26 March 2010

ரண்டக்க ரண்டக்க..

டர்ரூன் டண்டக்க டர்ரூன் டண்டக்க..
டர்ரூன் டர்ரூன்..

”ச்ச.. யாரது காலங்காத்தால.. இப்படி சத்தம் போட்டுகிட்டு.. ”  கண் கசக்கியபடியே கதவைத் திறந்தார் எல்போர்ட்.. 

ஆஆஆஆஆ... இதாரு... இந்தக் கோலத்துல.. அருவா மீச.. கொடுவாப் பார்வ.. ஒரு கையில கத்தி.. மறு கையில எலுமிச்சம்பழம்..

”எலேய் யாருல அது??.. யாரது இங்க எல்லு போட்டு???...”

“ஹேய்.. ஹூ ஆர் யூ?”

“என்னல பீட்டருடற? எனக்குப் புரியாதுன்னு நெனச்சியா???”

“ஆல்ரைட்... யார் நீங்க? இதென்ன வேஷம்?”

“என்னது?? வேஷமா? ரெண்டு வருஷம் ஊருக்கு வராமயிருந்துட்டா.. பழசெல்லாம் மறந்துருமா??”

தூக்கக்கலக்கத்தில் சிறியதொரு கொசுசர்த்திச் சுருளை கொளுத்திப்பார்க்கிறார் எல்போர்ட்..

ட்ரூன்.. ட்ரூன்.. டண்டண்டன் ட்ரூன்...
ட்ரூன்.. ட்ரூன்.. டண்டண்டன் ட்ரூன்...

அட.. இவரு நம்ம....

“என்னல யோசிக்கற? எனக்குப் படைக்க நேரமில்லயாமா உனக்கு??”

அப்படியே உள்ளே ஓடிப்போய் கதவைச் சாத்தி தாழ்ப்போட்டு எஸ் ஆக  நினைக்கிறார் எல்போர்ட்.. கை கால் எதுவும் நகர மறுக்க...

“தெரியும்ல.. ஒம் மனசுல என்ன நெனப்பு ஓடுதுன்னு தெரியும்ல.. “

“அது வந்து.. ஹி ஹி”

“இந்தயிளிப்பு எல்லா எங்கிட்ட செல்லுபடியாகாதுல.. விட மாட்டோம்ல”

“சரி.. ஒரு நிமிஷம் இருங்க.. போய் லேப்டாப் எடுத்துட்டு வர்றேன்”

ஓடிப் போய் ஆன் செய்து எடுத்து வருகிறார்..

“வேகமாப்பண்ணுல.. எனக்குப் பசிக்குதுல்ல”

“நானென்ன பண்ணட்டுஞ் சாமி? அது கொஞ்சம் மெதுவாத் தான் வேல பண்ணும்..”

ப்ளாகில் நுழைந்து, கிடுகிடுவென கண்ணில் பட்ட பத்து பின்னூட்டங்களைப் பொறுக்கியெடுத்து.. அப்படியே காலில் விழுகிறார்..

“கும்படறங்க சாமீயோவ்.. ஏஞ்சாமீ.. உங்களப் போயி மறப்பனா? கொற பொறுக்கோனும்.. இந்தாங்க.. ஏத்துக்கோங்க..”

“இதென்னல இத்துனூண்டு கண்ணுல காமிக்கற? பத்தாதுல.. பத்தாது..”

“சரி.. இந்த ப்ளாக்ல இருக்கற எல்லாத்தையுமே எடுத்துக்கோங்க..”

ஒரே வழிப்பில் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கிறார் குலச்சாமி..

“பத்தல... பத்தல...”

”எதக் கொடுத்தாலும் அடங்க மாட்டீங்க போலயிருக்கே.. இந்தாங்க.. நான் போட்ட எல்லாப் பின்னூட்டங்களையும் எடுத்துக்கோங்க..”

இரு கைகளாலும் அப்படியே வாரியெடுத்துக் கொள்கிறார்..

“இது.. இது.. இந்தப் பயம் இருக்கட்டும்.. ஏதோ கா வயிறு நெறஞ்சிருக்கு..”

“இதுக்கு மேல கொடுக்கறதுக்கு ஒன்னும் இல்லீங்க..”

“பொழச்சுப்போ.. ஏதோ.. போனாப் போவுதுன்னு இத்தோட விட்டுட்டுப் போறன்.. அடுத்த வருஷம்.. நெனப்பு வச்சிக்கோ.. இப்போப் படச்சத விட ரெண்டு மடங்கு அதிகமாயிருக்கனும்.. என்ன? வெளங்குதா?”

”ஹிஹி.. எழுதறவங்கள நெறய எழுதச் சொன்னீங்கன்னா, எனக்கும் நெறய பின்னூட்டம் போட வசதியாயிருக்கும்..”

“எலேய்.. யாருலே அது வெட்டியா உக்காந்து இத இன்னம் படிச்சிட்டு இருக்கறது?  எல்லாருமு அவங்கவங்க ப்ளாக்குக்கு ஓடிப் போயி வெரசா எழுத ஆரம்பிங்கலேய்........ ”

ட்ரூன்.. ட்ரூன்.. டன் டன் டன் ட்ரூன்...
ட்ரூன்.. ட்ரூன்.. டன் டன் டன் ட்ரூன்...

13 comments:

  1. நாங்க எந்த சாமிக்கும் பயப்பட மாட்டோம்லே...

