23 January 2010

மூன்று முட்டாள்கள்

அடுத்ததாக எதை மெல்லுவது என்று, அவல் தேடி, வீட்டு அடுப்பங்கறை அஞ்சறைப்பெட்டி என எல்லாத்தையும் கொட்டிப் பார்த்ததில், எல் போர்டுக்கு வேறு ஒன்றும் தேறாததால், நேற்றுப் பார்த்த சினிமாவின்.. ஹி ஹி.. விமர்சனம் எல்லாம் இல்லீங்க.. ஃபீலிங்க் மட்டும்...அமீர் (ரான்ச்சோ), மாதவன் (ஃபர்ஹான்), ஷர்மன் ஜோஷி (ராஜூ) - ரங்க் தே பஸந்தி யினுடைய அதே கூட்டணி.. இந்த முறையும் நல்ல ஆட்டம் போட்டு இருக்கிறார்கள்.. கூட போமன் இரானி, மற்றும் கரீனா கபூர்..

படத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்லுவதென்றால் - ”ஹா ஹா ஹா..” சென்றால் வாய் விட்டு வயிறு நோக சிரித்துவிட்டு வரலாம்.. கதை என்னவென்று எழுதப் போவதில்லை.. அதனால் மேற்கொண்டு தைரியமாக படிக்கலாம்..

மூவரும் காலேஜ் பாய்ஸ் மாதிரியே தான் இருக்கிறார்கள்.. நல்ல எக்ஸ்ப்ரெஷன்ஸ்.. சிறு வயது அமீர் செம க்யூட்டாக இருக்கிறார்.. போமன் சான்ஸே இல்லை.. அவசர அவசரமாக அடுத்தவனை முந்தி சைக்கிளை ஓட்டி வரும் அவருடைய இண்ட்ரோவே கலக்கலாக இருக்கிறது.. பறவைக்கூட்டைக் காட்டி அவர் கொடுக்கும் விளக்கத்தில் ஆரம்பித்து, மாணவர்களுக்கு கொடுக்கும் மெண்டல் டார்ச்சரில் தொடர்ந்து, கடைசி வரைக்கும் அருமை.. கரீனாவும் ஓகே.. அப்புறம் அந்த படிப்ஸ் சதுர்.. ம்ம்.. அவரைப் பற்றி கடைசியில் சொல்லுகிறேன்.. படத்தின் கதையும் போரடிக்காமல் செல்கிறது.. சின்னச் சின்ன திருப்புமுனைகளும் உண்டு..

நம் கல்வி முறையை நன்றாக  துவைத்து அலசி காயப் போட்டிருக்கிறார்கள்.. பிள்ளைகளை மனனம் செய்ய வைப்பதில் நாம் காட்டுகின்ற ஆர்வம் அவர்களது கற்பனையை, உருவாக்குத் திறனை வெளிக்கொண்டுவருவதில் காட்டுவதில்லை.. இது தான் கான்செப்ட்.. காமெடியாக இருப்பதற்காக கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லியிருந்தாலும், உண்மை என்னவோ உறைக்கத் தான் செய்கிறது.. குதிரை ரேஸைப் போல, ஓடு ஓடிக்கொண்டேயிரு அடுத்தவனை முந்திச் செல், என்று தான் மக்களும் மாறி வருகிறார்கள்...


என்னுடைய அனுபவத்தில் - பள்ளியில் படித்ததை விட கல்லூரியில் எவ்வளவோ பரவாயில்லை.. ப்ராக்டிகல்லாகத் தான் இருந்தது.. இருந்தாலும், கல்லூரியை விட்டு வெளி வரும் போது, நிகழ் உலகம் நிறையவே வித்தியாசமாக இருந்தது.. ப்ரெஷர் கொடுத்து கொடுத்து என் பெர்ஃபார்மன்ஸே குறைஞ்சு போச்சு என்று ராஜூ சொல்லும் போது அவரது நிலை நன்றாகவே புரிகிறது..


நான் ரொம்ப நேரம் சிரித்த காட்சி - இண்டக்‌ஷன் மோட்டரை எப்படி ஸ்டார்ட் செய்வது என்று வைரஸ் கேட்க, அதுக்கு ராஜூ காட்டும் ப்ராக்டிகல் விளக்கம்.. அப்புறம், கரீனாவின் திருமணத்தை நிறுத்தி அவரை அழைத்து வரும் போது - ” உன் கல்யாணத்தை நிறுத்திட்டோம்.. ஆனா, ஒரு சின்னப் பிரச்சனை.. அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு இன்னும் தெரியலியே..” ஹா ஹா.... அப்புறம் தேர்வு முடிவுகளைப் பார்த்து விட்டு இருவரும் சோகமாக அடிக்கும் டயலாக் - “நம்ம நண்பன் நம்மை விட குறைவா மார்க் வாங்குனா வருத்தமா இருக்கு.. நம்மை விட அதிகமா வாங்கினா ரொம்பவே வருத்தமா இருக்கு..”

