16 November 2010

குடிக்கறவங்களெல்லாம் கெட்டவங்களா?

குடி நல்ல பழக்கமா? இல்ல..

அளவு மீறிப் போனா புத்தி மாறுமா? ஆமாம்

அளவு மீறிப் போனா குற்றம் செய்யத் தூண்டி விடுமா? அப்படித் தான் நினைக்கறேன்..

உடம்புக்கு உகந்ததா? இல்ல.. ஆனா விதிவிலக்கு இருக்கலாம்.. 

உடம்புக்கு என்ன ஆவும்? அல்சர்ல இருந்து கல்லீரல் புத்துநோய் வரைக்கும் வரலாம்..

குடி அடிக்ட் பண்ணுமா? ஆமாம்

எல்லாரையும் அடிக்ட் பண்ணுமா? இல்ல..

குறிப்பிட்டு இவங்களைத் தான் செய்யும், இவங்களைச் செய்யாதுன்னு சொல்ல முடியாது.. ஆனா, கொஞ்சம் பேருக்கு இயல்பாவே எதுக்கும் அடிமையாகிடும் பழக்கம் இருக்கு.. அவங்க அடிக்ட் ஆகறது எளிது.. இப்ப, நானே வீட்டு வேலைய கொஞ்சம் தள்ளி வச்சுட்டு ப்ளாக் எழுத உட்கார்ந்திருக்கேன்.. வேலைய முடிச்சிட்டு எழுதலாம்னா, இல்ல எழுதிட்டு செய்யலாம்ன்னு மனசு சொல்லுது.. அதே, பக்கத்து வீட்டு ருக்மணி, வேலைய எல்லாம் செஞ்சு முடிச்சிட்டு சும்மா இருக்கற நேரத்துல மட்டும் தான் ப்ளாக் பக்கம் வருவா..

குடிக்கறவங்க எல்லாரும் குடிகாரங்க ஆயிடுவாங்களா? மேல சொன்னதே தான்.. யாரும் குடிகாரர் ஆகணும்ன்னு விரும்பி குடிக்க ஆரம்பிக்கறதில்ல.. ஆனா குடிக்காம இருக்கறவன விட குடிக்க ஆரம்பிச்சிட்டவனுக்கு குடிகாரர் ஆகறதுக்கான ரிஸ்க் கண்டிப்பா அதிகம் :)

குடும்பத்துக்கு உகந்ததா? இதுவும் ஒருத்தருக்கொருத்தர் வேறுபடும். கட்டுப்பாட்டுல உறுதியா இருக்கறவங்க குடும்பத்துக்கு பாதிப்பு இல்ல.. தனது விருப்பங்களை கட்டுப்படுத்திக்கத் தெரியாதவனோட குடும்பம் நாசம் தான்..

குடிச்சிட்டு காரோட்டறது நல்லதா? கண்டிப்பா இல்ல.. குடியால வரக் கூடிய போதை ஆளாளுக்கு வேறுபடும்.. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல ரத்தத்துல அல்கஹால் அளவு இருந்தா வண்டி ஓட்டி வரக் கூடாதுன்னு சட்டமே இருக்கு.. கைது, லைசென்ஸ் ரத்து, பைன், ஜெயிலு எல்லாம் உண்டு..

எதிரில் வரும் வாகனத்தின் வேகத்தை சட்டென அனுமானித்து தனது வாகனத்தை கண்ட்ரோல் செய்யும் நேரம் அதிகமாகும்.. அதிகமா குடிச்சிட்டு வீடு திரும்பறதா இருந்தா குடிக்காத ஒருத்தரை ஓட்டச் சொல்லி திரும்பி வரலாம்..

நீ குடிப்பியா? ச்சே.. கருமம்..

உன் தம்பி குடிச்சா ஒத்துப்பியா? அவனுக்கு வேலை கிடைச்சப்பவே சொன்னேன், பாத்து சூதானமா இருந்துக்கப்பான்னு..

