17 February 2011

Infidelity - மேலோட்டமான ஒரு உரையாடல்


சென்ற சனிக்கிழமை ஒரு தோழி வீட்டுக்குப் போயிருந்தோம்.. எங்களுடன் எங்கள் நண்பரும்.. அந்தப் பெண்ணை நான் சந்திக்கப் போவது அதுவே முதல் முறை.. என் கணவருடன் வேலை செய்பவர்.. தமிழ் வம்சாவெளி.. ஆனால் தாத்தன் காலத்தில் மைசூருக்கு குடி பெயர்ந்தவர்கள்.. அவரது அப்பா அம்மா இங்கே (அமெரிக்கா) சிறிது காலம் இருந்து பின் நாடு திரும்பியவர்கள்.. கன்சர்வேட்டிவான குடும்பம்.. இந்தப் பெண் மற்றும் இரு தங்கைகள்.. அதிலே இவர் குழந்தைப் பருவத்தை, அதாவது பன்னிரண்டு வயது வரை அமெரிக்காவிலும், பதின்ம வயதை பெங்களூரிலும் கழித்துவிட்டு இப்பொழுது மீதும் இங்கே வாசம்.. அமெரிக்கக் குடிமகள்..

சாப்பிட்டுவிட்டுப் பேசிக் கொண்டிருந்தோம்.. மற்றவர்கள் எழுந்து சென்றுவிட, நானும் அந்தத் தோழியும் மட்டும் இப்போ சமையலறையில்.. பொழுதுபோக்கைப் பற்றிய பேச்சில் ஆரம்பித்த எங்களது உரையாடல் எங்கெங்கோ சுற்றத் துவங்கியது.. என்னுடைய பிரதானமான பொழுதுபோக்கு சினிமா பார்ப்பது என்று நான் சொல்ல, உனக்குப் பிடித்த படங்களைச் சொல்லு என்றார்.. எனக்கு ஓரளவுக்கு இயல்பாக இருந்தாலே பிடிக்கும்.. சமீபத்தில் ரசித்தது ஆடுகளம்.. ஆனால் அவருக்கு நமது பிராந்திய மொழிப் படங்கள் ஏதும் தெரியாது.. எனவே ஆங்கிலப் படங்களைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன்..


நான் பொதுவாகப் பார்ப்பது, ஓரளவுக்காவது நல்ல ரெவ்யூ வந்த படங்களைத் தான்.. அது எந்தக் களமானாலும் சரி.. முடிவு சோகமாக இருக்கக் கூடாது :)  படம் பார்க்க ஆரம்பிக்கும் போது கதை தெரியக் கூடாது.. அதில் மட்டும் கொஞ்சம் பிடிவாதம்.. இப்படித் தான் நான் பார்த்த ஒரு படத்தின் பெயரைச் சொன்னேன்.. அவருக்குத் தெரிந்து தானிருந்தது அந்தப் படத்தைப் பற்றி.. இயக்குனர் பெயர் கூட அவரே சொன்னார்.. பிறகு என்ன கதை என்று என்னிடம் கேட்டார்.. நான் சுருக்கமாகச் சொன்னேன்..


கதையில், ஒரு கணவன் மனைவி.. மனைவிக்கு ஒரு குற்றவுணர்ச்சி மனதிலே எப்போதும் இருக்கிறது - திருமணத்துக்குப் பின்னர் ஏதோ ஒரு நாளில் எவனோ ஒருவனைக் கண்டு மையல் கொண்டுவிடுகிறார்.. மனதாலே தான் நினைத்தார் என்றாலும் கூட, கொஞ்சம் அதிகப்படியாகவே நினைத்துவிடுகிறார்.. ஆனால் கணவன் தன் மீது மிகவும் பிரியமாய் இருப்பதைக் கண்டு உடனே மனதை மாற்றிக் கொண்டு விடுகிறார்.. ஆனாலும் இது உறுத்திக்கொண்டு இருக்க, இதை ஒரு நாள் கணவனிடம் சொல்லப் போக, கணவன் கோபம் கொண்டு, ஒரு மாதிரி பித்துப் பிடித்த நிலையில், பழி வாங்குவதற்கென்றே  பதிலுக்கு தானும் ஏதோ செய்ய நினைத்து, இறுதியில் மனைவிடமே வந்து மன்னிப்பு கேட்கிறார்.. இனி தங்களது திருமண வாழ்வு என்னவாகப் போகுதோ என்று அவர் நினைக்கையில், மனைவி சொல்கிறார் - இந்த ஒரு நாளை மறந்து விட்டு இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கையை நினைவில் வைத்து உறவைத் தொடருவோம்..


