17 September 2010

ஆரவாரம்? ஆலிப்பு?? பேரிரைச்சல்?

இதற்கு என்னவென்று பெயரிட்டழைப்பது?

நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்..



ஏற்கனவே ஒரு முறை பார்த்தது தான்.. ஆனால் இந்த முறை சென்ற அளவுக்கு அருகில் செல்லவில்லை.. இந்த நாட்டிற்கு வரும் இந்தியர்கள் கண்டிப்பாக பார்த்திருப்பார்கள்.. அவர்களுக்கு இந்த இடுகை புன்னகையை மட்டுமே வரவழைக்கும் என்று நினைக்கிறேன்.. மற்றவர்களுக்கு பிரமிப்பை வரவழைக்கலாம்.. 

ஏகப்பட்ட கூட்டம்.. அதில் எண்பது சதவிகிதம் இந்தியர்களே இருந்தனர்.. திருப்பதிக்கு வந்த மாதிரி இருக்கு என்று சலித்துக் கொண்டார் சகோதரர்.. 

மணிக்கணக்காக காத்திருந்து நிமிடக்கணக்கில் அருகினில் தரிசனம் கிடைத்து பின் சாரலில் நனைந்த  பொழுது ஒரு சிலிர்ப்பு உண்டாயிற்று..  அப்பொழுது எடுக்கப்பட்டது தான் இது.. கேமராவின் மீது தண்ணீர் விழவே, பயந்து அதை உறையின் உள்ளே வைத்து விட்டேன்.. இதிலேயே சில சொட்டுக்கள் தெறிப்பது தெரியும்.. அதுவும் நல்லதுக்குத் தான்.. இல்லையென்றால் முழுவதையுமே லென்ஸ் வழியே தான் பார்த்திருப்பேன் என்று நினைக்கிறேன்.. :)

பின்னொரு இடத்தில் மறுபடியும் நனைய வாய்ப்பு கிடைத்தது.. அதுவும், நேரடியாக அருவியில் இருந்து தெறித்து விழும் நீரில்.. அந்த உணர்வை என்னவென்று விவரிப்பது? மறுபடியும் வார்த்தை தடுமாறுகிறது.. ecstasy? அப்பா.. என்ன வேகம்.. இத்தனைக்கும் மிகக் குறைவான நீர் நம் மீது விழும்.. அதனை நோக்கியவாறு நின்றால் மூச்சு முட்டிவிடும்..  முதுகைக் காட்டியவாறு தான் நின்றாக வேண்டும்.. என்னமோ தெரியவில்லை.. இயற்கையின் வேகத்தை, அந்தச் சக்தியை,  நனைந்தவாறே கையெடுத்து கும்பிடத் தோன்றியது..  

இதில் குதித்து உயிருடன் மீண்டு வந்து சாதனை புரிய வேண்டும் என்று கொஞ்சம் ஆட்கள் முயன்றிருக்கிறார்கள்.. அநேகம் பேர் தப்பியதில்லை.. பிழைத்த சம்பவங்கள் இரண்டினைச் சொல்லிப் போகிறேன்.. சுமார் அறுபது வயது மூதாட்டி ஒருவர், மரப் பேரலின் உள்ளே பஞ்சு மெத்தை போட்டு, அதிலிருந்தவாறே உருண்டு வீழ்ந்திருக்கிறார்.. அவருடன் ஒரு பூனையும் :).. இருவரும் தப்பி விட்டார்கள்.. இன்னொரு சம்பவம் நெகிழ்ச்சியானது..  அக்கா தம்பி என இரு சிறுவர்கள், ஒரு படகோட்டியுடன் அருவிக்கு மேலே உள்ள ஆற்றில் பயணிக்கையில், படகு பழுதடைந்து விட, படகோட்டி இருவருக்கும் லைப் போட் மாட்டி விட்டு விட்டு படகைச் சரி செய்ய முயன்றிருக்கிறார்.. சிறுவன் அதற்குள் படகில் இருந்து விழுந்து, பின் அருவியில் இருந்து வீழ்ந்து.. அக்கா அவனைப் பார்த்து கதறியவாறே கரையோரமாக ஆற்றோட்டத்தில் அடித்து வரப்பட, வீழும் இடத்துக்கு சற்றே முன்னர் வேடிக்கை பார்க்க வந்த ஆட்களால் காப்பாற்றப் பட்டு விடுகிறார்.. அருவியில் வீழ்ந்த தம்பியும் சிறு காயங்களுடன் மட்டும் படகோட்டியவர்களால் கண்டெடுக்கப்பட்டு பிழைத்து விடுகிறார்.. ஆனால்.. படகோட்டியவர் உயிர் பிழைக்கவில்லை.. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், தவறி விழுந்த இருவரும் பிழைத்து விடுகையில், சாதனை செய்ய முயன்றவர்களில் பெரும்பாலானோர் தப்பியதில்லை!!

