23 July 2010

காவல் தெய்வங்கள்....



மொத்தம் எத்தனைபேர்?
சரியாக நினைவில்லை..
ஆறேழு இருக்கலாம்,
அலுவலகத்துக்கு மட்டும்..
அங்கே, நாளும் காவலிருப்பர் நால்வர்..
அவ்வப்பொழுதில் மற்றவரும் ..

இவர்கட்கு பெயரிடுதல் எனது கடமை..
எளிதல்ல இவ்வேலை..
எனது பெயர் பிடிப்பதில்லை
இவர்களது இறைவனுக்கு..
இதற்கு முன்னே காவல்
இருந்தவரது பெயருந்தான்..


ஒருவனுக்கு ஐந்திலக்கப் பெயர்,
எல்லாமே எழுத்துக்களாய்...
இன்னொருவனுக்கு ஏழு,
இறுதியில் ஓரெண் தேவையாம்..
மூன்றாமானவன் எட்டப்பன்..
எட்டிலே ஓரெழுத்து பெரியதாயிருக்க,
சின்னமொன்றும், எண்ணொன்றும்
உடனிருந்து பாதுகாக்க,
மற்றதெல்லாம் சிற்றெழுத்துக்கள்..
நாலாமானவனுக்கு எண்கள் மட்டும்...

இவர்களின் ஆயுட்காலம்,
மூன்றே மாதங்கள் தாம்..
முடிந்ததும், செவ்வனே
இயற்கையெய்திடப்படுவர்..
ஒன்றாய் மரிப்பதில்லை அனைவரும்..
ஒவ்வொருவனாய்த் தான்..
காலஞ்சென்ற ”இன்னார்” இடத்துக்கு,
இன்னொருவனைத் தேடிப்பிடித்து,
அவனது தலைவிதிக்கேற்ப
பெயரிட்டழைக்க வேண்டும்,
மானிடர் யார்க்கும்
புரிந்திடாத ரகசியக் குரலில்...

கொள்ளு பேரப்பிள்ளைகளை
மாற்றி மாற்றியழைக்கும்
தொன்னூறு வயது தாத்தன் போல்,
சிலவேளைகளில் குழம்பிப்
போய் விடுகின்றேன் நானும்....
புதிதாய் இவர்களைப்
பணியமர்த்திய பொழுதுகளில்,
என்பாடு சொல்லி மாளமுடிவதில்லை...
இதுநாள் வரை காத்தவனது
நன்றி மறக்கயியலாமல்,
அப்பெயரிட்டே அழைத்துத்
தொலைக்கின்றேன் புதியவனையும்..

காவலில் கெட்டிக்காரர்கள்..
பெயரைச் சரியாக உச்சரிப்பவனுக்கே
சொர்க்க வாசல் திறக்கப்படும்.
ரோசக்காரப் பயல்கள்..
மாற்றியழைத்தால்
மிகுந்த வருத்தம் கொள்வர்..
மும்முறை தவறிழைக்கப்பட்டால், 
தற்கொலை செய்து கொள்வர்..

இவர்கள் போக,
வீடு, விமானம், வங்கி, வழக்கு,
அஞ்சல், அலும்பு,
செருப்புக் கடை, பருப்புக் கடைக்கென
இன்னும் இருக்கிறார்கள்,
சுமார் ஐம்பது பேர்...

பொருத்தமான பெயர் தேடி,
சலித்துதான் போகின்றேன்,
நித்தமும் சலிப்பில்லாமல்
கடமையே கண்னென
கணினியில் ”உயிர்” வாழும்
எனதருமை கருப்பண்ணச் சாமியர்க்கு..

46 comments:

  1. கருப்பண்ண சாமிக்கு வணக்கம் :)

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. இன்னிக்கு எனக்கு ரொம்போ பசிக்கறதால, நானே வடைய சாப்பிட்டுக்கறேன்.. கிக்கீகீ...

    ReplyDelete
  3. இருந்தாலும் மனசு கேக்கல.. வீட்டுக்கு வந்தவங்கள சும்மா அனுப்பறதான்னு.. அதனால, சூடா ஆம்லெட் போட்டிருக்கேன்.. சீக்கிரமா வாங்கோ (அப்பவாவது யாராவது வராங்களான்னு பாப்போம் :)) )

    ReplyDelete
  4. ஆஆஆஆஆ.. ஹைஷ்.. என்னையவே முந்திட்டு வடையத் தூக்கிட்டு போயிட்டீங்களே? கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல.. ஹூம்..

