ஹூ இஸ் த யீரோ? திருடருங்களோட சண்டை போட்டு கதாநாயகிக்கு பர்ஸ திருப்பித் தர்றவர் தான் யீரோ.. தமிழ்ப்பட யீரோ எப்பவுமே ஒரு சகலகலாவல்லவர்.. நல்லவர்.. இந்தப் படத்துலயும் அதே..
மாதவன் கேரக்டர் மாதிரி சுயநலம் மிகுந்த, நேர்மையற்ற, வெறுப்புணர்வு கொண்ட, ஒரு சந்தேகப்பேய் பிசினஸ்மேனோட, போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கை நடத்த வேண்டாம்ன்னு த்ரிஷா தெளிவா முடிவெடுத்த மாதிரி தான் இருக்குது.. அதுவும் ஒரு நடிகையாக ரொம்பவே சிரமப்பட வேண்டி இருந்திருக்கும்.. மாதவனோட அப்பா கூட மாதவன விட கொஞ்சம் நல்லவரா இருக்கிறார்.. ஆனா இரண்டாவது பாதியில மாதவன ஒரு லூசாக மாத்தி படத்தை ஒரு காமெடி ட்ராமாவா ஆக்கிட்டாங்க..
ஆனாலும் ஒரு சந்தேகம் - தமிழ்த் திரையுலக நடிகர் நடிகைகள் இவ்வ்வ்வ்வ்ளோ நல்லவங்களா? :)))))))
சூர்யாவயும் நல்ல பையனா காட்டியிருக்காங்க.. நடுவால ஜோ போன்ல கூப்பிட்டு, குழந்தை கூட பேசி.. ன்னு ஒரே சென்டிமென்டல் டச்..
மாதவனோட அம்மாவுக்கு ஜாதியை ஒரு குறியீடாகக் காட்டாம, பொதுவான ஒரு அம்மாவாக காட்டியிருக்கலாம். ஒரு இலங்கைத் தமிழ் குடும்பத்த நக்கல் அடிச்சுவிட்டிருக்காங்க.. ஒரு மலையாள ப்ரொட்யூசர காரியவாத முட்டாளா ஆக்கியிருக்காங்க.. இதெல்லாம் பிடிக்கல..
சில நொடி கவனக்குறைவுகளால நடக்கும் விபத்துகள், பல வருஷங்களுக்கான வாழ்க்கையை இழக்கச் செய்பவை.. அந்த வலியையும் நல்லா காட்டியிருக்காங்க.. அந்தப் பாடல் முழுக்கவும் ரிவர்ஸ்லயே காட்டியதும் புதுமை.. அருமை..
கமலுக்கும் த்ரிஷாவுக்கும் காதல் மலர்ந்தத சரியாகக் காட்டல..
த்ரிஷா க்யூட்.. ஜூலியட்டும் அழகு.. சங்கீதா கேரக்டர் - நமக்கு அவங்க மேல கடுப்பு வரச் செய்யறதுல சக்சஸ் ஆகிட்டாங்க..
"உன்னாலே உன்னாலே"ன்னு ஒரு படம் வந்தது, மூணு வருஷம் முன்னால.. அதுல சதா கேரக்டரும் கொஞ்சம் சந்தேகப்படற கேரக்டர் தான்.. ஆனா மத்தபடிக்கு நல்ல பொண்ணு.. அவங்க இயல்பு அப்படித் தான்னு தோனுச்சு.. அதுல ஹீரோ, சதாவோட இயல்பு இதுதான்னு தெரிஞ்சும், கொஞ்சம் கூட தன்னை மாத்திக்க முயற்சி பண்ண மாட்டார்.. தன்னோட குறும்புகளை குறைச்சுக்கவே மாட்டார்.. ஒவ்வொரு குறும்பும் சதாவோட சந்தேகத்த அதிகப்படுத்திட்டு போகும்.. கடைசியா சதாவே ரெண்டு பேருக்கும் ஒத்து வராதுன்னு பிரிஞ்சிடுவாங்க.. எனக்கு அந்தக் கேரக்டரை புரிஞ்சுக்க முடிந்தது.. அவங்க பிரியும் போது கொஞ்சம் கஷ்டமாகவும் இருந்தது..
இந்தப் படத்துல ரொம்பத் தெளிவாகவே மாதவனை வில்லனாகவும், த்ரிஷாவையும் கமலையும் ரொம்ப நல்லவங்களாகவும் பில்டப் பண்ணிட்டாங்க.. அதனால வேலை ரொம்ப ஈசியா முடிஞ்சிடுச்சு :))))) நான் கூட கொஞ்சம் சர்ச்சைக்குரிய படம்ன்னு எதிர்பார்ப்போட பார்த்தேன்.. சாதாரணமாகத் தான் இருக்கு.. மூணு விதமான ஜோடிகளைக் காட்டியிருக்காங்க.. சுதந்திரமான இணைகளா ஒன்னு, இக்கட்டான சூழ்நிலைல செலவு பண்ண கையில ஒத்தப்பைசா இல்லாட்டியும் பரிவோட கவனிச்சுக்கற உறவுகளாக ஒன்னு, சுயநலத்தோட ஒன்னுன்னு.. அவ்ளோ தான்..
கமல் ரசிகர்கள் யாரும் அடிக்க வந்துடாதீங்க.. தசாவதாரத்த விட இது எனக்கு ஓகே வா இருந்தது..
சந்தூ, விகடன் விமர்சனம் பார்த்தேன். நீங்க சொன்ன அதே இலங்கை குடும்பம் பற்றி அங்கேயும் குறிப்பிடிருந்தார்கள். நான் இன்னும் படம் பார்க்கலை. கனடா போகும் போது பார்க்கணும்.
ReplyDeleteநல்ல விமர்சனம்.
மன்மதன் அம்பு - என் கண்ணைக் குத்தி ரெண்டு நாளா வலி..
ReplyDeleteஎல்போர்ட்... படமும் பார்த்திட்டு எழுதியும் ஞாபகத்திற்கு வைச்சிட்டீங்க, அது! :-)
ReplyDelete// ஒரு அருமையான காட்சியோட பேரு போட ஆரம்பிக்கறாங்க :)) அதை நான் விளக்குவதை விட நீங்களே கண்டு களிச்சா தான் நல்லா இருக்கும் :)//
கூகுள் மேப்பை வைச்சு காமெடி பண்றதெல்லாம்; எனக்கும் கடுப்பாத்தான் வந்தது. :))... என்ன பண்றது யார விட்டது ஆசை, ஹா!
உங்க விமர்சனம் நல்லாத்தான் வந்திருக்கு. அந்த ஈழத் தமிழர் பகுதியை நான் வேற மாதிரி புரிஞ்சிக்கிட்டேன். என்னோடது வாசிங்க தெரியும்.
கடைசியா நீங்க சொன்ன மாதிரி, தசவதாரத்தை விட இந்தப் படம் எனக்கு பெட்டர்னு தோணிச்சு :) - அம்புட்டுத்தேய்ன்!!
அருட்பேராற்றலின் கருணையினால்
ReplyDeleteதங்களும், தங்கள் குடுமபமும், சுற்றம் மற்றும் நட்பு அனைவரும்
இப் புத்தாண்டு முதல்
உடல் நலம்
நீள் ஆயுள்
நிறை செல்வம்
உயர் புகழ்
மெய் ஞானம்
பெற்று வாழ்க வளமுடன்.