நம்ம நாட்டுல இவ்வளவு மக்கள் ஏழ்மையில இருக்கும் போது, டாஸ்மாக் ரொம்ப அவசியமா? இதுக்கு எனக்கு தெளிவான பதில் சொல்லத் தெரியல.. ஆனா அவசியம்ன்னு நினைக்கல

குடிக்கறவங்களெல்லாம் கெட்டவங்களா? இல்ல..

உன் ஆபிசுல பக்கத்து டேபிள்ல வேல பண்ற குமாரு குடிப்பான் தானே? அப்பப்ப குடிப்பான்.. ஆனா குடிச்சிட்டு யாருக்கும் எந்தப் பிரச்சனையும் கொடுத்ததில்ல.. நேரங்காலமா வேலையை செஞ்சு முடிச்சடறான்.. எங்க கிட்ட மரியாதையா நடந்துக்கறான்.. அது அவன் விருப்பம்ன்னு விட்டுடறேன்..

அவன் உனக்கு நண்பன் தான? உடம்பு கெட்டுப் போயிரும்ன்னு எடுத்துச் சொல்ல மாட்டியா? அது அவனுக்குத் தெரியாதா? அதுவுமில்லாம அவனுக்கு உபதேசம் பண்ண என் உடம்ப நான் முதல்ல ஒழுங்கா வச்சிருக்கறனா? எண்ணையும் வெண்ணையுமா திங்கறேன்.. உடற் பயிற்சி எதுவும் பண்றதில்ல.. நான் எப்படி அவனுக்குச் சொல்ல? அப்புறம், பதிலுக்கு அவன் என்னைப் பாத்து, "நீ தெனமும் ரெண்டு தடவ நல்லா ஸ்ட்ராங்கா காப்பி குடிக்கற, குடிக்கலைன்னா தலை வலிக்க ஆரம்பிச்சுடுதுன்னு சொல்லற.. நீயும் காப்பி அடிக்ட் தான்.. காப்பி குடிச்சா இதயத்துக்கு கெடுதல்" அப்படின்னு பேச ஆரம்பிச்சுட்டா?

அப்ப அளவோட குடிச்சா தப்பில்லங்கற? அது குமாரோட விருப்பம்.. அரசாங்கமே மது விற்பனைய அனுமதிக்கும் போது நான் எப்படி தடை சொல்ல?

குடிக்கறதப் பத்தி உங்கம்மா என்ன சொல்லிருக்காங்க? குடிக்கறவன் எல்லாம் கெட்டவன்னு சொல்லி வளர்த்துனாங்க..

நீ அது உண்மைன்னு ஒத்துக்கறியா? அது தம்பிக்கும் எனக்கும் மனசுல அழுத்தமா பதியறதுக்காக அப்படிச் சொன்னது.. காரணமில்லாம இல்ல.. ஊருல ரெண்டு மூணு பேரு குடிச்சுக் குடிச்சே குடல் வெந்து போயிச் சேந்துட்டாங்க..

ஆனா, நான் செய்யாத, செய்ய விரும்பாத ஒரு விஷயத்த இன்னொருத்தர் செய்யறதாலயே அவரைக் கெட்டவர்னு சொல்ல விரும்பல. என்னைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு பழக்கம்.. அதை வச்சே ஒருத்தன முழுசா எடை போடக் கூடாது.. இன்னைக்கு நான் ஏறுன ரயிலுல வாழ்க்கைல ஒரு வாட்டி கூடக் குடிக்காதவங்கள விரல் விட்டு எண்ணிடலாம். ஆனா யாரும் எம்மேல வந்து உரசல.. தப்பான பார்வை பார்க்கல.. எனக்கு அது தான் முக்கியம்..