    அம்புட்டு பயமிருக்கோனும் பக்தரே.. இல்லாட்டி எம் பேர நானே மாத்திக்கிட்டு போயிடுவேன்.. ப்ளாகுக்குள்ளாறயே வர முடியாது நீங்க.. :)))

    இப்பூடிக்கு,
    கருப்பண்ண சாமி..

    ReplyDelete
  5. என்னது தனியா கடையில டீ ஆத்திகிட்டு இருக்கீங்க ..!!

    ReplyDelete
  6. //இருந்தாலும் மனசு கேக்கல.. வீட்டுக்கு வந்தவங்கள சும்மா அனுப்பறதான்னு.. அதனால, சூடா ஆம்லெட் போட்டிருக்கேன்.. சீக்கிரமா வாங்கோ (அப்பவாவது யாராவது வராங்களான்னு பாப்போம் :)) ) //

    அப்ப பிரட் நா வாங்கி வரேன் ஆம்லட் மட்டும் போதும் சண்ட்விட்ச் பன்னுடலாம் பூஸ் வரதுகுள்ள நானே சாப்பிட்டுடறேன் . ஹைஸ் பாதி உங்களுக்கு ஓக்கேயா..!!!

    ReplyDelete
  7. கவிதையை நகர்த்திப் போன விதம் சுப்பர்ப் சந்தனா. ;) ரசித்தேன்.
    பொருத்தமான படங்கள் பொருத்தமான இடங்களில். பாராட்டுக்கள். @}->--

    ReplyDelete
  8. அப்பவே தெரியும் வடையதான் காக்கா தூக்கி போய்விட்டதே:) ஆயா மட்டும்தானே இருக்கார் என :))))

    ReplyDelete
  9. றெக்க வச்ச தாத்தா தடியோட வருவாரு.. இந்த வடையக் குடுத்துடுன்னு, பேத்திகிட்டச் (ஹிஹி) சொல்லிட்டு தூங்கப் போயிட்டாங்க ஆயா..

    ReplyDelete
  10. மிக்க நன்றி இமா.. உங்கட கொமெண்ட் தான் எனக்கு பூஸ்ட்... வெகு நேரமாயிப்போச்சு நேத்து இதை எழுதி முடிப்பதற்குள்..

    ReplyDelete
  11. கர்ர்ர்ர்ர்ர்ர்... சரி.. இந்தாங்க ஆறிப்போன ஆம்லெட்.. கூட காஞ்சு போன பன்னும்.. உண்டு உறங்குங்க ஜெய்லானி...

    ReplyDelete
  12. கலக்குங்க சந்தனா! சத்தியமா நான் டீயை சொல்லலை :-)

    ReplyDelete
  13. அப்ப அதயத் தான் சொல்லியிருக்கீங்க :)))) ஓக்கை.. ஹார்ட் ப்ரேக்.. :)

    சரி, இந்தாங்க.. கலக்காமயே சூடா ஒரு இஞ்சி டீ...

    ReplyDelete
  14. கவிதாயினி சந்தனா :) சூப்பர் மேல வைங்க :)

    ReplyDelete
  15. //என்னது தனியா கடையில டீ ஆத்திகிட்டு இருக்கீங்க .//
    ரிப்பீட்டுடு...
    நிதானமா படிச்சுட்டு வாறன்.

    ReplyDelete
  16. சந்தூ, சூப்பர். இன்னும் நிறைய எழுதுங்கோ நேரம் கிடைக்கும் போது.

    ReplyDelete
  17. சந்து, கவிதை வித்தியாசமாக இருக்கு. கற்பனை நன்றாக அமைந்திருக்கு. எனக்கு பாதிதான் புரியுது, பாதி புரியக் கஸ்டமாக இருக்கு.

    சந்து!!!, வட, ஹைஷ் அண்ணனுக்கு ஆயா உங்களுக்கு:).... நல்லவேளை, நண்பி வந்ததால நான் தப்பிவிட்டேன் சாமீஈஈஈஈஈஈ... ஆயாவிடமிருந்து...

