19 November 2010

Living separate after marriage..

இது நல்லதா நல்லதில்லையா.. தேவையா தேவையில்லையா.. ஒத்து வருமா வராதா.. நன்மை அதிகமா.. பக்க விளைவு அதிகமா.. பின் விளைவு அதிகமா.. ரிஸ்க் பெனிபிட் ரேஷியோ என்ன...

அறிஞர் பெருமக்கள் பல பேரு பலவாறாகப் பேசுவது கண்டு, அது பற்றி ஆராய்ச்சி செய்யலாம் என்று, நெட்டில் விஷயங்களைத்  தேடியலைந்து கொண்டிருந்த கண்ணம்மாவின் லேப்டாப்பில், கிட்டத்தட்ட ஐம்பது வலைப்பக்கங்கள் திறந்து கிடந்தன.. அருகில் ஒரு கிழிந்திருக்காத (அதுவரை) காகிதமும், உடைந்திருக்காத  (இதுவும் அதுவரை) பேனாவும்..

ஒரு முடிவுக்கும் வர முடியாமல் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்த கண்ணம்மா, அதற்கு மேல் பிய்ப்பதற்கு ஏதும் மிச்சமில்லை என்ற நிலை வந்ததும், லேப்டாப்பை அணைத்து விட்டு, தூங்கலாம் என்று ஒரு இறுதி முடிவெடுத்தாள்.

இரண்டு மணி நேரமாகப் படுக்கையில் புரண்டு கொண்டு தூங்க முயற்சித்தாலும் தூக்கம் வர மறுத்தது.. எப்படியோ அதனுடன் போராடி அவள் தூங்க ஆரம்பிக்கும் பொழுது, புதிதாக நூறு பேர், விஷயத்தின் சார்பாகவும் எதிராகவும், போர்க்கொடி ஏந்தி களம் இறங்கியிருந்தனர்.. நல்ல வேளை, அவர்கள் இறங்கிய சத்தம் அவளது காதுகளுக்கு எட்டவில்லை..

நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த போது தான் அந்தக் கனவு வந்தது அவளுக்கு..

முகம் நிறைய ஏக்கங்களுடன் பலர் அவள் முன்னே நின்று கொண்டிருக்கின்றனர்.. எங்களுக்காக யாரும் பேச மாட்டீர்களா என்று இறைஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.. ஆனால் யாரும் அவர்களைச் செவிமடுத்ததாகவே தெரியவில்லை.. தத்தம் போக்கில் சென்று கொண்டிருக்கின்றனர்.. அந்த வழியாக வந்த கண்ணம்மா நிற்கிறாள்.. பார்க்கிறாள்.. அவர்களை நோக்கிப் போகிறாள்.. அவர்களுடன் பேசுகிறாள்.. இனி தன் வாழ்வு முழுவதும் அவர்களுக்காகவே அர்ப்பணிப்போம் என்று முடிவு செய்கிறாள்..

யார் அவர்கள்? அவர்கள் அப்பாவிகள்.. ஒரு பாவமும் செய்திடாதவர்கள்.. ஒரு புள்ளியில் ஆரம்பித்த அவர்களது வாழ்க்கையை, காலமெனும் பெயர் கொண்ட ஏதோவொன்று, கோலம் போடுகிறேன் பேர்வழியென்று, சுற்றிச் சுழற்றி சூறாவளியாக்கி, தனக்குப் பிடித்த மாதிரி வரைந்து கொண்டிருந்தது..

அவர்களுடன் பேசி, அவர்களது வலியினை அறிந்து, அதனைப் போக்குவதற்குண்டான மருந்தினைத் தருவதே தமது முதற்பணி என்று நினைக்கும் கண்ணம்மாவின் கைகளில், உடனே தோன்றுகின்றன, ஒரு மைக்கும் ஒரு ஓட்டை டேப் ரிக்கார்டரும்.. உடனே ஆரம்பிக்கிறாள்..

முதல் தம்பதி..  திரு மற்றும் திருமதி குமரன்..

