30 April 2011

விரலாலாகாத்தனம்..



எங்க தலைவர் (மேனேஜர் மாதிரி), துணைத் தலைவர் ரெண்டு பேருமே ஐரோப்பாவுல ஒரே நாட்டுல இருந்து இங்க இடம் பெயர்ந்தவங்க. ரெண்டு பேரு பேசுறதும் ஒரே மொழி தான்.. யாருக்கும் ஒன்னும் புரியாது.. :) தலைவர் தான் துறை மேலாளர்.. இவரு அநேக நேரம் வேலை செய்வது மெயின் அலுவலகத்துல..

இதுல இருந்து இருபது நிமிஷத்திய நடை தூரத்துல, இதே நிர்வாகத்துக்கு உட்பட்டு, இன்னொரு குட்டி அலுவலகம் இருக்கு.. அங்க, எங்க துறைல, இந்தத் துணைத் தலைவர் தான் கிட்டத்தட்ட மேலாளர் மாதிரி (ஏன்னா எங்க துறைல யிருந்து அங்க இருக்கிறதே அவர் ஒருத்தர் தான் :)) ) .. அவரோட வேலையில நெறய நேரம் அங்கன தான் கழியும்.. அப்பப்போ இங்கயும் வருவார்..

அந்தக் குட்டி அலுவலகத்துல எங்களுக்கும் வாரம் ஒரு நாள் வேலை செய்யணும்.. எனக்கு அங்க லொங்கு லொங்குன்னு இருவது நிமிஷம் நடந்து போய் வர்றது கூட  பெரிய பிரச்சனையா தோனல..  அங்க இருக்கற சுண்டெலி தான் பெரிய தொல்ல.. மெயின் அலுவலகத்துல இருக்கற சுண்டெலில பொத்தான்கள் அதிகமா இருக்கும்.. வேலைக்கான கணினிப் பக்கங்கள்ல முன்னே பின்னே போறதுக்கு கீ போர்டுக்கு அடிக்கடி கைய மாத்தத் தேவையில்ல.. அதே மாதிரி இன்னொரு பொத்தான அமுக்கி, வேகமாகவும் மெதுவாகவும் ஸ்க்ரோலிங் வேகத்த மாத்திக்கலாம்.. அந்த குட்டி அலுவலகத்துச் சுண்டேலில இப்படியான பொத்தான்கள் இல்ல. எனக்கு ஸ்க்ரோல் பண்ணிப் பண்ணி விரலெல்லாம் ஒரே வலியாயிடும்.. இந்தச் சுண்டெலிய தூக்கிப் போட்டுட்டு பெரிய அலுவலகத்துல இருக்கற மாதிரி வாங்கிக்கலாம்ன்னு துணைத் தலைவர் கிட்ட பரிந்துரை சொன்னன்.. ஒருக்கா சொல்லி ஒன்னும் மாறல... ரெண்டாவது வாட்டி இன்னொருத்தர்கிட்ட (இந்த ஆசிரியர் இந்தியர்) புலம்பினதுல, இவர் கிட்ட சொல்றத விட தலைவர் கிட்ட சொன்னீன்னா ஒரே நாளுல வேலையாயிடும்ன்னு சொன்னார்.. அவர் பேச்ச நம்பி, தலைவருக்கு உருக்கமா ஒரு ஈ மெயில தட்டுனேன்.. அதைய ஒரு காப்பியா துணைத் தலைவருக்கும் அனுப்பிவிட்டேன்..

அப்புறம் பாத்தா, அன்னைக்கு மதியம் துணைத் தலைவர் வந்து கன்னாபின்னான்னு கத்துறார்.. "என்ன நீயி, வேலைக்கு வந்து கொஞ்ச நாள் கூட ஆகல, அதுக்குள்ள எல்லாத்தையும் மாத்தனும்ன்னு நினைக்கறே.." எனக்கு ஒன்னும் புரியல.. நான் அப்படி என்ன தப்பு செஞ்சேன்? மாத்திப் பாக்கலாம் ன்னு விண்ணப்பம் போட்டது தப்பா? இவர்கிட்ட முதல்லயே  சொல்லியிருக்கேன், இவருக்கும் ஒரு காப்பி மெயில அனுப்பிவிட்டிருக்கேன்.. பிறகென்ன? "அப்படியெல்லாம் மாத்த முடியாது, நாங்க இங்க ரொம்ப நாளா இருக்கோம், எங்க விருப்பப்படி தான் எல்லாமும் இருக்கணும்.. நீ ஒரு நாள் தான் வர்ற, சுண்டெலிய உனக்கேத்த மாதிரி மாத்திட்டா அப்புறம் மத்த நாளெல்லாம் நாங்க என்ன பண்ணுறது? வேகமா ஸ்க்ரோல் பண்ணிட்டே போனா பாதியிதப்  பாக்காம மிஸ் பண்ணிடுவோம்.." இப்படி அவர் பேசிக்கிட்டே போக, நான் சொன்னேன், "மெயின் அலுவலகத்துல இருக்கற மாதிரி தான் வாங்கலாம்ன்னு சொன்னேன்.. நீங்க இப்ப ஸ்க்ரோல் பண்ற மாதிரி மெதுவாவும் பண்ணிக்கலாம், நான் சொல்ற மாதிரி வேகமாவும் பண்ணிக்கலாம்.. மிச்ச பொத்தான்களும் இதுல இருக்கற மாதிரியே உபயோகிக்க முடியும்.. எனக்கு கீ போர்டுக்கும் சுண்டெலிக்கும் மாத்தி மாத்தி கையை நகர்த்தரதுல சலுப்பாயிருக்கு.."

