வித்தியாசமான திரைப்படங்களை காண விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு படத்தை ரெண்டு மணி நேரம் உக்காந்து பாக்க பொறுமையும், அதுக்கப்புறம் ஒரு அரை நாள் உக்காந்து யோசிக்க நேரமும், தேவைப்பட்டால் இன்னொரு முறை பார்க்கும் வசதியும் இருக்கா? அப்படி என்றால் தாராளமாக இந்தப் படத்துக்கு போகலாம் :)
இதை பார்த்து விட்டு வெளியில் வரும் போது, இரண்டு வகையான எண்ணங்கள் தோன்றலாம் - என்னடா படம் இது? ஒரு மண்ணுமே புரியல.. என்னத்த தான் சொல்லியிருக்கான்? இல்லையென்றால், அட அட அட.. என்னமா எடுத்திருக்கான்.. அருமை அருமை... இப்படி ஒரு தெளிவான மனநிலையுடன் நீங்கள் வெளியே வந்தால், இதில் எது தோன்றினாலும், உங்களுக்கு படம் புரியவில்லை என்று தான் பொருள் :))
மாறாக, படம் முடிந்து வெளியே வரும் போது, படத்துக்கு போகும் போது எந்த வழியில் போனோம், அப்போது என்ன காலநிலை - இதெல்லாம் மறந்து போய், சென்றது, பார்த்தது எல்லாமே ஒரு கனவாக, குழப்பமாகத் தோன்றினால், படம் ஏதோ புரிந்திருக்கிறது என்று அர்த்தம்.. :)) எங்களுக்கும் இப்படித்தான் ஆயிற்று.. வீட்டில் இருந்து கிளம்பும் போதே வானம் மேகமூட்டமாய்த் தான் இருந்தது.. பின் கருக்கல் அதிகமாகி, இடி இடித்து, இருள் சூழ்ந்து, மழை துவங்கி, வெள்ளமாகப் பெருக்கெடுத்தது.. வானிலை பார்க்காமல், பொதுப் போக்குவரத்தில் சென்றதால், கிட்டத்தட்ட தெப்பமாக நனைந்து, டிஸ்யூ வைத்து துவட்டிக் கொண்டு சென்றோம் :)) பாதிவழியில் பஸ் ஐ நிறுத்தி விட்டார்கள்.. இதற்கு மேல் போக முடியாது, வழியெல்லாம் ஒரே தண்ணியென.. சிறிது நேரம் காத்திருந்த பின் நிலைமை சரியாயிற்று.. ஆனால், வீடு திரும்பும்போது, வானம் தெளிந்து, பாதைகளும் தெளிந்திருந்தன.. எல்லாமே ஏதோ ஒரு கனவாய்த் தோன்ற, வீடு வந்து சேர்ந்தோம்..
Inception எண்டால் ஆரம்பம் என்று பொருளாம்.. படத்தின் ஆரம்பமும் முடிவும் ஒரே மையப் புள்ளியில் வந்து முடிவது போல் இருக்கிறது.. அப்படி என்றால் ஆரம்பம் எங்கே?? முடிவுதான் எங்கே? எத்தனை பேர் deja vu பார்த்திருப்பீர்கள் எனத் தெரியவில்லை.. ஆனால் sixth sense, அப்புறம் நம்மூரு 12 B நிறைய பேர் பார்த்திருப்பீர்கள்.. ஆனால், இவற்றையெல்லாம் தூசு என்று சொல்லும் அளவுக்கு complex கதையிது :)
படத்தின் கதையைச் சொல்ல, அதனை முழுமையாக அனுபவித்து விமர்சிக்க இப்போது எனக்கு தெம்பு கிடையாது.. (ஹி ஹி, இன்னும் ஒரு முறையாவது மறுபடியும் பார்த்தால் தான் நன்கு புரியும் :)) ).. இம்புட்டு பில்டப் கொடுத்து விட்டு, ஒன்னுமே சொல்லாம எஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆவுறயே என்று திட்டுபவர்களுக்காக, மேம்போக்காக மட்டும் சொல்லிப் போகிறேன்..
