19 December 2010

சில்லென்று இரண்டு கற்பனைகள்..



இளம் மாலை நேரம்..
கதவுசார் நிலைக்கண்ணாடி..
ஜோடித்து முடிக்கும் தருவாயில் அவள்..


பின்புறமிருந்து வந்து
சற்றே குனிந்து
அவளது வலது தோளின் மீது
தன் தலை வைத்துப் பார்த்து,
தங்களது பொருத்தம் மெச்சினான் அவன்..


"சுடிதார் நல்லாயிருக்கு..
தோடும்.."
மேய்ந்து கொண்டிருந்த அவன் பார்வை
அவளது விழிகளில் ஒரு யுகநொடி தொலைந்து நின்றது..
பின் மீண்டு, சட்டென உயர்ந்து, எதையோ தேடியது..
"என்னமோ குறையுது..
ம்ம்.. பொட்டு எங்க? பொட்டு வை.."
"பொட்டு வச்சாத் தாண்டி உம்முகம் முழுமையா இருக்கு.."


ப்ச்.. உதடு பிதுக்கி வருத்தம் காண்பித்தாள்
"ஊர்ல இருந்து வாங்கி வர மறந்துட்டேன்.."


"அதானே பாத்தேன்..
இதெல்லாம் மறந்துடுவியே..
மாடல் அழகின்னு மனசுல நெனப்பு.."
கன்னத்தில் மென்முத்தம் பதித்து விலகியவனை
சட்டை பற்றித் திருப்பினாள்..
"உம் மீச எங்கடா?
மீச வச்சாத் தாண்டா ஆம்பிளைக்கு அழகு.."

பழிவாங்கிய களிப்பு அவள் முகத்தில் வழிய,
குறும்பும் புன்சிரிப்பும் மின்ன பதிலுரைத்தான் அவன்..
"ம்ம்.. நானும் மறந்து ஊர்லயே விட்டுட்டு வந்துட்டேன்.."


..................................................

வா நனையலாம்
மழை பிடிக்கும்

என்றேன் நான்..


சளி பிடிக்கும்
என்றாய் நீ..


நனைந்தவாறே.. ஓடினோம்..

இருவரும்..
இருவருக்கும்...

14 comments:

  1. ம்ம்..(குளிர்/மழைக்)காலத்துக்கேற்ற கற்பனைதான்! ;)

    ReplyDelete
  2. வசனக் கவிதையும் (இதுக்கு கமல் கவிதைன்னும் சொல்லலாம்!!) அழகு. வார்த்தைக் கவிதையும் அழகு.

    ReplyDelete
  3. முதல் கவிதை பிடிச்சுருக்கு! ரொம்பவே ரசனையான வசன கவிதை சந்தனா!

    ReplyDelete
  4. ஆஹா... முதல் கற்பனை செம கலக்கல்...

    ReplyDelete
  5. சூப்பர் கவிதைகள், சந்தூ.

    ReplyDelete
  6. நன்றி மஹி.. கவிதையில கூட கொஞ்சம் பஜ்ஜியும் போட்டிருக்கணுமோ :)

    ReplyDelete
  7. நன்றி ஹூசைன்ம்மா.. குணா கமலத் தானே சொல்லியிருக்கீங்க? :)

    ReplyDelete
  8. பொறுப்பான புள்ளை எப்பிடி இருக்கணும்ன்றதுக்கு நான் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.. இந்தாங்க இமா டிஷ்யூ :))

    ReplyDelete
  9. ரொம்ப நன்றி வசந்த்.. வசனக் கவிதையா? நீங்களுமா? :)இப்போ தான் நானே கேள்விப்படறேன்..

    ReplyDelete
  10. நன்றி சகோ.. நல்லா கலக்கிட்டனா? :)

    ReplyDelete
  11. சித்ரா.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

    ReplyDelete
  12. வான்ஸ்.. நன்றி நன்றி.. நீங்க எழுதி ரொம்ப நாளாச்சே? பிசியோ?

    ReplyDelete
  13. //என்னன்னு லேபிள் பண்ண??, //

    கொலை வெறி கவுஜ

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)