    அதுசரி என்னாது ஒம்லெட்டா? அதுவும் படையலோ?.

    ஆஹா... மலிஞ்சுபோயிருக்கிற ஓம்லெட்டிலும் பிச்சுப் பிச்சுக் கொடுக்க வெளிக்கிடுறீங்களே.. ஜெய்?, பாவம் முட்டையிட்ட கோழிக்குஞ்சு:).

    நிதானமா படிச்சுட்டு வாறன்.
    /// வான்ஸ்ஸ்ஸ், ஏன் இப்போ நிதானமில்லாமலோ இருக்கிறீங்க?:)... பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  18. நன்றிங்க எல் எஸ்.. மேல வச்சுட்டேன் :))

    ReplyDelete
  19. நன்றி வான்ஸ்.. புரிந்தது தானே? :))

    ReplyDelete
  20. நன்றி அதீஸ்.. கடைக்கு வருவோர் (அதிலும்... இந்த...) வடையிலும் ஓம்லெட்டிலுமே கண்ணாயிருக்கிறார்கள்..

    விளக்கம் பெருசா இருக்கரதால தனியா கொடுத்திடறேன்..

    ReplyDelete
  21. விளக்கம் பார்த்தேன். நன்றி. ;) நான் சரியாகத்தான் புரிந்து வைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  22. நன்றி இமா.. உங்களுக்கு (மட்டும்) புரிந்ததென எனக்கும் புரிந்தது :))

    ReplyDelete
  23. ஆஹா... சந்து அதுவா இது? இப்பத்தான் கவிதையும் நன்றாக இருக்கு.
    எனக்கும் புய்ந்தது. இப்புடிச் சொன்னால்தானே என் போன்றவர்களுக்குப்:) புய்யும்.

    நான் என்ன, அங்கிள், தாத்தா, பாட்டி, மாமி, பெரியம்மா...... இப்பூடி வரிசையிலயோ இருக்கிறேன்?.... பேபி எல்லோ?:)).

    சரி சரி.... கோழிக்குஞ்சு முட்டையில எனக்கும் ஒரு ஓம்லெட் ப்ப்ப்ப்ப்ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  24. அப்பிடி வழிக்கு வாங்கோ அதிரா.. புரிஞ்சிடுச்சுன்னு ஒத்துக்கொண்டு தான் ஆவோனும்.. :) இல்லாட்டி ரீச்சர் மனசு உடஞ்சு போயிடுவன்..

    உங்களுக்கு ஓம்லெட் எல்லாம் கிடையாது. அ. கோ. மு தான் தருவனான்..

    ReplyDelete
  25. சந்தூ நல்லா புரிஞ்சிடுச்சு(அன்னிக்கே... சத்தியமா...நீங்க நம்போணும்)

    பேசாம ஒரு துண்டு சீட்டிலே எல்லா பாஸ்வேர்டையும் எழுதி பத்திரமா வச்சுக்கோங்க. தேவைப்படும்போது பார்த்து தட்டுங்க...எப்பூடி?

    ReplyDelete
  26. உங்களுக்கும் :) இமா :))))

    கவி, அப்பாடி.. இப்போத் தான் நிம்மதியாயிருக்கு :)
    அப்பிடி வைக்கக் கூடாதாம்ல.. அவங்க அதையுந்தான் சொல்லியிருக்காங்க.. பெரிய கஷ்டம் ஒன்னுமில்ல.. புலம்பி அலுத்துக்கறது தான்..

    ReplyDelete
  27. சந்தூ, முதல் தடவை புரியவேயில்லை. அப்புறம் கீழே அந்தாள் ஏதோ ஒரு கதவினுள் தலையை விடும் படம் பார்த்ததும் நல்ல தெளிவாக விளங்கிட்டுது.
    பாவம் அதீஸ் விளங்கவில்லையாம். அதீஸ், நான் எப்போதும் ஸ்டெடியாத்தான் நிற்கிறன்.

    ReplyDelete
  28. நன்றி வான்ஸ்.. அதுக்காகத் தான் அதயப் போட்டதே.. ஆனாலும், தோனுச்சு - புரியாம போயிடுமோன்னு.. அதான்..