ஆனா அதுவே குடிச்சிட்டு போதைல வம்பு பண்ணுனா, வண்டி ஓட்டுனா கண்டிப்பா தப்பு..
ஒரு கொள்கைக்காக குடிக்கவே வேண்டாம்ன்னு நினைச்சிருக்கற ஒருத்தனுக்கு ஜூஸ் ல அவனுக்கே தெரியாம வீம்புக்குன்னு கலக்கிக் கொடுத்து குடிக்க வச்சா தப்பு..
குடிப்பழக்கத்தோட பின் விளைவுகளைப் பத்தி சரியாத் தெரியாதவனுக்கு பழக்கி விட்டா தப்பு..
அதென்ன இவன் மட்டும் குடிக்க மாட்டேன்றான்னு வயித்தெரிச்சல்ல மெண்டல் ப்ரெஷர் கொடுத்து குடிக்க வச்சா தப்பு..
குடிக்காதவனெல்லாம் ஆம்பளையே இல்லன்னு பேசிட்டு சுத்துனா அதுவும் தப்பு..
வெவரந் தெரியாத பத்து வயசுப் பையனுக்கு ஊத்திக் கொடுத்தா தப்பு..

குடியைப் பற்றின கருத்துகள் நாட்டுக்கு நாடு வேறுபடுமா? ஆமாம்.. 

குடிக்காதவங்க எல்லாரும் நல்லவங்களா? எதிர் டேபிள் வைஷு குடிக்கறதில்ல தான்.. ஆனா, வேலையெல்லாம் நைசா மத்தவங்க தலையில கட்டிடறா.. மத்தவங்களப் பத்தி இல்லாத புரளி பேசிட்டு சுத்தறா.. அதை என்னன்னு சொல்ல?

அப்ப நீ குடிய சரியான விஷயம் தான்னு ஆமோதிக்கற? அப்படி நான் சொன்னனா? மறுபடியும் படிங்க மேல இருந்து..

நீ உனக்கானமட்டில் என்ன நினைக்கற? என்னைப் பொருத்தவரைக்கும் எனக்கு அது தேவையில்லாத பழக்கம்.. அப்புறம், மனசுல ஆழமா தப்புன்னு பதிஞ்சிருக்கறதால என்னால அப்படிச் செய்ய முடியாது..

மேல சொன்னதெல்லாம் "குடி" யப் பத்தி இன்னைக்கு எனக்கு இருக்கற புரிதல் மற்றும் கருத்துகள்.. நாளைக்கு மாறலாம்.. இதுல நான் சொல்லியிருக்கறது தவறாகயிருந்தா இல்லை யாருக்கும் தவறாகப்பட்டா, மன்னிக்கனும்.. எதிர் கருத்து இருக்கறவங்க கண்டிப்பா பின்னூட்டம் போடணும்.. பேசலாம்.. விவாதம் நன்று.. விதண்டாவாதம் வேண்டாம்.. நன்றி.. 

37 comments:

  1. என்னதான் சொல்ல வர்றீங்க... ஒரு குவாட்டருக்காகவா இவ்வளவு கலாட்டா...

    ReplyDelete
  2. எதிர் கருத்தே இல்லை :)))

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. குடியப் பத்தி நான் என்ன நினைக்கறேன்னு சொல்லியிருக்கறதா நினைக்கறேன்.. :)

    என்னது கலாட்டாவா? இது வருஷக்கணக்கா நான் குடிக்காம பரிணமிச்சு யோசிச்சது :) பசங்களுக்கு ஜஸ்ட் ஒரு குவாட்டர்.. என்னத்தச் சொல்ல? :)

    ReplyDelete
  4. இப்பிடி ஏமாத்திப் போட்டீங்களே ஹைஷ்? உங்களுக்கு வடை இந்த முறை கிடையாது என்பதிலும் எதிர்கருத்தே இல்லை.. :)

