24 September 2010

அவ்வ்வ்வ்வ்வ்....இன்றிரவின் கனவினில்..


தனியே உறங்க முயலும்போது தான் 
நினைவுக்கு வந்து தொலைக்கின்றன
சிறு வயதில் சகோதரனுடன்
போர்வைக்குள் ஒளிந்துகொண்டு பார்த்த 
ஈவில்டெட் உருவங்களும்,
தோழியருடன் தியேட்டரில் 
பாதி நேரம் கண்ணை 
மூடிக்கொண்டே 'பார்த்து'விட்டு
சரியாக ஒரு வாரம் வரை
பயங்கொள்ளச் செய்த  
ரிங் படத்துச் சிறுமியும், 
இடையிலே பயந்ததால் 
கணினியில் நண்பர்களையழைத்து
உரையாடியபடியே பார்த்த 
யாவரும் நலம் டீவியும், 
பார்த்தவர்கள் எல்லோரும்
பயந்ததாகச் சொன்னதால் 
இன்னும் பார்க்காமலே விட்டிருக்கும் 
பாரா நார்மல் ஆக்டிவிட்டீஸ் படமும்,
மற்றும் இன்னபிற கற்பனைகளும்.. 

மன்னர்எப்பூடி?? ச்ச்சும்மா டெர்ரர் கெளம்புதுள்ள?

அமைச்சர்: ஆம் மன்னா! மாபெரும் வெற்றி இம்முறை!! மக்கள் எல்லோரும் பயந்து-தெறித்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.. இனி ஒரு பயபுள்ள கூட நம்ம ப்ளாக் பக்கம் தலை வைத்துப் படுக்காது!!

மன்னர்: அப்படியா? ஹாஹ்ஹா! பின்னிவிட்டோம் மந்திரியாரே.. அதுசரி, எந்தப் பக்கமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்?

அமைச்சர்: தூக்கத்துல கண்ணு தெரியாம போறதுக்கு இலவசமா ஆலோசனை சொல்ற எடத்துக்கு...
************

ஆறுதலுக்கு...

டிஸ்க்ளெய்மர்: இங்கயே இப்பவே சொல்லிடறேன்.. இந்தப் பகுதியில் வரும் சம்பவம் மற்றும் இதில் வரும் மனிதர்கள் யாவும் கற்பனையே.. இதற்குப் பின்னர் யார் வீட்டிலாவது இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது!! 

அப்பாவி ரங்ஸ்: இன்னிக்கு என்ன சாப்பாட்டுக்கு?

தங்ஸ்: ம்ம்ம்.. புதினா சட்னி..

அ.ர: சட்னியா? அதெல்லாம் எங்க வீட்டுல இட்லி தோசைக்குத் தான் பண்ணுவாங்க.. சாப்பாட்டுக்கு செய்ய மாட்டாங்க.. 

த: இல்ல.. அது வேற இது வேற.. இது வேற மாறி பண்ணியிருக்கேன்..

அ.ர: (சுவைத்துப் பார்த்து விட்டு) இல்ல.. தொண்டைல அடைக்கறா மாதிரி இருக்கு.. வேணாம்.. ரசத்த எடு..

இரண்டு மாதங்கள் கழித்து,

அ.ர: இன்னைக்கு என்ன சாப்பாட்டுக்கு?

: (கொஞ்சம் கூட யோசிக்காமல்) புதினா துவையல்.. 

அ.ர: (சுவைத்துப் பார்த்து விட்டு) அட.. நீ துவையலெல்லாம் பண்ணுவியா? நல்லாயிருக்கே!! 


************
26 comments:

 1. வடைக்கு பதிலா இந்த வாட்டி ஒரு மாறுதலுக்காக.. இரண்டாவதாக கமென்ட்டுபவருக்கு பொம்மாயி டிவிடி பரிசாக அனுப்பி வைக்கப்படும்..

  (இந்த வாட்டி மட்டும் ரெண்டாவதா போடறவங்களுக்கு.. ஹி ஹி..)

