11 March 2011

சொல்லாத பேருக்கு... பொல்லாத காரணம்...


என் பெயரைச் சொல்ல விருப்பம் இல்லைன்னு ஏற்கனவே சொல்லியிருக்கேன்.. அதே தான் மறுபடியும்..


பெயர்க் காரணத்தைக் கேட்டால், என்னன்னு சொல்ல? எங்க ஊருல பொதுவான வழக்கம் என்னன்னா (தமிழ்நாட்டுல நிறைய ஊருல இப்படித்தான்).. கொழந்த பொறந்த உடனே, அது பொறந்த நாளு, நேரம் பாத்து குறிச்சு வச்சுப்பாங்க.. அதைய ஜோசியரு கிட்ட கொடுத்து ராசி நச்சத்திரம் எல்லாம் கணிக்கச் சொல்லி, ஜாதகம் எழுதச் சொல்லி, வாங்கி வச்சுப்பாங்க.. இந்த ஜாதகந்தா பிற்காலத்துல பலரோட தலைவிதிகளை நிர்ணயிக்கும் (நெஜமாத் தாங்க.. இதய வச்சுத் தானே பொருத்தம் பாத்து கண்ணாலம் கட்டி விடுறாங்க, அப்பிடிச் சொல்ல வர்றேன்).. அந்த மாதிரி தான் எனக்கும் என்னமோ நிர்ணயிச்சு, ரெண்டு மூணு எழுத்துகள அவரு சொல்லக் கேட்டு, அதுல தொடங்கற மாதிரி பேரத் தேர்ந்தெடுத்தாங்க.. எங்கம்மா ஒரு பேரை முடிவு பண்ணி வச்சிருக்க, எங்க பாட்டி (சின்னதா ஏதோ சடங்கு மாதிரி வச்சு, அவங்க மடியில போட்டு அவங்க வாயால பேர மூணு தடவ சொல்ல, அதிலேர்ந்து அந்தப் பேரு தான்) வெவரமா அதையே கொஞ்சம் மாத்திச் சொல்லி, மருமக வயித்தெரிச்சல வாங்கிக் கட்டிகிட்டாங்க.. அதுல இருந்து அதான் எம் பேரு..


மொதல்ல ஒன்னும் தெரியல.. பள்ளிக்கோடம் எல்லாம் போக ஆரம்பிச்ச பின்னால கொஞ்சம் பிடிக்காம போயிட்டது.. எங்க வீட்டுல கூட யோசிச்சாங்க, இவ்வளவு வெசனமாக் கெடக்காளே, மாத்தியிறலாமான்னு.. அப்புறம் அதுக்கு என்னென்னமோ செய்யணும்ன்னு அப்படியே விட்டாச்சு.. ஹூம்..


காலேஜ் வந்த பொறவு தான் கொஞ்சம் பிரச்சனையாச்சு.. அன்னன்னிக்கு பாடம் எடுக்கறவங்க அந்தந்த வகுப்புக்கு மட்டும் அட்டன்டென்ஸ் எடுப்பாங்க.. எம் பேரு கொஞ்சம் வித்தியாசமா இருந்ததால, கொஞ்சம் தடுமாறிட்டு, அதுக்கு பதிலா பையன் பேரு வர்ற மாதிரி ஒரு பேர தப்பாக கூப்பிடுவாங்க.. ஒருக்கா ரெண்டுக்கா இல்ல.. நெறைய வாட்டி இப்படித் தான்.. இதுல என்ன கொடுமைன்னா, அப்படி அவங்க கூப்பிடுற பையன் பேருல பாதிப் பேரு கொண்ட பையன் ஒருத்தரும் எங்க வகுப்புல இருந்தாரு.. அப்புறம் என்ன, நம்ம ப்றேன்ட்சு மக்களுக்கு ஒரே கொண்டாட்டந்தான்.. எம் பேரு தப்புத் தப்பா கூப்பிடப்படும் போதெல்லாம், அவர் அந்தப் பக்கமும் நான் இந்தப் பக்கமும் (எங்க காலேசுல, பசங்க பிள்ளைங்க தனித்தனியாகத் தான் உக்காருவோம்), ஓட்டப்படுவோம்.. யாராச்சும் வந்து அட்டன்டென்ஸ் எடுக்கும் போதே மனசு பக்கு பக்குன்னு அடிச்சுக்கும்.. இந்த வாட்டியாவது சரியாகக் கூப்பிட்டுத் தொலைக்கனுமேன்னு.. இல்லாட்டி இந்தக் களவாணிப் பயலுவ ஓட்டி ஒழிப்பானுவ.. அப்பவும் தப்பாத் தான் கூப்பிடுவாங்க..


