05 December 2010

பெண்.. மனம்.. பாட்டு..

//பெண் மனதை சொல்லும் பாட்டு


பெண்கள் மனசை வெளிபடுத்தும் பாட்டு, அதுவும் பெண் பாடிய பாட்டு, அதுவும் பெண் குரலிலேயே இருக்கிற பாட்டு//

இதை மஹி என்னை தொடர அழைத்திருக்கிறார்.. முதலில் அதற்கு ஒரு நன்றி.. எழுத விருப்பம் இருக்கும் தலைப்பு.. இந்த வரிகளை ஆசியா அவர்களின் பதிவில் இருந்து எடுத்துப் போட்டுள்ளேன்..

சில இயக்குனர்கள் தமது படங்களின் பெண் பாத்திரங்களை சரியாக உருவகப் படுத்துவதில்லை.. ஒன்று, த்ரிஷாவுக்கு பாவாடை தாவணி கட்டி பாந்தமான பெண்ணாக காட்ட முயற்சிப்பார்கள்.. இல்லை, ஸ்ரேயாவை அல்ட்ரா மாடர்ன்-அரை லூசு-அழகுப் பெண்ணாக வளைய விடுவார்கள் (நேற்று பார்த்த சிக்கு புக்கு என்ற படத்தை வைத்து சொல்கிறேன்.. அந்தப் பாத்திரம் செயற்கையாக இருந்தது.. ஜப் வீ மெட் படத்தின் கரீனாகபூர் பாத்திரத்தை கொண்டு வர முயற்சித்து தோல்வி கண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.. ஜப் வீ மெட்டில் வரும் கரீனாவின் பாத்திரம் மிக நன்றாக இருக்கும்..).. அதுவும் இல்லையா, இருக்கவே இருக்கு ஈகோ பிடித்த பெண் :)) 

இதைத் தாண்டி சற்றேனும் பெண்களை இயல்பாக, நல்லவராகவோ இல்லை கெட்டவராகவோ, வெளிப்படுத்தும் படங்கள் உண்டு.. பெண்ணினது பாத்திரம் சரியாக வடிவமைக்கப்பட்டாலே எனக்கு அந்தப் படம் கொஞ்சமாவது பிடித்துப் போகும்.. கல்லூரி, பூ, அங்காடித் தெரு, வாரணம் ஆயிரம், பருத்தி வீரன், மொழி.. இப்படி..

சரி.. பாட்டுக்கு வருவோம்.. அந்தந்த பாத்திரம் (அடுப்பங்கரைப் பாத்திரம் இல்லீங்கோ :) ) பாடும் பாட்டு என்பதால் சில.. பாடல் இனிமையாக, பாடியிருக்கும் குரல் இனிமையாக இருப்பதால் சில.. பிடித்ததை பத்துக்குள் அடக்கி விட முடியாது.. நேற்று இரவு சட்டென நினைவுக்கு வந்தவை மட்டுமே இங்கு.. வரிசைப்படியும் தரவில்லை.. பெண்ணின் மனது இப்பாடல்களில் வெளிப்படுகிறது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது :) படங்களில் பாடலைப் பாடுபவர்கள் பெண் கதாப்பாத்திரங்கள்.. பாட்டு எனக்குப் பிடிக்கும்.. அவ்வளவே.. 

௧. பொதுவாக பெண்கள் தனது காதலை நேரடியாக வெளிப்படுத்த தயங்குவார்கள்.. இந்த நாட்டிலும் அப்படித் தான் என்று நினைக்கிறேன்.. ஆனால் அந்த வட்டத்தை தாண்டி, நான் உன்னை விரும்புகிறேன்.. உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்.. உன்னோடு வாழ விரும்புகிறேன்.. என்று மாயா தைரியமாக தனது காதலைச் சொல்கிறார்.. திருமணம் முடிந்து, தேனிலவுக்காக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து, அங்கு அந்தப் பெண் பாடும் பாடல்.. தாமரையினது வரிகள்.. பாம்பே ஜெயஸ்ரீ குரல்.. 