இதைச் சொன்னதுமே தோழி  மிகுந்த சினம் கொண்டார்.. எப்படி நீ இப்படி ஒரு படத்தை நல்லாயிருக்கு என்கிறாய் என்று.. நான் சொன்னேன், நான் எனது நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறேன்.. (அதுவுமில்லாமல், நான் என்ன கதை தெரிந்து கொண்டா பார்த்தேன்?).. அதைப் பார்த்ததால் புதிதாக ஒன்றும் தோன்றவில்லை.. கதையில் அப்படி வருகிறது என்றால், உண்மையில் அப்படித் தானே ஊருக்குள்ளும் நடந்து கொண்டிருக்கிறது.. உண்மை நிகழ்வுகளையெல்லாம் கடந்து செல்லும் போது, இதுக்கென்ன என்றேன்.. சிறு வயதிலேயே நான் வாழ்ந்த ஊரில் வசித்த சில மனிதர்கள் இது போன்று தாவிச் சென்றதைக் கண்டிருக்கிறேன்.. 


இது என்ன தலைவலி என்று தோன்றியது எனக்கு.. அவர் என்னைத் தவறாக நினைக்கிறாரோ என்றும் சங்கடமாக இருந்தது..  இப்படி ஒரு படத்தைப் பார்த்ததாலோ அல்லது இது விஷயமாகத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தாலோ, உடனே இவளும் இப்படித் தான் என்று எப்படி முடிவு செய்ய முடிகிறது?  நான் ஒரு நோயைக் குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்றால் உடனே இவளுக்கு அது இருப்பதால் தான் என்று நினைத்தால் எப்படி? கேள்விப்பட்டதாலோ இல்லை அறிந்து கொள்ளும் ஆர்வத்திலோ இருக்கப்படாதா? யாரும் விவகாரமாகத் தான் யோசிக்கிறார்கள், அடுத்தவர்களைப் பற்றி..


அவர் சொன்னார் - என்னால் அப்படி ஒரு நிலையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.. ஒருவருக்கொருவர் உண்மையாய் இருத்தலே திருமண வாழ்வு.. நான் என் கணவனை (இன்னும் திருமணமாகவில்லை.. காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்..) விட்டுப் பிரிந்தால் அதற்கு இரண்டே காரணங்கள் தான் இருக்க  முடியும் - அவன் என்னை அடித்திருப்பான் அல்லது வேறு ஒருத்தியை நாடியிருப்பான்..


அவரது உறுதியும் தெளிவும் எனக்குப் பிடித்து இருந்தது.. இரு வேறு கலாச்சாரங்களில் வாழ்ந்த பெண்.. இரண்டையும் கலந்து எடுத்துக் கொண்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன்.. அதாவது, கணவன் எப்படி இருந்தாலும் பொறுத்து சகித்து வாழ விரும்பவில்லை.. அதே நேரம், சண்டையா ஒத்து வரலையா, உடனே பிரிந்து விடலாம் என்றும் நினைக்கவில்லை.. "நான் உன்னைக் காதலிக்கிறேன்.. உனது நிறைகுறைகளை ஏற்று வாழ்வின் இக்கட்டான நேரங்களிலும் உன்னிடம் கமிட்டடாக இருப்பேன்.. உண்மையாக இருப்பேன், அதையே உன்னிடமும் எதிர்பார்க்கிறேன்.. நீ என்னை விட்டு வேறு ஒருத்தி பின்னால் சென்றாலோ இல்லை துன்புறுத்தினாலோ, நானும் உன்னை விட்டுப் பிரிந்துவிடுவேன்" என்கிற மாதிரி.. 


நான் சொன்னேன், அப்படி ஒரு நிகழ்வை நேரடியாகக் காண்கையில் (ஊர் உலகத்தில் நடப்பவற்றை எல்லாம் சொல்லவில்லை), நான் அதற்கான காரணங்களை அலச விரும்புவேன்.. இப்படி நடக்கவே நடக்காது அல்லது நடக்கவே கூடாது என்று நம்புவதிலோ நினைப்பதிலோ விருப்பமில்லை..  மனித மனம், எல்லாம் அமைந்திருந்தும் இருப்பதில் சலிப்புற்று புதியதாக எதையாவது தேடி அலையக் கூடியதா (is it all innate??), இப்படி அலைபாயும் தன்மை மனிதருக்கு மனிதர் மாறுபடுமா, கணவன் மனைவிக்குள்ளே ஏதேனும் பிணக்கு இருந்து அதன் காரணமாக இப்படி வேறு உறவில் நாட்டம் ஏற்பட்டதா, வேறு ஏதாவது ஸ்ட்ரெஸ் ஆ, ஏதோ ஒரு புள்ளியில் ஆரம்பிக்கும் பழக்கம் தொடர்ந்து நடந்து ஈர்ப்பாக மாறி பின் காதலாக மாறுவதாலா, வளர்ந்த இடத்தின் கலாச்சாரம் (இங்கே பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக, பெற்றோர்கள், முக்கிய உறவினர்கள், ரோல் மாடல்ஸ் மற்றும் நண்பர்கள் - இவர்களின் வாழ்க்கையை மட்டும் கருத்தில் கொண்டு..) அதை உள்வாங்கியதன் விளைவாக சிலருக்கு வேறு  மனிதர்கள் மேல் நாட்டம் வருவதில்லையா, அப்படியே வந்தாலும் தவறு என்று உணர்ந்து உடனே முளையிலேயே கிள்ளி எரிந்து விடுவார்களா, குற்றவுணர்வுடன் அதைத் தொடருவார்களா, குற்ற உணர்ச்சியே இல்லாமல் ஏமாற்றுவார்களா இல்லை சொல்லிவிட்டுப் பிரிந்து விடுவார்களா.. இப்படியெல்லாம் இதை அணுகலாம் என்றேன்..

