இன்னைக்கு மதியம் ஒரு விமானப் பயணம் இருந்ததால, ஒரு கேப் (டாக்ஸி) நிறுவனத்தைக் கூப்பிட்டு, என் வீட்டு முகவரியத் தந்திருந்தேன். இவங்க எப்பவும் சொன்னா சொன்ன நேரத்துக்கு வந்துடுவாங்க, நல்ல நேர்த்தி.. அதனால, நான் எப்பவும் இந்த கேப்ல தான் போறது!
குறிப்பிட்ட நேரத்துக்கு, எங்க வீட்டு ஜன்னல் வழியா எட்டிப் பார்த்த பொழுது, அங்க எனக்காக ஒரு கேப் காத்துக்கொண்டிருந்தது. நானும் தயாராக இருந்ததால, உடனே கீழ வந்துட்டேன். கேப்பை கிளப்பினதும், அந்த ஓட்டுனர் திரும்பி எங்கிட்ட, “இதுக்கு முன்னாடி நான் உங்களைக் கூப்பிட்டுப் போயிருக்கேனா?” ன்னு கேட்டார். எனக்கு அவரைப் பார்த்த மாதிரி நினைவு இல்லன்னு சொன்னேன். உடனே அவர், “உங்களுக்குத் தெரியுமா? நான் இந்த முகவரிக்கு வரக் கூடாதுன்னு நினைச்சிருந்திருக்கேன். தெரியாம இன்னைக்கு வந்துட்டேன்..” னார்.
ஏன் இப்படிச் சொல்றார்ன்னு நினைக்கும் போதே, அவர், “ஆமா.. உங்க வீட்டுல இருந்து யாராவது இந்தியப் பயல் விமான நிலையத்துக்கு எங்க கேப்ல போயிருக்காங்களா? குறிப்பிட்டுச் சொல்லணும்னா, சுமார் ஒரு மாசத்துக்கு முன்னாடி?” ன்னு கேட்டார். நான் யோசிச்சேன்.. எங்க வூட்டுக்காரர் சமீபத்துல விமானப் பயணம் ஏதும் போனதில்ல.. “எங்க வீட்டுல இருந்து யாரும் போயிருக்க வாய்ப்பில்ல.. கீழ் வீட்டுப் பையன் வேணும்னா போயிருக்கலாம்.. அவன் ஐரோப்பிய அமெரிக்கன்..” ன்னேன். “இல்ல.. நான் சொல்ற ஆளு இந்தியன்.. இள வயசுக்காரன்..” ன்னார்..
யாராயிருக்கும்ன்னு குழம்பினேன் நான்.. “அன்னைக்கு அந்தப் பையன் பெரிய கூத்து பண்ணினான்.. அவன் சொன்ன நேரத்துக்கு நான் எங்க நிறுவனத்திலிருந்து ஒரு கேப் அனுப்பியிருந்தேன்.. அந்த ஓட்டுனர், அவனுக்காக வெளிய காத்துட்டு இருந்திருக்கார்.. அவனைக் கூப்பிட்டுச் சொல்லுங்க ன்னு எனக்கு அலைபேசில சொன்னார்.. நானும் அவனோட அலைபேசிக்கு மணியடிச்சுப் பார்க்கறேன்.. எடுக்கவே மாட்டேன்றான்.. இப்படியே அரை மணி நேரத்துக்கு மேல ஆயிடுச்சு.. இதுக்கு மேல காத்திருந்து பயன் இல்லன்னு, அந்த ஓட்டுனர் திரும்பிவரப் போறதாச் சொன்னார்.. இல்ல, வர்றாதீங்க, அவன் அங்கதான் இருக்கறான், எப்படியும் கொஞ்ச நேரத்துல வந்திருவான்னு நான் அவரை சமாதானப்படுத்தி வச்சிருந்தேன்..”
“அந்தப் பையனை மறுபடியும் மறுபடியும் கூப்பிட்டுப் பார்த்தேன்.. பதிலே இல்ல.. அதுக்கப்புப்புறம் பதினஞ்சு நிமிஷம் கழிச்சு ஒரு வழியா போனை எடுத்து, எங்க இருக்கிறன்னு கேட்டா, விமான நிலையத்துல ன்னு சொல்றான்.. எப்படிப்பா வந்தன்னா, உங்க நிறுவனத்துக் கேப்ல தான்னு சொல்றான்.. நான் செம கடுப்பாயிட்டேன்.. அப்புறம் தான் தெரிஞ்சது, அவன் இன்டர்நெட் மூலமா எங்களுக்கு போன் செய்து, அவனுடைய செல் நம்பர் கொடுத்து முன்பதிவு செய்திருக்கான்.. அவனோட போனுக்கு அந்த வீட்டுல இருந்து சிக்னல் கிடைக்கல.. எப்படியோ அரைமணி நேரத்துக்கப்புறம், வெளிய கேப் நிற்கரதப் பாத்துட்டு அவனே இறங்கி வந்திருக்கான்.. எங்கள இப்படிக் காக்க வச்ச கடுப்பு எனக்கு இன்னமும் போகல..”