என்ன தான் மறக்க நினைத்து தூங்கியிருந்தாலும், அவளது கனவிலும் அந்தக் கேள்வியே முதலில் வந்து விழுந்து தொலைக்கிறது.. "நீங்க இந்த Living together before marriage, followed by living together with or without marriage பத்தி என்ன நினைக்கறீங்க?"

"ஐயோ மேடம்.. வெந்த புண்ணுல வேலைப் பாய்ச்சினாப்ல இப்படிக் கேக்கறீங்களே.." கண்ணில் நீர் தளும்புகிறது குமரனுக்கு..

"ஓ.. மன்னிக்கணும்.." சட்டெனச் சுதாரித்து உடனே கேள்வியை மாத்திப் போட்டாள்.. "நீங்க ஏன் Living separate after marriage"?

"அதையேன் மேடம் கேட்கறீங்க?  ஆசைப்பட்டு கட்டிகிட்டோம் மேடம்.. விதி அமெரிக்கா ரூபத்துல வந்துடுச்சு.. முதல்ல கொஞ்ச நாள் இங்க வீட்டுல அழுதுகிட்டு கெடந்தா..  அப்புறம் வேலைக்குப் போயே ஆவனும்ன்னு கட்டை விரல்ல நின்னா.. ரெண்டு பேருக்கும் ஒரே இடத்துல வேலை கிடைக்கல.. அதான்... ஒரே இடத்துல கிடைக்கற வரைக்கும், இப்படி பக்கதூருல வேலை.. வெள்ளிக்கிழமையானா பொறுப்பா இவ வீட்டுக்கு வந்துடறேன்.. ஆனாலும் கஷ்டமா இருக்கு.. வேலை முடிஞ்சு வீடு வந்தா சண்டை போடக் கூட ஆளில்ல.. வாரக்கடைசியில லொங்கு லொங்குன்னு வண்டி ஓட்டி வர்றேன்.. ஒரு வாரமா போட வேண்டிய சண்டையெல்லாம் ரெண்டே நாளுல போட வேண்டியிருக்குது மேடம்.. எங்க கஷ்டம் எங்களுக்குத் தான் புரியும்.."

அடுத்த தம்பதி.. மிஸ்டர் அண்ட் மிசஸ் மாடச்சாமி.. இவர்கள் இருவரும் அமெரிக்கர்கள் என்பதால், ஆங்கிலத்துலயே உரையாடல்..

"He is my best buddy.. We are married for so many years.. We lived in Alaska for a long time.. But due to economic situations, he had to move out for a better place to work.. I joined him for 6 months initially.. But our son could not like the new place.. He was missing his school, his friends, and was feeling very sad..  So finally I decided to move back to Alaska with my son, and be with him till he finishes his school, while leaving my husband in the new job.. He comes here by flight every weekend.. But still.. I miss him a lot.. I grow some tomato plants at home and I talk to them every evening after I return home from work.. They grew not with water, but with my tears.."

உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்குகிறார் மிசஸ் மாடசாமி.. ஒரு டிஷ்யூ எடுத்துக்  கொடுத்துவிட்டு அடுத்த தம்பதியிடம் நகர்கிறார் கண்ணம்மா..

மூன்றாவது தம்பதி.. திரு உசிலைமணி மற்றும் திருமதி உசிலைமணி..

"மேடம்.. இன்னா மேடம் செய்ய.. இந்தாளு இந்தக் குறட்டை விடுறாரே.. நானும் முதல்ல காதுல பஞ்சு வச்சு தூங்கிப் பாத்தேன்.. வேலைக்காவுல... பக்கத்து ரூம்ல தூங்கிப் பாத்தேன்.. முடியல்ல... அப்புறம் மேல் மாடியில தூங்கிப் பாத்தேன்.. படுக்கையெல்லாம் ஒரே அதிர்வா இருக்குது.. தெருவுல இருக்கரவுங்க கூட காலி பண்ணிட்டு போயிட்டாங்க மேடம்.. அதான்.. நானும் ரெண்டு தெரு தள்ளி தனியா வீடு எடுத்துட்டு இங்க வேலையெல்லாம் முடிஞ்சதும் அந்த வீட்டுக்கு ஓடிப் போயிடறேன் தூங்கறதுக்கு.."

