03 September 2010

இப்படித் தான் முடியும் இமா..

கெட்டுகெதர்ல பாதில திடீர்னு சந்தனா பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பிக்கறா.. எல்லாரும் பதறிப் போயி அவ கிட்ட ஓடி வராங்க..


கூட்டத்தினர்: ஏன் சந்தனா என்னாச்சு?

சந்து: கெட்டுகெதர் ன்னு கூப்பிட்டாங்க இமா.. நானும் ஆசையா பக்லவா  கிடைக்கும்ன்னு ப்ளேன்ல கொடுத்த ரெண்டே ரெண்டு முந்திரிப் பருப்பக் கூட  சாப்பிடாம வந்தேன்.. இங்க வந்தா இப்பிடி ஆகிப்போச்சே.. 

கூட்டத்தினர்: உச் உச் உச் உச்..

சந்து: முதல் பாதி வரைக்கும் சிரிச்சுட்டே படிச்சேன்.. சதி புரியாம..


கூட்டத்தினர்: சதியா.. என்ன சதி?


சந்து: போச்சுடா.. இதையும் நான்தான் மொழி பெயர்த்துக் கொடுக்கனுமா? என்னிக்கோ நாம கத்துனத வீடியோ எடுத்து எல்லாருக்கும் போட்டு காமிச்சிட்டு இருக்காங்க இமா..


இப்போது கூட்டத்தினர் எல்லோரும் அழ ஆரம்பிக்கின்றனர்..


சந்து: சாப்பிடறதுக்கும் ஒன்னும் மிச்சம் வைக்கல.. பசிக்குது இப்போ..


எங்க விட்டா நம்ம கிட்ட கேட்டுடுவாளோன்னு கூட்டத்தினர் தங்கள் கையில் இருந்ததை அவசர அவசரமாக வாயில் போட்டு மெல்லத் துவங்குகின்றனர்..


சந்து: நான் தான் அன்னிக்கு ரொம்ப நேரம் கத்திகிட்டு இருந்தேன்.. இந்த உலகத்துல சில ஜீவன்கள் வழி தெரியாம வந்து வதைபட்டு கிட்டு இருந்ததே, பாவம் 
அதுகளுக்கு உதவி செய்யலாம்ன்னு தான்..


முன்னாள் மற்றும் இந்நாள் நட்சத்திரங்கள்: நல்ல வேளை, நீங்க அன்னிக்கு வந்து வழி சொன்னீங்க எல்போட்டு.... இல்லாட்டி இங்க நடந்த குழப்படில நாங்களே ஆஸ்பத்திரிக்கு வழி கண்டுபிடிச்சுப் போயி சேர்ந்திருப்போம்..


சந்து: அது கூட பரவாயில்ல.. இப்படியெல்லாம் நடக்கப்போகுதுன்னு தெரியாம நான் மறுபடியும் இன்னைக்கு வந்து கத்தி வச்சிருக்கேன்... இதையும் படமெடுத்து வச்சிட்டாங்களாம்..


கூட்டத்தினர்: அச்சோ பாவம் சந்து..


இடையில் இமா கூலாக ஒரு டிஷ்யூ எடுத்து வந்து தருகிறார்..


இமா: எனக்காக எடுத்து வச்சது சந்தனா.. கண்ண மட்டுந்தான் துடைச்சிருக்கேன்.. மூக்க இன்னமும் துடைக்கலை.. வேணும்னா எடுத்துக்கோங்க..


சந்து: ஹூம்.. எனக்கு வேணாம்.. புலி அழுதாலும் ஏற்கனவே யூஸ் பண்ணுன டிஷ்யு ல கண்ணத் துடைச்சுக்காது..


சந்துவின் பரிதாப நிலையைக் கண்டு என்ன சொல்வதென்று தெரியாமல் எல்லோரும் வாயடைத்துப் போய் நிற்கின்றனர்.. அப்போது பின்னாளில் இருந்து ஏதோ சத்தம் கேட்கிறது.. கூட்டத்தை விலக்கியபடி ஒருவர் முன்னாள் வருகிறார்..


ஜெய்லானி: மம்மோ பப்பானோ மம்மாமீயா..


சந்து: என்ன சொல்ல வரார் இவர்? ஒண்ணுமே புரியலையே?


இமா: எனக்காக எவ்வளவோ மொழி பெயர்த்திருக்கீங்க சந்தனா.. உங்களுக்காக இதைக் கூட செய்யலைன்னா எப்படி? அதூ.......


ஜெய்லானி: மாமீஈஈஈஈஈஈஈஈ!!


இமா: உங்க நிலைமை எவ்வளவோ பரவாயில்லையாம் சந்தனா.. வடை பிட்சா சட்னி எல்லாத்தையும் வாயில அள்ளிப் போட்டு இப்ப மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம இருக்கற இவர் நிலமைய விட..


சந்து: அடக் கொடுமையே.. இவரப் பாத்து எனக்கு இப்போ அழுகறதா இல்ல சிரிக்கறதான்னு தெரியலையே.. 


