10 January 2010

நம்பிக்கைச் சேதம்..

எனக்கு ஈமெய்லில் தோழியொருவர் அனுப்பியிருந்த கேள்வி - எப்படிப் படிச்சுப் பாத்தாலும், அந்த ஸ்கேட்டிங்க் பையனுக்கும், குதிரைக் கதைக்கும் என்ன தொடர்புன்னு புரியலயே?

நியாயமான கேள்வி தான்.. :))))))

முதல் பகுதி
இரண்டாம் பகுதி
மூன்றாம் பகுதி
நான்காம் பகுதி

ராமயணக் கதையில் ராவணன் யாசகன் கேட்பவன் போல் வேடந்தரித்து வந்து சீதையை அபகரித்து செல்கிறார்.. திரைப்படக் காட்சிகளில் பாத்திருக்கலாம்.. காரில் ஒருவர் சென்று கொண்டிருப்பார்.. வழியில் யாரோ விழுந்து கிடப்பதை கண்டு, இவர் அவருக்கு உதவி செய்யப் போக, உடனே எங்கிருந்தோ நான்கைந்து பேர் வந்து அவரைச் சூழ்ந்து கொண்டு..

கதைகளில், சினிமாக்களில் மட்டுமே கண்டிருந்தால் அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும்.. ஆனால், நாம் படிக்கும் கேட்கும் செய்திகளிலும் கூட, இது போன்று ஏமாற்றும் நோக்குடன், உதவி தேவை எனும் பெயரில் கபட நாடகம் ஆடி, பின் உதவியவரையே போட்டு தள்ளி விட்டு போவோரை பற்றி கேள்விப்படுகிறோம்.. சிலருக்கு உண்மையாலுமே இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்..

இது போன்ற நிகழ்வுகள், செய்திகள் குறைவுதானென்றாலும், அவை நம் மனதுக்குள் ஏற்படுத்தும் பாதிப்புகள் தான் எத்தனை? இரவு 11 மணி வாக்கில் நம் வீட்டுக் கதவை ஒருவர் உதவி கேட்டுத் தட்டுகிறார்.. நாம் முதலில் ஜன்னல் திறந்து என்னவென்று கேட்கிறோம்.. இதுவரையான பாதுகாப்புணர்வு சரி தான்.. ஆனால், அவர் தன் நிலைமையை விளக்கிய பின்பு, (உதாரணத்துக்கு, அவர் வந்த கார் நம் வீட்டருகே வந்தவுடன் நின்று விட்டது) நம்மில் எத்தனை பேரால் நம்பிக்கையுடன் கதவைத் திறந்து வெளியே வந்து அவருக்கு உதவ முடியும் என்கிறீர்கள்? காரில் சென்று கொண்டிருக்கும் போது வழியில் ஒருவர் கை காட்டி லிஃப்ட் கேட்கிறார்.. உதவி செய்ய மனமிருந்தும் பயத்துடன் விலகிச் செல்வர் எத்தனைப் பேர்! இவ்வளவு கூட வேண்டாம்..மழைக்கு வீட்டினருகில் ஒதுங்க வரும் சிறுவனைக் கூட சந்தேக கண் கொண்டு பார்க்க வேண்டிய நிலைமை இன்று..

அது தான் எனக்கும் ஏற்பட்டது..

நான் முதலில் அவனைச் சந்தேகித்து விட்டேன்.. கீழே விழுந்திருந்த நிலையில் அவனைக் கதவு லென்ஸ் வழியே பார்த்தவுடன், நான் கதவைத் திறந்து ஓடிச் சென்று அவனைத் தாங்கியிருக்க வேண்டும்.. அப்படிச்செய்யாமல், கதவைக் கொஞ்சமாகத் திறந்து பார்த்து, முதலில் பேசிவிட்டு, பின்னர் கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டவுடன் தான், அவனருகில் சென்றேன்..

உதவி தேவையாயிருந்த ஒருவனை - திருடனோ, இவ்வாறு நடிக்கிறானோ, அருகில் சென்றவுடன் கன் காமிப்பானோ - என்று சந்தேகித்துவிட்டேன்.. நான் தனித்திருந்த சூழலோ இல்லை திடீரென்று வந்த சத்தமோ (கதவில் இடித்ததால்)என்னை அதிக விழிப்புணர்வு கொள்ளச் செய்திருக்கலாம் தான்.. அவனை அனுப்பி விட்டு வீட்டுக்குள் வந்தமர்ந்தவுடன் எனக்கு சற்று குற்றவுணர்வு ஏற்பட்டது.. உட்கார்ந்து யோசித்ததில் இந்தக் கதை ஏனோ நினைவுக்கு வந்தது.. எங்கோ ஏதோ ஒரு நம்பிக்கை சேதப்படுத்தப்பட்டதாக கேட்டதன் விளைவு தான் இப்போது சந்தேகமாக வெளிப்பட்டிருக்கிறது..

