02 May 2010

எங்கு காணினும் பெண் வண்டுகள்...

இன்னும் கொஞ்ச நாள் எட்டிப் பாக்காம விட்டா என்னோட  ப்ளாக்ன்னு ஒன்னு இருக்கறதே மறந்து போயிரும் போல.. (எனக்குத் தான், ஹிஹி.. )

முன்னாடி ஒரு ஹி ஹி கதையில நாதிராவைப் பத்திச் சொல்லியிருந்தேன்.. என் சக பயிற்சியாளர்.. அப்போது கர்ப்பமாக இருந்தார் (இன்னும் இரண்டே நாட்கள் மட்டும் கர்ப்பமாக இருப்பார்.. ஹி ஹி.. ஏன்னா திங்கட்கிழமை ட்யூ டேட் :)) )

அவருக்கு பேபி ஷவர் நடத்துவதென்று முடிவு செய்திருந்தார் ஒருவர்.. (இவருக்கு என்ன பேரு வைக்க? ம்ம்.. அஞ்சலை.. ஓக்கை?) இது நம்மூரு வளைகாப்பு மாதிரி.. எங்க எல்லாருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.. நானும் போயிருந்தேன்.. (வேறெதுக்கு? கொட்டிக்கத் தான்.. ஹி ஹி). நான் இது போன்ற நிகழ்ச்சிக்குப் போவது இதுவே முதல் முறை.. நாதிராவுக்கு என்ன வாங்க வேண்டுமெனத் தெரியாததால், அவர் தன் பெயரைப் பதிவு செய்திருந்த பாப்பாக் கடைக்கு ஒரு ஈ பரிசு அனுப்பி விட்டேன்..

பெண்கள் மட்டுமே என்றிருந்ததால், அன்று அஞ்சலையின் அப்பாவிக் கணவர், அவர்கள் வீட்டு தோட்டத்தில், அவர்களது மற்றும் இன்னும்மொருவரின் என, இரண்டு வால்களை ஒரே நேரத்தில் நேர்ப்படுத்தும் வேலையைச் செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தார்.. நாங்கள் அனைவரும் உள்ளேயிருந்தோம்..

அஞ்சலை இந்த நிகழ்வுக்கெனத் தேர்ந்தெடுத்திருந்த தீம்.. பெண் வண்டு.... சும்மாச் சொல்லக் கூடாது, மிகவும் அருமையாக நிகழ்ச்சிக்கான வேலைகளை செய்திருந்தார்..

அங்கு தான்.. எங்கு காணினும் பெண் வண்டுகளடா.... நீங்களே பாருங்க.. 

இது அலங்காரச் பூச்செடி..



இது அவர் வீட்டுச் சுவற்றில்...


இது வந்தவர்களுக்கான பரிசுப் பையில்...


இது கேக்கில்...


இது குக்கியில்...


இது ஜூஸ் கோப்பையில்...


இது ஒரு கிண்ணத்தில்...



(பெண் வண்டினைக் கண்டவுடன் எனக்கு யார் ஞாபகம் வந்திருக்குமெனச் சரியாக சொல்பவர்களுக்கு ஒரு பெண் வண்டுக் குக்கி பரிசாக வழங்கப்படும்.. :) )

சில விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.. அதுவரைக்கும் எல்லாம் சரியாகத் தான் போய்க்கொண்டிருந்தது.. அதற்கப்புறந்தான்.. ஹி ஹி..

அதில் ஒரு விளையாட்டு - சில கார்ட்டூன்/குழந்தை நட்சத்திரக் கதாப்பாத்திரங்களின் படங்களைக் காட்டி அவர்களது பெயரை எழுத வேண்டும்.. பதறிப் போனேன்.. இந்தப் விஷப் பரீட்சைக்கு நான் வரல்லேஏஏஏஏஏஏ என்று பெருங்குரலெடுத்துக் கதறிப் பார்த்தும்.. ஹூம்...

மொத்தம் இருபது கேள்விகள்.. அதில் எல்ஸின் ஸ்கோர் - மூணு.. ஹி ஹி.. இவ்வளவு மோசமா எந்தப் பரீட்சையையும் எழுதினதில்லை... அந்த மூணு மதிப்பெண்ணும் எப்படிக் கிடைத்ததென்று நீங்களே பாருங்க..

மதிப்பெண் ஒன்றுக்கு காரணமானவர்..