ஜெய்லானி: ஒஜ்ஜு ஜந்தேஜம் ஜன்த்தனா.. அஜுதா முஜ்ஜுல ஜேன் ஜன்னி வஜ்து?


இமா: போச்சுடா.. மருமகனுக்கு மறுபடியும் சந்தேகமா? சந்தனா.. நீங்க அழுதா மூக்கால வர்ற தண்ணி, சிரிச்சா மறுபடியும் கண்ணுக்கே போயிடுமான்னு கேக்கிறார்.. 

இதற்கு மேல் அங்கு நின்றால் "கண்ணீர்ப்" புரையேறிடுமோ  என்ற பயத்தில், சந்தனா மற்றும் கூட்டத்தினர் கலைந்து ஓட ஆரம்பிக்கின்றனர்.. 

27 comments:

  1. இங்கு இரண்டாவது கமென்ட் போடுபவர்க்கு பக்லவா பரிமாறப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொல்கிறோம்! இது பயிக்குப் பயி என்பதையும் அறிவித்துக் கொல்கிறோம்!!

    ReplyDelete
  2. ஹாஹ்..ஹா!!! பக்லவா ஜீனோக்கே!

    ReplyDelete
  3. என்னங்கோ எல்போர்டு? ஆருக்கும் பக்லவா வாணாம் போலருக்கு? ஆரூமே கொமெண்ட் போட மாட்றாங்கோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    இட்ஸ் ஓக்கே யா..வீ போத் வில் ஹேவ் ஆல் ஆப் தி bஅக்லவாஆஆஆஆஸ்! பூஸக்காக்கு வேணா ஒரு டைனி பீஸ் எடுத்துவச்சுரலாம்.ஓக்கேவா?

    http://images.google.com/images?hl=en&source=imghp&biw=1598&bih=717&q=baklava&gbv=2&aq=f&aqi=g10&aql=&oq=&gs_rfai=
    இத்த பாருங்கோ..இதுல ஜீனோ சாப்புடற பக்லவா 15 மற்றும் 18-ஆம் இடத்தில் உள்ளது.ஹிஹிஹி!:P:P:P:P

    ReplyDelete
  4. சந்தூ சேம் பின்ச் நானும் ஒரு கெட் டுகெதர் பதிவு எழுதிக்கிட்டு இருக்கேன் :).
    பாவம் சந்து நீங்க உங்களை இப்படி அழ வைக்கராங்களே... இந்தாங்கோ யூஸ் பண்ணாத டிஷ்யூ துடைச்சுக்கோங்கோ

    நாலாவதா கமெண்ட் போட்டா கொஞ்சூண்டாவது பக்லவா கிடைக்குமா?

    ReplyDelete
  5. கடவுளே!!! தாங்க முடியலயே!!!!! ;)

    ReplyDelete
  6. சிரிச்சு சிரிச்சு எனக்குக் கண்ணீர்ப்புரை ஏறிப் போச்சுது. யாராவது ப்ரெஷ்ஷா டிஷ்யூ தாங்கோ. ;)
    //ஒஜ்ஜு ஜந்தேஜம் ஜன்த்தனா.. அஜுதா முஜ்ஜுல ஜேன் ஜன்னி வஜ்து?// ஹையோஓஓஓ...!!!
    இனிமேல் யாருக்காச்சும் வரும்கறீங்க????
    ;) x 3565879873457

    எனக்கு மூச்சே விட முடியேல்ல மக்கள்ஸ்ஸ். ;)

    கவீ! நீங்களும் எடுத்து விடுங்கோ.

    ReplyDelete
  7. உஜ்ஜிலயே எஜ்ஜுகு அஜ்ஜுச்சி வஜ்து இஜ்ஜு. ஹா...ஹா....

    ReplyDelete
  8. மாமீ எனக்கு அந்த வீடியோவை காட்டலையே..அவ்வ்வ்


    ச்சே..என்ன இருந்தாலும் இப்பிடி பட்டினி போட்டிருக்கக்குடாது... என்னிடம் மீதி 90 அ கொ மு இருக்கு சந்தூஊஊஊ அழாதீங்க ..

    ReplyDelete
  9. ;)

    இங்க வேற எதும் சொல்லி இமா ரீச்சர் எதுனா கிறுக்கி ஹைய்ய்யோ மீ போறேன்...

    ReplyDelete
  10. முடியுமா???!!! என்னால முடியல சந்தூ முடியல.. இருங்க என்னோட துப்பட்டவிலே தொடச்சிக்கிறேன்...

    ReplyDelete
  11. சந்தூ, எல்லாமே சூப்பரா இருக்கு.

    //சந்து: நான் தான் அன்னிக்கு ரொம்ப நேரம் கத்திகிட்டு இருந்தேன்.. இந்த உலகத்துல சில ஜீவன்கள் வழி தெரியாம வந்து வதைபட்டு கிட்டு இருந்ததே, பாவம்
    அதுகளுக்கு உதவி செய்யலாம்ன்னு தான்..//
    ஏதோ என்னை மனசில்லை வச்சு எழுதினாப்போல இருக்கே. எதற்கும் கொஞ்சம் சாக்கிரதையா இருக்கணும்.
    இமாவின்( ஒண்ணுமே புரியலை) உலகத்திலை நான் நிறைய பல்பு வாங்கியிருக்கேன் .