குறைகளும் உண்டு... சில இடங்களில் நம்மை நெகிழ வைக்க முயற்சித்திருப்பதில் சினிமாத்தனம் தெரிகிறது.. பையன்கள் மூவரும் அடிக்கடி அழுகிறார்கள்.. மத்த கேரக்டர்ஸும்.. முன்னா பாய் எம்பிபிஸ் சம்பவங்களும் படத்தில் உண்டு.. ஜோக் சொல்லிச் சொல்லி நண்பருக்கு நினைவு வர வைத்தல்.. அப்புறம்.. அந்த ஆல் இஸ் வெல் சொல்லி பிறந்ததிலிருந்து மூச்சின்றி கிடக்கும் குழந்தையை அழ வைத்தல்.. (பசங்க படத்திலும் இது போன்றதொரு சீன் உண்டு).. கொஞ்சம் பூச் சுற்றல் தான்..

சதுர் ராமலிங்கம்.. இவர் தான் படத்தின் செந்தில்.. போட்டு உதை உதை என உதைக்கிறார்கள் இவரை... நகைச்சுவைக்காகத் தான் என்றாலும் இந்தப் பெயர் தான் நமக்கும் கொஞ்சம் உதைக்கிறது.. உகாண்டாவில் பிறந்து பாண்டிச்சேரியில் படித்ததால் ஹிந்தி தெரியவில்லை என்கிறார்.. மை ஹன்ஸ் ரஹா ஹூன் என்று ஹ வை அழுத்தமாக உச்சரித்து ஹிந்தி பேசுகிறார்.. தலைகீழாக மனப்பாடம் பண்ணுகிறார்.. தென்னாட்டவர்களை கிண்டல் அடித்திருக்கிறார்களோ என்று ஒரு எண்ணம் வருகிறது.. அடிக்கடி இவர்கள் ஹிந்தித் திரைப்படங்களில் கிண்டலடிக்கப் படுகின்றார்கள் என்பது போன்று தோன்றுகிறது.. ஓம் சாந்தி ஓம், கோல்மால் ரிடர்ன்ஸ், அப்புறம் இது..  ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது.. “ஒருவருக்கு உன்னுடைய மொழியை சரியாக பேசத் தெரியவில்லை என்பதற்காக சிரிக்காதே.. அப்படியென்றால், அவருக்கு உன்னை விட இன்னும் ஒரு மொழி தெரிந்திருக்கிறது என்று அர்த்தம்”.... இதையும் இந்த இடியட்ஸ் புரிந்து கொண்டால் நல்லது..

24 comments:

 1. சந்தனா, உங்கள் ஃபீலிங் நல்லாத்தான் இருக்கு. நான் படம் பார்த்து பல வருடங்களாகிவிட்டது. ஏதோ இப்போது படம் பார்க்க பிடிக்கவில்லை. 3 வருடங்களின் முன்பு பார்த்த " The God must be crazy" என்ற படம் மிகவும் பிடித்து விட்டது. நீங்கள் பார்த்தீர்களா?
  வானதி

  ReplyDelete
 2. நன்றி வானதி.. ரொம்ப நாளாச்சுனா சினிமா டச்சு விட்டு போச்சுன்னு அர்த்தம் :) பரவாயில்ல.. பெருசா ஒன்னும் மிஸ் பண்ணிடப் போறதில்ல.. god must be crazy யில் ஒரு பார்ட் பார்த்து சிரித்திருக்கிறேன்.. :))

  ReplyDelete
 3. ம்ம்.. பாத்தாச்சா..

  //தென்னாட்டவர்களை கிண்டல் அடித்திருக்கிறார்களோ//

  கோவமாத்தான் வரும். அதும் முன்னெல்லாம் தூர்தர்ஷன்ல சீரியல்கள்ல இதுக்குன்னே ஒரு ஐயர்/ஐயரம்மா கேரக்டர் வச்சிருப்பாங்க!!

  /உன்னை விட இன்னும் ஒரு மொழி தெரிந்திருக்கிறது என்று அர்த்தம்//

  அதானே!!

