26 February 2011

நடுநிசிப் பேய்கள்.. "விழிப்புணர்வு" விமர்சனம்..

இளகிய மனமுள்ளவர்கள் இதைப் படிக்க வேண்டாம்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இதை எழுத வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன்.. ஆனால் சிலர் இதற்கு வாங்கும் வக்காலத்தைப் பார்க்கும் போது, எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றே தோன்றுகிறது..

நேற்று இரவு, ஒன்பதிலிருந்து பதினொன்று வரை, நடுநிசி நாய்கள் என்ற உன்னத காவியத்தைக் காண நேர்ந்தது.. த்ரில்லர் என்று நினைத்துப் பார்க்க ஆரம்பித்தது, ஆனால் ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டது - இது வேட்டையாடு விளையாடு வகையறாவுக்கு அண்ணன் என.. சரி என்ன தான் நடக்கப் போகிறது பார்க்கலாம் என்று பார்த்து முடித்தோம்..

சிட்னி ஷெல்டன் "Tell me your dreams" நாவலை எழுதும் போது நினைத்தே பார்த்திருக்க மாட்டார், தனது நாவல் தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு இந்தளவுக்குப் பிடித்துப் போகுமென்று.. எதோ ஒரு தோழியின் அறையில் கிடைத்த இந்த நாவல், நாளொன்றை வெட்டியாகப் போக்க உதவியது.. கதையில்,  ஆரம்பத்தில் மூன்று பெண்கள் வருவார்கள்.. ஒருத்தி பயந்தாங்கொள்ளி யாகவும், ஒருத்தி காதலிப்பது போன்றும், இன்னொருத்தி - சரியாக நினைவில்லை, ஆனால் இவர் தான் அந்த ஆண்களை கொலை செய்பவர்.. இதிலே ரெண்டு பேருக்கு மற்றவரையும் தெரியும்.. பிறகு ஒரு புள்ளியில் இவர்கள் மூவருமே ஒரே பெண்ணின் வெவ்வேறு மனோநிலைகள் (alters) என்று காட்டி, கோர்ட்டில் அவளை மனநிலை பாதிக்கப்பட்டவள் (Dissociative Identity Disorder) என்று நிரூபிக்க நடக்கும் போராட்டங்களையும் சொல்லி, அதற்கு காரணம் சிறு வயதில் அந்தப் பெண்ணுக்கு அவளது தகப்பன் செய்த sexual abuse தான் என்று முடியும்.. இந்தக் கதையைப் படித்து அப்போது என்ன நினைத்தேன் என்று நினைவில்லை..

இந்தக் கதையை இப்படியே எடுக்க மனமில்லாமல் அல்லது தெகிரியமில்லாமல், ஷங்கர், தனது வழக்கமான தேசிய உணர்வை அடிப்படையாகக் கொண்டு, லஞ்சத்துக்கு எதிராக ஆக்ரோஷமான தண்டனைகளைத் தரும் படமாக எடுத்தார்.. விக்ரமின் நடிப்பு, ரெண்டக்க ரெண்டக்க பாட்டு என்று மசாலா நன்றாகவே இருந்தது.. படமும் வியாபார ரீதியாக நன்றாகவே செய்தது என்று நினைக்கிறேன்..

இப்போது மீண்டும்.. ஆனால் இதிலே அப்படியே தலைகீழாக, தகப்பனின் sexual abuse இல் ஆரம்பிப்பது, Dissociative Identity Disorder இல் முடிகிறது என்று கதை செல்கிறது.. இத்தோடு நிறுத்தி இருந்தால் சிட்னி ஷெல்டனை ஒரு தமிழ் சினிமா இயக்குனர் எப்படி மிஞ்சுவது? அதனால், இதிலே பெண்ணுக்கு பதிலாக ஆண், அவன் தொடர்ந்து செய்யும் பாலியல் வக்கிரங்கள்..

Incest, child sexual abuse, group sex, rape, murder, serial killing, sadism, மற்றும் இது போக, pyromania என்று பல வகையறாக்களை தனித் தனி சீட்டுகளில் எழுதி, ஒரு பாட்டிலில் போட்டு குலுக்கி, சீட்டுகள் வந்த வரிசையில் எல்லாவற்றையும் கோர்த்து கதையை உருவாக்கினார் போலும்.. இத்தனை விஷயங்களையும் அடுத்தடுத்து ஒரே படத்தில் காட்டுவது விழிப்புணர்வுக்காகவா? இல்லை, பார்ப்பவர்களை ஒவ்வொரு காட்சிக்கும் அதிர்ச்சியுடன் பதைபதைக்க வைத்து பரபரப்புக்கு வழி செய்து காசு பார்ப்பதற்கா??