இங்க வந்து இந்தத் தொரமாருங்க கூப்பிடற கூப்பிடுல, எம் பேரு எனக்கே மறந்து போயிரும் போல இருக்கு.. :) நல்ல வேள, இங்க கொஞ்சம் ப்றேன்ட்சு மக்கா கூப்பிடறதாலயும் அப்பப்ப பேனாவால பேரு எழுதி கையெழுத்துப் போடறதாலயும் இன்னமும் நினைவுல வச்சிருக்கேன்.. :)


புனைப் பேரு தான் எல்லாத்துக்கும் தெரியுமே - எல்போர்டு அலையாஸ் சந்து.. எல்போர்டு, புதுசா ப்ளாக் ஆரம்பிச்சப்ப என்ன பேரு வைக்கறதுன்னு தெரியாம வச்சது, அதே இப்ப நிலையா ஆயிட்டது.. சந்து, அதிரா திட்டறதுக்கு ஒரு பேரு வேணுமேன்னு கேட்டதால வச்சது.. ஏன் இந்தப் பேருன்னா, அதுக்கு வேணா ஒரு காரணம் இருக்கு, ஆனா அதைச் சொல்ல மாட்டேன் :)


இந்தக் கதை போதுமா?


25 comments:

 1. இந்தக் கதை போதுமா?

  .....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... போதுமே!

  ReplyDelete
 2. ம்ம்..ஏதோ கொஞ்சம் கதை வெளியே வந்திருக்கு. சம் திங் இஸ் பெட்டர் தேன் நத்திங்! தேங்க்ஸ் சந்தனா! ;) :)

  ReplyDelete
 3. சந்தூஸ்...!!அருக்காணி ன்னு வச்சாகூட நல்லாதானே இருக்கும் .வெளியே சொல்ல ஏன் பயம் ??? :-))

  சரி..சரி...பேர்ல என்ன இருக்கு நமக்கு மனசுதான் முக்கியம் :-))

  ReplyDelete
 4. nothing intrest...!

  என்ன பேர்ன்னு எழுதாததால அவ்ளோவா இண்ட்ரெஸ்டிங் இல்ல,,!

  வெசனமா --- கிகிகி தி மேங்கோ சிட்டி...!

  ReplyDelete
 5. sorry

  mango city salemla..

  imm monsester city its correct

  அதொன்னுமில்லீங் அம்மிணி அந்தூருக்கு போகும்போதெல்லாம் மாம்பழம் சகாயமா கிடைச்சதால அதான் ஃபர்ஸ்ட் வந்திடுச்சு...!

  ReplyDelete
 6. சரி சரி பொழச்சுப் போங்க சித்ரா.. இத்தோட விட்டுடறேன்.. :)

  ReplyDelete
 7. மஹி.... இதுக்கு மேல என்ன எழுதறதுன்னு தெரியல.. நன்றி :)

  ReplyDelete
 8. ஆமா ஜெய்.. ஆனா பேரு வைக்கும் போது எனக்கு அது தோணாம போயிடுச்சு :)

  பயம் என்னோட பேரை வச்சு இல்ல, இந்தப் பதிவுலகத்துல பேரச் சொல்லி உரையாடுவது பாதுகாப்பானது அல்ல என்பதால..

  அதே அதே.. ரோசாப்பூவ என்ன பேரு சொல்லிக் கூப்புட்டாலும், ரோசாப்பூ ரோசாப்பூதேன்..

  ReplyDelete
 9. வசந்து.. அதொனுமில்லீங்.. தமிழ்ப் படம் நெறைய பாக்கறனுங்களா.. அதான்.. இப்பிடியெல்லாம் கலர் கலரா பேச வருதுங்.. நீங்க சொன்ன ரெண்டு சிட்டியுமே தப்புங்.. நானு அடிப்படையில வில்லேஜ் கேர்ளுங்..

  பேரச் சொல்லாம இருக்குற நானு இத எழுத வேணாம்ன்னு தானுங் நெனச்சேன்.. ஆனா இந்த மஹி அம்முனி இருக்குதுல்லீங்.. அதானுங் கையப் பிடிச்சு இழுத்துப் போடுச்சுங்.. வேற வழியில்லாம போச்சுங்.. :))

  ReplyDelete
 10. சந்து உங்கட பெயர் சூப்பரா இருக்கு.... இதை எதுக்கு இத்தனை நாளா மறைச்சீங்க?

  ReplyDelete
 11. அதிரா.. நானாவது என் பேரு சந்து என்று கடைசியாக வெளிப்படுத்தி விட்டேன்.. நீங்க இன்னும் உங்கட பேரு அதிரா என்று சொல்லாமலே இருக்கீங்களே :))

  ReplyDelete
 12. 'அங்க' இருந்து வந்ததால எனக்கு ஒண்ணுமே புதுசா இல்ல திருமதி. ---. ;))அது போக.. 'வலையுலகில் நான்'னு இதையே முன்னால சொல்லி இருப்பீங்க. ;)

  ReplyDelete
 13. இமா.. இமா.. :))

  முதல் மூணு பத்தி புதுசாகத் தானே சொல்லியிருக்கேன்.. எங்க பாட்டி மடியில படுத்துகிட்டு பேரு வச்சுகிட்ட கதை எல்லாம் இது வரைக்கும் எங்கிட்டும் வெளிப் படுத்தினதில்ல :))