இதில் வரும் "பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா.. உன் இனிய கண்ணியம் பிடிக்குதே.." வரிகளின் மேல் எனது தோழியருக்கு விமர்சனங்கள் எழுந்ததுண்டு.. பெண்ணைப் பாத்திடவே விரும்பாதவன் கண்ணியமானவனா என்று :) ஆனால் அடுத்து வந்த "கண்களை நேராய் பார்த்து தான்.. நீ பேசும் தோரணை பிடிக்குதே.." என்ற வரிகள் பிடிக்கும்.. 

௨. ஒரு சைக்கோ கணவனை விவாகரத்து செய்து விட்டு வாழும் பெண்.. கொஞ்சம் நாள் கழித்து சகோதரனின் நண்பருடன் அறிமுகம் ஏற்பட்டு, கொஞ்சம் தயக்கத்துடன் பழகி.. பின் மெல்ல காதல் கனியும்.. இந்தச் சூழ்நிலையில் வரும் இந்தப் பாடல் அந்தப் பெண்ணின் மனதே பேசுவது போல இருக்கும்.. சத்தம் போடாதே எனும் இந்தப் படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை.. பாடியவர் நேஹா பாஸின்.. 


௩. நண்பன்-நட்பு என்று நாயகி ஒருவனுடன் பழகுகிறார்.. அந்த ஆண் இவரை விரும்ப ஆரம்பிக்க, நாயகி இன்னொருவனைக் காதலிக்கிறார்.. முதலில் சொன்ன நண்பன் கொஞ்சம் சைக்கோ.. நாயகியை கடத்தி வந்து சிறை வைத்து விடுகிறார்.. இதை உணராத நாயகி நண்பன் சோகமாக இருப்பதைக் கண்டு ஒரு தோழியினது பரிவோடு பாடும் பாடல்.. (எனக்கு இந்தப் படம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை.. ஆனால் பாட்டு வரும் சூழ்நிலை அதன் இனிமை.. நன்றாகயிருக்கும்..) தான் செய்த தவறை உணர்ந்து அந்த நண்பன் அழுவான்.. பெண் குரல் யாருடையது என்று தெரியவில்லை.. யுவன் இசையில் இனிமையான பாடல்... 


௪. இந்தப் பெண் போல ஒரு தோழி கிடைத்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்? தோல்வியில் துவண்டு கொண்டிருக்கும் நண்பர்களுக்கு தம்மால் முடிந்த உதவிகள் செய்து அவர்களை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து அங்கு இவர் பாடும் இந்தப் பாடல்.. தெளிவான உறுதியான பெண்!! அந்த நண்பர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் சில நேரம் நல்லுணர்வு கொடுத்திருக்கும் பாடல்.. சித்ரா வின் இனிய குரலில்.. 


௫. ஒரு கலைஞனின் வாசகியாய், மேடையேறி, தான் கண்ட குறையைச் சொல்லும் பாடல்.. அந்தத் துணிவும் அவருக்கு தன் கருத்தில் இருக்கும் தெளிவும் பிடிக்கும்.. இசைக்கும் மொழிக்கும் கலைக்கும் வரம்புகள் இல்லை என்று தான் நானும் நினைப்பேன்.. ஆனால், கட்டமைக்கப்பட்ட ஒழுங்கினை மிக ஒட்டி இசையோ அல்லது மொழியோ வெளிப்படும் போது, அந்த ஒழுங்கைப் புரிந்து கொண்டவர்களுக்கு பரவசம் ஏற்படுவதும் உண்மை.. இலக்கணங்களுக் குட்பட்டு அழகுத் தமிழில் ஒரு கவிதை படித்தால் நன்றாகத் தான் இருக்கும்.. ஆனால் அது மட்டுந்தான் தமிழ் என்றால் ஏற்றுக் கொள்ள முடியாது தானே? மறுபடியும் சித்ராவின் குரலில்.. இது அவங்களோட முதல் பாட்டுன்னு நினைக்கறேன்..