ஹீரோ (லியோ... டி காப்ரியோ) ஓர் உள்ளங்கவர் கள்வன் :) அதாவது, எதிராளியின் மனதில் இருக்கும் ரகசியத்தை திருடுபவன்.. எப்படி தெரியுமா - எதிராளியும் இவனும் தூங்க, தூக்கத்தில் இருவருக்குமான ஒரு கனவினை சஞ்சரித்து, அந்தக் கனவுக்குள் ஓர் உலகத்தை, சம்பவங்களை உருவாக்கி, இவனும் எதிராளியும் அதில் பேசித்திரிந்து, அப்போது எதிராளியின் மனதில் இருப்பதை அறிந்து கொள்ளையடிப்பவன் :)))
குற்றவாளியான காரணத்தால், லியோ தன் குழந்தைகளிடம் இருந்து பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலை.. தனக்கான ஒரு வேலையை லியோவால் நடத்திக்கொடுக்க முடிந்தால், லியோவை அவனது குழந்தைகளிடம் சேர்ப்பிக்கும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக பெரும் புள்ளி ஒருவன் பேரம் பேசுகிறான்.. இது இன்னும் சற்று கடினமான வேலை.. அதாவது, லியோ, எதிராளி ஒருவனது ஆழ்மனதிற்குள் ஊடுருவி, அவனுள் அப்போதைக்கு உறுதியாக நிற்கும் ஓர் எண்ணத்தை மாற்றியமைக்க வேண்டும்!!
இந்த எதிராளியின் பெயர் ராபர்ட்.. இவனது அப்பா பெட்ரோலியத் துறையுலகில் பெரும் பணக்காரர்.. அப்பா மரணப்படுக்கையில் இருக்க, மகன் வாரிசாகப் போகும் நேரம்.. வில்லனுக்கும் இவர்களுக்கும் இடையேயான தொழிற் போட்டியின் காரணமாகவே லியோவுடன் இந்தப் பேரம் பேசப்படுகிறது... லியோவும் அதற்கு சம்மதிக்க, அதற்கான ஏற்பாடுகள், ஆட்கள் என தேவைகளை செய்து முடிக்கிறார்கள்.. கனவுக்குள் கனவு கண்டு, அதற்குள் இன்னோரு கனவு கண்டு என மெதுமெதுவாக எதிராளியின் மனதை கையகப்படுத்த வேண்டும்.. எல்லோருமாக இந்த விளையாட்டின் விதிமுறைகளை விவாதிக்கிறார்கள்.. கனவில் பயணிக்கும் சமயம், நனவுலக்குக்கும் கனவுலகுக்குமான காலநிலைப்பாடு வெகுவாக வேறுபடுகிறது.. ஒரு மணி நேரக் கனவென்றால் வெளியே ஐந்து நிமிடம் மட்டுமே ஆகியிருக்கும்.. இதனால் ஏற்படும் விளைவுகள், கனவுலகில் இருந்து விழிக்க என்ன செய்ய வேண்டும், கனவிலே இறந்துபோனால் என்ன நடக்கும், இது கனவா நனவா எப்படி கண்டுபிடிக்க என பல விதிமுறைகள்!!!
அப்புறம் தான் படம் சூடு பிடிக்கிறது.. ராபர்ட் செல்லும் விமானத்தில் இவர்களும் பயணமாகி, அவனுக்கு மயக்க மருந்து கொடுத்து தூங்க வைத்து விட்டு, இவர்களும் தூங்க.. முதலில் ஒரு பொது கனவினை உண்டாக்கி - அதில் அனைவரும் பயணிக்க, அதற்குள்ளே இருந்து இன்னொரு கனவு, அதற்குள்ளே இருந்து இன்னொன்று என, கிட்டத்தட்ட ஐந்து கனவுலங்கள்.. அதே பாத்திரங்கள் தான், ஆனால் முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலைகளில்... கொஞ்சம் கொஞ்சமாக ராபர்ட்டின் அந்த எண்ணத்தை நெருங்க, அவனது மனமோ இது போன்ற திருட்டுகளிடம் இருந்து தப்பிக்க ஏற்கனவே பெற்ற பயிற்சியால் இவர்களைச் சுட்டு எதிர்க்க முயல.. இதற்கிடையே, லியோவின் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் ஒரு வலி வேறு வந்து குறுக்கிட...
ஒரு வழியாக ராபர்ட்டின் மனதில் இவர்கள் விருப்பப்பட்ட அந்த எண்ணத்தை ஆழ விதைத்துவிட்ட பின், முடிவில், எல்லாரையும் ஹா என்று வாய் திறக்க வைத்ததோர் அழகான திருப்பத்துடன் முடிக்கிறார்கள்...
படத்தில் பிடித்த விஷயமே - மிகக் கடினமான திரைக்கதையை நமக்கும் புரியும் வண்ணம் வடிவமைத்திருப்பது.. அதாவது, படம் பார்க்கப் பார்க்க, ஒரு கடினமான புதிரை நாம் அவிழ்ப்பது போன்ற உற்சாகத்தை நமக்குள்ளே தோற்றுவிப்பது.. அப்புறம், இத்தனை கடினத்திலும், மிகத் தெளிவான திரைக்கதையை கொண்டிருப்பது.. கற்பனையுலகக் கான்செப்ட் கொஞ்சமாக Matrix படத்தை நினைவுபடுத்தியது.. இப்படத்தை உருவாக்க பத்தாண்டுகள் பிடித்ததாம்.. கனவிலேயே உருவாக்கியிருப்பார்களோ?