உண்மையில் அவரை விடவே நான் கன்சர்வேட்டிவ்.. இதை நான் விளக்க வேண்டியதாக இருந்தது.. புரிந்து கொண்ட பின்னர் நான் சொல்ல வந்ததையும் ஏற்றுக் கொண்டார்.. ஆனாலும், அவரால் இன்னொருவரிடத்தில் காதல் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. "நான் வேலையிடத்தில் நிறைய ஆண்களுடன் பழகுகிறேன்.. சிலரைப் பிடிக்கவும் செய்கிறது.. ஆனால் யாரையும் என் காதலன் இடத்தில் வைத்துப் பார்க்க மாட்டேன்.. அதுவே என்னைப் பொறுத்தவரை தவறு" என்றார்..


நீங்கள் conscientious personality ஆக இருக்கிறீர்கள்.. இது சரி இது தவறு என்ற தேடுதல் உங்களுக்கு இருக்கிறது என்றேன் (இவர் மற்றவர்களைப் பற்றி அவர்கள் இல்லாதபோது பேசுவதையும் விரும்பவில்லை என்பதையும் கண்டேன்).. ஒரு வேளை, அப்படிப்பட்ட புரிதல் இல்லாதவர்கள் இல்லை புரிந்தும் சுயநலத்துடன் சிந்திப்பவர்கள் பாதை மாறலாம் என்றேன்.. 


அவர் சொன்னார், இப்படிப்பட்ட மனிதர்களிடம் இருந்து நான் விலகி இருக்கவே விரும்புகிறேன்.. நான் சொன்னேன், என்னாலும் இப்படிப்பட்டவர்களிடம் (துணைக்குத் தெரியாமல் செய்பவர்கள்..  விவாகரத்து பெற்று வேறோருவரைக் காதலிப்பவர்கள் அல்ல) நட்பாக நெருங்க முடியாது.. ஆனால் வெறுத்து ஒதுக்கவும் மாட்டேன் என்று..


இப்படியாகத் தொடர்ந்த உரையாடல், வேறொரு விஷயத்தையும் மேலோட்டமாக அலசியது.. அதைப் பற்றி இப்போது எழுத மனமில்லை..அதற்குள் எங்களை வந்து எழுப்பிவிட்டார்கள்.. நாங்களும் விடைபெற்றுக் கிளம்பினோம்.. உரையாடியது நிறைவாகவே இருந்தது.. நான் என் கருத்து தான் சரி என்று சொல்லவும் இல்லை, அவரும் அதைச் செய்யவில்லை.. மாறாக மனதில் இருந்ததை அப்படியே பேசமுடிந்ததில், மற்றவரது கருத்தையும் அறிய முடிந்ததில் மகிழ்ச்சி.. பதிவுலகில் இப்படிப் பேச முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? முடிந்தால் இன்னொரு நாள் பேசலாம் என்றார்.. எங்கள் வீட்டுக்கு வந்து செல்லுமாறு அழைப்பு விடுத்தேன்.. 

26 comments:

 1. A Loaded Wow! I do agree with you just because we analyze something at a different level people put us in the spot. I like my real life where I tell people what I think.Sometimes i said .. i think what you said sounds right or some sort.

  ReplyDelete
 2. கதையில் அப்படி வருகிறது என்றால், உண்மையில் அப்படித் தானே ஊருக்குள்ளும் நடந்து கொண்டிருக்கிறது..


  ...Does it apply for Tamil movies too? :-)

  ReplyDelete
 3. விரிவான அலசல்... இரண்டு பக்க கருத்துக்களும், ஏற்றுக் கொள்ள கூடியதாகவே இருக்கின்றன ... எது எதை சகித்துக் கொள்வோம் - எது வரை சகித்துக் கொள்வோம் என்பது அவரவர் மன நிலையை - maturity யை பொறுத்ததுதானே... அருமையான பகிர்வுக்கு நன்றிங்க..

  ReplyDelete
 4. //விட்டுப் பிரிந்தால் அதற்கு இரண்டே காரணங்கள் தான் இருக்க முடியும் - அவன் என்னை அடித்திருப்பான் அல்லது வேறு ஒருத்தியை நாடியிருப்பான்..//

  ம் ..பாவம்....ரொம்ப கஷ்டம் ....!! உங்களைதான் சொன்னேன் ..இப்படியும் ஃபிரென்ஸ் இருக்காங்களா உங்களுக்கு ஹி..ஹி...

  ReplyDelete
 5. சந்து உங்க ஃபிரெண்டை நினைக்க கவலையாக இருக்கு, இப்படிப் பலபேர் இருக்கிறார்கள்.... அதாவது எப்பவும் தமது நிலையிலிருந்தே சிந்திப்பவர்கள்.