௬. சில படத்துல ரெண்டு பொண்ணுங்களைக் காட்டினாலே ஒருத்தி நல்லவளாகவும் ஒருத்தி கெட்டவளாகவுந் தான் காமிப்பாங்க :) விதிவிலக்கா சில சமயம் ரெண்டு பேரையுமே வேறுபடுத்தி ஆனா நல்ல விதமா காட்டியிருப்பாங்க.. உதாரணத்துக்கு, பார்த்திபன் கனவு படத்தில் ரெண்டு சிநேஹா வருவாங்க.. ஒருத்தர் லட்சியப் பெண்.. இன்னொருத்தர் குடும்பத்தோட இருப்பதே போதும் ன்னு நினைப்பவர்..

இந்தப் படத்திலும் அப்படி ரெண்டு பேர்.. ஒருத்தர் நாயகனோட காதலி.. இன்னொருத்தர் மனைவி.. மனைவி, கணவனோட பழைய டைரிய படிச்சிட்டு, மொதல்ல கஷ்டப்பட்டு, பின்னர் அவன் ஒரு காலத்தில தன் காதலியை ரொம்ப விரும்பியிருக்கிறான்னு புரிஞ்சுகிட்டு, அந்தக் காதலிய தேடிக் கண்டுபிடிச்சு அழைத்து வருவாங்க..  "ஒரு நாள்னாலும் உன்கூட வாழ்ந்துட்டுப் போயிடனும்" ன்னு இருக்கும் டைரியில.. உன்னை மட்டுமில்ல, உன்னோட ஆசைகளையும் காதலிக்கிறேன்னு கணவன் கிட்ட சொல்லிட்டு இவங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு மனைவி கிளம்பிப் போயிடுவாங்க (பாதி மனசோட தான் :))) ).. காதலியோ, என் பொருள் இன்னொரு இடத்துல இருந்தாலும் பத்திரமா இருக்குன்னு சந்தோஷப்படறேன் ன்னு சொல்லிட்டு கிளம்பிடுவாங்க..

ப்ளாஷ் பேக்ல, கல்லூரியில, நாயகன் தன் காதலியோட பாடற இந்தப் பாட்டு பிடிக்கும்..  பாடகி? இனிய உணர்வுப்பூர்வமான குரலுக்குச் சொந்தக்காரரான ஸ்ரேயா கோஷல்.. பாட்டுல நாயகி முகத்துல தெரியற சந்தோசத்தை, பரவசத்தை, காதலைப் பாருங்க.. கூடவே நாயகனோட குறும்பும்.. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்திருந்தா ரொம்ப நல்லாயிருந்திருக்கும்ன்னு நினைக்க வைச்ச பாடல்..


௭. தத்துப் பெண்ணோட, அம்மா பாடற பாடல்.. சிம்ரனும் குழந்தையும் ரொம்ப நல்லாப் பண்ணியிருப்பாங்க.. சின்மயி யின் குரலில் பாட்டு.. உண்மையில இதை விட அப்பா பாடற பாடல் (இதே, ஆண் குரலில்) பிடிக்கும்.. இசை ரொம்ப நல்லாயிருக்கும்..

செல்ல மழையும் நீ.. சின்ன இடியும் நீ..

௮. ஜெஸ்ஸி யின் இனிமையான குரல்.. இவங்களோட பேட்டி கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி தான் படிச்சேன்.. ரொம்ப நல்லா வந்திருக்க வேண்டியவங்க.. கொஞ்சம் படங்களோட காணாம போயிட்டாங்க.. ம்ம்.. தெய்வீக ராகம்.. தெவிட்டாத பாடல்.. கேட்டிருக்கீங்க தானே? பாடியவர் அவரே..