    இப்ப எந்த ப்ளேனிலை முந்திரிப்பருப்பு தர்றாங்க? தவிச்ச வாய்க்கு தண்ணியே தரமாட்டேன்கிறாங்க????

    ReplyDelete
  12. இத்தன பக்லவா வும் நமக்கே நமக்கா? நன்றி ஜீனோ.. பூஸ் அக்காவ கன நாட்களா தேசத்துப் பக்கம் காணோம்.. எடுத்து வைப்போம்.. வந்தா கொடுக்கலாம்.. இல்லாட்டி நாமே முடிச்சிடலாம்.. கவிசிவா க்கும் ஒரு குட்டி ப்ளேட் ல வச்சு கொடுத்துடலாம்..

    ReplyDelete
  13. கவி.. சீக்கிரம் எழுதி முடிங்க.. இந்தாங்க தெம்புக்கு கொஞ்சம் பக்லவா.. கொஞ்சம் கேட்டதால கொஞ்சம் தான் தருவோம் :) புது டிஷ்யூக்கு நன்றி :)

    ReplyDelete
  14. //சிரிச்சு சிரிச்சு எனக்குக் கண்ணீர்ப்புரை ஏறிப் போச்சு. எனக்கு மூச்சே விட முடியேல்ல மக்கள்ஸ்ஸ்.//

    இப்போத்தான் பழிக்கு பழி வாங்கின திருப்தி எனக்கு இமா.. உங்கட கெட்டுகெதர் படிச்சு சத்தம் போட்டு சிரிக்க முடியாம சிரிச்சிட்டு இருந்தேன்.. ஆபிஸ் ல எதிர் டெஸ்க்ல இருந்த பொண்ணு எழுந்து வந்து "Are you alright? I am hearing some weird noises from your side.." ன்னு சொல்லிட்டுப் போனா :)) ஹாஹ்ஹா..

    ReplyDelete
  15. //உஜ்ஜிலயே எஜ்ஜுகு அஜ்ஜுச்சி வஜ்து இஜ்ஜு. ஹா...ஹா....//

    நன்றி ஜெய்லானி.. எனக்கும் இப்போ மறுபடியும் சிரிப்பு வருது.. இந்தாங்க உங்களுக்கு புது டிஷ்யு.. நம்பி வாங்கி தொடச்சுக்கோங்க :))

    ReplyDelete
  16. அகோமு வேணாம்.. எனக்கு அதுலயிருந்து ஆம்லெட் போட்டுத் தாங்க :))

    ReplyDelete
  17. நன்றி வசந்த்.. ஆமா.. நானும் இனிமே கொஞ்சம் உஷாராத் தான் இருக்கப் போறேன்... :)

    ReplyDelete
  18. உங்களுக்கு அப்போ டிஷ்யு பத்தலையா இலா? துப்பட்டாவா? :)) அப்புறம் எல்லாரும் அழுதா தொடைக்க துப்பட்டா கேக்கப் போறாங்க :))

    ReplyDelete
  19. வானதி.. அந்தக் கொடுமைய ஏன் கேக்கறீங்க? :) ஒரு குட்டி பாக்கெட் நட்ஸ் கொடுத்தாங்க.. பிரிச்சுப் பாத்தா எண்ணி அஞ்சே அஞ்சு நட்ஸ் :) இதுக்கு அவங்க கொடுக்காமயே இருக்கலாம் :) அந்த பாக்கெட்ல அந்த விமானக் கம்பெனிக்கு விளம்பரம் வேற :) அடுத்த வாட்டி வாங்கி பிரிக்காம திருப்பி கொடுத்துடப் போறேன் :))

    ReplyDelete
  20. ஐயோ... காப்பாத்துங்க.... எனக்கும் ஒண்ணும் புரியல... did I miss something ... (மண்டைய பிச்சுகறேன்... ஐயோ ஐயோ ஐயோ)

    ReplyDelete
  21. //ஐயோ... காப்பாத்துங்க.... எனக்கும் ஒண்ணும் புரியல... did I miss something ... (மண்டைய பிச்சுகறேன்... ஐயோ ஐயோ ஐயோ) //

    ஹா..ஹா.. உங்க இட்லியையை விடவா...??? :-))

    ReplyDelete
  22. தங்க்ஸ்.. போகப் போகப் புரியும்.. மிச்சம் கொஞ்சம் வையுங்க..

    இட்லிய விட மாட்டேன்றாங்களே.. அப்படி என்ன தான் இட்லி பண்ணுனீங்க தங்க்ஸ்.. லிங்க் கொடுங்களேன்..

    நன்றி ஜெய்லாணி..

    ReplyDelete
  23. //ஆட்டையாம்பட்டி அம்பி said...
    நன்றாக எழுதுகிறீர்கள்...வாழ்க உங்கள் பணி...//

    கொஞ்சமா எடிட் பண்ணியிருக்கிறேன்.. மன்னிக்கனும்.. நன்றி..

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)