  நாம் சொகுசு மெத்தையிலே படுத்துக்கொண்டு.... அங்கே பிளாட்பாரத்திலே போர்வைகூட இல்லாமல் நுளம்புக்கடியில் படுப்பவர்களைப் பார்த்து.... இவர்கள் எப்படித்தான் இன்னும் உயிரோடிருக்கிறார்களோ என்பதைப்போல இருக்கு.

  எனது நண்பியின் குடும்பத்திலே மூன்று பெண்கள், கடைசியாக ஒரே ஒரு தம்பி, எம் நாட்டுப் பிரச்சனையின்போது தானாக விரும்பிப்போய் விடுதலை இயக்கத்திலே இணைந்துவிட்டார் அப்போ 14/15 வயதுதான் இருக்கும். அவர்கள் வீட்டிலே ஒப்பாரிதான் நடந்தது. என் நண்பி இதை எனக்கும் சொல்லி... ஒரு ஆன்ரியிடமும் சொன்னார்(சொந்தமில்லை), அந்த ஆன்ரி உடனே சொன்னாராம் “எப்படித்தான் உங்கள் அம்மா இன்னும் உயிரோடிருக்கிறாவோ, நான் என்றால் செத்திருப்பேன்” என(இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்), அந்த ஆன்ரிக்கு 2 மகன்மார்.

  இதை என் நண்பி சொல்லி அழுதார்.. பாருங்க அவவின் கதையை என. நான் சொன்னேன் ஒரு காதால் வாங்கி மறுகாதால் விடுங்க... அனுபவிப்பவர்களுக்குத்தான் வேதனை புரியும் சொல்வது சுலபம். ஆனால் 5/6 வருடங்கள் கழித்து அவர் அதைவிட்டு வெளியே வந்து இப்போ மனைவி, குழந்தைகளோடு நன்றாக இருக்கிறார்.

  முடிந்தால் உங்க நண்பிக்கு அறிவுரை சொல்லுங்க இல்லாவிட்டால்.... ஒத்துப்போயிருங்க:).

  அவ அவவாக எப்படியும் இருக்கலாம், ஆனால் தன் கணவரும் தன்னைப்போலவே யாருடனும் பழகாமல் சிரிக்காமல்தான் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது தப்பு. அவர்களை அவர்களாக இருக்க விடவேண்டும், நம் கணவர் இன்னொரு பெண்ணோடு தவறான நோக்கத்தோடு பழகுகிறார் எனத் தெரிந்தால் அதை எப்பெண்ணாலும் ஏற்றுக்கொள்ள முடியாது, ஆனால் பெரும்பாலான ஆண்கள் எல்லோருடனும் சிரித்துப்பேசி நகைச்சுவையாக இருப்பார்கள், அதைத் தடுக்கவோ சந்தேகப்படவோ கூடாது... “நாம் நினைக்கின்றபடிதான் அவர் இருக்கவேண்டும் என எண்ணுவதைக் காட்டிலும் அவர் அப்படித்தான்” என எடுத்துக்கொண்டால் பிரச்சனை இல்லை. நம்பிக்கைதானே வாழ்க்கை... தொடரும்...டொட் ட டாங்....

  ReplyDelete
 6. டொட் ட டாங் தொடருது...
  இப்போ எம்ம் கூட்டத்தையே பாருங்களேன்.... எமது கூட்டம் பெரிய கூட்டம் ஆனால் சிலரை மட்டும் எடுத்துக்கொண்டால்....இலா, இமா, வான்ஸ் சந்து, நான்.... ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எழுதுவோம் பதில்கள்... சிலநேரம் கோபமும் வரலாம்.... ஆனால் அதை நாம் யாரும் பொருட்படுத்துவதில்லை, ஏனெனில் “அவர் அப்படித்தான்”:) என எமக்குத் தெரியும்...

  எம் ஆன்ரி ஒருவரின் கணவர் ரோஓஓஓஓஒம்ப கோபக்காரர்....
  சரிபிழை தெரியவில்லை நான் கண்ட ஒரு உண்மை எம் எதிர்பாலாரில், “நிறம்” குறைவாக இருப்பவர்களுக்கு கோபம் மூக்குக்கு மேலே இல்லை... மூக்கின் மேலுள்ள மயிரின் நுனியிலே:) இருக்கும்.. ஆனால் ரொம்ப நல்லவர்களாக இருப்பார்கள்,(கடவுளே எதிர்ப்பாலார் பார்ப்பதற்குள் கிழிச்சிடுங்க.. படிச்சதும்).