    யாருக்கிட்ட?

    ReplyDelete
  2. அப்பா..சாமீ..கொலசாமீ...பின்னூட்டக் கொல சாமீ...ஈ..ஈ!! ஒங்க பான வயுத்துல காவயுத்துக்குத்தேன் இந்த எல்போர்டு படையல் போட்டிருக்குதா?

    எப்புடியோ...எங்களுக்கெல்லாம் இருட்டுக்கட அல்வா குடுத்திருச்சுங்கோ..ஓ..ஓ!!

    எல்ஸ்..இன்னாதிது? ம்யூசிக் அல்லாம் போட்டு எங்கள இங்கன வரவைச்சு இப்பூடி அல்வா குடுத்தா...செல்லாது,செல்லாது..செல்லவே செல்லாது!!

    அந்த ஆட்டோவ கெளப்புங்க படீஸ்,பூங்கதிர் தேசத்துக்குப் போயி நம்மளும் கதவத் தட்டுவம் கர்ர்ர்...ர்ர்..ர்ர்!

    ReplyDelete
  3. மூஞ்சி கழுவாம கதவை திறந்தா இப்டிதான் பயப்படனும்.

    ReplyDelete
  4. படா படா எஸ்கேப்பு

    ReplyDelete
  5. சந்து என்னை இப்படிச் சிரிக்க வைத்திட்டீங்களே..... நன்கு சாப்பிட்டதெல்லாம் செமிக்கும் அளவு சிரிச்சேன்... இருப்பிலும் ”குலசாமி அண்ணே” யை(பயத்தில மரியாதை வந்திட்டுது எனக்கு அவர் மேல) இப்படி கத்தி, தேசிக்காயோடு கற்பனை பண்ணிட்டீங்களே...நான் நினைச்சேன் அவர் ஆடம்பரக் காரில பெரிய ஹொட் லஞ் பொக்‌ஷோட வருவாரென.... இருப்பினும் கலக்கிட்டீங்க..

    ReplyDelete
  6. என்னது பயப்படலியா? இருங்க உங்க வீட்டுக்கே அனுப்பி வைக்கறேன் :) நன்றி முகிலன்..

    //அப்பா..சாமீ..கொலசாமீ...பின்னூட்டக் கொல சாமீ...ஈ..ஈ!! ஒங்க பான வயுத்துல காவயுத்துக்குத்தேன் இந்த எல்போர்டு படையல் போட்டிருக்குதா?// :))

    சிரிக்க வைக்கறீங்க ஜீனோ.. இருட்டுக்கட அல்வா நல்லாயிருக்கும்ன்னு சொல்லுவாங்க.. ருசிச்சு சாப்பிடுங்க :)

    ரெண்டு சோப்புக்கட்டி அனுப்பிவிடுங்க ஜெய்லானி.. புண்ணியமாப் போவும்..

    எஸ்கேப்புன்னு யாரு யாரச் சொல்றாங்க பாருங்க சாமீ.. நமக்கு இந்த ஐடியாவக் கொடுத்ததே இவங்க தான்.. :))

    அதீஸ்.. நல்ல வேளை.. தின்ன சோறெல்லாம் வாந்தியெடுக்கற மாதிரி சிரிக்கல :)) எங்க ஊர் ல காவல் தெய்வம் இப்படி இருக்கிற மாதிரி தான் நினைவு, அதான்.. எங்களயெல்லாம் எம்புட்டு சிரிக்க வச்சிருப்பீங்க.. அந்த நன்றிக்கடன் தான்.. :))

    ReplyDelete
  7. ஆஹா...சூப்பரான நழுவல் சந்தனா!! :) :) :)

    ReplyDelete
  8. நல்லவேலை, எங்க வீட்டுப் பக்கமெல்லாம் அனுப்பிவைக்காம, நீங்களே அவருக்குத் தேவையானதக் கொடுத்துட்டீங்க. வந்திருந்தா பயந்துருப்போம்.

    ReplyDelete
  9. ஆத்தா இன்னிக்கு நெம்ப சிரிச்சுட்டேன் ... :))))))
    டாங்ஸ்...

    //டர்ரூன் டண்டக்க டர்ரூன் டண்டக்க..
    டர்ரூன் டர்ரூன்.. //

    இது மறக்க இன்னும் ரொம்ப நாளு ஆகும் தாயி...

    :)

    ReplyDelete
  10. :)) நன்றி மஹி.. ஹி ஹி..

    ஹூசைனம்மா.. இல்ல.. முழுசா நிறையலையாம்.. உங்க வீட்டு பின்னூட்டத்தையெல்லாம் ஒரு பையில போட்டு வச்சிடுங்க.. சத்தம் போடாம வந்து எடுத்துட்டுப் போயிடுவாரு..

    நன்றி வசந்த்.. :)) என்னால கூட அடுத்தவங்கள சிரிக்க வைக்க முடியுன்றது நெம்ப பெருமையா இருக்கு :))

    ReplyDelete
  11. எனக்கு எல்போர்ட் தான் சந்தனா என்று இவ்வளவு நாள் தெரியாமல் போனது. இனிமேல் அவசியம் இங்கு ஒரு விசிட். ம். நல்லா இருகு உங்க எழுத்து உரையாடல்.நைஸ்

    ReplyDelete
  12. பிக்கப்பு...........
    டிராப்பு.........
    எஸ்கேப்பு........

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)