங்கினால் பெரிது போல இருக்கிறது. some infection. ;(

  ReplyDelete
 14. சந்தூ, எனக்கு டிஸ்னி படம் எல்லாமே பிடிக்கும். Despicable Me படம் பார்த்தோம் ( இன்று போனோம் ). சூப்பர் படம். என் மகன் மிகவும் ரசித்துப் பார்த்தார். தெளிவான கதை, காட்சிகள், குட்டீஸ்களுக்கும் விளங்கும் வசங்கள்.
  Toy story முதல் பாகம் மிகவும்நன்றாக இருந்தது. 2வது முதலாவதோடு ஒப்பிடும் போது பரவாயில்லை ரகம். மூன்றாவது என் பிள்ளைகளுக்கு பிடித்திருந்ததாக சொன்னார்கள். நான் 3 வது பார்க்கவில்லை.

  வீடீயோவில் மைக்கேல் ஜாக்ஸன் மியூசிக் மட்டுமே பிடித்திருந்தது. மற்றது பரவாயில்லை ரகம்.
  ஜோக் எல்லாமே சூப்பர்.

  தலைப்பு ஏன் ரங்கோலி ( நான் ஏதோ ரங்கோலி கோலம் என்றல்லவா நினைத்து வந்தேன் ஹிஹி.....) ஐயோ! இனிமே நான் எதுவும் கேட்கலைப்பா. அப்படியே ஓடிப்போயிர்றேன்.

  ReplyDelete
 15. ம்ம்.. சரிதான் இமா.. என்ன பண்ணுவது... பிறந்தால் எல்லாத்தையும் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்..

  கொண்டு போய் வைத்தியரிடம் காட்டி ஏதாவது செய்ய முடியுமா அடுத்தவருக்கு?

  ReplyDelete
 16. டெஸ்பெக்கபிள் மீ - அடுத்ததா பார்க்கலாம்ன்னு இருக்கேன்.. பார்க்கலாம் :)

  டாய் ஸ்டோரி முதலிரெண்டு பாகங்கள் பார்க்கவில்லை.. பார்க்கனும்..

  நன்றி வானதி. அந்த வீடியோல வர்றதெல்லாம் பிடிக்கனும்ன்னா, நிறைய தமிழ் சினிமா பார்த்திருக்கனும் :)

  இது ரொம்ப கலர்ஃபுல்லா இருக்கா, அதான் ரங்கோலி.. ஹிஹி..

  ReplyDelete
 17. சாரி என்னுடைய பிரவுசர்ல(ஃபயர் பாக்ஸ்) ஓவரா ஸ்குரோல் ஆகுது . எதையும் படிக்க முடியல. வேறயில டிரை பண்ரேன்.

  ReplyDelete
 18. ஜெய்.. இப்பிடியெல்லாம் சொல்லிட்டு எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆகலாம்ன்னு பாத்தா விடமாட்டோம்ல :) சும்மா சொன்னேன்.. என்னோடது க்ரோம்.. அதுல முடிஞ்சா பாருங்க..

  ReplyDelete
 19. சந்தூ எனக்கு ஸ்க்ரீன் சேவர் மீன்தான் புடிச்சுது. பாவம் :( அன்னிக்கு எனக்கு எதுவுமே தெரியல. சரி நம்ப ப்ரவுசர்லதான் ஏதோ பிரச்சினையோன்னு நினைச்சு ஓடிட்டேன் :). வீடியோ இன்னு பார்க்கலை பார்த்துட்டு வந்து சொல்றேன்

  ReplyDelete
 20. ம்ம்.. எனக்கு நிறைய பிடிச்சது.. இன்னும் கூட கொஞ்சம் இருக்கு..

  வீடியோ நல்லாயிருக்கும்.. பாருங்க.. சீக்கிரமே முடிஞ்சிடுச்சுன்னு வருத்தமாயிருக்கு :)

  ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)