அந்தக் கதையில் வரும் சாது திருடரை நோக்கி இந்த வேண்டுகோள் தான் வைக்கிறார் - என்னிடம் இருந்து திருடுவதென்றால் நேரடியாக திருடி கொள்.. உதவி கேட்போரின் மீதான எனது நம்பிக்கையைச் சேதப் படுத்தி விடாதே..

Example

என்னைக்காவது ஏதாவது திருடன் இதப் படிச்சி திருந்துவானெல்லாம் எண்ணமில்லீங்க.. சொல்லனும்னு தோனுச்சு.. சொல்லிட்டேன்..

நாமல்லாம் இதுக்கே இம்புட்டு கில்டி ஃப்லீங் விட்டுகிட்டு இருக்கோம்.. நம்ம மாண்புமிகு முந்திரிகள் என்னடான்னா :(((((

10 comments:

 1. உண்மைதான். உதவி பொய்யாகும் பட்சத்தில், நமக்கு உதவி செய்யும் ஆசையே போய் விடும்.

  ReplyDelete
 2. இல்லை. ;(
  எனக்கும் இந்த மாதிரி அப்பப்ப குட்டிக் குட்டியாக கில்டி ஃபீலிங்க்ஸ் வரும்.
  என்ன செய்றது! இதெல்லாம் தவிர்க்க முடியாதவை.

  ReplyDelete
 3. தமிழுதயம்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. சரி தான்..

  ReplyDelete
 4. இமா.. என்ன இல்லை? நிலைமை நல்லாயில்ல னு சொல்றீங்களா? :))

  ஆமா இமா.. உடனே ஓடி போகாததுல என்னோட கில்ட்டினஸ் இன்னும் கொஞ்சம் பெரிசு இமா.. :) அதான்..

  ReplyDelete
 5. நம்பிக்கைச் சேதம்...ம்ம்..எல்லாரும் பெரிய பெரிய விஷயங்களா எழுதறாங்கப்பா..நல்லாருக்கு எல்போர்ட் உங்கள் கதை & உணர்வுகள்!

  உண்மைதான்..வர வர உலகத்தில எல்லாப்பக்கமும் மனித உணர்வுகளுக்கு மதிப்பில்லாமப் போயிடுச்சு..சுய நலம், பயம் எல்லாத்தையும் அதிகரிக்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாகிட்டு வருது!... :(

  ReplyDelete
 6. நன்றி ஜீனோ..

  நீங்க மட்டும் என்ன பெரிய பெரிய வார்த்தைகளா அள்ளி விட்டுட்டு போயிருக்கீங்க? :))

  //வர வர உலகத்தில எல்லாப்பக்கமும் மனித உணர்வுகளுக்கு மதிப்பில்லாமப் போயிடுச்சு..சுய நலம், பயம் எல்லாத்தையும் அதிகரிக்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாகிட்டு வருது!... :(//

  விடுங்க ஜீனோ.. அத்திபூத்தாப்ல எங்கள மாதிரி நல்லவங்களையும் அங்க அங்க பாப்பீங்க :))))))))))) அத வச்சு மனச தேத்திக்கோங்க :)))

  ReplyDelete
 7. //விடுங்க ஜீனோ.. அத்திபூத்தாப்ல எங்கள மாதிரி நல்லவங்களையும் அங்க அங்க பாப்பீங்க :))))))))))) அத வச்சு மனச தேத்திக்கோங்க :)))//

  என்ன சொல்ல...என்ன சொல்ல?? கொடும கொடும-ன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடும ஜிங்கு-ஜிங்குன்னு ஆடுச்சாம்! எல்லாம் கலிகாலமப்பா! :)

  யார் யார் எப்படின்னு பாக்க ஜீனோவிடம் லேஸர் எனேபிள் செஞ்ச மூணாவது கண் :) இருக்கு படி..கொஞ்சம் அடக்கி வாசியுங்கோ..ஓ..ஓ!

  ReplyDelete
 8. அப்படியே செஞ்சாப் போச்சு :))

  ReplyDelete
 9. நானும் ரொம்ப ஆர்வமா உங்களுக்கு இதே மாதிரி ஒரு வழிப்பறி அனுபவம் இருந்திருக்கும்னு நெனச்சேன். ஏமாத்திட்டிங்களே? :))

  ஆனாலும் இந்த நாட்டுல கொஞ்சம் சாக்கிரதையாத்தே இருக்கணும்க்கா...

  ReplyDelete
 10. ஆமாமா.. இருந்தாலும், அடிபட்ட ஒருத்தனுக்கு உடனே ஓடிப் போயி உதவ முடியலையேன்னு இருந்தது.. அதான்,,

  ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)