நேற்று இரவு, படத்தைப் பற்றிய தெளிவு பெற, இணையதளத்தில் கொஞ்சம் துழாவிப் பார்த்த போது தான் தெரிந்தது, படத்தின் முடிவு குறித்து ஒரு பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.. அதாவது, முழுப் படமுமே ஒரு கனவு தான் என ஒரு சாராரும், இல்லை, நனவு தான் என ஒரு சாராரும்.. ஒவ்வொருவரும் தத்தம் பார்வையில் இதற்கான விளக்கங்களும் சொல்லியிருந்தார்கள்.. இதையெல்லாம் படித்து பார்த்தும், எந்தவொரு முடிவுக்குமே வர முடியாமல் போனதால், பொழப்பில்லாம இப்பிடி வெட்டியா இந்தப் படத்தப் பத்தி பேசிகிட்டு இருக்காங்களே என அவர்களைக் கொஞ்சம் திட்டி விட்டு, நானும் இப்போது வெட்டியாய் இந்தப் படத்தை பற்றிச் சொல்லி உங்களை குழப்பிக் கொண்டிருக்கிறேன்.. :)))
ஏதாச்சும் புரிஞ்சதா?? :)))))))))) இல்லாட்டி கனவுல வந்து புரிய வைக்கறேன்.. ஓக்கை?? நல்லிரவு!!
ஒன்னுமே புரியல :( கனவுல வந்தும் பயங்காட்டுவீங்களா :((((
ReplyDeleteஐ பிட்ஸா, வட எனக்குத்தான்..... படிச்சிட்டு வாறேன் சந்தூஊ.
ReplyDeleteஇதெல்லாம் மறந்து போய், சென்றது, பார்த்தது எல்லாமே ஒரு கனவாக, குழப்பமாகத் தோன்றினால், படம் ஏதோ புரிந்திருக்கிறது என்று அர்த்தம்.. :)) எங்களுக்கும் இப்படித்தான் ஆயிற்று../// அப்போ சந்து, உங்களுக்குப் படம் புரிந்துவிட்டது????.
ReplyDeleteநிறைய எழுதி, எமக்குப் புரியவைக்கக் கஸ்டப்பட்டுவிட்டீங்க என்பது மட்டும் புரியுது.
இல்லாட்டி கனவுல வந்து புரிய வைக்கறேன்.. ஓக்கை?? நல்லிரவு!! // ஆ.. கனவிலயோ?... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.
class.. இப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்களா அப்பா எனக்கு புரிஞ்சுச்சு படம் எப்படியாச்சும் தேடி கண்டுபிடிச்சு பார்க்கிறேன்... செம்ம இண்ட்ரெஸ்டிங் ஸ்டோரிபோல...
ReplyDeleteஇந்த விமர்சனத்தில இருந்து சில விஷயங்கள் புரிஞ்சுச்சு
1.படம் பார்க்கும் நம்ம மனசோ மூளையோ மட்டுமே இந்த படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும்..
2.ஒரு மனிதனோட கனவு இல்லைனா கற்பனை இருக்கே அது ரொம்ப பவர்ஃபுல் ஆயுதம்...
இப்படித்தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன் இல்லை இருக்கணும்...
பார்த்துட்டு சொல்றேன்
டாங்ஸ் வெரி மச்...
கர்ர்ர்ர்ர்ர்.. கண்டிப்பா வரத் தான் போறேன்.. எங்களயெல்லாம் ஏதாச்சும் திட்டுற எண்ணம் இருந்துச்சுன்னா, ஒளிச்சு வச்சுடுங்க :)
ReplyDeleteநூலிழையில தவற விட்டுட்டீங்களே அதிரா.. கவிசிவா தட்டிகிட்டு போயிட்டாங்க.. உங்களுக்குன்னு ஒரு செண்டிமீட்டர் பீஸ் அளவு மிச்சம் வச்சிருக்காங்க, எடுத்துக்கோங்க :)
ReplyDeleteஏதோ புரிந்தது அதிரா.. ஆனால், முடிச்சுகளை இன்னமும் புரிந்து ரசிக்கலாம்.. அதற்காகத் தான்..