"ஹாவ்.. எனக்கு தூக்கமா வருது.." திரு உசிலைமணியின் கொட்டாவி கொடுத்த புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து விலகி வந்தாள் கண்ணம்மா..

அடுத்து திரு குழந்தையப்பன் தம்பதி..

"நானு எங்கப்பா வாங்குன கடனைக் கட்ட, அதுக்கப்புறம் வீடு கட்ட அப்படின்னு துபாய்க்கு வந்து வேல பண்ணி சம்பாதிக்கறேன்.. எம் பொண்டாட்டிக்கு விசா கிடைக்கல.. குழந்த குட்டிகளோட வீட்டுல இருக்கா மேடம்.. ஒரு கம்ப்யூட்டர வாங்கிக் கொடுத்துட்டு வந்துட்டேன் நானும்.. தெனமும் ஸ்கைப்புல பாத்துக்கறோம்.. வருஷமொருக்கா வீட்டுக்குப் போறேன்.."

அடுத்து திரு அண்ட் திருமதி கிஷோர்..

"இவளுக்கு ஹெச் 1 விசா கிடைச்சிருந்தது மேடம்.. ஒரு மாசம் ஆகியிருக்கும்.. ஆறு மாசம் ஆன் சைட் வேல இருக்குன்னு, கம்பெனில கிளம்பச் சொல்லிட்டாங்க.. என்னையும் புள்ளையையும் விட்டுட்டு இப்ப ஒக்லஹோமால வாசம்.. முதல்ல ஆறு மாசம்னாங்க.. அப்புறம் ஆறேகால்.. அப்புறம் ஆறரை.. அப்புறம் திடீர்ன்னு எட்டு.. இப்போதைக்கு எட்டே முக்கால்ல நிக்குது.."

அடுத்து திரு அண்ட் திருமதி செல்வா..

"படிப்புக்காக பிரிஞ்சிருக்கிறோம் மேடம்.."

அடுத்து திரு அண்ட் திருமதி கண்ணன்..

அடுத்து திரு அண்ட் திருமதி ஜான்சன்..

அடுத்து திரு அண்ட் திருமதி குப்புச்சாமி..

அடுத்து திரு அண்ட் திருமதி பூவாத்தா..

க்யூ தொடர்ந்து கொண்டே இருக்க, மயக்கமே வந்து விட்டது கண்ணம்மாவுக்கு.. அங்கே மயங்கி விழுகையில், இங்கே வியர்த்து முழித்திருந்தாள்..

பிறகென்ன.. மறுபடியும் தூங்கி.. கனவு கண்டு.. முழிச்சு.. காலையில ஆபிஸ்க்கு லேட்டாப் போயி, பாஸ் கண்ணுல படாம எப்பிடியோ எஸ்கேப் ஆயிட்டா..



JUST FOR FUN MAKKALS.. NOTHING SERIOUS.. பெரும்பாலும் நான் கேள்விப்பட்ட பார்த்த மனிதர்களைக் கொண்டே எழுதியிருக்கிறேன்.. THANKS FOR UNDERSTANDING..

18 comments:

  1. ம்ம்..என்னத்த சொல்ல? விருப்பப்பட்டா தனியா இருக்காங்க? எல்லாம் காலத்தின் கோலம்..:-|

    வேலை காரணமா பிரிந்தவர்கள் எல்லாருக்கும் சீக்கிரமா ஒரே ஊரில,ஒரே இடத்தில வேலை கிடைக்க என் ப்ரார்த்தனைகள்!

    ReplyDelete
  2. வேலைக்காக, பணத்திற்காக பிரிந்து இருப்பவர்கள் இன்னும் நிறைய பணம் செலவு செய்கிறார்கள் என்பது என் கருத்து. இங்கே மனைவிக்கு குடியிருக்க வீட்டு வாடகை, சாப்பாட்டு செலவு, அதே போல கணவனுக்கு வீட்டு வாடகை, சாப்பாடு, வாரம் ஒரு முறை வந்து போகும் செலவு ( ப்ளைட் எனில் சில நூறுகளாவது செலவு வரும் ). அதோடு தனியே இருக்கும் கணவன் வெளியே சாப்பிட்டு உடலை கெடுத்துக் கொள்வது ஒரு புறம். இப்படி நிறைய சொல்லலாம்.