(இவரை மட்டும் அடையாளம் கண்டுபிடிக்காமல் விட்டிருந்தால், நாதிராவின் வயிற்றிலிருந்த குழந்தை கூட என்னைப் பார்த்து நக்கலாகச் சிரித்திருக்கும்.. டக் அவுட் ஆகாமல் என்னைக் காப்பாற்றிய டொனால்ட் டக்கார் வாழ்க.. )

மதிப்பெண் ரெண்டுக்கு காரணமானவர்... அகிலவுலகப் புகழ்ப் பெற்ற நமது அண்ணனின்.. ஹி ஹி.. நீங்களே பாருங்க...


(அண்ணனல்லாது, அண்ணியாருடன் இருக்கும் அந்தப் பையன் யாராயிருக்கும் என்ற கேள்வி மனதுக்குள் தொக்கி நின்ற போதும், அண்ணியாரை எமக்கு அறிமுகப்படுத்தின அண்ணனாருக்கு நன்றிகள் பலப்பல... :) )


மூன்றாவது மதிப்பெண்.. இந்த நிகழ்ச்சியை அவ்வப்போது தொலைக்காட்சியில் கண்டிருந்ததால், தப்பித்தேன்...




அதற்கு மேல், மீதி எல்லாவற்றுக்கும், நீல நிற டினோசர், குட்டி மீன் (நீமோ.. இவர் பெயர் கூட நினைவுக்கு வராமல் சொதப்பி விட்டது..), மொட்டைப் பையன் என்ற ரேஞ்சில் பதில் எழுதி வைத்திருந்தேன்.. என் பேப்பரை நானே தான் திருத்துவேன் என்று அடம் பிடித்து அனுமதி வாங்கிவிட்டேன்... அப்படியிருந்தும், என் பக்கத்தில் இருந்த இன்னொருவர், என் பேப்பரில் எட்டிப் பார்த்து, மற்றவர்களுக்கு என்னுடைய முதல் பதிலை படித்துக் காமித்துவிட்டார்..  எல்லாரும் சிரித்துச் சிரித்து மகிழ்ந்தனர்.. என் மானமோ கப்பலேறிப் போயாச்சு...


இவர் - big bird
நான் எழுதியிருந்த பதில் - சிக்கன் லிட்டில் :)))))))))))

உங்க பொறுமைக்கு நன்றி மக்கள்ஸ்.....

26 comments:

  1. அங்கேயும் நான் எல் போர்ட்.. அப்படின்னு சொல்லிட்டா விட்டு இருப்பாங்க்களே...

    ReplyDelete
  2. ஹி ஹி ஹிஹி...

    யக்கா.. ராச்சஸ்டர் கோவில் அனுபவம் பத்தி எழுதுங்களேன்.... உங்களை மூட் அவுட் செஞ்சது நானாக்கூட இருக்கலாம்..;)))))

    ReplyDelete
  3. ஆமா, இந்த பிளாக் மறந்தேதான் போயிருக்கும் (உங்களுக்கு!!).

    லேடி பக் - இமா அறுசுவையில செஞ்சார் - கர்ரெக்டா?

    ஆனாலும், குடிக்கிற கோப்பை, சாப்பிடற கேக்குன்னு இதப் பாத்தா, குறைவாச் சாப்பிடவைக்கீற டெக்னிக் மாதிரி இருக்கே!!

    ஹி.. ஹி.. அந்த கார்ட்டூன் போட்டியில நானும் ஸேம் பிளட்!!

    ReplyDelete
  4. சந்து, கேள்விகளையும் எழுதி இருக்கலாமே. நான் எவ்வளவு தேறி இருப்பேன் என்று பார்க்கத்தான்.

    //(பெண் வண்டினைக் கண்டவுடன் எனக்கு யார் ஞாபகம் வந்திருக்குமெனச் சரியாக சொல்பவர்களுக்கு ஒரு பெண் வண்டுக் குக்கி பரிசாக வழங்கப்படும்.. :) )//

    அது எங்கட இம்ஸ் தானே.

    ReplyDelete
  5. அய்யோ.. முடியல சந்தூ... பாருங்க இங்க இவருக்கு பரிட்சை வச்சா இப்படித்தான் போல.. அடிப்பாவி சிக்கன் லிட்டில் வேற ஒரு கேரக்டர்மா!!!!
    அப்போ அவங்களுக்கு பேபி கேர்ள்.. இது ஏன் சொல்லறேன்னா.. சிலர் வந்து அப்பாவியா கேள்வி கேட்ட பின்னூட்டத்தில பதில்ன்னு சொல்லலாம்ல....நல்லவேளை டொனால்ட் பாத்து மிக்கி என்று சொல்லாமல் இருந்தீங்களே.....
    நல்ல பதிவு.....