இன்னொரு முறை சென்றால் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.. இதை விடவும் நன்றாக இருக்கலாம்.. இல்லை சலிப்பாகவும் தோன்றலாம்.. 

பி. கு:

ecstasy - இந்த வார்த்தையை இங்கு பிரயோகிப்பது சரி தானா என்ற சந்தேகம் வர, கூகிளில் போட்டுத் தேடிய போது வந்த விவரங்கள் வேறு..  எனவே அர்த்தம் தேடிப்பார்ப்பவர் யாரும் சந்துவை தவறாக நினைத்து விடாதீர்கள்.. :) ecstasy meaning என்று தேடியபின் ஓரளவுக்கு நிலைமை சரியானது.. :) ஏற்கனவே பூங்கதிர் தேசத்து தண்ணீரைக் குடித்து மயங்கிய ஆட்களெல்லாம் இருக்கிறார்கள்.. 


33 comments:

  1. இம்புட்டுத் தூரம் வந்துப்புட்டு நிக்காமப் போயிட்டீங்க?

    நான் நாளைக்குப் போறேன்.. 17வது தடவை.. எனக்கு அலுக்கறதே இல்லை.

    ReplyDelete
  2. அப்புடியே அந்தப் பயல் அருவியில விழுந்தும் உயிர் பிழைச்சிட்டான். போட்ல போனவுங்க தான் காப்பாத்தினாங்கங்கிற மேட்டரையும் சொல்லியிருக்கலாம்.

    ஐமேக்ஸ் தியேட்டர்ல டேர்டெவில்ஸ் படம் பாத்தீங்களா?

    ReplyDelete
  3. //இதற்கு என்னவென்று பெயரிட்டழைப்பது?//

    நயகரா

    ReplyDelete
  4. காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்-பாடல் நினைவுவந்துட்டே இருந்தது நயாகரா போனப்ப!:)

    http://www.youtube.com/watch?v=2hGON9d3_Gk
    இது கனடா சைடோ??

    ReplyDelete
  5. சந்தூ தேங்க்ஸ். நான் போகனும்னு ரொம்ப ரொம்ப ஆசைப்படற ஒரு இடம் நயாகரா! அமெரிக்கா விசா ஆப்பீசர் கொஞ்சம் மனசு வச்சாருன்னா நடக்கும் :)

    ReplyDelete
  6. ஒவ்வொரு தடவையும் நாம் சக்கரம் கண்டு பிடிக்க வேண்டியது இல்லை:) இந்த சத்தத்திற்கு “வெள்ளை ஒலி -White Noise” என்று பெயர். இதில் ஏற்கனவே நிறைய பேர் ஆராய்ந்து முனைவர் ஆகி இருக்கிறார்கள்.

    மேலும் இதில் பௌதீக ரீதியாக Negative Ion அதன் விளைவுகளும்தான். நீங்கள் சொல்லும்

    //ecstasy - இந்த வார்த்தையை இங்கு பிரயோகிப்பது சரி தானா?//

    இந்த வார்த்தையில், உடலில் ஏற்படும் வேதியல் மாற்றங்கள் இங்கும் Negative Ion ஆல் ஏற்படும் :)))

    ReplyDelete
  7. படகுல போனீங்களா? நானா இருந்தா அந்தப் பக்கமே போயிருக்க மாட்டேன். நானெல்லாம் “வாய்ச்சொல்லில் வீரரடி” தான்!!

    ReplyDelete
  8. முகிலன்.. பதினேழா? கலக்குங்க.. போய் வர்றது பெருசில்ல.. ஆனா இந்த வாட்டி லாங் வீக் எண்டு ல போனதால ரொம்ப நேரம் நிக்க வேண்டியதாப் போச்சு.. மறுபடியும் போறத பத்தி இப்போ யோசிக்க முடியல..

    அட.. அத எழுதிட்டோம்னு நினைச்சிட்டு டக்குன்னு அக்கா மேட்டருக்கு தாவிட்டேன் போல :) நன்றி.. திருத்தியாச்சு..

    நல்ல பேர்.. உங்க சஜஷன் ஏற்றுக்கொள்ளப் படுகிறது :)

    ReplyDelete
  9. இதுக்கே மணி இரவு பத்துக்குப் பக்கமா ஆகிப் போச்சு.. அதனால அதை மிஸ் பண்ணிட்டோம்.. இன்னொரு முறை போனா, கண்டிப்பா பாத்துடலாம்.. நன்றி..