  அப்படித்தான் அந்த ஆன்ரியின் கணவரும்... ஆட்கள் இருப்பதைக்கூட பொருட்படுத்தாமல் ஏசிப்போடுவார்(கொஞ்சம் ஓவர்தான்)... ஒருநாள் அந்த ஆன்ரியிடம் நான் கேட்டேன்(கேட்டிருக்கக்கூடாத கேள்விதான்) “எப்படித்தான் இவரோடு இருக்கிறீங்கள்?” என. அதுக்கு அந்த ஆன்ரி சொன்ன பதில்... அவரிடமுள்ள குறை என்றால் இந்தக் கோபம் மட்டும்தான் மற்றபடி ரொம்ப ரொம்ப நல்லவர்... நான் எது கேட்டாலும் மறுக்க மாட்டார்... ஊருக்கு யாருக்கு பணம் அனுப்பபோகிறேன் எனச் சொன்னாலும் உடனேயே அனுப்பச் சொல்வார்.... இப்படி நல்ல குணங்கள்தான் அதிகம், அதனால் அவரது கோபம் எனக்குப் பெரிதாகத் தெரிவதில்லை என்றார்.

  இதில முடிவில உண்மை என்னவென்றால்.... அப்பாட பொயிண்ட்டுக்கு வந்தாச்சு. ...
  பூஸோடு ஆரும் கோச்சிடப்பூடாது.... பூஸ் என்றால் அப்பூடித்தான் இருக்கும்... வாலை ஆட்டிக்கொண்டு எதையாவது சுரண்டிக்கொண்டு திரியும்... அதனால் கோவிச்சிடாதீங்க அக்காஸ்ஸ்... அண்ணாஸ்ஸ்ஸ்.... மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

  ReplyDelete
 7. சந்தூ, இதில் உங்கள் நண்பியோடு என்னால் ஒத்துப் போக முடியவில்லை. அடி அல்லது வேறு தொடர்பு இருந்தால் கணவரை பிரிந்து விடுவது மட்டும் காரணம் அல்ல. வேறு பல காரணங்கள் இருக்கு. பெரும்பாலனவர்களுக்கு பணம், குழந்தை இன்மை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நான் வீட்டுக்கு வரும் ஆண்களுடன் ( கேபிள் etc... ) என் கணவர் என்னை சந்தேகமா பார்ப்பதோ அல்லது அவர் வேலை இடத்தில் அவரின் பெண்பணியாளர்களுடன் பேசுவதை வைச்சு அவருக்கு தொடர்பு இருக்குமோ என்று சந்தேகப்பட முடியுமா???

  இந்த நாட்டுக்கு வந்துட்டு நான் யாருடனும் பேச மாட்டேன், பழக மாட்டேன் என்று சொல்லிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது. உங்க தோழி மாறுவாரா தெரியவில்லை. அவரின் போக்கில் விட்டு விட வேண்டும்.

  ReplyDelete
 8. பூஸ் எவ்ளோஓஓஓஓஓஓ பெரிய பதில் இதை ஒரு பதிவா உங்க பிளாகிலேயே போட்டிருக்கலாம் :-))

  //அவ அவவாக எப்படியும் இருக்கலாம், ஆனால் தன் கணவரும் தன்னைப்போலவே யாருடனும் பழகாமல் சிரிக்காமல்தான் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது தப்பு. அவர்களை அவர்களாக இருக்க விடவேண்டும், நம் கணவர் இன்னொரு பெண்ணோடு தவறான நோக்கத்தோடு பழகுகிறார் எனத் தெரிந்தால் அதை எப்பெண்ணாலும் ஏற்றுக்கொள்ள முடியாது, ஆனால் பெரும்பாலான ஆண்கள் எல்லோருடனும் சிரித்துப்பேசி நகைச்சுவையாக இருப்பார்கள், அதைத் தடுக்கவோ சந்தேகப்படவோ கூடாது... “நாம் நினைக்கின்றபடிதான் அவர் இருக்கவேண்டும் என எண்ணுவதைக் காட்டிலும் அவர் அப்படித்தான்” என எடுத்துக்கொண்டால் பிரச்சனை இல்லை. நம்பிக்கைதானே வாழ்க்கை... தொடரும்...டொட் ட டாங்....//

  1000000000 சதம் உண்மையான பதில்..இது மாதிரி இல்லாமல் ஒரு புள்ளி அளவு சந்தேகம் இருந்தாலும் அது ஒரு அனுகுண்டுக்கு சமம் .அது குடும்ப வீட்டை தூள் தூளாக்கிடும்.

  மனைவி /கணவன் இருவருக்கும் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் இருந்தால் கல்யானத்தினதன்று இருந்த லவ் ஆயுள் முடிவு வரை அப்படியே இருக்கும் . :-))

  ReplyDelete
 9. ஆ.. ஜெய், என் பதிலை ஏற்பார்களோ எனத் தெரியாமலிருந்தேன், உங்கள் பதில் பார்த்ததும் என் கண்ணே கலங்கிப்போச்சு....

  நானும் நினைத்தேன் சந்துவின் பதிவைவிடப் பதில் பெரிசாகிடுமோ என, இருப்பினும் நம்ம சந்துதானே, என் பக்கத்தில போட்டால் என்ன, இங்க போட்டாலென்ன எல்லாம் ஒன்றுதான் எனப் போட்டிட்டேன்..... இந்தாங்க சந்து டிஷ்யூ... கண்ணை வடிவாத் துடையுங்கோ...:).