  ReplyDelete
 14. ம். அது புதுசுதான். ;)

  இப்பவும் மீதி கொஞ்சமாச்சும் சேவ் பண்ணி வச்சுருக்கீங்க இல்ல? அடுத்த ரவுண்டு... இதே கேள்வி வேற ரூபத்துல வரும். ;)

  ReplyDelete
 15. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா முழுக் கதையையுமே உருவிடுவாங்களோ.. பயமாயிருக்கே இமா :)))))

  ReplyDelete
 16. சந்து உங்கட பெயர் சூப்பரா இருக்கு.... இதை எதுக்கு இத்தனை நாளா மறைச்சீங்க?//
  அதான் எனக்கும் விளங்கலை.

  ReplyDelete
 17. அதானே.. எனக்கும் வெளங்கல வான்ஸ் :))

  ReplyDelete
 18. சந்தனா, இதே புனை பெயர் பிரச்னைதான் எனக்கும். ஆனா, விடறதா இல்லை, கண்டிப்பா பதிவு எழுதிடுவேன். ஒரு பதிவு எழுதக் கிடைச்ச மேட்டரை மிஸ் பண்ணலாமா? ;-)))))

  //மாத்தியிறலாமான்னு.. அப்புறம் அதுக்கு என்னென்னமோ செய்யணும்ன்னு //
  என் பேர்ல இருந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை மாத்தறதுக்கே name-changingதான் ஒரே வழின்னு சொல்லிட்டாங்க. அதுக்கு நான் பட்ட பாடு!! Gazette-ல மாத்திவர்றத்க்குள்ள ஒரு வழியாகிட்டேன்!! அப்புறம் காலேஜ் மாத்திவாங்க அதவிடக் கஷ்டப்பட்டேன். ஆனா, நல்லவேளை மாத்திட்டேன். அதனால பாஸ்போர்ட்ல கரெக்ட் ஸ்பெல்ல்ங் இருக்கு. பிடிக்காத பெயரைவிட, பிடித்த பெயரில் (அஃபிஷியல் டாக்குமெண்ட்களில்) ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடு இருப்பது கொடுமை.

  அப்புறம், எனக்கும் காலேஜ்ல என் பெயரோட ஒரு கிளாஸ்மேட் இருந்தான். அப்பவும் இதே "giggles"தான். (இப்ப ஒரு விஷயம் தோணுது. ஆனா, அதை என் பதிவுல எழுதுறேன் ;-))) )

  ReplyDelete
 19. எல் போர்ட்.. பீ சீரியஸே நல்லாத்தான் இருக்கு!

  ReplyDelete
 20. ஹும் கிராமம்ன்னு சொல்லாதீங்க பாளையம்ன்னு சொல்லுங்கோ...! :))

  ஏதோ ஒரு பெரியகவுண்டன் பாளையம்

  பாப்பநாயக்கன்பாளையம்

  உப்பேரி பாளையம் இதுமாதிரி ஏதோ ஒரு பாளையமா இருக்கப்போகுது...

  ReplyDelete
 21. ஹூசைனம்மா.. கண்டிப்பாக எழுதுங்க.. உங்க நினைவு இருந்தது - கூப்பிடலாமான்னு யோசிச்சு (அதெப்படி நீங்க மட்டும் எஸ்கேப்பலாம்? :) )

  பத்தாவது மார்க் சீட்டுல இப்படித் தான் - ஒரு எழுத்து அவங்களே சேர்த்திப் போட்டுட்டாங்க.. ஆனா பெருசா உச்சரிப்பு மாறல.. ஒரு மாதிரி சரியாச்சுன்னு தான் சொல்லணும்.. அதனால அப்படியே விட்டுட்டோம்..

  சீக்கிரம் எழுதுங்க.. கிக்கிள்ஸ் எல்லாம் இங்க கம்மி.. :) படிச்சு முடிக்கற வரைக்கும் யாரும் நிறுத்தல.. ஒரே ஓட்டல்ஸ் தான்..

  ReplyDelete
 22. நன்றி கதிர்.. அதான் அதே இருந்துட்டுப் போவுதுன்னு விட்டாச்சு..

  ReplyDelete
 23. வசந்து.. ஏன் இந்தக் கொலை வெறி.. பட்டியாகவோ இல்ல புதூர் ஆகவோ இல்ல வூர் ஆகவோ இல்ல பேட்டையாகவோ இருக்கப்படாதா? நீங்களே எதோ முடிவு பண்ணி என்னமோ ஒரு பேரு வச்சுக்கோங்க.. எனக்கென்ன போச்சு.. :))

  ReplyDelete
 24. ஹ‌ ஹா.. சந்து இன்னுமா விம் போட்டு வெளக்கிட்டு இருக்கீங்க எல்லாருக்கும்.. பாட்டி காதுல சொன்ன பேர் :) LOL!!

  ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)