09 May 2010

இது யாருக்கும் போட்டியல்ல :)))

இதை நிலவெனச் சொன்னால் யாரும் நம்ப மாட்டினம்.. ஓக்கை.. ஓக்கை.. இவர் ஆதவர்.. செட்டாகிக் கொண்டிருக்கிறார் மேற்கு வானில்... இது கலிஃபோர்னியா மாநிலத்தில் ஒரு கடற்கரையில் எடுக்கப்பட்டது...


அப்பாலிக்கா இந்தாண்ட கெழக்குப் பக்கம் திரும்பினா.. அட.. நம்ம நிலவார்...


உண்மையில் இந்தப் புகைப்படம் படத்தில் தெரியும் இந்த ஹோட்டலை படமெடுப்பதற்காக எடுக்கப்பட்டது.. ஒரு நிமிஷம் நில்லுங்கோள் எல்லோரும்,  ஒரு படமெடுத்துட்டு வாறனென்று நான் பாட்டுக்கு கத்திக் கொண்டேயிருக்க, யாரும் கண்டுகொள்ளாமல் முன்னே நடக்க ஆரம்பித்துவிட்டனர்.. (எத்தனை படங்களுக்குத் தான் அவர்களால் நிற்க முடியும்??)... அவர்கள் பின்னாடி ஓடியபடியே எடுத்ததால், கொஞ்சம் ஆடிப் போய் வந்திருக்கிறது.. வருத்தந்தான்.. இல்லையென்றால், நல்லதொரு போட்டியாக வந்திருக்கும் :)))))))))) (ஆருக்கென்றெல்லாம் ஆரும் கேட்கப்படாது)

பின், அதே இடத்தில் இன்னும் ஒரு பகுதிக்குச் சென்றார்கள்.. பின்னே நானும்..

அங்கும், அந்தக் காட்சியில் கண்ட நீரையும், கரைக்கப்பால் ஒளிரும் மின்னொளியையும் படம் பிடிக்கவே இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது.. இதில் எல்லாவற்றுக்கும் மேலே தெரிவது நிலவென்று தான் நினைக்கிறேன்.. :))இம்முறை அதிகம் ஆடாமல் வந்துவிட்டது...

17 comments:

  1. //இது யாருக்கும் போட்டியல்ல :))) //


    நா நம்பிட்டேஏஏஏஏஏஏஏன். ஆமா....இது போட்டி வாரமா ? ஆனா படங்கள் அழகா வந்திருக்கு. அப்புறம் என்னா இன்னும் எல் போர்ட்.

    ReplyDelete
  2. அழகாக இருக்கிறது எல்லாப் படங்களும்.
    எனக்கு ஊர் நினைவு வந்தாச்சு சந்தனா. அங்க இருக்கேக்க போயா அண்டைக்கு இராச் சாப்பாட்டுக்குப் பிறகு கிளம்பி ஒரு வோக் போனால் (இது பி.மு - பிரச்சினைகளுக்கு முன்) கடலுக்குள்ள கீழ சந்திரனும் நட்சத்திரங்களும் கட்டிடங்களில தெரியிற விளக்குகளும் இப்பிடித்தான் கலங்கலாத் தெரியும். வடிவா இருக்கும்.

    ReplyDelete
  3. சந்து.. சூப்பராக வந்திருக்கு, இது எத்தனைமணிக்கு எடுத்தீங்கள்? இப்போ பின் நிலவுகாலமெல்லோ? அதுதான் என்னால் எடுக்க முடியேல்லை.

    இப்போ இங்கு இருட்டாக 10 மணிக்கு மேலாகுது, ஒருநாள் என் கணவரையும் படுக்க விடாமல் கமெராவோடு எட்டி எட்டிப் பார்த்தபடி 12 வரை இருந்தேன்(சாமத்தில் தனியே வெளியே போகப்பயமெல்லோ:)) நிலவு வரவில்லை, பின்னர்தான் காலையில் கண்டதும் ரோட்டில் எடுத்தேன்.

    ReplyDelete
  4. நல்லாருக்கு படம்.. எடுத்தேன் எடுத்தேன்னு சொல்றீங்களே எங்கருந்து “எடு”த்தீங்க? :)))))

    ReplyDelete
  5. சந்தனா,
    //நல்லதொரு போட்டியாக வந்திருக்கும் :)))))))))) (ஆருக்கென்றெல்லாம் ஆரும் கேட்கப்படாது)//
    ம்ம்... சொல்லாமலே விளங்குது.

    // இதில் எல்லாவற்றுக்கும் மேலே தெரிவது நிலவென்று தான் நினைக்கிறேன்.. :)) //
    அது நிலவே தான்.

    ReplyDelete
  6. நன்றி மஹி.. ஏற்கனவே நீங்க பார்த்தது தான்..