  ///மனைவி /கணவன் இருவருக்கும் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் இருந்தால் கல்யானத்தினதன்று இருந்த லவ் ஆயுள் முடிவு வரை அப்படியே இருக்கும் . :-))///
  உண்மையேதான் ஜெய். தப்பித் தவறி தப்புச் செய்திருந்தால்கூட அதை அப்படியே சொல்லிட வேண்டும்...இருவருமே இதைக் கையாளவேண்டும். சிறு துளிதான் பெருவெள்ளம்... மறைக்க மறைக்க பூதமாகிடும். சந்தேகமும் வந்திடும்,அந்தமான் காதலி சிவாஜியைத்தான் நான் நினைப்பதுண்டு, தினமும் பகலில் நடப்பதை அப்படியே மனைவியிடம் ஒப்புவிப்பது எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு... நாமும்(மனைவியும்) அப்படியே இருக்கப்பழகவேண்டும். என் கணவர் குளிக்கப் போவதானால்கூட தேடிக் கூப்பிட்டுச் சொல்லிவிட்டுத்தான் பாத்ரூமுக்குள் போவார்... அப்படிப்பழகிவிட்டது(அதுக்காக நான் தான் சட்டம் போட்டேன் எனச் சொல்லிடப்பூடாது கர்ர்ர்ர்ர்ர், அவராகப் பழகிக்கொண்டதுதான்... ஆனால் ஒன்றைப் பழக்கிவிட்டால், பின்பு சொல்லாமல் செய்தால் விடமாட்டமில்ல... :) குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் நடனம்தான் ஆடுவோமே....:))

  ReplyDelete
 10. பகிர்வு பிடிச்சிருக்கு சந்தனா.

  இதைப் பார்க்கக் கொஞ்சம் முதல் மருமகனோட கதைச்சன்... 'அங்க' இருந்து வந்த எங்கட குட்டிக் கூட்டம் பற்றி; அருமையான கூட்டம். அவரும் 'இங்க' போய்ப் பாருங்க என்று சொன்னார்.

  உண்மையா நான் அங்க சேர்ந்த கூட்டம் பற்றி எனக்கு எப்பவும் பெருமையா இருக்கும். இப்ப இன்னும் அதிகமா... சந்தோஷமா இருக்கு. அதீஸ்... மருமகன் சொன்ன மாதிரி.. நீங்கள் இதைத் தொடர்பதிவு மாதிரிப் போட்டு இருக்கலாம், உங்கள் பக்கம்.

  எனக்கும் நிறைய விஷயம் தப்பாத் தெரியிறது இல்ல. ஆனால்.... நீங்கள் சொல்லுற மாதிரி "இதில எனக்கு ஒண்டும் பிழையாத் தெரியேல்ல," எண்டு சொன்னால் என்னைப் பிழையா விளங்கிக்கொள்ளுற ஆக்கள் நிறைய இருக்கினம். ;(( எந்த விடயமானாலும்... "காரணங்கள் இல்லாமல் காரியங்கள் ஆவதில்லை." அந்த மற்றொருவர் இடத்திலிருந்து சிந்தித்துப் பார்க்க முடிந்தால் வேறு விதமாகப் புரியும்.

  இங்க எனக்கு மேல பதிவு போட்டு இருக்கிற எல்லாருக்கும்.... ஆளுக்கு ஒரு @}-->- எஸ்கேப்பான ஆளும் ஒண்டு எடுத்துக் கொள்ளுங்கோ. ;)))

  அன்புடன் இமா

  ReplyDelete
 11. இந்த பகிர்வு என்ன லேடீஸ் ஸ்பெஷலா :-) ??

  ReplyDelete
 12. @இலா

  நன்றி இலா.. உண்மை தான்.. நினைப்பதை எல்லா நேரமும் நேரடியாகச் சொல்ல முடிவதில்லை, ஆனால் அப்படிச் சொல்லி உரையாடும் போது நன்றாக இருக்கு..

  ReplyDelete
 13. @Chitra

  நன்றி சித்ரா.. சகிப்பதும் பொறுப்பதும் வாழுமிடத்துச் சூழலைப் பொறுத்ததும்.. தனியே வந்தால் ரொம்பவும் சிரமம் என்கிறபோது சேர்ந்தே இருந்துக்கறாங்க..

  ReplyDelete
 14. @ஜெய்லானி

  நட்பெல்லாம் ஆகல.. ஒரு நாள் பேசியிருக்கோம் அவ்வளவு தான்.. இப்படியும்ன்னா அர்த்தம் புரியல..

  ReplyDelete
 15. @athira

  சில பேரு பெருசு பெருசா பின்னூட்டம் போட்டு மொத்த அற்றாக்ஷனையும் தம் பக்கம் திருப்பிக்கினம் :))

  இதுக்கு பதில் தனி இடுகையாகத் தான் போடணும் போலிருக்கே!! :)

  ReplyDelete
 16. //முடிந்தால் உங்க நண்பிக்கு அறிவுரை சொல்லுங்க இல்லாவிட்டால்.... ஒத்துப்போயிருங்க:).//

  அவருக்கு அறிவுரையா? அதுவும் நானா? நான் படிக்காமல் சுத்திக் கொண்டிருக்கிறேன் என்றதும், அவர் தான் எனக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார் - தெனமும் படியுங்கோ என்று..