விழிப்புணர்வாம் விழிப்புணர்வு.. வெங்காயம்.. child sexual abuse மற்றும் incest க்கு விழிப்புணர்வு வேண்டும் என்று நினைப்பவர்கள், precious என்று ஒரு ஆங்கிலப் படம் வந்தது.. உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் என்று நினைக்கிறேன்.. அதைப் பாருங்கள்.. அப்போ தெரியும் அந்த உயிரின் வலி.. நான் இன்னும் பார்க்கவில்லை, என் தோழி பார்த்துவிட்டு அழுதேன் என்று சொன்னதால் தெகிரியமில்லாமல் விட்டு வைத்திருக்கிறேன்.. மகாநதியில் காட்டியிருப்பார்கள், ஒரு பதின்ம வயதுக் குழந்தைக்கு ஏற்படும் அவலத்தை.. அதையெல்லாம் இப்படியா திட்டினார்கள்?

சரி, மனநோய்க்காவது விழிப்புணர்வு ஊட்டியிருக்கிறாரா? இப்படி ஒரு நோய் உள்ளவனுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன, அவனை மற்றவர்கள் எப்படி நடத்துகிறார்கள், அதற்கு என்ன காரணங்கள், சரி செய்வது எப்படி.. இதெல்லாம் சொன்னால் தான் விழிப்புணர்வு.. இந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்கு என்ன தோன்றும்? இந்த மாதிரி ஒரு மனநோய் பிடித்த நாய் இருந்தால் என்ன செத்தால் என்ன என்று தான் தோன்றும்.. Childhood sexual abuse இனால் பிற்காலத்தில் இப்படி மனநிலை பாதிக்கப்படலாம் என்பதைத் தவிர்த்து, Dissociative Identity Disorder குறித்த என்ன மாதிரியான சித்தரிப்பு இது?

இயக்குனரே இறுதியில் சொல்கிறார் - அப்படிச் செய்யப்பட்டவர்கள் எல்லோருக்கும் மனநிலை இந்தளவுக்கு பாதிக்கப்படாது,  இந்தமாதிரி மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரும் இப்படியான காரியங்களைச் செய்வதில்லை என்று.. பிறகு ஏன் இப்படி - மிக அரிதான ஒரு possibility ஐ படமாக எடுக்க வேண்டும்? தகப்பன் தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் குடித்துவிட்டு வந்து பொண்டாட்டி பிள்ளைகளைப் போட்டு அடிப்பதும், அதுகளை பட்டினி போடுவதும், படிக்கவைக்காமல் வேலைக்கு அனுப்புவதும்.. ஒரு பெண் இயலாமையினாலும் புருஷன் மீது இருக்கும் கோபத்தினாலும் பிள்ளைகளைப் போட்டு அடிப்பதும் - இதெல்லாம் கூட child abuse தான்.. இதையெல்லாம் எடுத்தால் பரபரப்பு இருக்காதே..

இந்த மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இல்லை.. இந்தியாவில் நொய்டா வில் நடந்த child sexual abuse மற்றும் serial killing எல்லோருக்கும் தெரியும்.. ஆஸ்திரியாவில் ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன் தெரிய வந்த 42 ஆண்டுகால incest மற்றும் sexual abuse குறித்து செய்தியில் படித்துவிட்டு உறைந்து போயிருக்கிறேன்.. இப்படியான சம்பவங்களைப் படமாக்கியிருந்தால் கூட பரவாயில்லை.. எந்த அடிப்படையில் இப்படி ஒரு தொடர் வக்கிரச் சித்தரிப்பை இதில் தந்திருக்கிறார்?

மேலும், இந்தப் படம் எடுக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்ட சமூகத்தின் பின்புலம் என்ன? அதன் பாலியல் கட்டமைப்பு, நம்பிக்கை, இப்படியான அதிர்வுகளை எதிர்நோக்கும் திறன், படிப்பு மற்றும் பகுத்தறிவுத் திறன் என்ன? இதைப் பார்ப்பதால் அம்மக்களுக்கு என்ன தாக்கம் ஏற்படும் என்று யோசித்தாரா? பிள்ளைகள் வயதுக்கு வரும் வரை பெற்றோருடன் ஒரே அறையில் தூங்கி வளரும் வழக்கம் தான் பல குடும்பங்களில் இருக்கிறது.. இதெல்லாம் கூட பரவாயில்லை.. தத்துத் தாயை மகன் கற்பழிப்பது போன்ற காட்சிகள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்?