    நின்னுகிட்டுத் தான் இருக்கோம் :) ஹாஹ்ஹா..

    ReplyDelete
  10. மஹி... போட்டோ லோட் பண்ணுறேன்னு போனேன்.. இதயக் கண்டதும் ப்ளாக்ல அப்லோட் பண்ணிட்டேன்.. :)) நன்றி.. அந்தப் பாட்ட கேட்ட அளவுக்கு பார்த்ததில்ல.. பாத்துடறேன்.. நன்றி..

    ReplyDelete
  11. கவி.. நிறைவேறும்.. டூரிஸ்ட் விசா கிடைப்பது அவ்வளவு ஒன்னும் கஷ்டம் இல்லையே.. அப்ளை பண்ணுங்க சீக்கிரம்.. வரலாம்ன்னு நினைக்கும் போது எங்களுக்கும் தகவல் சொல்லிடுங்க...

    ReplyDelete
  12. ஹைஷ்.. என்ன சொல்லியிருக்கீங்கன்னு தேடித் பார்த்தா தலை சுத்துது.. இதையெலாம் புரிஞ்சுக்குற ஸ்டேஜைத் தாண்டி வந்துட்டோம் போல :) ஒரு திகில் படம் வேற இருக்கு இந்த பேருல.. :)))) தகவலுக்கு நன்றி.. முடிஞ்சா இதென்ன ன்னு விளக்கி (எங்களுக்குப் புரியறா மாதிரி) ஒரு பதிவு போடுங்களேன்..

    ReplyDelete
  13. ஹூசைனம்மா... பெரிய படகு.. நிறைய பேரு இருக்காங்க.. நம்ம ஊருல போறத விட இங்க பாதுகாப்பு அதிகம்.. பயத்த விட பரவசம் தான் அதிகமா இருந்தது.. படகு கீழ இருந்து வீழ்ச்சி கிட்டத் தான் போவும்.. மேல இருக்கற ஆத்து மேல போறதில்ல :)

    எங்க அத்தையும் இப்படித் தான் சொன்னாங்க.. தூர இருந்தே பாத்துட்டு வந்திடுங்க.. கிட்டஎல்லாம் போக வேண்டாம்ன்னு.. அதயெல்லாம் கேக்கறா ஆட்களா நாங்க? :)

    ReplyDelete
  14. ஆஹ்! சூப்பர்! ஹூம்... ரொம்ப நாளாச்சு... கனடா பக்கம் இன்னும் அழகா இருக்குமாம்.. அடுத்த கோடையில் பிளான் செய்யலாம் :)

    எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது ...

    ReplyDelete
  15. சந்தூ, எனக்கும் இந்த நயகரா எவ்வளவு நேரம் பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது. ஆனா, படகில் போய் பார்த்ததில்லை. பிள்ளைகளை கொண்டு செல்ல பயம். நீர் வீழ்ச்சியின் பக்கத்தில் ஒரு மலை வழியா குடைந்து, ஒரு பாதை உண்டாக்கி, வீழ்ச்சியை அருகில் பார்த்து ரசிக்கலாம். என்ன கொஞ்சம் தொப்பலாக நனைய வேண்டும்( ஒரு மஞ்சள் கலர் ரெயின் கோர்ட் போல ஒரு பிளாஸ்டிக் கவர் தருவார்கள்). மிகவும் அழகா இருக்கும்.

    ReplyDelete
  16. நயகராவை எல்லா சீசன்லயும் பாத்திருக்கேன்.. ஆளே இல்லாத விண்டர் உட்பட.. எத்தனை தடவை போனாலும் விண்டர்ல இருக்கிற நயகராவோட அழகு சம்மர்ல இல்லை..

    ReplyDelete
  17. //ஒரு மஞ்சள் கலர் ரெயின் கோர்ட் போல ஒரு பிளாஸ்டிக் கவர் தருவார்கள்). மிகவும் அழகா இருக்கும்.// நயகராவை விடவா???

    //முடிஞ்சா இதென்ன ன்னு விளக்கி (எங்களுக்குப் புரியறா மாதிரி) ஒரு பதிவு போடுங்களேன்..// ரயில் வண்டி எப்படி செய்தார்கள், எப்படி ஓடுகிறது என்பதை விட எங்கு இருந்து எங்கு போகும், அதன் டிக்கட் எங்கு கிடைக்கும் என்பது நல்ல பலன் தரும்.

    http://www.brainsync.com/

    http://www.youtube.com/watch?v=uyOvnBzRD-4

    ReplyDelete
  18. அப்பா.. நயாகரா என்ன ஒரு அழகு...