அப்பிடின்னா தூங்கவே தூங்காதீங்க சரியா? :)))
வசந்த்.. அப்பிடியில்ல.. ஒரு வகையில பார்த்தா, கதாநாயகன் (லியோ) இதையெல்லாம் உண்மையாலுமே செய்யறான்.. அதாவது, வில்லனுக்காக, ராபர்ட்ட தூங்க வச்சு, அவனோட சேர்ந்து கனவு கண்டு, ராபர்ட்டோட எண்ணத்த மாத்தறான்.
ReplyDeleteஇன்னொரு கணக்குப்படி, இந்தக் கதை முழுசுமே லியோவோட கனவு.. அதாவது, அவனோட கனவு தான் மேல நான் சொன்னதெல்லாமும்..
இந்த ரெண்டுக்குமே பொருந்தற மாதிரி முடிச்சிருப்பாங்க.. அதுதான் அழகே.. இன்னமும் சொன்னா நல்லாயிருக்காது.. நீங்களே பார்க்கனும்..
கண்டிப்பா பாருங்க..
சந்து, எனக்கு இந்த ஹீரோவை மிகவும் பிடிக்கும். ஆனால், இவ்வளவு குழப்பமான கதையா?? போய் ஏன் மண்டையை காய வைக்கோணும். என் ஆத்துக்காரர் பார்க்க போறேன் என்றார். அனுப்பி வைக்கிறேன் போய் மண்டை காய்ந்து வரட்டும் ஹிஹி
ReplyDeleteமண்டையெல்லாம் காயாது வான்ஸ்.. நல்ல சுவாரசியமா பிரமிப்பா இருக்கும்.. நீங்க தான் மிஸ் பண்ணப் போறீங்க.. ஹீ ஹீ..
ReplyDeleteசேர்ந்து பார்த்தா ஒரு நல்ல விஷயம் - ஆளாளாளுக்கு மண்டைய மாத்தி மாத்தி சொறிஞ்சுக்கலாம் :)
//சேர்ந்து பார்த்தா ஒரு நல்ல விஷயம் - ஆளாளாளுக்கு மண்டைய மாத்தி மாத்தி சொறிஞ்சுக்கலாம் :)//
ReplyDeletehahahaa.....
ஆளாளாளுக்கு மண்டைய மாத்தி மாத்தி சொறிஞ்சுக்கலாம் :)
ReplyDelete/// சந்து இதுக்காக ரிக்கெட் எடுத்து சினிமாக்குப் போகோணும்மோ?? வீட்டில இருந்தே சுகந்திரமாகச் சொறியலாமே.... கிக்...கிக்...கிக்....
ஆ... எங்கேயோ போயிட்டே அதிரா...(இது என் மனட்சாட்சி... அசரீரீஈஈஈஈஈஈஈஈஈஈஈ:)))))
//படத்தின் கதையைச் சொல்ல, அதனை முழுமையாக அனுபவித்து விமர்சிக்க இப்போது எனக்கு தெம்பு கிடையாது.. (ஹி ஹி, இன்னும் ஒரு முறையாவது மறுபடியும் பார்த்தால் தான் நன்கு புரியும் :)) ).. //
ReplyDeleteநீங்க இந்த மாதிரி படங்கலெல்லாம் பாப்பீங்கலா . அப்ப நாங்க கொஞ்ச உஷாராதான் இருக்கனும் போல .(( ஏன் இன்னும் எல் போர்ட கழட்டலன்னு இப்பதான் புரியுது..ஹி..ஹி...))
படிச்சுப்போட்டு சிரிச்சுப்போட்டேன் அதிரா.. அதயேன் கேக்குறீங்க.. அங்க போய் சொறிஞ்சா இன்னும் கொஞ்சம் சுகமாயிருக்கும் :))))))))))
ReplyDeleteநன்றி வான்ஸ் :))
ReplyDelete// அங்க போய் சொறிஞ்சா இன்னும் கொஞ்சம் சுகமாயிருக்கும் :))))))))))//
ReplyDeleteஅட ஆமாம். ஏஸியில் இருந்து சொறிந்தால் சுகம் தான் போங்கள்.
ஜெய்லானி.. இந்த மாதிரி படங்கள் பிடிக்கும்.. கதைல இருக்கற சின்னச்சின்ன நுணுக்கங்கள் புரிய வரும் போது, ரொம்ப நல்லாயிருக்கும்.. அதுவும், ஒத்த ரசனையுள்ள யாரோடவாவது விவாதிக்கும் போது.. மிகவும் வன்முறையான படங்கள் தவிர்த்து எதுன்னாலும் ஓக்கே..
ReplyDeleteபயப்படாதீங்க.. படம் பார்த்து முடிச்சவுடனே காரெல்லாம் ஓட்ட மாட்டேன் :))