    ReplyDelete
  29. //மானிடர் யார்க்கும்
    புரிந்திடாத ரகசியக் குரலில்...//

    ஹை...யாஹூ.......

    ReplyDelete
  30. நான் கண்டுபிடிக்கல தாயி உங்க விளக்கத்துக்கு அப்புறம் படிச்சேன்... அம்புட்டுத்தேன் நம்ம அறீவூ...

    ReplyDelete
  31. வாங்கப்பு.. அம்புட்டு கஸ்டமாவா எழுதியிருக்கேன்?? பெருமையா இருக்குது எனக்கு :))))) அதுக்குத்தேன் கீழயும் ஒரு படத்தப் போட்டிருக்கேன்..

    //ஹை...யாஹூ....... //

    இப்பிடிச் சத்தம் போட்டெல்லாம் பாஸ்வர்டைச் சொல்லப்படாது.. :))

    ReplyDelete
  32. //athira சந்து, கவிதை வித்தியாசமாக இருக்கு. கற்பனை நன்றாக அமைந்திருக்கு. எனக்கு பாதிதான் புரியுது, பாதி புரியக் கஸ்டமாக இருக்கு.//

    நா மட்டும் இதுல டாக்டர் பட்டமா வாங்கிருக்கேன் புரிய .அதான் ஆம்லட்டோட எஸ்கேப்..

    ReplyDelete
  33. //பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)//

    ஒரு டீ வடை பார்ஸல்



    அடுத்த பதிவு விளக்கம் சூப்பர்...இதுக்கு எதுக்கு பயம் .ஏற்கனவே கமெண்ட் மாடரேஷன் போட்டு வச்சிருக்கீங்க.. அது பத்தாம கமெண்ட் பாக்ஸையே தூக்கியது கொஞ்சம் ஓவரா தெரியல..

    எல் போர்ட் ரொம்ப கஷ்டம்..

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  34. சந்தனா,முதல்ல கவிதைய மட்டும் படிச்சிட்டு வந்தப்ப கொஞ்சம் குழப்பமாதான் இருந்தது. ஆனா அந்த பாஸ்வர்ட் போட்டோவைப் பார்த்ததும் புரிந்துடுச்சு. :)

    இந்த பாஸ்வர்ட்-ஐ எல்லாம் ஸ்டோர் பண்ணிவைக்கவே எதோ சாப்ட்வேர் இருக்காமே..அதெல்லாம் யூஸ் பண்ணிக்கலாம்ல?

    நல்ல கவிதை!

    ReplyDelete
  35. நீங்க தான் சந்தேகம் கேக்கறதுல டாக்டர் பட்டம் வாங்கியிருக்கீங்களே.. அப்புறம் எப்பிடி இது புரியும்?? :)))

    பயமாத்தேன் இருக்கு.. ரொம்ப மொக்கையாவே எழுதிட்டு இருக்கேனா.. யாராச்சும் வந்து ஏசிப்போடுவாங்களோன்னு.. அப்பிடியும் இருக்காங்க..

    மறுபடியும் வந்ததுக்கு நன்றி ஜெய்லானி...

    ReplyDelete
  36. அப்பாடி.. எனக்கு ஆதரவா இன்னொருத்தர்.. ரொம்ப நன்றி மஹி..

    அப்பிடியா? ம்ம்.. மெதுவா விசாரிச்சுக்கறேன் உங்ககிட்ட.. தகவலுக்கு நன்றி..

    ReplyDelete
  37. ஜெய்லானி said...
    //பதிவு விளக்கம் சூப்பர்...இதுக்கு எதுக்கு பயம் .ஏற்கனவே கமெண்ட் மாடரேஷன் போட்டு வச்சிருக்கீங்க.. அது பத்தாம கமெண்ட் பாக்ஸையே தூக்கியது கொஞ்சம் ஓவரா தெரியல..

    எல் போர்ட் ரொம்ப கஷ்டம்..

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    ///x10000000
    July 26, 2010 12:30 AM

    ReplyDelete
  38. ஆஹா பழைய நினைவை தூண்டி விட்டுபுட்டீங்களே எல்ஸ்... இதுல காமெடி என்னான்னா நான் தான் எத்தன நாளுக்குள்ள உங்க பாஸ்வேர்டுக்கு உயிர் போகும்ன்னு தேதி குறிக்கற ஆளு...ஒரு நாளப்போல இருக்காது... அதிலும் ஓல்ட்ஸு ரொம்ப மோசம்...