இயக்குனருக்கு சிலவற்றுக்காக நன்றி சொல்ல வேண்டும்.. படத்தில் காட்டியிருக்கும் அவலங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளன (for example, child sexual abuse leading to post traumatic stress disorder, sexual perversions, and dissociative identity disorder) என்று உண்மையாக விளக்கியிருக்கிறார்.. நான் தேடிப் படித்தவரைக்கும், இது உண்மை தான்.. though the possibility of all such things occurring together would be rare.. மேலும், வன்முறைகளை நேரடியாக காட்டவில்லை.. ஆனால் செயல்களின் கொடூரங்களும் கதாப்பாத்திரங்களின் முகபாவங்களும் நமக்கு அந்த வன்முறையை உணர்த்தி விடும்..

இறுதியாக, படம் எந்த மாதிரியான விழிப்புணர்வை ஊட்டியிருக்கிறது என்றால், நாளை ஒரு வக்கிரம் பிடித்த, கூட பண மற்றும் அரசியல்/அதிகார பலம் உள்ள ஒருவன், இப்படியான காரியத்தைச் செய்துவிட்டு பிடிபடும் நிலையில், நெஞ்சு வலி என்று அரசியல்வாதிகள் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆவதைப் போல, சிறு வயதில் நானும் abuse செய்யப்பட்டிருக்கிறேன், அதனால் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று சொல்லி தப்பிக்க வேண்டுமானால் உதவும்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இது சில ஆங்கிலப் படங்களின் காப்பி என்றும் சில விமர்சினங்களில் படித்தேன்.. அப்படியான படங்களை பார்த்திராததால், அது பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை.. மேலும், இயக்குனரின் திறமை குறித்துப் பேச எனக்கு எந்த அருகதையும் இல்லை, சொல்லப்பட்ட கருத்தைக் குறித்து மட்டுமே எனது பார்வை.. 

20 comments:

  1. இந்தப் படம் பார்க்கவுமில்லை; பார்க்கப் போவதுமில்லை. விமர்சனக் கருத்துடன் ஒத்துப் போகிறேன். மகாநதியில் ஒரே காட்சியில், ஒரே ஒரு காட்சிதான் வரும் அச்சிறுமி எப்படி வதைபட்டாள் என்பதை உணர்த்த - அவள் தூக்கத்தில் பேசும் காட்சி. அதிலேயே நொறுங்கிப் போகும் நம்மனம். அது தரும் விழிப்புணர்வு. அதைவிடுத்து, இம்மாதிரிப் படங்களெல்லாம்...

    ReplyDelete
  2. சந்து, நாயைப் பேயாக்கிட்டீங்களோ? ஹா..ஹா..ஹா... அப்போ இதுவும் ஜெய்யின் தொடர்தான்போல:)..நான் தலைப்புக்குச் சொன்னேன்:).

    ReplyDelete
  3. நானும் பல பதிவுகளில் படிச்சேன் ஆகா ஓஹோன்னு தூக்கிப்பிடிச்சாங்க ..!! டைரக்டர் ஒரு வேளை பிரமாண்டமா அதிக செலவு செஞ்சி எடுத்தா மக்கள் அதில் வரும் எல்லா மைனஸையும் மறந்துடுவாங்கன்னு நினைக்கிறாரோ என்னவோ..!!

    எந்திரன் மாதிரி டப்பா படத்தையும் பெரிய பில்டப்பா தானே சொன்னாங்க ..!!

    கொஞ்ச நாள் பாருங்க ”ஹாஸ்டல்” மாதிரியான படமும் காப்பியா வரப்போகுது :-/

    ReplyDelete
  4. நேர்மையான விமர்சனம் :-))

    ReplyDelete
  5. சந்தூ, என்னவோ போங்கள். நான் இப்படிப் பட்ட படங்கள் பார்ப்பதே இல்லை. பார்த்தால் தலைவலிதான் மிஞ்சும். அப்புறம் வீட்டிலும் எல்லோருடனும் உறுமிக் கொண்டே இருப்பேன்.