  //ஆனால் தன் கணவரும் தன்னைப்போலவே யாருடனும் பழகாமல் சிரிக்காமல்தான் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது தப்பு.//

  இங்கே அவர் அப்படி எதிர்பார்க்கவில்லை.. அவர் சொல்ல வந்தது - தன் கணவனுக்கு பிற பெண்களின் மீது காதல் வரப்படாது.. அப்படி வந்தால் எங்கள் காதலிலே குறை என்று அர்த்தம், அப்படியொரு நிலையிலே நான் விலகிவிடுவேன் என்று..

  ReplyDelete
 17. //சில பேரு பெருசு பெருசா பின்னூட்டம் போட்டு மொத்த அற்றாக்ஷனையும் தம் பக்கம் திருப்பிக்கினம்// ;))))

  ReplyDelete
 18. // எமது கூட்டம் பெரிய கூட்டம் ஆனால் சிலரை மட்டும் எடுத்துக்கொண்டால்....இலா, இமா, வான்ஸ் சந்து, நான்.... ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எழுதுவோம் பதில்கள்... சிலநேரம் கோபமும் வரலாம்.... ஆனால் அதை நாம் யாரும் பொருட்படுத்துவதில்லை, ஏனெனில் “அவர் அப்படித்தான்”:) என எமக்குத் தெரியும்...//

  மயில் மயில் தான்
  ஆன்ரி ஆன்ரி தான்
  வான்ஸ் வான்ஸ் தான்
  பூஸ் பூஸ் தான்
  போர்ட் போர்ட் தான்.. :)

  ஓம்.. வெளியே இருந்து பார்க்கும் போது ஒரு மாதிரி இருக்கும், ஆனால் அவர்களோடு எப்பவும் இருப்பவர்களுக்கு வேறு மாதிரி..

  ReplyDelete
 19. வான்ஸ்.. அவர் கொஞ்சம் செலக்டிவா ஆழமான நட்பை எதிர்பார்க்கிறார்.. எங்களுடன் வந்தவரும் அவரும் நல்ல நண்பர்கள்..

  அவர் எந்த restriction னும் போடவில்லை காதலருக்கு.. சந்தேகமும் இல்லை.. நல்ல புரிதலில் இருக்கிறார்கள்.. அவர் எதிர்பார்ப்பது, கணவன் தனக்கு உண்மையாய் இருக்க வேண்டும் என்பதே..

  //பெரும்பாலனவர்களுக்கு பணம், குழந்தை இன்மை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.//

  இப்படியான காரணங்களுக்கு எல்லாம் பிரிய மாட்டேன் என்பது நல்ல விஷயம் தானே?

  ReplyDelete
 20. //சில பேரு பெருசு பெருசா பின்னூட்டம் போட்டு மொத்த அற்றாக்ஷனையும் தம் பக்கம் திருப்பிக்கினம் :))

  /// karrrrrr நேரமொதுக்கி இவ்ளோ அடிச்சு அனுப்பியிருக்கிறீங்களே அதிரா... மிக்க நன்றி எனச் சொல்லாமல்:),, கர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்*10,000.

  ///இங்கே அவர் அப்படி எதிர்பார்க்கவில்லை.. அவர் சொல்ல வந்தது - தன் கணவனுக்கு பிற பெண்களின் மீது காதல் வரப்படாது..////

  இது உண்மைதான், ஆனால் இதை அவர் சொல்லிக்காட்டியிருப்பதுதான் தப்பு, என் கணவரை எனக்கு நன்கு தெரியும், அவர் தப்பானவர் அல்ல என்றுதான் ஒரு மனைவி நினைக்க வேண்டும், பிறர் பெண்ணிலே காதல் வரப்படாது என்பதைவிட அவருக்கு வராது என்றுதான் எண்ணவேண்டும்.(இது என் கருத்து மட்டுமே.... இப்படித்தான் இருக்கவேண்டும் என வாதாடவில்லை).

  //// அப்படி வந்தால் எங்கள் காதலிலே குறை என்று அர்த்தம், அப்படியொரு நிலையிலே நான் விலகிவிடுவேன் என்று..
  /////


  இதை அவர் கணவர் காதால் கேட்டாலே போதுமே, மனிஷனுக்கு மனதில் இந்த நினைப்புத்தான் எப்பவுமே ஓடும், எப்பெண்ணோடு கதைக்கவும் பயப்பிடுவார்.... எங்கே தன்னை மனைவி தப்பாக நினைத்திடுவாரோ என.

  இதனால் மனதில் எப்பவும் அவருக்கு ஒரு பயமிருக்கும்... எந்த நேரமும் பதட்டமாகவே இருக்கும்.. பிறகெங்கே குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும்....

  சரி இதுக்குமேல இங்கே நான் கதைக்கமாட்டேன்....பிறகு இமா சொன்னதுபோல “தப்பானாலும் ஆகிடும்” பூஸ் எஸ்ஸ்ஸ்:))).