    ReplyDelete
  19. நன்றி இலா.. கனடா பக்கமிருந்தும் பார்க்கனும்ன்னு ஆசை.. அதுக்கு விசா அது இதுன்னு விரயமாகும் அப்படின்றதால விட்டாச்சு.. நீங்களாச்சும் போய் வாங்க..

    ReplyDelete
  20. :) நன்றி வான்ஸ்.. மஞ்சள் கோட் போட்டும் நனைந்தாச்சு.. அதுக்குப் பேரு thunder deck.. பொருத்தமான பேரு தான் :)இப்போ தான் பெருசாகிட்டாங்களே? போய் வாறது?

    ReplyDelete
  21. நன்றி முகிலன்.. ம்ம்ம்.. விண்டர்ல போனதில்ல.. ஆளேயில்லாம இருக்கும்னா கண்டிப்பா போகனும்ன்னு தோணுது.. :)பார்க்கலாம்.. மொட்டை மரங்களோட பார்க்கறப்ப அது வேற மாதிரியான உணர்வைத் தரும்ன்னு நினைக்கறேன்..

    ReplyDelete
  22. //ரயில் வண்டி எப்படி செய்தார்கள், எப்படி ஓடுகிறது என்பதை விட எங்கு இருந்து எங்கு போகும், அதன் டிக்கட் எங்கு கிடைக்கும் என்பது நல்ல பலன் தரும்.//

    உண்மை தான் ஹைஷ்.. இப்போ தேடித் படிக்கும் நிறைய விஷயங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு அதை பயன்படுத்தும் விதத்திலேயே இருக்கின்றன..

    லின்க் க்கு நன்றி.. சாயந்திரம் கண்டிப்பா படிக்கறேன்..

    ReplyDelete
  23. வாங்க பிரகாஷ்.. ரொம்ப நாளாச்சு உங்களை எங்கயாச்சும் கண்டு.. உண்மை தான்.. அதைப் பார்ப்பது ஒரு அழகுன்னா அது தரும் உணர்வு இன்னொரு அழகு.. நன்றி..

    ReplyDelete
  24. Chandana

    Vanathy solrathukku Peru walking behind the falls. Canada sidela irukku. Canada visa edunga waste ellaam illai. Toronto pons namma oor maathiri kadai Peru tamilil eluthiyirukkiarathu, namma oor sappaadu ellaam pakkalaam. I feel more Indian in toronto than new jersey's oak tree road.

    ReplyDelete
  25. Athe mathiri neenga intha murai vanthathai enkitta solli irunthaa kandippa sappaadu pottiruppom. Stay kooda enga veettulaye senjirukkalaam. Adutha murai kandippa sollittu vaanga.

    ReplyDelete
  26. ரொம்ப நன்றி முகிலன்.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.. சொல்லிட்டெல்லாம் வர முடியாது - திடுதிப்புன்னு தான் வந்து நிப்போம்.. ஹாஹ்ஹா..

    கனடா விசா.. யோசிக்க வேண்டிய விஷயம்.. எனக்கும் அங்க போகனும்ன்னு ஆசை இருக்கு.. முதல்ல இந்த வூரு விசா வந்து சேரட்டும்.. பார்க்கலாம்..

    ReplyDelete
  27. //காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்-பாடல் நினைவுவந்துட்டே இருந்தது நயாகரா போனப்ப!:) // யாருங்க இது சொன்ன ஆள்!! ஓ! இவங்களா!!

    சந்தூஸ்... எனக்கு ஒரு ஆசை. நிஜ கெட்டுகெதர்.. இங்கதான் வைக்கணும், அதுவும் போட்ல. ;))

    ReplyDelete
  28. எதுக்கு இப்பிடியொரு வெடிச் சிரிப்பு?

    ReplyDelete
  29. இமா.. ரொம்ப நல்லாயிருக்கும் இமா.. என்னிக்காவது நடக்காமலா போயிடப் போவுது? போட்லயே வச்சிடலாம்.. ஹைஷ் ஓட்டி வருவாரு :) அதுக்குள்ள முடிஞ்சா ஒரு கற்பனை கெட் டு கெதராவது வைப்போம்..

    ReplyDelete
  30. :))))) க்கு அர்த்தம் புரிஞ்சிட்டது.. :))

    ReplyDelete
  31. அப்பப்பா... என்ன ஒரு அழகு!
    Thanks for sharing!

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)