    ReplyDelete
  3. ஆமாம் மஹி.. தேவைகள் பலவிதம்.. அவங்களுக்கு என்னுடைய பிரார்த்தனைகளும்.. :)

    ReplyDelete
  4. வான்ஸ்.. நீங்க சொல்வதும் சரி தான்..

    ஆனா, சில வீடுகளில், பணம் என்பதை விட, கொஞ்சம் நாள் தானே.. எங்கயாவது பக்கத்துல வேலை செய்து கொண்டு கொஞ்சம் சி வி பலப்பட்டவுடன் ஒன்னா வந்துடலாம்ன்னும் நினைக்கறாங்க.. கொஞ்சம் பேர் ஏதாவது ட்ரைனிங்காக தற்காலிகமா பிரிஞ்சிருக்காங்க.. இப்படி பல காரணங்கள்.. ம்ம்..

    ReplyDelete
  5. கடைசி 2 வரிகள் முதல்ல பார்த்தப்ப காணோம்? இப்ப சேந்திருக்கா? ;) எனிவேஸ்,தங்கள் நன்றி ஏற்றுக்கொள்ளப்படுகிறது.:) :)

    ReplyDelete
  6. திருமணம் ஆகி சில நாட்களிலேயே இப்படி பிரிந்து இருப்பவர்களும் உண்டு! வேலை, சூழ்நிலை போன்று பல காரணங்கள் இதற்கு காரணம்! எல்லாம் காலத்தின் கட்டாயம்தான்!

    ReplyDelete
  7. priority list ஆளுக்கு ஆள் மாறுபடும். இதில் நாம் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. குழந்தைகளின் மனநலத்தை கவனத்தில் கொள்ளுதல் நலம் :)

    ReplyDelete
  8. நானும் கவிதாவும் எடுத்த முதல் முடிவு இதுதான். ஒரு ஆள் வேலையே பாக்கலைன்னாலும் பரவாயில்லை. ஒரே ஊர்லயே இருக்கணும்.

    (இடையில நானும் நாலு மாசம் வேலையில்லாம வீட்டில உக்காந்து இருந்தேன்).

    ReplyDelete
  9. @Mahi

    ஆமாம் மஹி.. பிறகு சேர்த்துட்டேன்.. எல்லாரும் லிவிங் டுகெதர் பத்தி காரசாரமா பேசிட்டு இருக்காங்க.. அதை கிண்டலடிச்சா மாதிரி இருந்துடக் கூடாதுன்னு தான்..

    ReplyDelete
  10. @எஸ்.கே

    ஆமாம் எஸ் கே.. திருமணமாகி சில நாட்களிலேயே ஏற்படும் பிரிவு கடினமானது.. ஆனால் கொஞ்சம் காலம் மட்டுமே என்பதால் அதைப் பொறுத்துப் போனால் நன்மைகளும் அதிகம்..

    ReplyDelete
  11. @kavisiva

    நம்ம நாட்டில் இது குறைவு கவி.. ஆனால் இங்கு நிறைய இந்தியத் தம்பதிகளை இப்படிக் கண்டிருக்கிறேன் :)

    இன்னொரு உதாரணம்.. திருமணமாகி அஞ்சு வருஷம் ஆச்சு.. நடுவுல அந்தப் பொண்ணு படிச்சார்.. அப்புறம் வேலை தேடி, கிடைத்து, அதற்கு கையெழுத்திட்ட வாரத்தில் தான் அவருக்குத் தெரிய வந்தது - குழந்தை உண்டாயிருப்பது :) வேலைல சேர்ந்தா கொஞ்சம் மாசம் வேற மாநிலத்துக்குப் போகணும்.. ரெண்டு பேரும் நல்லா யோசிச்சு முடிவு பண்ணி, அந்தப் பெண் வேலையில சேர்ந்து, வேற மாநிலத்துக்கு வந்தார் (நான் இருந்த இடம்).. அவருக்கு நல்ல ரூம்மேட் கிடைத்துவிட, ரூம்மேட் நல்ல அக்கறை எடுத்துக் கொண்டார்.. கணவரும் இடைக்கிடை வந்து கவனித்துக் கொண்டார்.. ஏழு மாதம் கழித்து கணவரது ஊருக்கே மாற்றல் வாங்கிப் போயிட்டார்.. இப்போ குழந்தையும் பிறந்து, வேலையும் இருக்கு.. கொஞ்சம் நாள் தானே பொறுத்துக்குவோம் என்று தான் அப்படி இருக்கறவங்க எல்லாரும் நினைக்கறாங்க..