    ReplyDelete
  7. இமா.. நன்றி.. உங்க கிட்ட பேசிட்டு பின்ன அதிரா கிட்டயும் பேசிட்டு, ரொம்பவே ஆசையாயிருந்தது.. அதான் போட்டுட்டேன்..

    ஊர் பற்றிய தகவலுக்கு நன்றி இமா.. உங்களோடதெல்லாம் ரொம்ப அழகான ஊர்னு கேள்விப்பட்டிருக்கேன் இமா.. எங்க ஆசிரியரொருவர் கான்ஃபரன்ஸ்க்காக அங்க போகப் போறார் ஜூலையில் (கொழும்பு).. நான் இடம் மாறுவதால் என்னால் போக முடியாமல் போய்விட்டது.. ம்ம்.. ஒரு நா எட்டிப் பார்க்கனும்..

    நீங்க இதுக்கு முன்னாடி பதிவுல கேட்டிருந்தீங்கன்னு நினைக்கறேன்.. அப்போ நேரமில்லாததால் பதில் போடாம போயிட்டேன்.. நான் ”அவரி”ல்லை இமா :))

    ReplyDelete
  8. நன்றி அதீஸ்.. இது சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் எடுக்கப்பட்டது.. முதலிரெண்டு படங்களும், ஒரே இடத்தில் இருந்தபடியே, முன்னும் பின்னுமென, அதே மாலை நேரத்தில் எடுக்கப்பட்டது.. கடேசிப் படம், கொஞ்சம் இரவானதும் எடுக்கப்பட்டது.. காமெராவில் இந்திய நேரம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் சரியாகச் சொல்ல முடியவில்லை..

    அப்போ விடியற்காலையில் எடுத்துப் பாருங்கோ.. உங்களோட வீட்டில் மாடி உண்டோ??

    ReplyDelete
  9. உங்களிடமிருந்து தான்.. ஹிஹி.. நன்றி ”முகிலன்”...

    ReplyDelete
  10. நன்றி வானதி.. நானும் கீழே ஏதும் கம்பமிருக்கிறதா எண்டு பார்த்துப் பார்த்து உறுதி செய்து கொண்டேன்.. மேலும், முன்பெடுத்த படத்திலும் முழு நிலவே இருப்பதால் இதில் தெரிவதும் நிலவு தான் என்று நினைத்தேன்..

    ReplyDelete
  11. நன்றி ஜெய்லானி.. எல்லோரும் நன்றாக ஊக்கமளிக்கறீங்கள்.. ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது.. நீங்க இமாக்கு சொன்ன டிப்ஸ் எல்லாம் நானும் படித்தேன்.. அடுத்த முறை சரியாக முயற்சித்துப் பார்க்கிறேன்..

    ReplyDelete
  12. தலைப்பே சேதி சொல்லுது!!

    //athira on May 9, 2010 3:23 AM
    பின்னர்தான் காலையில் கண்டதும் ரோட்டில் எடுத்தேன்.//

    காலையில நிலாவா? அப்போ காலையிலதான் நீங்க டின்னர் சாப்பிடுவியளா?? நல்ல ஊர்!!

    //எங்கருந்து “எடு”த்தீங்க?
    நன்றி ”முகிலன்”...//

    ஐ.. கவித.. கவித..

    ReplyDelete
  13. நான் அப்பாலிக வந்து பாக்கிறேன்ப
    சங்கத்தில மீட்டிங்கு இருக்கு;

    சும்மா சொல்லகூடதுப
    மெய்யாலுமே நல்ல இருக்கிது.
    சோக்கா படம்பிடிச்சு போட்டுருக்கேங்கள்.

    ReplyDelete
  14. உங்ககிட்ட ஒரு கமேரவோமன்
    ஒளிந்து இருக்கிறார்..

    "நான் பாட்டுக்கு கத்திக் கொண்டேயிருக்க, யாரும் கண்டுகொள்ளாமல் முன்னே நடக்க ஆரம்பித்துவிட்டனர்.. "
    பின்ன அவங்களை படம் எடுக்க சொன்னால் நீங்கள் வேற படம் எடுத்தால் அவங்களக்கு சினம் வரும் தானே...சரி விடுங்கோ என்னை ஒரு போட்டோ பிடிச்சு போடுங்க.

    நீங்கள் பாஸ் ஆகிவிடீர்கள்.
    அதனால் ல் போர்டு வேண்டாம்..(என்கிட்டே குடுங்கோ)அப்போவது உங்களை போல எழுத முயற்சிக்கிறேன்.

    நன்றி
    வாழ்க வளமுடன்
    வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
    காம்ப்ளான் சூர்யா

    ReplyDelete
  15. என்னதிது ஒரே "போட்டா" போட்டியா இருக்கு... நல்ல படங்கள் சந்தனா

    ReplyDelete
  16. படங்கள் ரொம்ப அழகா இருக்கு

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)