    ReplyDelete
  6. @MANO நாஞ்சில் மனோ

    அண்ணே எதுக்கு இந்த ரியாக்ஷன்? :)) புரியல..

    ReplyDelete
  7. @ஹுஸைனம்மா

    நல்ல முடிவு ஹூசைனம்மா..

    சரிதான் நீங்கள் சொல்வது.. அந்தக் காட்சி நினைவில் இல்லை.. ஆனால் ஒரு குடும்பம் எப்படி சிதைந்து போனது என்பதை வலியுடன் உணர்த்தியிருப்பார்கள்.. இந்த மாதிரி அல்ல..

    ReplyDelete
  8. @athira

    அதீசு.. இல்ல நாய்களைப் பேய்கள் ஆக்கிட்டேன்.. ஜெய் யோட தொடரா? மறந்துட்டேன் போல.. அவரோட ப்ளாக்ல எட்டிப் பார்க்குறேன்..

    ReplyDelete
  9. @ஜெய்லானி

    வேட்டையாடு விளையாடு மாதிரி இதை ஒரு சைக்கோ த்ரில்லர் அப்படின்னு மட்டும் எடுத்திருந்தா என்னமோ எடுத்துட்டுப் போறாங்கன்னு விட்டிருப்பேன்.. (வேட்டையாடு விளையாடு வை கொஞ்ச நேரத்துக்கு மேல என்னால பார்க்க முடியல..) முழுவதும் வன்முறையாகக் காட்டிட்டு, போற போக்குல சஸ்பென்ஸ் ஏற்றுவதற்காக மன நோய் இருக்குன்னும், கடைசியில இவர் தரும் விழிப்புணர்வு பிரச்சாரமும், இதைச் சொல்லியே படத்தை நியாயப்படுத்துபவர்களும்.. இப்பிடி இவங்க கொடுக்கும் இந்தப் பிரச்சார நெடி தான் தாங்க முடியல.. இதுக்கும் அந்த நாவலை மையமாக வைத்து எடுத்த படம்..

    இதிலே பிரமாண்டம்ன்னு எதுவும் இல்ல.. ஆனா ஒரு த்ரில்லர்க்கான திகிலுடன்?? எடுத்திருக்கார்.. சினிமாவ அதுல வேலை செய்பவரா அதனோட நுட்பங்களைப் பார்த்து பாராட்டுற பார்வை வேற.. நாம நம்ம இடத்துல இருந்து பார்ப்பது வேற..

    ஹாஸ்டல் ஆ? இதுவும் ஏதாவது சைக்கோ படமா? நோ வே.. இதைப் பார்க்கவே மாட்டோம்..

    ReplyDelete
  10. @vanathy

    வான்ஸ்.. இதுக்கு முன்னாடி இவரோட ரெண்டு படம் பார்த்தேன்.. வாரணம் ஆயிரம், மற்றும் விண்ணைத் தாண்டி வருவாயா.. ரெண்டுமே ஜென்டிலான படங்கள் தான்.. இது வேட்டையாடு விளையாடு வகையறா (அதைப் பார்க்க முடியாமல் விட்டுவிட்டேன்) என்று தெரிந்தும், என்ன தான் சொல்ல வருகிறார் என்று பார்த்தோம்.. எங்களுக்கு தலைவலி இல்ல, அருவருப்பும் எரிச்சலும் தான் வந்தது..

    அப்படியே காலையில ப்ளாக் பக்கம் வந்தா இதை ஒரு விழிப்புணர்வு படம்ன்னு கொஞ்சம் பேர் நியாயப் படுத்தியிருந்தாங்க.. அதான்..

    ReplyDelete
  11. //ஹாஸ்டல் ஆ? இதுவும் ஏதாவது சைக்கோ படமா? நோ வே.. இதைப் பார்க்கவே மாட்டோம்..//

    இது சைக்கோ சாடிஸ்ட் அதிக பட்சத்தின் உச்சம் ..!! பார்க்காத வரை சந்தோஷம் . :-))

    ReplyDelete
  12. @ஜெய்லானி

    யப்பா.. நல்லவேளை சொன்னீங்க.. அவ்வளவு பயங்கரமான படத்துக்கு இவ்வளவு சிம்பிளா பேர் வச்சிருக்காங்க..

    ஆங்கிலத்தில், போர் காட்சிகள் நிறைந்த படங்களையாவது fast forward பண்ணி, அந்த சரித்திர நிகழ்வுக்காக பார்க்கலாம்.. சயன்ஸ் பிக்ஷன் படங்களையும் கூட இப்படி ஓட்டிடலாம்.. ஆனா இந்த மாதிரி கருமங்களை எல்லாம் - NNNooooooo..