  ReplyDelete
 2. எனக்கு பொம்மாயி டிவிடி வேணாம் :(

  நான் இந்த மாதிரி படங்கள் எல்லாம் பிடிக்காது. (பயம் அப்படீங்கறத எம்பூட்டு நாசூக்கா சொல்ல வேண்டியிருக்கு)

  ஹி ஹி அந்த புதினா துவையல் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே :)

  ReplyDelete
 3. அய்யோ நான் தான் ரெண்டாவதா?! மீ எஸ்ஸ்ஸ்ஸ்கேப்பூஊஊஊஊஊ

  ReplyDelete
 4. பொம்மாயி டிவிடிக்கு பதில் டாம் அண்ட் ஜெரி கார்ட்டூன் சிடி அனுப்பவும் :)

  ReplyDelete
 5. http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_24.html

  ReplyDelete
 6. //அமைச்சர்: தூக்கத்துல கண்ணு தெரியாம போறதுக்கு இலவசமா ஆலோசனை சொல்ற எடத்துக்கு..//

  பாருய்யா..நா..ஒரு வாரம் அப்டிகா போனா என்னென்னவோ நடக்குது இங்கே...!!

  ReplyDelete
 7. *புதினா* சட்னியா இல்லை *கத்திரிகா* சட்னியா ஆஹா ..பாத்து அப்புறம் பாம்பா மாறிடப்போறாங்க ஹி..ஹி..

  ReplyDelete
 8. // ஈவில்டெட் உருவங்களும், //

  தெரியாதனமா இங்கே வந்துட்டேன்..
  அதுக்காக ஒரு சின்ன பையனை
  இப்படியா டெரர் கிளப்பறது..?

  போச்சு.., இன்னிக்கு நைட்
  கனவுல என்னவெல்லாம்
  வர போகுதோ..?!!

  ReplyDelete
 9. நல்லாயிருக்கு,எப்படியோ கண்டு பிடிச்சு வந்தாச்சு.

  ReplyDelete
 10. எனக்கு உங்க ப்ரொஃபைல் ஃபோட்டோ பார்த்தாலே பயம் பயமா வருது :(.

  ReplyDelete
 11. கவி.. ஹஹா. நீங்க தான் பொறியில மாட்டின எலியா இன்னிக்கு? :) சரி டாம் அண்ட் ஜெர்றியே அனுப்பி வைக்கறேன்.. கடேசி சீன்ல மட்டும் பொம்மாயி தல காட்டுவாங்க.. ஓகேயா? :))

  ReplyDelete
 12. புதினா துவையல் கற்பனை கவி.. சாதத்தோட சட்னி சாப்பிட மாட்டேன்னு சொன்ன ஒரு அப்பாவி ரங்க்சை அவங்க தங்க்ஸ் அதே ரெசிப்பிய துவையல்ன்னு சொல்லி சாப்பிட வச்சிடறாங்க..

  வான்ஸ் - இதுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..

  ReplyDelete
 13. ஜெய்.. அந்த லிங்க்க்கு நன்றி.. அதுல இன்னும் நிறைய மிச்சமிருக்கு படிக்க..

  யாராச்சும் அலறிட்டே வந்தா மறக்காம அப்டேட் பண்ணுங்க..

  அதுக்கும் வான்ஸ்க்கும் சம்பந்தம் இல்ல ஜெய்லானி.. இது வேற அது வேற.. (phrase க்கு நன்றி அதீஸ்)

  ReplyDelete
 14. ஹிஹி,பொம்மாயி டிவிடி-ன்னு பாத்ததும் சைலன்ட்டா நழுவிட்டேன்.:)

  புதினா துவையல்../அதுக்கும் வான்ஸ்க்கும் சம்பந்தம் இல்ல/ ம்ம்..சொந்த அனுபவம் போலருக்கு! பாவம் அந்த அப்பாவீ!

  ReplyDelete
 15. வாங்க வெங்கட்.. பயப்படாதீங்க.. உங்க வீட்டுல குட்டிப் பசங்க யாராச்சும் இருந்தா அவங்கள பக்கத்துல கூப்பிட்டு துணைக்கு வச்சுக்கோங்க.. ஹாஹ்ஹா..