    ReplyDelete
  5. புரிதல் 100% கரெக்ட். +ஒரு கருத்து மட்டுமே! குடிச்ச பிறகு யாரும் சுயநினைவை இழப்பதில்லை, ஆனால் சாதாரணமாக சொல்ல அல்லது செய்யமுடியாதவைகளை குடியின் திரை மறைவில் செய்துவிட்டு எஸ் ஆயிடறாங்க. (அவக ரொம்ப நல்லவக மாதிரி)

    இதில் வில்லன் குடி அல்ல அதை குடிப்பவர்தான்:)

    ReplyDelete
  6. enakkum vadai illaiya? okkai. kanamaana vishayamaa irukku..will come sometime later.:)

    ReplyDelete
  7. அருமையான பதிவு! என்னோட கருத்தும் அது தான்.. நீ என்ன வேண்ணா செய்யி ஆனா என்னைய என் வழில விடு. நமக்கெல்லாம் ஐஸ்கிரீம் சாப்பிட்டாலே நாக்கு குழறுமே :))
    என்னை பொறுத்தவரை நான் ரொம்ப நல்லவன்னு லேபில் ஒட்டிக்க இல்லை சொன்னது. எனக்கு என் உடலை என் வரையில் பேணி பாதுகாக்கணும் என்பது . ஒரு காலத்தில சந்து சொன்ன மாதிரி ஜென்ரலைசேஷன் ஆட்டியூட் இருந்தது. பிறகு கண்ணோட்டம் மாறியது. இது எல்லா விசயங்களுக்கும் பொருந்தும். இன்று என் கருத்து இப்படி என்பதால் நீ அப்ப லா பேசினாய் என்று சொன்னால் அவங்களுக்கு பதில் " என் மனசு என் கண்ணோட்டங்களை மாற்ற எனக்கு உரிமை இருக்கில்ல( I have right to change my mind :))"

    ReplyDelete
  8. ஹைஷ்.. ரொம்ப நன்றி.. உங்களைப் போல "அனுபவசாலி"களின் கருத்துகளை ரொம்பவும் எதிர்பார்க்கிறேன் :)))))) சும்மா சொன்னேன்.. லதா ஆன்ரி அடிக்க வந்துடப் போறாங்க (உங்கள இல்ல, என்னை :) )

    சரி தான்.. குடித்தால் ஒரு செயலைச் செய்வதைத் தடுக்கும் inhibition sense குறைவதாகப் படித்திருக்கிறேன்..

    ReplyDelete
  9. நன்றி இலா.. எனக்கும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டா நாக்கு குழறும் :))

    அதையேன் கேட்கறீங்க? காலேஜ் படிக்கறப்ப யாராச்சும் பையன் குடிக்கறான்னு தெரிஞ்சாலே அது பெரிய ந்யூசாப் பரவும் எங்க ஹாஸ்டல்ல.. அவன் குடிப்பானாமில்ல ன்னு.. அவங்க கூட பேசவே பயம் வந்துரும் அப்புறம்.. கண்ணோட்டம், காலம் தரும் அனுபவம் கொண்டு மாறும்.. சரி தான்..

    ReplyDelete
  10. மஹி.. செம கனமான பதிவு தான் போங்க.. :)

    உங்களுக்கு வடை கிடையவே கிடையாது.. :))

    ReplyDelete
  11. நிச்சயம் கனமான பதிவுதான் சந்தனா! :)
    /கண்ணோட்டம், காலம் தரும் அனுபவம் கொண்டு மாறும்./100% கரெக்ட்டு!

    இங்கே வரும்வரை குடி என்பது ஒரு பெரீய்ய விஷயமா இருந்தது.யு.எஸ்.ல முதல்முறை ஒருநண்பர் வீட்டுல ப்ரிட்ஜ்ல heineken பாத்தப்ப ஷாக் ஆகிட்டேன்.

    கொஞ்சம்வேலை..மீண்டும் வரேன்.:)

    ReplyDelete
  12. நோ கமெண்ட் அது அவங்க அவங்க பர்ஸனல் விஷயம் ...!!