    கவிதை அருமையா இருக்கு....

    ReplyDelete
  39. கவிதைக்கு ஒரு பதிவு... அதுக்கு விளக்கம் ஒரு பதிவு...சூப்பர்ங்க... ஹா ஹா ஹா

    ReplyDelete
  40. ஹைஷ்.. பாதி சாண்ட்விச் உங்களுக்கு தரேன்னாரே ஜெய்லானி.. தந்தாரா? :) அதுல பாதி எனக்குத் தந்துடோனும்.. ஓக்கை?

    ReplyDelete
  41. நீங்க தான் அந்த இறைவனா இலா.. கொஞ்சம் கருணை காட்டுங்க.. ஒரு வருஷத்துக்கு ஆயுட்காலத்த நீட்டிக்கொடுங்க.. ரொம்ப நன்றி வந்தமைக்கு.. அனேகமா இந்த நாட்டுல இருக்கற எல்லாரும் நிறைய பாஸ்வர்ட் உபயோகிக்கறாங்கன்னு நினைக்கறேன்.. இல்லியா?

    ReplyDelete
  42. இப்பிடியொரு கேள்வி வருமுன்னு தெரிஞ்சு தான் இன்னும் ரெண்டு நாளுல அதய எடுத்துடலாம்ன்னு இருக்கேன்.. அப்ப என்ன கேப்பீங்க? அப்ப என்ன கேப்பீங்க? வருகைக்கு நன்றி தங்க்ஸ்..

    ReplyDelete
  43. மணியே..மணிக்குயிலே
    மாலையிளம் கதிரழகே!
    கொடியே..கொடிமலரே
    கொடியிடையின் நடையழகே!

    தொட்ட இடம் பூ மணக்கும்
    துளிர்க்கரமோ தொட இனிக்கும்!
    பூ மரப் பாவை நீயடீ
    இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி!

    பொன்னில் வடித்த சிலையே
    பிரம்மன் படைத்தான் உனையே
    வண்ணமயில் போல வந்தபாவையே

    எண்ண இனிக்கும் நிலையே
    இன்பம் கொடுக்கும் கலையே
    உன்னையெண்ணி வாழுமெந்தன் ஆவியே

    கண்ணிமையில் தூண்டிலிட்டு
    காதல் தனை தூண்டிவிட்டு
    எண்ணியெண்ணி ஏங்கவைக்கும் ஏந்திழையே!

    நோ கார்த்திக்,நோ பாரதிராஜா,நோ ரஞ்சிதா,நத்திங் பட் இளையராஜா!ஹிஹிஹி!!http://www.youtube.com/watch?v=ZEbc5Bb6f9o

    சந்து,சந்துபொந்தெல்லாம் வம்பு பண்ணும் இந்த பாஸ்வர்ட் பத்தி கவிதை வடிச்சுபுட்டீங்கோ,நொந்து நூடில்ஸ் ஆகிட்டீங்கோ??

    ஜீனோ மொதல்ல விளக்கம் படிச்சிது..அப்றமா கவித படிச்சிது.ஸோ,பர்ஸ்ட் தபா படிக்க சொல்லவே நல்லா பிரிஞ்சிடுச்சி.ஹா..ஹா.ஹ்ஹா!

    ReplyDelete
  44. பக்கத்துல புஜ்ஜி அமர்ந்திருக்காங்களா ஜீனோ? ஏகத்துக்கும் குஷியா இருக்கீங்க? :))

    ஆமாங்கோ ஜீனோ.. தினமும் மாத்தி மாத்தி.. ச்சே..

    அதென்ன நீங்க மட்டும் உங்கள ஒருமையில கூப்பிட்டுக்கலாம்.. நாங்க சொல்லப்படாதோ?

    காணாம போயி பத்திரமா திரும்பி வந்ததுக்கு நன்றி :)

    ReplyDelete
  45. பாட்ட கேட்டேன் ஜீனோ.. நல்லாயிருக்கு.. பிடிச்சது தான்.. பகிர்ந்ததுக்கு நன்றி..

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)