ஒரு ஊரில் ஒரு சாது இருந்தார்.. நல்லவர்.. வல்லவர்.. இத்யாதி.. இத்யாதி..
அவரிடம் ஒரு குதிரை இருந்தது..
அவர் அந்த குதிரையின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.. தன் குழந்தையாக அதனை எண்ணி வளர்த்து வந்தார்..
குதிரை திறம் மிகுந்தததாகவும், கம்பீரமான உருவத்துடனும், காண்பவரை கொள்ளை கொள்வதாகவும் இருந்தது..
அதே ஊரிலோ இல்லை அதற்க்கு அடுத்த ஊரிலோ ஒரு திருடரும் வசித்து வந்தார்..
சாதுவின் குதிரை மீது அவருக்கு எப்போதுமே ஒரு கண் இருந்தது.. அதனை தனதாக்கிக் கொள்ள வேண்டும் என உவகை கொண்டிருந்தார்..
என்ன காரணத்தினாலோ சாதுவின் இடத்துக்கு சென்று அதனை அபகரிப்பது அவருக்கு சிரமமாக இருந்தது..
எனவே, அதற்க்கானதொரு திட்டம் தீட்டி, சரியானதொரு சந்தர்ப்பம் வாய்க்க காத்திருந்தார்..
சந்தர்ப்பமும் ஒரு நாள் வாய்த்தது..
(தொடரும்..)
ம்கும்ம்ம்.. இத படிக்கறதுக்கே ஒரு ஆளக் கூடக் காணோம்.. இதுக்கு சஸ்பென்ஸ் வேற ஒரு கேடா ன்னு உள்ளுக்குள்ள ஒரு குரல் கேட்குது :) இருந்தாலும், ஒரு ஸ்பெஷல் எஃபக்ட் வேண்டாமா? :)

ம்ம்ம்..தொடர்கதை! தொடர:) ஆளிருக்கு ..தைரியமா எழுதுங்கோ..ஆனால் திருடனுக்கும் மரியாதை கொடுத்து "திருடர்"ஆக்கியது கொஞ்சம் ஓஓ...வர்!
ReplyDeleteகுமுதம்-ல வந்த paragraph கதை போலே மினி தொடரா இருக்கு..கொஞ்சம் நீளத்தைக் கூட்டலாம் என்பது 'ஜீனாயாரின்':) தாழ்மையான கருத்து!:D
ஹி ஹி.. வாங்க ஜீனோ.. பெரிய தொடர் கதை எல்லாம் இல்ல :) நாளைக்கு முடிச்சிடுவேன் :) ரொம்ப எதிர்பாத்து ஏமாந்துட வேண்டாம்ன்னு இப்பவே கடுமையான எச்சரிக்கை விடறேன் :)
ReplyDeleteவேறு வழி இல்லாமல் படித்துப் பார்த்தாயிற்று. நாளையும் வர வேண்டுமா! :)
ReplyDelete(என் தலையாவது பலவர்ணங்களில் வருமா பார்க்கலாம்.)
இமா.. வேற வழியே இல்ல.. நான் எழுதறது தான் கதை :) விதியேன்னு படிச்சுக்கோங்க :)
ReplyDeleteதலை வர்ணத்தை மாத்த நேற்றிலிருந்து முயல்கிறேன்.. முடியவில்லை..
வித்யாசமான ஆளா இருப்பீங்க போலியே தல...!
ReplyDeleteநன்றி வசந்த் சார்.. நாமெல்லாம் வித்தியாசமான ஆளுன்னு சும்மா ப்லிம் காட்டிக்க வேண்டியது தான் :) மத்தபடிக்கு நானும் அதே அதே..
ReplyDeleteதோடா போட்டித் தொடரா?? பாப்போம் எப்பிடி போகுதுன்னு...
ReplyDeleteஸ்லோ சைக்கிள் ரேஸ் மாதிரி வச்சுக்கலாமா? :))
ReplyDelete