  ReplyDelete
 16. வாங்க ஆசியா.. எப்பிடி இருக்கீங்க? வீட்டுல எல்லாரும் சுகமா? ரொம்ப நாளாச்சு உங்க கூட பேசி.. நன்றி..

  ReplyDelete
 17. ஹாஹ்ஹா.. ப்ரோபைல் போட்டோக்கே இப்படியா கவி? நிஜமான போட்டோவ அதனால தான் யார் கண்ணுலயும் காட்டரதில்ல..

  ReplyDelete
 18. ஹிஹி.. இம்புட்டு நேர்மையா வந்து உண்மைய ஒத்துக்கிட்ட காரணத்தால உங்க வீட்டுக்கே அனுப்பி வைக்கறோம் மஹி... அப்பாவிங்க எல்லாருமே பாவந்தான்.. என்ன செய்ய?

  ReplyDelete
 19. ;)))))
  தலைப்பைப் பார்த்துட்டு ஒரு செக்கன், இடம் மாறி வந்துட்டேனோ என்று குழம்பிட்டேன்.

  ReplyDelete
 20. ஹாஹ்ஹா.. நன்றி இமா.. மாறி எல்லாம் வரலை.. சரியாகத் தான் வந்து இருக்கீங்க..

  ஒரு வாரமா காணோமேன்னு நினைச்சேன்.. எல்லாரும் சுகந்தானே? வேலை கடினமாயிடுச்சா?

  ReplyDelete
 21. அனைவரும் நலம். ;)
  ம். கொஞ்சம் 'கடி'னம் தான். ;)

  ReplyDelete
 22. ம்ம்ம்.. புரியுது.. எனக்கும் அப்படித் தான் இருக்கு :(

  ReplyDelete
 23. சந்தூ,
  //*புதினா* சட்னியா இல்லை *கத்திரிகா* சட்னியா ஆஹா ..பாத்து அப்புறம் பாம்பா மாறிடப்போறாங்க//
  என்ன இது நான் கொஞ்சம் பிஸியா அப்படிக்கா போனா உடனே இப்டிக்கா என்னை வம்பிழுப்பது?? கத்தரிக்காய், புதினா, பாம்பு இப்படி எல்லாமே என் குடும்பத்துக்கு ஆகாத வார்த்தைகள்/பொருட்கள் எல்லாம் வலைப்பக்கம் உலவுகிறது.

  வான்ஸ் - இதுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..
  ஆங்! நம்பிட்டோமில்லை.

  ReplyDelete
 24. அட நெஜமாவே சம்பந்தம் இல்ல வான்ஸ்.. எல்லாம் இந்த ஜெய்லானி சதி.. :)))

  உண்மைக்கு காலமில்லே சந்துஸ் :) மனச தேத்திக்கோ.. :))

  ReplyDelete
 25. //ஹாஹ்ஹா.. ப்ரோபைல் போட்டோக்கே இப்படியா கவி? நிஜமான போட்டோவ அதனால தான் யார் கண்ணுலயும் காட்டரதில்ல.. //

  இப்பதான் மஹி பிளாக்கில போய் ஒரு பிட்டை போட்டுட்டு வந்தேன் ,இருங்க நீங்க மாட்டாமலா போய்டூவீங்க
  http://mahikitchen.blogspot.com/2010/09/blog-post_24.html

  ReplyDelete
 26. //அட நெஜமாவே சம்பந்தம் இல்ல வான்ஸ்.. எல்லாம் இந்த ஜெய்லானி சதி.. :))) //

  ஹா..ஹா..ஹா...ஹா.. வந்துட்டேனில்ல இனி பிளாக் களை கட்டும்

  உண்மைக்கு காலமில்லே சந்துஸ் :) மனச தேத்திக்கோ.. :)) //


  ரெண்டுதடவை இல்லைன்னு சொல்றதுக் பதிலா ஆமான்னு உண்மையை சொல்லிடுங்களேன் சந்தூஸ்

  ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)