  இம்ஸ்ஸ், ஜெய் சொன்னதுபோல இது பற்றி பெரிய தொடரே என்னிடம் இருக்கு, முடிந்தால் என் பக்கம் போட முயற்சிக்கிறேன்.... சொந்தக் கதைதான் எழுதவேண்டும்:).

  நான் எதுக்கும் பயப்பிடுவதில்லை இமா, மனதுக்கு விரோதமில்லாமல் நடக்கவேண்டும் என நினைப்பேன், அதனால் மனதில் எழுவதை எழுதிடுவேன், அதுக்கும் மேலாக என்னைப்பற்றி தப்பாக நினைத்தால் நினைத்திட்டுப் போவார்களுக்குமே என இருந்திடுவேன், போய்க் கெஞ்சவா முடியும் தப்பாக நினைக்காதீங்க என.

  என்னைப்புரிந்துகொண்டவர்களில்/என் நண்பர்களில் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு, புரியாதவர்கள்/தெரியாதவர்கள் எதுவேணுமென்றாலும் நினைத்திட்டுப் போகட்டுமே.

  ReplyDelete
 21. //அவர் கணவர் காதால் கேட்டாலே போதுமே, மனிஷனுக்கு மனதில் இந்த நினைப்புத்தான் எப்பவுமே ஓடும், எப்பெண்ணோடு கதைக்கவும் பயப்பிடுவார்.... எங்கே தன்னை மனைவி தப்பாக நினைத்திடுவாரோ என.

  இதனால் மனதில் எப்பவும் அவருக்கு ஒரு பயமிருக்கும்... எந்த நேரமும் பதட்டமாகவே இருக்கும்.. பிறகெங்கே குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும்....//

  1000 % சரிதான் . :-))

  ஆஹா ..மேட்டர் சீரியஸா போகுதே..!! :-)) அவ்வ்வ்வ்வ் வ்வ்வ்வ் வ்வ்வ்வ் வ்வ்வ்வ்

  ReplyDelete
 22. 1000 % சரிதான் . :-))

  // ஜெய் ... இதென்ன இது விகிதாசாரம் குறைஞ்சுபோச்சு அவ்வ்வ்வ்வ்:))).

  கணவன்/மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என சும்மாவோ சொன்னாங்க. எங்கட கையில எதுவுமே இல்லை.... பிறக்கும்போதே எல்லாம் எழுதப்பட்டுவிட்டதாம்.... அதன்படிதான் அனைத்துமே நடக்கும்.. அதுதான் விதி, விதியை யாராலும் மாற்றமுடியாது.. அதுதான் உண்மை.

  நாங்க எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், விதியில் என்ன எழுதியிருக்கோ அது நடந்துதான் தீரும்.... எனவே... எனவே... ஓடி ஓடி வந்து புதுப்பதிவு வந்திருக்கா எனப் பார்ப்பதை விட்டுப்போட்டு உங்க வேலையைப் பாருங்க...:)))) அவ்வ்வ்வ்வ்... பூஸ் எஸ்ஸ்ஸ்ஸ்.

  ReplyDelete
 23. நல்ல விஷயங்கள் பேசிருக்கீங்க. எழுதும்போது ரொம்ப கவனமா வார்த்தைகள் போட்டு எழுதவேண்டிய விஷயம்.

  //அப்படி வந்தால் எங்கள் காதலிலே குறை என்று அர்த்தம், அப்படியொரு நிலையிலே நான் விலகிவிடுவேன் என்று.. //

  உண்மைதான். மனம் மிகவும் நொந்துவிடும். ஆனால், பிரிவு என்பது அச்சமயத்தில் உள்ள சூழ்நிலைகளைப் பொறுத்தது. நாம செய்ய நினைக்கிற எல்லாத்தையுமே எப்பவும் செயல்படுத்திவிட முடிவதில்லையே?

  ReplyDelete
 24. ஹ்ம்ம்.. இவ்வளவு நடந்திருக்கா?
  என்னோட வேல்யூ சிஸ்டம் என்று ஒன்று இருக்கு அதனை யார் மீதும் திணிப்பதில்லை யாருக்கும் அங்க தராசும் இல்லை. அது என்னை எடை போட மட்டுமே.. என் வெயிட்டே அதிகம் :))

  அதீஸ்! நீங்க சொல்லற மாதிரி சில அவங்க வீட்டில இருக்க குண்டுசட்டியில உருண்டுகிட்டே இருப்பாங்க... எப்பவுமே அவங்க ஷூவை கழட்டி நம்மள போடச்சொல்லி... பத்தல விட்டுடுங்கன்னு சொன்னாலும் கேட்பதில்லை...

  இமா சொல்லற மாதிரி சில நேரம் பல விசயங்கள் எனக்கு தப்பா தெரியறதில்லை.. சில நேரம் சின்ன விசயமும் பாதிக்கும் .. நாமும் மனிதர்கள் தானே.

  நாம கையில அளவுகோலும் முகத்தில் முகமூடியும் இல்லாமல் இருந்தாலே எல்லாம் தெளிவாக இருக்கும்...

  ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)