இப்ப நான் சொல்லப் போற படத்துல நாயகி ஒரு பாடகி.. அவங்க பாடற பாடல் தான் இது.. ஒரு பாடகியா இசையை ரசிச்சுப் பாடியிருப்பாங்க..

ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்..

௯. ஹரிணியின் குரலுக்காக இந்தப் பாட்டு.. இது கொஞ்சமாவது பெண் மனசைச் சொல்லுதோ இல்லையோ.. அந்த ஐஸ்கிரீம் குரலுக்காக கேட்கலாம் :)

நிலா காய்கிறது..

௰. புலியை முறத்தால் விரட்டின மூத்த குடியில் வந்த இளம் குடிகள் தானே நாமெல்லாம்??!! :))) மேலும், பெண் என்றாலே இள நடுத்தர வயதுப் பெண்கள் மட்டுந்தானா? பாட்டி எல்லாம் பாடப்படாதா? தனது பேராண்டியின் வீரத்தைப் போற்றி, தனது பெருமிதத்தை வெளிப்படுத்தி, ஒரு பாட்டி "போர்க்களத்திலே" ஆடிப் பாடும் இந்தப் பாடல் ரொம்பவே புடிக்குமுங்கோ!! :))30 comments:

 1. // ஜப் வீ மெட் படத்தின் கரீனாகபூர் பாத்திரத்தை கொண்டு வர முயற்சித்து தோல்வி கண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் //
  அதேதான்...

  ReplyDelete
 2. வேகமாகத் தொடர்ந்ததுக்கு நன்றி! பாடல்கள் நன்றாக இருக்கு.
  முன்பே வா -நானும் போஸ்ட் பண்ணினேன்,ஆனா அதிலே ஆண்குரலும் வருவதை அப்புறமா கவனித்து வேற பாட்டை சேர்த்தேன்.:)

  சத்தம் போடாதே-படம்,பாடல் எதும் பார்க்கல/கேக்கல.நிறையப் பேர் நல்லாருக்குன்னு சொல்லிருக்கீங்க,கேக்கணும்.

  நல்லதொகுப்பு சந்தனா! நான் அடுத்த தொகுப்பை ரெடி பண்ணிட்டு இருக்கேனாக்கும்.:)

  ReplyDelete
 3. ரொம்பவும் வித்தியாசமா இருக்கு சந்தனா. எப்பவுமே “மாத்தி யோசி”தான் போல!!

  ReplyDelete
 4. //இந்தப் படத்திலும் அப்படி ரெண்டு பேர்.. ஒருத்தர் நாயகனோட காதலி.. இன்னொருத்தர் மனைவி.. மனைவி, கணவனோட பழைய டைரிய படிச்சிட்டு, மொதல்ல கஷ்டப்பட்டு, பின்னர் அவன் ஒரு காலத்தில தன் காதலியை ரொம்ப விரும்பியிருக்கிறான்னு புரிஞ்சுகிட்டு, அந்தக் காதலிய தேடிக் கண்டுபிடிச்சு அழைத்து வருவாங்க.. "ஒரு நாள்னாலும் உன்கூட வாழ்ந்துட்டுப் போயிடனும்" ன்னு இருக்கும் டைரியில.. உன்னை மட்டுமில்ல, உன்னோட ஆசைகளையும் காதலிக்கிறேன்னு கணவன் கிட்ட சொல்லிட்டு இவங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு மனைவி கிளம்பிப் போயிடுவாங்க (பாதி மனசோட தான் :))) ).. காதலியோ, என் பொருள் இன்னொரு இடத்துல இருந்தாலும் பத்திரமா இருக்குன்னு சந்தோஷப்படறேன் ன்னு சொல்லிட்டு கிளம்பிடுவாங்க.//

  சில்லென்று ஒரு காதல் படக்கதை மாதிரி இருக்கே....!!