“இன்டர்நெட் போன்..” “அந்த வீட்டுல இருந்து சிக்னல் கிடைக்கல..” இந்த வரிகளக் கேட்டதும் எனக்குப் பொறி தட்டுச்சு.. கடந்த சில மாதங்களா நம்ம ஒடன்பொறப்பும் பக்கத்து மாநிலத்துல தான் குப்ப கொட்டிக்கிட்டு இருக்காப்ல.. ஒரு மாசத்துக்கு முன்னாடி, எங்க வீட்டுக்கு வந்துட்டு திரும்பிப் போகும் நேரம், நாந்தான் இந்தக் கேப் நிறுவனத்துல முன்பதிவு செய்துக்கோன்னு, இவங்க தொலைபேசி எண் கொடுத்திருந்தேன்.. அன்னைக்கு எனக்கு வேலை இருந்ததால நான் அலுவலகம் கிளம்பிப் போயிட்டேன்.. அவனோட போனுக்கு எங்க வீட்டுல சிக்னல் கிடைக்காது..
மெதுவா அவர் கிட்ட, இது என்னோட சகோதரனா இருக்கலாம்ன்னு சொன்னேன்.. அவரு திரும்பி ஒரு மொறை விட்டாரு.. எதுக்கும் உறுதி படுத்திக்கலாம்ன்னு அவனுக்கு போன் செய்து பார்க்கிறேன்னு சொன்னேன்.. சரின்னார்.. பையன் வேலையில இருந்தான்.. “என்ன இந்த நேரத்துல? சொல்லு..” ன்னான்.. நானும் தமிழ்ல, இங்கயிருந்து கிளம்பிப் போறப்போ கேப் சம்பந்தமா ஏதும் பிரச்சனையாச்சா ன்னு கேட்டேன்.. அவனும் கிட்டத்தட்ட இதே கதைய சுருக்கமா சொல்லிட்டு, இப்ப ஏன் அதைக் கேக்கற ன்னான்.. அந்த கேப் ஓட்டுனர் தான் கேட்கச் சொன்னார், அவரோட தான் இப்போ போயிட்டு இருக்கேன்னு சொல்லிட்டு சிரிக்க ஆரம்பிச்சேன்.. பையன் கடுப்பாகி, “இப்ப எனக்கு வேலை இருக்கு.. வை போனை..” ன்னு வச்சிட்டான் J அவரு உடனே, “பாத்தியா.. நான் சொன்னன்ல..” ங்கற ரீதியில தொடர்ந்து கொஞ்சம் நேரம் திட்டினார்.. எனக்கு உள்ளூர சந்தோஷந்தான் J பயபுள்ள அடுத்த வாட்டி வீட்டுக்கு வரும் போது இத வச்சே ஓட்டி ஒழிச்சிட மாட்டோம்? J
அடுத்ததா ஒரு கதை சொன்னார்.. இது வேறொரு பையன் செய்ததைப் பத்தி.. அவன், அவசரமா விமான நிலையம் போகணும், பத்து நிமிஷத்துல கேப் வேணும்ன்னு கேட்டிருக்கான்.. நேரத்துக்கு வந்துடனும்ங்கறதுல உறுதியா இருக்கறதால, இவர் அடிச்சுப்புடிச்சு போயிச் சேர்ந்திருக்கார்.. பாத்தா, அவன் இன்னொரு கேப்ல ஏறிட்டு இருந்திருக்கான் (ஒரே நேரத்துல ரெண்டு கேப்கள கூப்பிட்டு இருக்கான்).. இவர் செம கடுப்பாயிட்டு, அவனோட தொலைபேசி எண்ணுக்கு ஒரு பெயர் கொடுத்து பாதுகாத்து வச்சிருந்திருக்கார்..
பின்னொரு நாள், அவன் மறுபடியும் இவங்களக் கூப்பிட்டப்போ, வர்றேன்னு சொல்லிட்டு, சொன்ன நேரத்துக்குப் போகாம, அஞ்சு நிமிஷம் கழிஞ்சதும், தோ வந்துகிட்டே இருக்கேன்னு சொல்லி, மறுபடியும் பத்து நிமிஷம் கழிச்சு, “மன்னிக்கணும், வர்ற வழியில எங்களுக்கு இன்னொரு ஆள் கிடைச்சுட்டார், அதனால நீங்க வேற கேப் கூப்பிட்டுக்கோங்க..” ன்னு சொல்லிட்டு, போகாமலே விட்டுட்டார்!!! அதுக்கப்புறம், அவனோட வாய்ஸ் மெயில்ல, வராததுக்கான உண்மையான காரணத்தையும் சொல்லி இருக்கார்!