    ReplyDelete
  6. //பெண் வண்டினைக் கண்டவுடன் எனக்கு யார் ஞாபகம் வந்திருக்குமெனச் சரியாக சொல்பவர்களுக்கு ஒரு பெண் வண்டுக் குக்கி பரிசாக வழங்கப்படும்..// ?? !! ;)

    ReplyDelete
  7. அவங்களுக்கு இந்த ப்ளாக், எல்போர்ட் மேட்டரெல்லாம் தெரியாதே ஜெய்லானி.. ம்ம்.. ஐடியாக்கு நன்றி :)

    ReplyDelete
  8. முகிலன், உங்களுக்கு மட்டும் எழுதிப்போடறேன்.. ஓக்கை?

    ReplyDelete
  9. சரியே.. ஹூசைனம்மா.. உங்க வீட்டுச் செடி கொடிப் பக்கம் அப்படியே எட்டிப் பாருங்க.. நான் உங்களுக்கு அனுப்பி வச்ச பெண் வண்டு காத்துகிட்டு இருக்கும் அங்க.. :)

    அதையுஞ் சேர்த்தியே சாப்பிட்டோம்ல.. ஹி ஹி.. நாமெல்லாம் ஆரு?? அதுவும் ஒரு மிட்டாய் தான், அந்த வடிவில் அழகாகச் செய்திருந்தனர்..

    அப்பாடா, எனக்கும் ஒரு துணையிருக்கு :)) ரொம்ப நன்றி..



    ரொம்ப நன்றி..

    ReplyDelete
  10. மத்த காரக்டர்கள் எதுவுமே மனதில் நிற்கவில்லை வானதி.. தெரிஞ்சிருந்தா தானே நிற்பதற்கு.. கண்டிப்பா நீங்க அதிகமாத் தான் வாங்கியிருப்பீங்க..

    அதே அதே.. நம்மட இம்ஸே தான்.. :))) நன்றி வானதி..

    ReplyDelete
  11. தெரியும் இலா.. அந்தப் படம் கொஞ்சம் பாத்திருக்கேன்.. ஆனாலும், ஒரு பறவையப் பார்த்ததும் உடனே எழுதிப்போட்டேன்.. அதே கலர், அதே மூக்கு.. சரியாயிருந்தா ஒரு மார்க் கிடைக்கும்ன்ற நப்பாசை தான்.. ஆனா, அதான் எல்லாரையும் சிரிக்க வச்சிடுச்சு :)

    சரியே இலா... நாதிராவுக்கு பெண் குழந்தை தான் :)))))

    ReplyDelete
  12. இம்ஸ். என்ன ஒன்னும் தெரியாத மாதிரி வந்துட்டு ஓடிப் போயிட்டீங்கள்? நீங்க ஓடி ஒளிஞ்சாலும், விட மாட்டோம்ல??

    உங்கட ஞாபகமும், அதீஸ் பண்ணியிருந்த பாய்-கேர்ள் வண்டூஸ் ஞாபகமும் வந்தது :)))))) அப்படியே பகிடி பண்ணியிருந்த ஹைஷ் ஞாபகமும் :)))))))

    ReplyDelete
  13. //அதையுஞ் சேர்த்தியே சாப்பிட்டோம்ல.. ஹி ஹி.. நாமெல்லாம் ஆரு?? அதுவும் ஒரு மிட்டாய் தான்,// அப்படியா? மிட்டாயா இருந்தாலும் அதைப் பாத்தா ரியல் பூச்சி மாதிரியே இல்ல இருக்கு?;)

    நான் வெஜ் சாப்பிடறவங்களுக்கு ஒண்ணும் பெரிய வித்யாசம் தெரியாதோ? :)

    ReplyDelete
  14. சந்து தலைப்பைப் பார்த்திட்டு, அமெரிக்காவெல்லாம் “பெண் வண்டாக்கும்” ஆட்சிக்கு வந்திருக்கு இந்த ஸ்பிரிங்குக்கு என ஓடிவந்தேன்.

    நன்றாகவே நடந்திருக்கு பேபி ஷவர். கேக் அண்ட் யூஸ் சூப்பர்.

    ///லேடி பக் - இமா அறுசுவையில செஞ்சார் - கர்ரெக்டா?/// நோப்..... இமாவின் வண்டைப்பார்த்து அதிரா ஒரு ஜோடி வண்டு செய்து இமாவுக்கு அனுப்பி... இதுதானே கரெக்ட்டு?

    ReplyDelete
  15. சந்து!!!! ஜீனோ பார்த்தால் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லப்போகிறார் “Diago” விற்கு:).