  ReplyDelete
 4. நான் உங்களையும் பின்தொடர்கிறேன். உங்க ஃபாலோயர்ஸ் லிஸ்ட்ல இருக்கேனான்னு பாத்துச் சொல்லுங்க. நான் பாக்கும்போது, என் பெயர், அந்த லிஸ்டுக்குமேலே தெரிகிறது.

  ReplyDelete
 5. ஹூசைனம்மா.. இப்போத் தான் ஒவ்வொரு இடமா போயிட்டிருந்தேன்.. அடுத்ததா அங்க வரலாம்னு ந்னு இருந்தப்போ நீங்க இங்க வந்துட்டீங்க :) நன்றி.. ஒரு படத்துல னா பரவாயில்ல.. மூணு படம் கொஞ்சம் அதிகமா இருக்கு..

  ReplyDelete
 6. உங்கள் பெயர் இருக்கிறது.. எதாவது ஒரு புகைப்படம், மற்றும் உங்க ப்ளாக் லின்க் (தனியாக) இருந்தால் இன்னும் சிறப்பா இருக்கும்..

  ReplyDelete
 7. சந்து, நான் படம் பார்க்காததால் எனக்கேதும் புரியவில்லை. ரசித்திருக்கிறீங்கள். பாட்டுக்களையும் குறிப்பிட்டிருக்கலாமே... எனக்குப் பிடித்ததைப் பொறுக்கிக்கொண்டு போகிறேன்...

  //“ஒருவருக்கு உன்னுடைய மொழியை சரியாக பேசத் தெரியவில்லை என்பதற்காக சிரிக்காதே.. அப்படியென்றால், அவருக்கு உன்னை விட இன்னும் ஒரு மொழி தெரிந்திருக்கிறது என்று அர்த்தம்”.... /// மிக அருமையான வரிகள்.

  ReplyDelete
 8. பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)//// நாங்க தைரியமாகச் சொல்லிட்டுப் போவோம், ஆனால் நீங்க தரியமில்லாமல் டிலீட் பண்ணிடுவீங்களோ என்றுதான் யோசிக்கிறோம்... ஹா... ஹா.. ஹா...

  ReplyDelete
 9. அய்யோ அய்யோ நானும் ஒரு இடியட்டா இருந்துட்டேனே.. உங்க ப்ரொஃபைல்ல under construction பாத்துட்டு, சரி இவங்க ப்ளாக் இன்னும் கன்ஸ்ட்ரக்சன்ல இருக்கு போலன்னு நெனச்சிட்டு இருந்திட்டேன். பொறுமையா ஒவ்வொரு இடுகையா படிச்சி (பின்னூட்டத்துல) கிழிக்கிறேன்.

  ReplyDelete
 10. நான் இன்னும் படம் பாக்கலை, ஆனா நல்லா எழுதியிருக்கீங்க. பாராட்டுக்கள்...

  ReplyDelete
 11. //எதாவது ஒரு புகைப்படம், மற்றும் உங்க ப்ளாக் லின்க் (தனியாக) இருந்தால் இன்னும் சிறப்பா இருக்கும்.//

  எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

  ReplyDelete
 12. Nice Chandana!!! I dont watch hindi movies as much as i used to. No company for reading lines :))
  I like the last para.Atleast I am trying is my answer to them.

  ReplyDelete
 13. 3 இடியட்ஸ் விமர்சனங்கள் பலரின் பதிவுகளில் படிச்சாச்சு. உங்க ஃபீலிங்க் ம் நல்லா இருக்கு. நம்ம தளத்துக்கு ஒரு முறை வந்தீங்க. அப்புறம் மறந்தே போயிட்டீங்க

  ReplyDelete
 14. அதிரா.. நன்றி.. உங்களுக்கு புரியலயா? தவறு எங்கன்னு புரியுது அதிரா.. சின்னதா கதைச் சுருக்கம் போட்டிருந்தா உங்களுக்கும் கொஞ்சம் தெளிஞ்சிருக்கும். அடுத்த வாட்டி சரி பண்ணிடறேன்..

  பாட்டெல்லாம் ஒரு வாட்டி கேட்டா பதியாது.. இன்னும் கேட்டுப் பாக்கனும்.

  டிலீட் பண்ணும் அளவு யாரும் கமெண்ட் எழுத நான் இன்னும் அவ்வளவு ஃபேமஸ் ஆகல.. :)

  ReplyDelete
 15. வாங்க முகிலன்.. நானும் திடீர்னு எழுத ஆரம்பிச்சது தான்.. சொல்லும் அளவுக்கு பெருசா ஒன்னும் எழுதிடலை.. அதான்.. யார்ட்டயும் சொல்லலை.. வருகைக்கு நன்றி..