  ReplyDelete
 5. ஆஹா...இதை ஆராய்ச்சி டிப்பாட்மெண்ட்க்கு அனுப்பினா கண்டிப்பா டாக்டர் பட்டம் கிடைக்கும்..!! அட்டாகாசம் :-)) டாக்டர் சந்தூஸ் வாழ்க..!! வாழ்க..வாழ்க..!!

  ReplyDelete
 6. @மகி

  சத்தம் போடாதே படம் சுமார் தான் மஹி.. இந்தப் பாட்டு நல்லாயிருக்கும்.. நன்றி மஹி.. உங்களோட தொகுப்பையும் ரிலீஸ் பண்ணுங்க சீக்கிரம்..

  ReplyDelete
 7. @ஹுஸைனம்மா

  வித்தியாசமா இருக்கணும்ன்னு இல்ல.. உண்மையில இந்தப் படங்கள்ல வரும் ஒவ்வொரு பெண் கதாபாத்திரமும் ஒவ்வொரு மாதிரி.. அதான் ஒரு ஒரு பாட்டும் இன்னொன்னோட ஒட்டாம இருக்கும் :))

  ReplyDelete
 8. @ஜெய்லானி

  இல்ல.. அது சில்லென்று ரெண்டு காதல்.. :) நன்றி ஜெய்..

  ReplyDelete
 9. எங்க அனுப்பறது? ஜெய்லானி டிவிக்கா? :))

  நான் இப்போ ரொம்ப பிசியா இருக்கேன்.. என் சார்பா நீங்களே இதை அனுப்புனிங்கன்னா புண்ணியமாப் போவும்.. கண்டிப்பா பட்டத்தோட நூலு உங்களுக்குத் தான் :))

  ReplyDelete
 10. சந்தூ, நல்லா இருக்கு. எல்லாமே சூப்பரா ஞாபகம் வைச்சு, அழகா எழுதி இருக்கிறீங்க. எனக்கு ஒரு மண்ணும் ஞாபகம் வந்து தொலையமாட்டேன் என்கிறது.

  ReplyDelete
 11. நன்றி ரோகிணி.. வருகைக்கும் நன்றிக்கும்..

  ReplyDelete
 12. வான்ஸ்.. அதுக்கெல்லாம் இடைவிடாம படம் பார்க்கோணும்.. படமே பார்க்காம இருந்தா மறந்து தான் போவும் :) எனக்கு எல்லாமும் ஞாபகம் இல்லை.. ஆனால் பாதித்தது பிடித்தது மட்டும் இருக்கு..

  ReplyDelete
 13. வாவ்...எல்லாமும் சூப்பர் பாடல்கள்...
  பாடறியேன் படிப்பறியேன்...எவர் கிரீன் பாட்டு...
  Thanks for bringing back memories too

  ReplyDelete
 14. முதல் பாராவில் பெண் கேரக்டர்களை நன்றாக உருவகப் படுத்துவதில்லை என்று படித்ததுமே!, ஆஹா கடைசில ஏய் ஆணாதிக்க வர்க்கமேன்னு விளிப்பாங்களே என்று நினைத்து (ஆமா எத்தனை நாள் தான் வலிக்காது மாதிரியே நடிக்கிறது) இப்படியே ”யூ” டெர்ன் பண்ணுவமா என்ற நினைப்பை புறந்தள்ளி மேலும் தொடர்ந்தேன்.

  நமக்குப் பிடித்த நகைச்சுவை காட்சிகளை நண்பர்கள் குறிப்பிடும் போது படத்தில் பார்த்ததை விட அதிகமாக ரசித்துச் சிரிப்போமே, அது போல இந்தப் பாடலகளையும் ரசிக்க முடிந்தது. (விதி விலக்கு ஒவ்வொரு பூக்களுமே)

  பேசுகிறேன் பாடலுக்கு நீங்கள் தந்த குறிப்பைப் போல
  அற்புதமானது. நீங்கள் குறிப்பிட்ட ஜெஸ்ஸி அதிகம் பாடாதது தமிழ் கூறும் நல்லுலகுக்கு இழப்பே! தெய்வீகக் குரல் அவரது. எத்தனை கவலை இருந்தாலும் ”wind sheild wiper” மாதிரி ஒரே வீச்சில் துடைத்தெறியக் கூடியது.

