13 April 2011

பொன்(ண்ணு) எழுத்து..

மாட்டி விட்ட அதிராவுக்கு ஒரு கர்ர்ர்ரர்ர்ர்ர்.. 

பெண் எழுத்துன்னா? பெண்கள் எழுதுவதா? இல்லை பெண்களை மையப்படுத்தி எழுதப்படுவதா என்று கொஞ்சம் குழப்பம்.. நான் இந்த இரண்டாவது வகை எழுத்துக்களை அதிகம் படித்ததில்லை.. அதனால அதைக் குறித்து என்ன சொல்லுவது என்று தெரியல.. ஆனால், ஒரு பெண்ணாக, பெண்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளைச் சார்ந்து எழுதப்படுவதை வாசிப்பது உண்டு.. அது போன்றவைகளுக்கு ஆதரவும் உண்டு.. (அதுக்காக, "பசங்க மட்டும் ஹெவியா புல்லட்டு ஓட்டுறாங்க.. எங்களுக்கு மட்டும் ஏன் லைட் வெயிட்டா ஸ்கூட்டின்னு தனியா விக்கிறீங்க?" அப்புடின்னெல்லாம் யாராவது கேட்டாங்கன்னா ஓட்டம் பிடிச்சிடுவேன்..)

சரி.. முதல் வகைன்னு எடுத்துகிட்டா, நானும் பெண் தானே.. அப்ப நான் எழுதுவதெல்லாம் "பெண்" எழுத்து ஆயிடுமா? நான் எழுதும் போது அநேக நேரங்களில் "நான் பெண்" என்ற உணர்வுடன் எழுதுவதில்லையே? அப்போ அது எப்படி பெண் எழுத்தாகும்? 

அப்புறம் இந்த வரைமுறைக்கு வருவோம்.. எழுத்து என்பது, பிறரைச் சிதைக்காத வகையில, பொய்யை உண்மைன்னு வேணும்னே திரிச்சுப் பேசாத வகையில (ஒரு விஷயத்தில் மாற்று கருத்து கொண்டிருப்பதெல்லாம் இதிலே வராது) - வரைமுறை என்பது இப்படி இருக்கனும்ன்னு நினைக்கிறேன்.. இதுல ஆண் என்ன பெண் என்ன?

இருவருக்கும் பொதுவான விஷயங்களை அலசும் போது, எழுதுபவர் அல்லது பேசுபவர்களிடையே ஆண் பெண் என்ற வேறுபாடு எதுக்குத் தேவை? இப்படியான விஷயங்களை பொதுப் பார்வையுடன் முன்னெடுத்து எழுதும் பெண்களை வரவேற்கிறேன்.. 

அப்புறம், இந்த காமம்.. பாலியல்.. இது குறித்தெல்லாம் அறிவுப்பூர்வமா அறிவியல்பூர்வமா உணர்வுப்பூர்வமா - பெண்கள் எழுதினால் வரவேற்கிறேன்..  இப்படியாக இல்லாம, வெறும் உணர்ச்சிகளைத் தூண்டி விடும் நோக்கத்துடன் எழுதப்படும் எழுத்துக்களை யார் எழுதினாலும் - நோ வரவேற்பு.. ஆனா இது போன்றவைகளைப் படிப்பதும் படிக்காததும் ஒவ்வொருத்தர் விருப்பம், அதுல நாம எதுவும் சொல்ல இயலாது.. 

வேறென்ன சொல்ல? 

7 comments:

  1. //இருவருக்கும் பொதுவான விஷயங்களை அலசும் போது, எழுதுபவர் அல்லது பேசுபவர்களிடையே ஆண் பெண் என்ற வேறுபாடு எதுக்குத் தேவை?//

    அதானே..? நல்லா கேளுங்க சந்தனா :)) சுருக்கமா சொல்லி அழகா முடிச்சிட்டு எஸ்கேப் ஆகிட்டீங்களே..?! வாழ்த்துக்கள்! :-)

    ReplyDelete
  2. சந்தூ, ஏன் படக்கென்று முடிச்சுப் போட்டீங்க?? இன்னும் கொஞ்சம் நீட்டி முழக்கியிருக்கலாம். நல்ல கருத்துக்கள்.