    குழந்தைகள் கண்டிப்பா ஏங்கிப் போகும் தான்.. ஆனா தொடர்ந்து பேசிட்டு இருந்தா இடைக்கிடை போயி பாத்துட்டு வந்தா பெருசா பாதிப்பு இருக்காதுன்னு தான் நினைக்கறேன்..

    ReplyDelete
  12. @முகிலன்

    நல்ல முடிவு தான் முகிலன்.. அதுவும் நீங்களும் வேலைய விட்டு இருந்தது ஆச்சர்யமா இருக்கு.. :)

    ஆனா இப்போ இருக்கற ஜாப் நிலைமையில நிறைய பேரால இப்படி முடிவு எடுக்க முடியறதில்ல :((

    ReplyDelete
  13. வெரி பேட்... நான் சொல்லிட்டே இருப்பேன்.. எழுதுங்கோன்னு... ஆனா என் கிட்ட ஒரு வார்த்த சொல்லாம... இவ்ளோ தூரம் வந்துட்டு இப்போ சொல்லியாறதா..

    ஹூம்.. இருங்க வந்து படிச்சுக்கறேன்... seems to be interesting..

    ReplyDelete
  14. அங்க ஆளாளுக்கு அடிச்சுகிட்டு இருக்க, இங்க நீங்க காமெடி பண்ணிகிட்டு இருக்கீங்க. ;-))) ஆனாலும், சொன்னது சோகமான விஷயங்கள்தான்.

    ReplyDelete
  15. @கலகலப்ரியா

    வாங்க ப்ரியா.. நம்ம அலைவரிசைகள் ல சிலது ஒத்து இருக்கும்.. சிலது வேறுபட்டிருக்கும்.. பாத்துட்டு நொந்து போகாம இருந்தீங்கன்னா சரி தான் :)) நான் ரொம்ப யோசிச்செல்லாம் எழுதறதில்ல.. யோசிச்சு வச்சிருப்பதையும் எழுதறதில்ல :) அன்னனைக்கு என்ன தோணுதோ அது அப்படியே.. நிறையவை விளையாட்டா எழுதினது தான்..

    ReplyDelete
  16. @ஹுஸைனம்மா

    என்ன பண்ண ஹூசைனம்மா? எனக்கும் கஷ்டமா இருந்ததால தான் ஒரு மாறுதலுக்கு இதை எழுதினேன்..

    ReplyDelete
  17. இந்த கொடுமையான வாழ்க்கை/நிலவரம் யாருக்கும் வரக்கூடாது. வேலைங்கறது ஒரு பகுதி தான் அதனால வாழ்க்கையில் இழப்பது அதிகம்.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்சனை. சிலர் பிறந்து 4 மாசத்தில இந்தியாவில குழந்தை விட்டு வந்திடறாங்க அங்க 1 வயசோ அதுக்கு மேலயோ இருந்திட்டு அப்புறம் குழ்ந்தை இங்க வருது. யாருக்கு என்ன கஷ்டமோ.. நம்மளுக்கு ஒரு நிலமை வந்தா எப்படி முடிவெடுப்போமே அதே மாதிரி மத்தவங்க எடுக்கலை என்பதால் அவங்கள குறை சொல்ல முடியாது.

    ReplyDelete
  18. பிடித்த பாடல் தொடர்பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன்.:)
    http://mahikitchen.blogspot.com/2010/12/blog-post_04.html
    தொடருங்க..நன்றி!

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)