  ஜோதிகாவைத் தானே சொல்கிறீர்கள். அவரைப் போல முகபாவத்தில் மனதை அள்ளுபவர் வேறு யார் இருக்க முடியும். ஆனால் அந்தப் படத்தை முழுதும் பார்பதற்கு விஜய் படத்தை இரண்டு முறை பார்த்துவிடலாம்.

  நல்ல தளங்களை அடையாளம் கான்பது அத்தனை எளிதல்ல. உங்கள் மற்ற பதிவுகளை நேரம் கிடைக்கும் போது படித்துப் பார்கிறேன்.

  ReplyDelete
 15. @அப்பாவி தங்கமணி

  நன்றி தங்க்ஸ்.. நான் சின்ன வயசுல பாத்தா படம் அது.. பாட்டு மட்டும் அப்பிடியே நினைவுல இருக்கு..

  நீங்களும் வெளியிடறது உங்க தொகுப்பை??

  ReplyDelete
 16. @asiya omar

  ஆசியா அதென்னமோ உங்க கிட்ட இருந்து பாராட்டு வரும் போது தனி குஷி தான் எனக்கு ஏற்படுது :) நன்றி..

  ReplyDelete
 17. இரண்டாவது - பின்னூட்டம் இடுவதில் பிரச்சனை ஏதும் வந்ததில்லை.. வருவது போன்று இருந்தால் கண்டிப்பாக மாற்றியமைக்கிறேன்..

  ReplyDelete
 18. @ரிஷபன்Meena

  //ஏய் ஆணாதிக்க வர்க்கமேன்னு விளிப்பாங்களே//

  அடடா.. நம்மள இப்பிடி நினைச்சிட்டீங்களே :)

  உண்மை தான்.. நமக்குப் பிடித்ததை மற்றவர்களுடன் பகிரும் போது ஒத்த ரசனை வந்தால் மனம் குதூகலமடையும்.. அதே நேரம் ரசனை ஒத்து வராமல் போனால் அதை எளிதாக எடுத்துக் கொள்வதும் நல்லது..

  ம்ம்.. உங்க பாராட்டுக்கு நன்றி.. ஜெஸ்ஸி ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார், அதை வைத்து தான் அடையாளம் கண்டு கொண்டேன் அவரை..

  ஹாஹ்ஹா..சில்லென்று ஒரு காதல் கொஞ்சம் மெதுவாகத் தான் நகர்ந்தது.. ஆனால் கதை நாயகர்களை நன்றாக உருவகப்படுத்தி இருந்ததால் பிடித்தது.. சூர்யா பிடிக்கும் என்பதாலும் பிடித்தது.. அந்தப் பாடலில் வருவது, பூமிகா..

  நிறைய பதிவுகள் விளையாட்டுத் தனமானவை தான்.. தேடல்களை எழுதுவது குறைவு..

  ReplyDelete
 19. நேரம் எடுத்து இடுகைய எழுதி இருக்கீங்க... அப்படித்தான் இருக்கணும்....வாழ்த்துகள்!

  ReplyDelete
 20. http://www.youtube.com/watch?v=s4TdHTtuVQ8

  ReplyDelete
 21. ஜெய்.. ரொம்போ ரொம்போ நன்றி.. :) கேட்டுட்டு இப்போவே சேர்த்துடறேன் என்னோட லிஸ்ட்ல!!

