சாது, குதிரை, மற்றும் திருடரின் பெயர்கள் வெகு நாட்களாக நினைவில் இருந்தன.. பின் மெல்ல மெல்ல மறைந்தன.. இருந்தாலும், கதையின் கருத்து நினைவில் உள்ளது..
முதல் பகுதி
இரண்டாம் பகுதி
இப்போ மறுபடியும் கதைக்கு........
யார் மூலமாகவோ சாது ஒரு நாள் தொலைதூரப் பயணம் மேற்க்கொள்ளவிருக்கிறார் என்று திருடர் அறிந்துகொண்டார்.. புத்தியைத் தீட்ட ஆரம்பித்தார்..
திருடர் எதிர்பார்த்த நன்னாள் வந்தது.. அன்று அந்தி வேளையில் குதிரையின் மீதேறி சாது தன் பயணத்தை துவக்கினார்..
யாருமற்ற பிரேசத்தில் அவர் பயணிக்கையில் ஒரு காட்சியைக் கண்டார்.. நடுத்தர வயது மனிதரொருவர் வழியோரமாய்க் கிடந்தார்.. சாதுவை நோக்கி கைகளையாட்டி அவர் ஏதோ முனகினார்.. அவரை அந்த நிலையில் கண்டதும்,சாது குதிரையை திருப்பி, நிறுத்தி, இறங்கிச் சென்று, அவரிடத்தில் வினவினார்..
மகனே, இந்நேரத்தில் இங்கென்ன செய்து கொண்டிருக்கிறாய்?
அய்யா.. எனக்கோர் உதவி செய்வீர்களா?
சொல்லப்பா..
நான் ஊனமுற்றவன்.. கால்கள் செயலிழந்துவிட்டன.. ஊரொன்றுக்கு செல்லும் வழியில் நான் வழிதவறி இங்கு வந்துவிட்டேன்.. சில வழிப்பறி கொள்ளைக்காரர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு என்னுடைய குதிரை வண்டியையும் என்னுடைய பொருட்களையும் பறித்துக் கொண்டு என்னை இந்த யாருமற்ற வனத்தில் தள்ளிவிட்டு சென்று விட்டனர்..
சாதுவின் முகத்தில் துயரம் படர்ந்தது..
எங்கு செல்ல வேண்டுமெனச் சொல்.. நானுனக்கு உதவி செய்கிறேன்..
வழிப்போக்கர் தன் ஊரின் பெயரைக் கூறினார்..
சாதுவும் அவரை பத்திரமாக கொண்டு சென்று சேர்ப்பது தனது பொறுப்பென்று உறுதிமொழியளித்து அவரைத் தூக்கி தன் குதிரை மேல் உட்கார வைத்தார்.. தானும் மேலேற தயாரானார்..
(தொடரும்..)
தாங்க முடியலீங்க இவங்க பில்டப்பு னு என்னோட வாசகப் ”பெருமக்கள்” புலம்புவது கேட்குது.. சாரி, ஏற்க்கனவே இந்த மாதிரி எழுதி வச்சுட்டேன்..சாயந்திரம் கடைசி பார்ட் ரிலீஈஈஈஸ் பண்ணிடறேன்..
இல்லை. ஏதோ ஒரு நிலைமைல இருக்கேன்.
ReplyDeleteஹி ஹி.. அப்ப முழுசாப் படிச்சு முடிச்சா நல்ல நிலைமைக்கு வந்திடுவீங்க :)
ReplyDeleteஹ்ம்ம்.. எப்போ கதைய முடிப்பீங்க?
ReplyDelete:)) பபிள் கம் மென்னு முடிச்சாச்சுங்க..
ReplyDelete