    இது விதண்டாவாதம் இல்லை..இல்லை.. :-)))

    ReplyDelete
  13. //அரசாங்கமே மது விற்பனைய அனுமதிக்கும் போது நான் எப்படி தடை சொல்ல? //

    அரசாங்கம் எது செஞ்சாலும் அது சரியா( ஙே ? ) இருக்குமா..?

    ReplyDelete
  14. //உன் தம்பி குடிச்சா ஒத்துப்பியா? அவனுக்கு வேலை கிடைச்சப்பவே சொன்னேன், பாத்து சூதானமா இருந்துக்கப்பான்னு.. //

    நீங்க இவ்வ்ளோ நல்லவங்களா..? நம்ப முடியலையே......>

    ReplyDelete
  15. //நீ குடிப்பியா? ச்சே.. கருமம்..//

    ஆராய்ச்சி சூப்பர்..!! என்னது இது திடீர்ன்னு ஞானோதயம் . இப்பிடி பின்றீங்க..!! :-))

    ReplyDelete
  16. இது “குடி”யைப் பத்திப் போட்டதா இல்ல சேந்து குடியிருக்கிறதைப் பத்திப் போட்டதா?

    ReplyDelete
  17. :)

    அடிச்ச சரக்கு மேலே சீன் போடுறவங்க நல்லவங்களா கெட்டவங்காளன்னு கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணிச் சொல்லுங்களேன்.. :))))

    ReplyDelete
  18. ஏன் என் கமெண்ட் எதுவும் வர்றதில்லை??

    ReplyDelete
  19. குடி.... இப்பல்லாம் நான் பெரிசா குடிகாரர்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. அவங்க விருப்பம் குடிப்பது, குடிக்காமல் இருப்பது. இங்கு பார்ட்டிகளில் மது வகைகள் தாரளமாகவே இருக்கும். ஆனா, எங்க மக்களுக்கு கொஞ்சம் சரக்கு உள்ளே இறங்கினா புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க. அதான் எரிச்சலா வரும்.

    ReplyDelete
  20. //எங்க மக்களுக்கு கொஞ்சம் சரக்கு உள்ளே இறங்கினா புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க. அதான் எரிச்சலா வரும்.//

    வான்ஸ், அத போட்டுகிட்டு புலம்பினாதான் உண்டு இல்லாட்டி நீங்க பிச்சி பீஸாக்கிட மாட்டீங்க ..!! ஹி..ஹி..!! பாவம் ஓரிடம் பழி ஓரிடமுன்னு இதைத்தான் சொல்றாங்கப் போலிருக்கு ஹா..ஹா.. !! :-))

    ReplyDelete
  21. ஜெய், அப்ப அது புலம்பல் இல்லை மனக்குமுறலன்னு சொல்லுங்க??? ( சொந்த அனுபவமோ, தல )

    ReplyDelete
  22. @மகி

    நன்றி மஹி.. எனக்கும் அதே தான். காலேஜ்ல இருந்ததுக்கும் இன்னைக்கு இருக்கரதுக்கும் கண்ணோட்டத்துல நிறைய வித்தியாசங்கள்..

    ReplyDelete
  23. @ஜெய்லானி

    அய்ய.. நீங்க விதண்டாவாதம் பண்ணினாலும் விட்டுடுவோமா? க்கும்..

    ReplyDelete
  24. @ஜெய்லானி

    குட் கொஸ்டின்.. இதற்கான ஆராய்ச்சி எல்ஸ் வீட்டு ஓட்டை டிவியில் விரைவில் துவக்கப்படும் :)

    ReplyDelete
  25. @ஜெய்லானி

    நாங்க அதையும் விட நல்லவங்களாக்கும்..