  ReplyDelete
 22. பழமை அண்ணே.. இப்பிடி எல்லாம் நக்கல் பண்ணப்படாது :) ஏதோ எழுதியிருக்கேன்.. இதுக்குப் போயி வாழ்த்தெல்லாம் :)

  ReplyDelete
 23. //
  ஜெய்லானி said...

  சந்தூஸ் இதை கேளுங்க ..கேளுங்க ..கேட்டுகிட்டே இருங்க ...http://www.youtube.com/watch?v=s4TdHTtuVQ8
  December 14, 2010 12:45 PM //

  வானி அவங்க தொடர் பதிவுல போட்டேனே கவனிக்கலையா..?

  ReplyDelete
 24. இல்ல.. அதுல பின்னூட்டப் பின்தொடருதல் தேர்வு செய்யாம விட்டுட்டேன்.. அதனால தெரியாம போயிடுச்சு.. நினைவு வைத்து வந்து கொடுத்ததற்கு நன்றி :)

  ReplyDelete
 25. ஒன்றா ரெண்டா ஆசைகள் பாம்பே ஜெயஸ்ரீ மேடத்தோட குரலில் வசியமருந்து தடவியிருப்பாங்க போல தூரத்தில் நீ வருகையில் என் மீது மழையடிக்கும்ன்னு முடிக்கறதுக்கு முன்னே நம்மீது மழையடித்திருக்கும்...

  நெஞ்சோடு கலந்திடு ஒரு ஆத்மார்த்தமான அன்பை தேடும் ஆணுக்கு தன்னுடைய அன்பை அறுவடை செய்து கொடுக்கும் பெண் மிகவும் பிடித்த பாடல் அதிலும் உன்னிகிருஷ்ணன் வாய்ஸ் செம கடைசியா இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லைன்னு முடிக்கிறப்போ சில்லிடும்..

  பார்த்திபன் கனவு நீங்க சொல்லியிருக்குற பாடலைவிட எனக்கு . அந்தபடத்துல ஆலங்குயில்ன்னு சின்ன சின்ன ஹைக்கூவோட ரசனையா இருக்குற பாட்டுதான் பிடிச்சுருக்கு..

  மீதபாடல்களும் கேட்டதுண்டு..

  லூசு-அழகுப் பெண்ணாக வளைய விடுவார்கள் // :)))))) அதான...வேணாம்பா...ஆவ் மீ குளோசிங் மை மவுத் அண்ட் எஸ்கேப்... ஜூட்ட்ட்.....

  ReplyDelete
 26. முன்பேவா சாங்கா அது??? எனக்கு ஓபன் ஆவலை என்னடா பார்த்திபன் கனவு படத்துல ஸ்ரேயா கோசல் படிக்கலையேன்னு பார்த்தேன்...

  சில்லுன்னு ஒருகாதல் நல்ல பாட்டு

  ராத்திரி பூரா பாட்டைத்தேடி களைச்சதுதான் மிச்சம் :((

  ReplyDelete
 27. ஆமா.. அதுல வரிகள்.. குரல்.. படமாக்கப்பட்ட விதம் எல்லாமே அழகு..

  சரிதான்.. இதுல கொஞ்சம் இசைய வேறொரு மொழி ஆல்பத்துல இருந்து சுட்டுட்டாரு யுவன்னு படிச்சேன்.. என்னமோ ஒரு ஈர்ப்பு, அது குறையாமலே இருக்கு இந்த பாட்டு மேல..

  அதே தான்.. உங்க பின்னூட்டம் பாத்து நானும் முதல்ல குழம்பிட்டேன்.. பா.கனவு படத்துல இருந்து பாட்டு ஏதும் சொல்லலியேன்னு.. குழப்பினதுக்கு மன்னிக்கணும் :) சில வரிகளை பாட்டுக்கு நடுவால இருந்து எடுத்துப் போட்டு லிங்க் செய்தேன்.. இப்போ மறுபடியும் கிளிக் செய்து பாத்தேன்.. எனக்கு பாடல் வருது..

  ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)