    ReplyDelete
  3. சந்து, எட்டிப்பார்த்தேன்.... ஏதோ ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என ஒரு சத்தம் கேட்டிச்சா..... எடுத்தேன் ஓட்டம்..:) திரும்பிவர இப்போதான் நேரம் கிடைச்சுது.

    கட்டிலுக்குக்கீழ இருக்கிற ஆட்களுக்கும் மதிப்புக் கொடுத்து ....பொன் எழுத்து தொடர்ந்தமைக்கு மியாவும் நன்றி.

    ஒவ்வொருவர் ஒவ்வொரு கருத்தைச் சொல்லும்போது சிந்திக்கத் தோன்றுகிறது.. ஒன்றும் தெரியாதெனச் சொல்லிட்டு நிறையக் கருத்துச் சொல்லிட்டீங்க.

    இருந்தாலும் வான்ஸ்க்காக இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கப்பிடாதோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    ReplyDelete
  4. //சரி.. முதல் வகைன்னு எடுத்துகிட்டா, நானும் பெண் தானே.. அப்ப நான் எழுதுவதெல்லாம் "பெண்" எழுத்து ஆயிடுமா? நான் எழுதும் போது அநேக நேரங்களில் "நான் பெண்" என்ற உணர்வுடன் எழுதுவதில்லையே? அப்போ அது எப்படி பெண் எழுத்தாகும்?
    //
    பெண் என்பதுக்காக எந் நேரமும் நான் பெண், நான் பெண் என நினைச்சிட்டே இருக்க முடியுமோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... நாம் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும்... நம் வெளிப்பாடுகள் பெண்ணின் வெளிப்பாடுகளாகவேதான் இருக்கும்.... அது இயற்கை....

    நாம், ஆணாக ஒன்றை எழுத அல்லது ஒரு செயலைச் செய்யத்தான், நாம் நம்மை ஒரு ஆண்போல எண்ணிக்கொண்டே செய்யவேண்டும்... அது கஸ்டம்தானே.....

    கெள இஸ் இற்?:))).

    ReplyDelete
  5. நன்றி சித்ரா!

    நன்றி அஸ்மா.. இதுக்கு மேல என்ன எழுதுவதுன்னு தெரியல..

    வான்ஸ்.. நன்றி.. ம்ம்.. அன்னைக்கு எழுதற மூட் அவ்வளவா இல்லா.. அதான்..

    அதீசு.. திரும்பி வந்ததுக்கு நன்றி.. நிறையச் சொல்லியிருக்கேன்னு நீங்களும் நானும் தான் சொல்லிக்கணும் :)
    //நாம் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும்... நம் வெளிப்பாடுகள் பெண்ணின் வெளிப்பாடுகளாகவேதான் இருக்கும்.... அது இயற்கை.... //
    அப்புடின்றீங்க? ஒரு வகையில் பாத்தா சரி தான், ஆனா பொதுவான விஷயங்களுக்கு இது எப்படின்னு தெரியல.. ம்ம்..

    ReplyDelete
  6. முன்பு //எட்டிப் பாத்துட்டு ஓடிப் போனவங்க..//ள்ள நானும் அடக்கம். ;))
    அங்கங்க வாசிச்சால் என் முறை வரும் போது குழம்பிப் போயிருவன். நான் சொல்ல நினைக்கிறதைத் தான் நான் சொல்லுறனா.. இல்லாட்டால் வேற இடுகைகளை வாசிச்ச பாதிப்பா என்று எனக்கே விளங்காது எண்டு நினைச்சு தலைப்பைக் கண்டதும் ஒழிச்சு ஓடீட்டன். ;))

    //அநேக நேரங்களில் "நான் பெண்" என்ற உணர்வுடன் எழுதுவதில்லையே?// நாங்க மட்டும் நினைச்சுட்டா எழுதுறோம். ;)

    ஒத்தகருத்து.

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)