  ReplyDelete
 16. நன்றி அண்ணாமலையான்.. பாருங்க.. பிடிக்கலாம்..

  ReplyDelete
 17. நன்றி ஹூசைனம்மா.. யாராவது எட்டிப் பாத்தாங்கன்னா உங்க பக்கத்துக்கு வரதுக்கு எளிதா இருக்கும்ன்னு தான் சொன்னேன்..

  ReplyDelete
 18. நன்றி இலா.. நமக்கு பழகிப் போச்சு.. கட கடன்னு வேகமா வாசிச்சுட்டு கேப்ல படத்தையும் பாத்துட வேண்டியது தான்.. :)

  ReplyDelete
 19. நன்றிங்க தமிழுதயம்.. எங்க நான் என் பக்கத்துக்கு வரதுக்கே ரெண்டு நாளாச்சு.. கொஞ்சம் படிச்சுப் பாத்ததுல பிடிச்சிருந்தது.. வரேன்..

  ReplyDelete
 20. சந்தூஸ்.. யார் என்ன சொன்னாலும் கேப்பீங்களோ! :)

  சிரிக்கலாம் என்று சொல்றீங்க, அப்ப பார்க்கணும். எப்பனுதான் தெரியல.

  ReplyDelete
 21. உங்களை யாரோன்னு நினைக்க முடியலை இமா.. யாரது - தொண்டை ரொம்ப கம்முது.. தண்ணி ப்ளீஸ் :)

  ReplyDelete
 22. ஆ...ஓ...அவுச்....வழுக்குதே,அவ்வ்வ்வ்வ்!!!பயங்கரமா வழுக்குதுங்கோ எல்போர்டு..ஜீனோ கால் ஸ்லிப் ஆயிடுச்சி..அந்தளவு பாசம்! கொஞ்சம் ஓவரா இருக்கு ஆன்ட்டீ..பத்திரம்! :)

  ஜீனோ ஆல்ரெடி சா திஸ் மூவி-பா! பட், ஜீனோ இஸ் வெரி வெரி ஈஸி கோயிங் பர்சன் யூ நோ... இந்த தென்னாடு-வட நாடு அல்லாம் ஜீனோக்கு ஸ்ரைக் ஆகவே இல்ல பா..படம் பாத்துச்சி...சிரிச்சிசி..மறந்துடுச்சி.. அக்காங்!

  அல்லாரும் ரெம்ப திங்க் பண்ணாதீங்கோ..இந்தியா பார்டர் தாண்டிட்டம்னாலே நம்மல்லாரும் இந்தியன்ஸ்..அம்புட்டுதேன்!
  தெக்கு,வடக்கு ,கிழக்கு,மேக்குன்னு பிரிச்சிப்பாக்காதீங்க பா! நம்மளும்தானே காலங்காலமா சர்தார்ஜி ஜோக்கு சொல்லி சிரிக்கறோம்?? ஸோ, டேக் இட் ஈஸி கண்ணுங்களா!

  சிந்திக்காதீங்கோ..சிரியுங்கோ..சிந்திக்காம சிரிச்சுட்டு மறந்திருங்கோ..இன்னா ஜீனோ சொல்றது ?? தத்துவம் 100001!!!! :D x10

  சூப்பர்ல?

  ReplyDelete
 23. அட ஜீனோ.. அடி எப்படி?

  சர்தார்ஜி ஜோக் நமக்குத் தான் ஜோக் ஜீனோ.. அவங்களுக்கில்ல :) அதெல்லாம் எவ்வளவோ பரவாயில்ல.. நம்மாளுங்க மத்தவங்க காதுபடவே தமிழ்ல கிண்டலடிப்பாங்க.. அதுவும் தப்பு தான்..

  யாரும் பிரிச்சுப் பாக்கல.. அவங்க அப்படி பாத்ததத் தான் சொல்லி ஃபீல் பண்ணியிருக்கோம் :)அந்தப் வாசகத்த எனக்காகச் சொன்னவரும் நார்த் இந்தியன் தான் ஜீனோ :)

  ReplyDelete

பழைய வரிய மாத்தச் சொல்லீட்டாங்க.. இப்ப புதுசு “என்ன சொல்லனும்னாலும் தெகிரியமா சொல்லிட்டுப் போங்க” :)