ஆனாலும் அவர் மனசு ஆறல.. "அதெல்லாம் முடியாது, நீ வேணும்னா உனக்குன்னு தனியா ஒன்னு வாங்கிவந்து வேலை பண்ணிக்கோ..", அப்படின்னு சத்தம் போட்டாரு.. எனக்கு கடியா இருந்தது, என்ன இப்படிச் சொல்றாரேன்னு.. "அப்படியெல்லாம் நீங்க சொல்லக் கூடாது. நான் ஒன்னும் பெருசா கேட்கல.. ஆப்டர் ஆல் ஒரு சுண்டெலி.. அதுவும் என் விரல் ரொம்ப வலிக்கரதால தான் கேக்கறேன்.. இதக் கூட செஞ்சுதர முடியாதா? என்னைய வாங்கிட்டு வரச் சொல்லுறீங்க? மெயின் அலுவலகத்துல என்னடான்னா, தலைவர் மானிட்டரை எல்லாம் தனக்குப் பிடிச்ச மாதிரி மாத்திட்டு இருக்கார்.. அதையெல்லாம் மாத்தித் தர்ற ஆளுங்க கிட்ட கேட்டா இதையும் தந்துட்டுப் போறாங்க?.."

எனக்கு ஐடியா கொடுத்தவரும் (இந்தியர்) அந்த நேரத்துல அங்கிட்டு தான் இருந்தார்.. இப்படியே காரசாரமா போன பேச்சு, கடைசியா எங்க வந்து நின்னதுன்னா, "என்ன இருந்தாலும் நீ தலைவர இதுல ஈடுபடுத்தியிருக்கக் கூடாது.. அவருக்கு இங்க எந்த அதிகாரமும் இல்ல.. எதுன்னாலும் என்கிட்டக் கேளு, நான் இங்கத்த ஆளுங்க கிட்ட பேசிப் பாக்கறேன்.." இதைச் சொல்லிட்டு துணைத் தலைவர் கிளம்பிப் போயிட்டார்.. எனக்கு மூஞ்சி உர்ருன்னு கெடந்தது.. ஆனா இந்த இந்திய ஆசிரியருக்கு பிரச்சனை என்னன்னு புரிஞ்சிட்டது.. "நீ கேட்டதுல எந்தப் பிரச்சனையும் இல்ல.. ஆனா இவர விட்டுட்டு நீ தலைவர் கிட்ட மனுப் போட்டதால தான் இத்தன கடுப்பும்.. அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனைன்னு  நினைக்கறேன். ரெண்டு பேரும் முன்ன மாதிரி பேசிக்கறதில்ல.. "

எனக்கு ஏதோ வெளங்குனாப்ல இருந்தது.. அந்த இந்திய ஆசிரியர் மேற்கொண்டு எங்கிட்ட சாரி சொன்னாரு.. "என்னால தான உனக்கு இம்புட்டுத் தொந்தரவும்.. நீ கேட்டதுல எந்தத் தப்பும் இல்லன்னு தான் நான் நினைக்கறேன்.. அவரும் இப்படிப் பேசுறவர் இல்ல.. தலைவர் பேரு உள்ள வந்ததால கடுப்பாயிட்டாரு போல.. "