    ReplyDelete
  13. I started reading the blog . Para 1 : Ok I think i can handle this. Para 2: Let me read the comments and find some comedy there :)

    I cant digest seeing kids treated badly / thriller movies etc. So Chandu I cant say well written ,cos I cd not get to reading this completely. The last time I saw movies like "The ring " "Exorcism of Emily rose " I got more than bad dreams :(

    ReplyDelete
  14. Ilaa.. Its ok.. I understand.. It is not a பேய்ப் படம்.. Supposed to be a psychotic thriller.. For people who are used to watching such movies in other languages, this film would not be a big deal.. I even saw some reviews stating that this movie looks very bland.. But for people like us who are not used to such movies, even this one looks very bad :)

    I have watched Ring 1.. Though it was scary, both of us liked it (we had seen it independently) for its intelligent and creation.. This movie is nothing like that, but is full of some sorts of violence and distorted sexual relationships.. And I did not like it being described as a lesson for crimes happening in the society as the movie itself is full of such crimes, though not shown explicitly.. I got irritated by people trying to defend it as a movie with a message :) Messages can be screened in much better ways..

    ReplyDelete
  15. ஏங்க இவ்ளோ கோபம்:-)

    நான் வேற தெரியாத் தனமா நடுநிலை விமர்சனம் எழுதிட்டேன்:-)

    அங்கே என் பதிவில் என்னைக் காய்ச்சி எடுத்துவிட்டார்கள்:-)

    படத்தை இன்னும் நாகரீகமான முறையில் எடுத்திருக்கலாம் என்று நீங்கள் சொல்வதில் எனக்கும் உடன்பாடு உண்டு. ஆனால் இன்றைய தேதியில் சாதாரணப் படங்களிலேயே நிறைய வக்கிரங்கள் உண்டுதானே.

    என்னுடைய விருப்பமெல்லாம் இந்தப் படம் எதிர்காலத்தில் irrelevant ஆகிவிட வேண்டும் என்பதுதான்.

    ReplyDelete
  16. கோபி.. பேய்ப் படத்த எடுத்து அதுல பேயக் காட்டியே பயமுறுத்தி பேய் விழிப்புணர்வு ஊட்டறோம்ன்னு சொன்னா கடுப்பு வருமா வராதா? ஒரு சைக்கோ த்ரில்லர் திரைப்படம் இது.. இதுல என்ன விழிப்புணர்வு கிழியுதுன்னு
    தான் கேள்வி.. சாதாரணப் படங்களில் காட்டுதல் இருக்கிறது தான், அதை வியாபாரமாக்கச் செய்யறாங்க தான்.. ஆனா அதை யாரும் இப்படி போலித்தனமா நியாயப்படுத்த மாட்டாங்க.. பிள்ளையை பெற்றோருக்கு நடுவில் அமர்த்தி இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் குடும்பங்களில் அந்தப் பிள்ளைகளுக்கோ இல்லை தகப்பனுக்கோ வண்டியில் அமர்ந்து செல்வதில் ஏதேனும் குற்றவுணர்வை இந்தத் திரைப்படம் உண்டாக்கினால், அது பெரிய தவறு தான்..

    உங்க விமர்சனம் இன்னும் படிக்கல.. இதோ படிச்சுட்டு சொல்றேன்..

    ReplyDelete
  17. சந்தனா,கட்டாயம் இன்ட்ரஸ்டிங் மேட்டரெல்லாம் இருக்கும்னு நம்பிக்கைல தொடர்பதிவுக்கு கூப்பிட்டிருக்கேன்.:)
    http://mahikitchen.blogspot.com/2011/03/blog-post.html

    தொடருங்க!

    பி.கு.இந்தப்பதிவின் முதல் வரியைப் படித்ததுமே அப்படியே ஓடிட்டேன்! :)

    ReplyDelete
  18. பல வகையான விமர்சனம்,நீங்கள் அப்படியே பிச்சு உதறியிருக்கிறதை பார்க்கும் பொழுது மனதை பிரட்டத்தான் செய்கிறது,பார்க்க வேண்டும்,மெதுவாய்,எல்லாம் அடங்கட்டும்..
    நல்ல விழிப்புணர்வுள்ள விமர்சனம்.

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)