அவர் செய்ததில எனக்கு உடன்பாடில்ல.. அந்தப் பையனுக்கு என்ன அவசரமோ, விமானத்தை தவற விட்டிருந்தான்னா, அவனுக்கு அது பெரிய பிரச்சனையாயிருக்கும்.. நான் சொன்னேன், “உங்க நிறுவனத்தப் பத்தி அவனுக்கு தெரிஞ்சிருக்காதா இருக்கும்.. எங்க வராம போயிடுவீங்களோன்னு தான் அவன் அவசரத்துக்கு ரெண்டு பேரைக் கூப்பிட்டிருப்பான்.. காத்திருந்து ஏமாந்த அனுபவம் எனக்கும் இருக்கு..”
ஆனா அவர் ஒத்துக்கல.. “என்னோட கேப்பைப் பாருங்க.. எவ்வளவு சுத்தமா வைத்திருக்கேன்.. நேரந் தவறாமை எங்களோட குறிக்கோள்.. நாங்க ரொம்ப ப்ரோபஷனல்.. வாடிக்கையாளருக்காக நாங்க கொண்டிருக்கும் பொறுப்புணர்வை, அவங்களும் எங்களுக்காகக் கொண்டிருக்கணும்..” ன்னார்.. “ம்ம்..” ன்னேன்.. இறங்கும் பொழுது, “You too.. remember this.. If you mess with me, I will pay back..” ன்னார்.. நான் சிரிச்சுட்டேன் J.. நான் அப்படிச் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டுக் கிளம்பினேன்..
அந்தப் பையனுக்குச் செய்ததுல எனக்கு உடன்பாடு இல்லாட்டியும், அவரோட ஆட்டிட்யூட் பிடிச்சிருந்தது.. அவருக்கு தன்னை ஏமாத்திட்டாங்களே ன்னு சுயபச்சாதாபம் இல்ல. நான் பொறுப்பா இருக்கேன், அதை உங்க கிட்டையும் எதிர்பார்க்கிறேன், என்னை நீங்க ஏமாத்தினா அதைத் திருப்பிக் கொடுப்பேன் என்கிற அந்தக் கோபம், சுயகம்பீரம் பிடிச்சிருந்தது!!
(வெள்ளியன்று எழுத ஆரம்பித்தது.. அதனால இன்று என்று வருவதெல்லாம் இன்று முந்தாநேத்து ஆகி விட்டது J )
இந்தப் பாட்டுக்கும் இடுகைக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேட்டுட மாட்டீங்கன்னு நம்பறேன் :)
:) read the post! paatu kettuttu varen.
ReplyDeleteNice song! I like "thenrale nee vanthathenadai..' more than this one!
ReplyDeletecab driver nalla manitharaa irukkaar.
கலக்கலா இருக்கு.....
ReplyDeleteரக்ஷிக் கதை கலக்கலாச் சொல்லிட்டீங்க. எனக்குப் பிடிக்காத ரைவர்மார் இந்த ரக்ஷி ஓட்டுனர்கள்தான், எப்பவுமே முகம் கடுமையாக, ஒரு எரிச்சலாக இருப்பார்கள்:). ஆனால் இங்க நாமிருக்கும் இடத்தில மட்டும் பார்த்திருக்கிறேன், ஏறினால் இறங்கும்வரை வள வளாவென கதைப்பார்கள்....ரெம்ப நெல்லவங்க...:).
ReplyDelete//இந்தப் பாட்டுக்கும் இடுகைக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேட்டுட மாட்டீங்கன்னு நம்பறேன் :) // அதெல்லாம் கேய்க்கமாட்டோம்.... ஆனா என் பாட்டை எதுக்கு திருடினீங்க?:)
நான் cab இல் போனது குறைவு. ஒரு முறை ஒரு ஆளிடம் மாட்டி, அவர் girl friend கிடைக்காத சோகம் சொல்லி கவலைப்பட, நான் அவருக்கு ஆறுதல் சொல்லிட்டு வந்தேன். யாராவது இருந்தா சொல்றேன்னு வாக்கு வேறு குடுத்தேன். இந்த நாட்டில் நான் யாரைப் போய் கேட்கிறது.
ReplyDeleteஎன்ன இருந்தாலும் உங்க உடன் பிறப்பை மாட்டிவிட்டிருக்க கூடாது.
||நான் பொறுப்பா இருக்கேன், அதை உங்க கிட்டையும் எதிர்பார்க்கிறேன்||
ReplyDeleteசரிதான்
////இந்தப் பாட்டுக்கும் இடுகைக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேட்டுட மாட்டீங்கன்னு நம்பறேன் :) //
ReplyDeleteம்.தலைப்புக்கும் பாட்டுக்கும் பொருத்தம் இருக்கே ஹி.ஹி. !!
இந்த J யாருன்னு கடைசி வரை சொலல்லையே :-))