அப்புறம் சாப்பிடப் போயிட்டேன்.. என்னமோ மனசே சரியில்லாத மாதிரி இருந்தது.. சாப்பிட்டு முடிச்சிட்டு, மதிய வகுப்புக்காக, இந்திய ஆசிரியரோட, மெயின் அலுவலகத்துக்கு கிளம்பினேன்.. துணைத் தலைவரோட அறையைக் கடந்து தான் போவோணும்.. நம்ம இந்திய ஆசிரியர், அவர் கிட்ட, போயிட்டு ஒரு மணி நேரத்துல திரும்பிடுவோம்ன்னு சொன்னார்.. நான் டக்குன்னு உள்ள நுழைஞ்சு, "என்னை மன்னிச்சிடுங்க.. இந்த ரெண்டு அலுவலகத்துக்கு இடையிலே அதிகாரப் பகிர்வு எப்படி நடக்குதுன்னு புதுசா வந்த எனக்குத் தெரியாது.. அதான் குழப்பிட்டேன்.." ன்னு சொன்னேன்.. அவரும் ஆறி இருந்தாரு.. "பரவால்ல, ஏற்கனவே இந்தக் குட்டி அலுவலகத்து அதிகாரத்துல கொஞ்சம் குழப்படிகள் இருக்கு.. இதுல நம்ம தலைவரையும் இழுத்து விட்டோம்ன்னா ரொம்பக் கஷ்டமாயிடும்.. அதான்.." நானும் புன்னகைச்சுட்டே வந்துட்டேன்.. ஆறுதலா இருந்தது.. அதுக்கப்புறம் அதைய மறந்து போயிட்டேன்..

அடுத்த வாரம், அதுக்கடுத்த வாரம்ன்னு ரெண்டு மூணு தடவ சம்பவத்துக்கப்புறம் அங்க வேலைக்குப் போயிருந்தேன்.. துணைத் தலைவரும் வழக்கம் போல பேச ஆரம்பிச்சுட்டாரு.. மூணாவது வாரம், மதிய வகுப்புக்காக மெயின் அலுவலகம் போயிட்டுத் திரும்பறேன், வந்து பாத்தா என் டேபிள் மேல புது சுண்டெலிப் பொட்டி!!! அவ்வ்வ்வவ்வ்வ்வ்.... இந்தப்பக்கம் திரும்பிப் பாத்தா, பக்கத்து டேபிள்லயும் (நாங்க இருக்கற நேரத்துல அவர் அதுல வேலை செய்வார்) ஒரு புது சுண்டெலிப் பொட்டி.. (நெல்லுக்குப் பாயற தண்ணி அப்புடியே புல்லுக்கும் பாயுமாமே? :)) )அதைய பிரிக்காம கூட எடுத்துகிட்டு அவரோட அறைக்கு ஓடிப் போயி நன்றி சொன்னேன்..  அவர் புன்னகைச்சார்..


அப்பாகிட்ட சண்ட போட்டு பொம்ம ஒன்னு வாங்கிட்ட கணக்கா சந்தோஷமா இருந்தது :)


பிகு: மொதல்ல இதுக்கு MOUSE vs mouse அப்படின்னு தலைப்பு வச்சிருந்தேன்.. யாரையாவது வம்புக்கு இழுக்கலைன்னா நமக்குத் தான் தூக்கம் வராதே.. அதுக்குத் தான் இந்தத் தலைப்பு.. என்ன பண்றது, விரல்ல வலின்னு சொல்றதுக்கும் விரலால தான் டைப்பு பண்ண வேண்டியிருக்கு.. :)))) )

9 comments:

  1. நான் கூட இதைப் படிச்சு போட்டு எங்கே நீங்களும் ஓய்வெடுக்கப் போறீங்களாக்கும்ன்னு நினைச்சேன். இது எலியால் வந்த வலியா??? எப்படியோ புதுசா எலி வாங்கி குடுத்துட்டாங்க. இனிமே வலி போயிடும்.

    ReplyDelete
  2. பறவாயில்லை சந்து... உலகத்தில மக்கள்ஸ்ஸ்ஸ் என்னென்னவெல்லாமோ கேட்டுச் சண்டைப் பிடிக்கிறாங்க... நீங்க ஒரு சுண்டெலிக்காக சண்டைப் பிடிச்சிருக்கிறீங்க... எனக்கும் ஒன்று அனுப்பிவிட மாட்டீங்களோ?:)))).

    ஊசிக்குறிப்பு:
    என்ன கொஃபியா?... நான் தலைப்புக்குச் சொன்னேன் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).