    ReplyDelete
  26. @ஜெய்லானி

    பல வருஷமா செஞ்சிருக்கேன்.. இன்னைக்குத் தான் முடிவு தெரிஞ்சது.. அதான்.. நான் நெறைய வயர் கூடை எல்லாம் பின்னுவேன்.. அந்த அனுபவம் தான் :)

    ReplyDelete
  27. @முகிலன்

    இது குடியப் பத்தித் தான் போட்டது.. நமக்கு ஒரு விஷயம் பிடிக்கலைன்னாலும், அதை எப்படி அணுகுவேன்னு சொல்லத் தான்..

    சேந்து குடியிருக்கறது.. இதப் பத்தி அவ்வளவா யோசிச்சதில்ல.. டாக்டர் ஷாலினி கிட்ட ஒரு ஆறு மாசம், அப்புறம் இந்த ஊருல யார் கிட்டயாவது ஆறு மாசம், ஆராய்ச்சி பண்ணலாம்ன்னு இருக்கேன்.. :))

    ReplyDelete
  28. @ஈரோடு கதிர்

    அதுங்.. ஆழ்மனதில் அடக்கி வைக்கப்பட்ட குமுறல்கள் மடை திறந்த வெள்ளமாய் விரிவாகும் பொழுது காணக் கிடைக்கும் காட்சிகள்.. அப்படின்னு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கரதால, அவங்களெல்லாம் அப்பாவிங்கன்னு சொல்லி தீர்ப்பு சொல்றோம்..

    ReplyDelete
  29. @முகிலன்

    நடுராத்திரி பன்னெண்டே முக்காலுக்கு ஒரு கமேன்ட்டப் போட்டுட்டு கேள்வியப் பாரு :))

    ReplyDelete
  30. @vanathy

    சரி தான் வானதி.. நானும் உங்கள மாதிரி தான் நினைப்பது..

    இந்த மாதிரி புலம்பற ஆட்கள நான் பாத்ததில்ல.. ஆனா ரொம்ப சுவாரசியமா இருக்கும்ன்னு தோணுது :)

    ReplyDelete
  31. @ஜெய்லானி

    ஆமா.. அதா சாக்குன்னு குடி மேல பழியைப் போட்டுட்டு எல்லாத்தையும் கண்டபடிக்கு பேசி விட்டுடலாம். நல்ல ஐடியா..

    ReplyDelete
  32. @vanathy

    வான்ஸ்.. சொந்த அனுபவமா இருக்காதுன்னு நம்பறேன்.. என்ன ஜெய்.. நான் சொல்றது சரியா?

    ReplyDelete
  33. சிகரெட் புகை ,இந்த குடி மேட்டர் ஸ்மெல் கண்டா அடுத்த நிமிஷம் நா எஸ்கேப்..!!! ரெண்டுமே பிடிக்காத விஷயம்.. மில்லியன் டாலர் குடுத்தாலும் நான் மயங்காத ஆள் இதுல...!! :-))

    ReplyDelete
  34. கடியைப் பற்றிய எனது புரிதலும் உங்களுடையது போல்தான். இளவயதில் குடிப்பவர்கள் ஏதோ உலகமகா கெட்டவர்கள் என்ற நினைப்பு இருந்தது உண்மை.
    ஆனால் துளி கூட சரக்கு அடிக்காத மகா கேவலமான மனிதர்களையும், குடித்தாலும் கண்ணியமான மனிதர்களையும் கண்ட பின் என்னுடைய கண்ணோட்டம் மாறிவிட்டது.

    ReplyDelete
  35. நீங்க சொல்ற லாஜிக்கெல்லாம் படிக்க நல்லாத்தானிருக்கு. ஆனாலும், குடிக்கிறவங்களைப் பாத்தாலே ஒரு வித ஜாக்கிரதை உணர்வு வந்துவிடும்.

    நல்லா சுயநினைவோட இருக்கும்போதே, மனுஷங்க எப்படி ரியாக்ட் பண்ணுவாங்க/வோம்கிறது நிச்சயமில்லை; இதில குடிக்கவும் செஞ்சா? ;-)))))

    ReplyDelete
  36. எதிர் கருத்து இல்லாத உண்மை பதிவு..

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)