    ReplyDelete
  16. //அண்ணனல்லாது, அண்ணியாருடன் இருக்கும் அந்தப் பையன் யாராயிருக்கும் என்ற கேள்வி மனதுக்குள் தொக்கி நின்ற போதும்,// diago..diago.diagoகூடோ தெரியாம...கர்ர்..ர்ர்...ர்ர்ர்ர்!

    இன்னாதிது எல்போர்டு? டகால்னு ஜீனோக்கு மரியாதை பலம்மா கீது? ஜீனோக்கு பயம் பயம்மா வருதே..அதிராக்கா,ஹெல்ப் ப்ளீஸ்! ஜீனோ நீட்ஸ் எ ஹெல்பிங் ஹேன்ட் யா!

    /////லேடி பக் - இமா அறுசுவையில செஞ்சார் - கர்ரெக்டா?/// நோப்..... இமாவின் வண்டைப்பார்த்து அதிரா ஒரு ஜோடி வண்டு செய்து இமாவுக்கு அனுப்பி... இதுதானே கரெக்ட்டு?///////////// பக்..பக்...பக்!!

    ReplyDelete
  17. நன்றி மஹி.. எப்புடி இப்புடி எல்லாம் யோசிக்கறீங்க? :))

    ReplyDelete
  18. நன்றி அதிரா.. அவரது பெயர் டியாகோ வா? ம்ம்.. சரியான போட்டிதான் ஜீனோக்கு :))

    அதுசரி, மத்த போட்டோ எல்லாம் இருக்க சாப்பாட்டு ஐட்டம்ஸ் கேக் அண்டு யூஸ் மேல மட்டும் எப்படி அதீஸ் உங்க கவனம் போச்சு?? :))

    ReplyDelete
  19. கரெக்டொ கரெக்ட் அதீஸ்.. அந்த நீல நிற பாய் வண்டையும் பிங்க் நிற கேர்ள் வண்டையும் யாரால மறக்க முடியும்? :))))

    ReplyDelete
  20. இமா? இதென்ன புன்னகை மட்டும்?? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

    ReplyDelete
  21. டோரா தான் எனக்கு காட்டப்பட்டார்.. அப்போ கண்ணீருடன் அண்ணனராரை நினைத்துக்கொண்டேன்.. அவர் மட்டும் அண்ணியை அறிமுகப்படுத்தியிருக்காவிட்டால்.. அந்தோ.. இன்னும் ஒரு மதிப்பெண்னை இழந்திருப்பேன்.. டியாகோ பத்தி நீங்கள் எதுவுமே சொல்லவில்லையே? அப்புறம் எப்படி எனக்குத் தெரியும்?? ஓக்கை.. முறைக்காதீங்க ஜீன்ஸ்..

    புலி பதுங்குவது பாயத் தான்.. சரியாக் கண்டுபிடிச்சுப்போட்டீங்க ஜீனோ :)

    ReplyDelete
  22. ஹி.. ஹி.. Nan rumba kovama erukken.

    ungada blog parthuvitu..

    embutu alaga padivu eluthamudiavillai endru.

    nice..

    ReplyDelete
  23. என்ன சூர்யா, நீங்க சொன்னது நக்கலா இல்ல உண்மையான்னு எனக்கு ஒண்டும் புரியல்லே! எதுவாயிருந்தாலும், என்னால எழுத முடிஞ்சதத் தான் எழுத முடியும் (என்னவொரு கண்டுபிடிப்பு!!). அப்புறம், நீங்க எப்ப தமிழ்ல எழுதப்போறதா இருக்கீங்க??

    ReplyDelete
  24. என்ன சூர்யா, நீங்க சொன்னது நக்கலா இல்ல உண்மையான்னு எனக்கு ஒண்டும் புரியல்லே!நிசமா நல்ல இருக்குங்க

    எதுவாயிருந்தாலும், என்னால எழுத முடிஞ்சதத் தான் எழுத முடியும் (என்னவொரு கண்டுபிடிப்பு!!).(pothum mokkai..)



    அப்புறம், நீங்க எப்ப தமிழ்ல எழுதப்போறதா இருக்கீங்க??" ("எனக்கு தமிழ் வராது"(நமீதா ஸ்டைலு")நீங்கள் ல் போர்ட மார்த்தின பிறகு "எழுதப்போற

    ReplyDelete
  25. இது பலருக்குப் பழைய செய்திதான். இருப்பினும் சொல்லிவைக்கிறேன். இன்றுதான் நேரம் அமைந்தது சந்தூஸ். ;)

    இதுவரை காணாதோர் "இங்கும் காண்க பெண்வண்டுகள் " -> http://imaasworld.blogspot.com/2010/05/blog-post_27.html

    ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)