    ReplyDelete
  3. ஒரு சுண்டைக்காய் சுண்டெலிக்காகவா இவ்ளவும்? உயரதிகாரிகளின் ஈகோ... ஏன்ப்பா, நீங்க போகும்போது உங்க மெயின் ஆஃபிஸ்ல உள்ள உங்க சிஸ்டத்துல உள்ள மௌஸக் கழட்டிக் கொண்டுபோய் பயன்படுத்திட்டு, திரும்பி வரும்போது கொண்டுவந்துருக்கலாமே? (நான்னா அப்படித்தான் செஞ்சிருப்பேன். அதான் சொன்னேன். தப்பா எடுத்த்க்காதீங்க)

    தலைப்பைப் பாத்து, எதிர்ப்பதிவோன்னு ‘ஆசையா’ ஓடி வந்தேன்!! ;-))))))))))))

    ReplyDelete
  4. வான்ஸ்.. இல்ல.. வலி இன்னும் இருக்கு... ஆனா முன்னைக்குப் பரவாயில்ல.. இது முன்ன எழுதினது, இப்போ போடத் தோனுச்சு :))

    ReplyDelete
  5. அதீஸ்.. இதுக்கெல்லாம் சண்டை பிடிக்க வேண்டியதாயிருக்கே ன்னு எனக்கும் கடியாகத் தான் இருந்தது.. சின்ன விஷயம்..

    அனுப்பிட்டேன்.. உங்க வீட்டுக் கதவுல ஒரு குட்டி ஓட்டை போட்டு வையுங்கோ.. தன்னால வந்துடும் :))

    ReplyDelete
  6. ஹூசைனம்மா.. அதே கடி தான் எனக்கும்.. அவங்களுக்குள்ள பிரச்சனை, நான் தெரியாத்தனமா தலைய விட்டுட்டேன்.. அதுவுமில்லாம, சில சின்ன மாற்றங்களைக் கூட ஏத்துக்க முடியல அவரால.. ஆனா பேசியதை மனசுல வச்சுக்காம வாங்கித் தந்ததால உயர்ந்துட்டார்..

    நீங்க சொல்ற மாதிரி செய்திருக்கலாம்.. தற்காலிகத் தீர்வாக இருக்கும்..

    ஆனா இது சின்னப் பிரச்சனையாகத் தோன்றினாலும், இது வேலையால வந்த பிரச்சனை.. இதை இப்படியே விட்டா கடுமையாக விரல் மூட்டு பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கு.. இதைக் குறைக்க வேண்டியது அவங்க கடமை.. இங்க பணியாளர் நலன்ல கொஞ்சம் அக்கறை காட்டுவாங்க.. அதான் சொல்லிட்டேன்.. எங்கள்ல இருந்து தினமும் ஒருத்தர் அங்க போய் வேலை செய்யனும்.. இப்போ எல்லாருக்கும் பயன்..

    இதை இன்னமும் குறைக்க முடியும்.. ஸ்க்ரோல் செய்யாம ப்ரெஸ் செய்து மவுசை இழுத்தாலே பக்கம் நகர்த்துறா மாதிரி சாப்ட்வேர் இருக்கு.. ஆனா நானா இன்ஸ்டால் செய்ய முடியாது.. தேவைப்பட்டா கேட்டுப் பாக்கலாம்..

    ReplyDelete
  7. ச்சே! ;)) நிம்மதியா ரெஸ்ட் பண்ணவும் விட மாட்டேங்கறாங்கப்பா. ;)))) அடுத்து யாரும் நகத்தாலாகாத்தனம்னு போட்டீங்க... அப்றம் இருக்கு. நெய்ல் கட்டரோட வந்துருவேன். ;)))

    ReplyDelete
  8. //அடுத்து யாரும் நகத்தாலாகாத்தனம்னு போட்டீங்க... அப்றம் இருக்கு. நெய்ல் கட்டரோட வந்துருவேன். ;))) // ஹிஹிஹி!

    சந்தனா,சுண்டெலிப் போரில் வெற்றி எலியைப் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்!:)
    எல்லா இடத்திலும் இந்த பாலிடிக்ஸ் தீராத பிரச்சனைதான் போலிருக்கு.

    ReplyDelete
  9. //அடுத்து யாரும் நகத்தாலாகாத்தனம்னு போட்டீங்க... //

    எப்பவுமே வலது தோள்வலி இருக்குன்னாலும், ரெண்டுவாரமா அதிகமாகிடுச்சு. அதனால, ‘தோளாலாகாத்தனம்’னு ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன். நெயில்கட்டர வச்சு தோளை ஒண்ணும் பண்ணமுடியாதுல்ல சந்தனா? (மிரட்டலைப் பாத்து பயமாருக்கு.. அதான் கேட்டுகிட்டேன்) ;-)))))))

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)